Monday, May 12, 2025

    அமுதம் பொழியும் குமுதம் மலரும்!

    அத்தியாயம் 7 அன்னையின் வீட்டுக்குச் சென்று விட்டுத் தன் வீட்டுக்குள் நுழைந்தவனுக்கு உடலெல்லாம் ஏதோ புது வித உணர்ச்சி பொங்கிப் புளகித்துக் கொண்டிருந்தது. உணவு வேண்டாம் என்று வேலையாளுக்குச் சொல்லி விட்டு மாடியில் தன் அறைக்குச் சென்றவன் நேராகக் குளியலறைக்குச் சென்று குளிர் நீரில் பத்து நிமிடங்கள் தலையைக் காட்டிய பின்னர்தான் அவன் உணர்வுகள் சமநிலைக்கு...
    அத்தியாயம் 20 அவள் பேச ஆரம்பிக்கும் முன்னதாகவே “அறிவு கிறிவு இருக்கா ஒனக்கு? இன்னும் பத்தே நாளுல பரீச்சைய வச்சுகிட்டு இப்படி வாசல்ல நின்னு லாந்திகிட்டு நேரத்த வீணாக்கிகிட்டுக் கெடக்கே.காலைல இருந்து பட்டினி வேற. ஏன் பரிச்ச நேரத்துல ஒடம்புக்கு ஏதாவது வியாதிய இழுத்து விட்டுக்கிடணுமா? அது சரி! பரீச்ச எழுதுற எண்ணம் இன்னும் இருக்கா...
    அத்தியாயம் 6 மாலை நேரமானாலும் படு உற்சாகமாகத் தன் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தான் அமுதன். இன்னும் சற்று நேரத்தில் அவன் உற்சாகம் பறிபோகப் போவது தெரியாமல் மெலிதாகச் சீழ்க்கை கூட அடித்துக் கொண்டான். அந்த நேரம் இன்டெர்காம் கிணுகிணுக்க எடுத்துக் காதில் பொருத்தினான். “ம்ம்ம்.சொல்லுங்க!” “ஐயா! உங்களைப் பார்க்க ஒரு பொண்ணு வந்துருக்கு!” “பொண்ணா? ஆரு?” “குமுதான்னு சொல்றாங்க” அவன் மனம் இறக்கை...
    அத்தியாயம் 10   கோடனூர் கிராமமே அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. “நம்ம மரகதம் அக்காவோட அண்ணன் பொண்ணுன்னு ரெண்டு வருசமின்ன வரல, கொஞ்சம் பூசுனாப்ல, ஒயரமா, செவத்த தோலோட போவுமே அந்தப் புள்ளதான், மாநிலத்துலயே மொதலா வந்துருக்காம்” “அதும் அப்பிடியா? நல்லாக் களையான புள்ளதான். படிப்புலயும் சோட போகல.எவனுக்குக் குடுத்து வச்சுருக்கோ?” “ம்ம்ஹூம்...டாக்டருக்குப் படிக்கணுமாம் அந்தப் புள்ளைக்கு. சேக்காளிங்ககிட்டச் சொல்லுமாம். எம்பொண்ணு பத்தாப்புப்...
    அத்தியாயம் 8 அமுதன் வழக்கமாக நாலு மணிக்கு எழுந்தாலும் தன் உடற்பயிற்சி எல்லாம் முடித்துக் கீழே வர ஆறு மணியாகும் என்பதால் மரகதம் முதற்கொண்டு அந்த வீடே ஐந்தரைக்கு மேல்தான் விழித்துக் கொள்ளும். அதுவும் முதல் நாள் கல்யாண வேலைகள் பார்த்த அலுப்பு அனைவருக்கும் இருக்க விடிகாலை நான்கு மணிக்கு நல்ல உறக்கத்தில் ஆழ்ந்திருந்தவர்களை அமுதனின் சத்தம்...
    அத்தியாயம் 11 சுற்றியிருந்த அனைவரும் ஆரவாரிக்க, குமுதாவின் முகத்திலும் அப்படியொரு மகிழ்ச்சி. உட்கார்ந்த இடத்திலிருந்தே நன்றாக உண்டு உடல் கொழுத்துப் போயிருந்தவன் ஓயாத உடற்பயிற்சிகளால் உரமேறிய உடலைக் கொண்டிருந்தவனின் அடிகளைத் தாக்குப் பிடிக்க முடியாமல் தடுமாறி விழுந்திருக்க அவனருகில் சென்று முழங்காலால் அவன் முதுகில் மண்டியிட்டவன் அவன் அலற அலற ஒரு கையைப் பிடித்துப் பின்புறமாக முறுக்கினான். “இந்தக்...
    அத்தியாயம் 12 பேருந்தில் இருந்து இறங்கி முதலில் அவளது பயிற்சி மையத்துக்குச் சென்றவர்கள் விண்ணப்பப் படிவத்தை நிரப்பி, செய்ய வேண்டிய மற்ற முறைமைகளையும் செய்து முடித்தனர். அன்று துவக்க வகுப்பு அரை மணி நேரம் மட்டுமே என்பதால் மற்றிருவரும் காத்திருக்க குமுதா வகுப்பை முடித்து விட்டு வந்தாள். கோடனூரில் இருந்து கிளம்பும் போதே மரகதம், வந்து வெகு...
    அத்தியாயம் 15 அந்த வீட்டில் உச்சக்கட்டக் கோபத்தில் அமர்ந்திருந்தான் சிவஞானம். சிறு வயதிலிருந்தே அவனுக்குப் படிப்பு ஏறவில்லை.பள்ளிக் காலம் முடிந்ததும் தொழிலில் இறங்கினான்.அதிலும் ஒன்று மாற்றி ஒன்று தோல்வியைக் கொடுக்க அவனது இருபத்தி ஐந்தாவது வயதில் நண்பன் ஒருவனின் சிபாரிசின் பேரில் ஒரு ஜோசியரிடம் சென்றான். “ஒனக்க ராசியெல்லாம் நல்லாத்தாம்லே இருக்கு.ஆனா சுக்கிரன சனி பார்க்குதான்.அதாம் ப்ரச்சனையே! இதுக்கும்...
    அத்தியாயம் 9    நாட்கள் கடுகி விரைந்தன. அமுதன், குமுதா இருவருமே செய்து கொண்டிருந்த முடிவைச் செவ்வனே நிறைவேற்றினார்கள். அதற்கு அமுதனுக்குத் தொழிலும் குமுதாவுக்குப் படிப்பும் உறுதுணையாய் இருந்தன. குமுதாவிடம் எப்போதுமே ஒரு நல்ல பழக்கம் உண்டு. எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் பாட புத்தகத்தை எடுத்துக் கொண்டு படிக்க அமர்ந்து விட்டாளானால் மற்றது பின்னுக்குப் போய் விடும். இந்தக் குணம்...
    அத்தியாயம் 14 அமுதனின் கோலம் கண்டவளுக்கு உண்மையாகவே நெஞ்சில் பயம் தோன்றியது. ஆனால் அதை அவன் அறியாது மறைக்க எண்ணி, “அது...நான்...தெரியாம...” “வாய மூடு!” என்றவன் அவளருகில் வந்து அவள் இரு தோள்களையும் பற்றினான். திகிலுடன் அவன் முகத்தைப் பார்த்தவளுக்கு அவன் கண்களில் கோபம் மட்டுமல்லாது தாள முடியாத வலியும் இருப்பது தெரிய குழம்பிப் போய் நின்றாள். அவன் அனுமதி இல்லாது...
    அத்தியாயம் 13 வளைகாப்பு வீட்டிலிருந்து வருகையில் குமுதா மரகதத்திடம், “யத்தே! எனக்கு மாமங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும். நான் அந்த வீட்டுக்குப் போய் வரட்டா?” “ஏம்த்தா மாறங்கிட்ட ஃபோனுல பேச வேண்டியதுதான? இதுக்கு என்னத்துக்கு வெயிலோட கெடந்து அலையுதேங்கே?” “இல்லத்த, இது நேர்லதான் கேக்கணும். மாமன் இன்னிக்கு இங்கன வருவாகன்னு நெனச்சிருந்தேன்” “சர்த்தான் போய் வா! ஆனா இந்நேரம் அவன்...
    அத்தியாயம் 21 காலை மூன்றாக சில நிமிடங்கள் இருக்கும் முன்னமே வழக்கம் போல் விழிப்பு வந்து விட, எழுந்தவள் அருகில் நின்ற சீர் நெடுமாறனாகப் பள்ளி கொண்டிருந்தவனைக் கண்டு ஒருகணம் மருண்டாள். பிறகு முந்தைய நாள் நிகழ்வுகள் மனத்தில் அலைபாய, தனக்குத் திருமணம் ஆகி விட்டதையும் கணவனின் அருகில்தான் படுத்திருக்கிறோம் என்பதையும் மனது உணர்ந்து கொள்ள, சில...
    அத்தியாயம் 19 அவர் சொன்ன விஷயம் கேட்டுக் குமுதா அதிர்ச்சியடைவாள் என்று அவர் பார்த்திருக்க அவளோ “எனக்குத் தெரியும்த்த!” என்றாள். “எல்லாந் தெரிஞ்சுமா எம் மகனைக் கட்டிகிட்ட?” என்றவருக்கு அந்த விஷயம் அவருக்குத் தெரிய வந்த நாள் நினைவு வந்தது. மரகதம் அமுதன் வீட்டிலிருந்து வந்த மறுநாள் அமுதன் வீட்டு வேலையாள் ரத்தினம் அவரைப் பார்க்க வந்தார். “ஆத்தா! ஒங்ககிட்ட...
    அத்தியாயம் 26 இத்தனை நாட்களாகத் தெளிந்த நீரோடையாகச் சென்று கொண்டிருக்கும் அவர்கள் வாழ்க்கையில் மறுபடிக் கல்லெறிந்து குழப்ப வந்து விட்டாளா இவள் என்ற எண்ணம் தோன்றி விட ஆத்திரம் அணைமீற அந்த நேரம் குளியலறையைத் திறந்து கொண்டு வெளியே வந்த அமுதனைக் கவனிக்காமல் பேச, இல்லையில்லை, ஏச ஆரம்பித்தாள். “ஏய்! நீ எதுக்குடி என் மாமனுக்கு ஃபோன்...
    அத்தியாயம் 16 தன்னை ஒருவன் இழிவுபடுத்த முயல்கிறான். தன் ஆடைகளைக் கிழித்து அவமானப்படுத்த முயல்கிறான். தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என அவள் தொய்ந்த நேரம் அவள் மூளைக்குள் ‘எவனாவது தப்பா கிப்பா நடக்க முயற்சி பண்ணினா காலுல கெடக்கிறதைக் கழட்டி வெளுத்து விட்டுரு.என்ன வந்தாலும் மாமன் நான் பாத்துக்கிடுதேன். சும்மா மட்டும் விட்ராதே அவனை’...
    அத்தியாயம் 24 ஆரம்பத்தில் எவ்வளவு அழகாக இருக்கிறாள் என்று தெரிந்து கொள்வதற்காக யார் முகத்தைப் பார்க்க ஆசைப்பட்டாளோ அந்த வேதவல்லியைத் தன் மாமனுடன் சேர்த்துப் பார்த்த அதிர்ச்சியில் குமுதாவுக்கு ஒன்றுமே ஓடவில்லை. தான் அல்வா வாங்கிக் கொடுக்க நினைத்தவன் வேதவல்லியின் துணையோடு தனக்கு அல்வா கொடுக்கக் காத்திருப்பான் என அவள் கிஞ்சித்தும் எதிர்பார்க்கவில்லை. அவன் முன் அவன் கையணைவில்...
    அத்தியாயம் 22 குமுதாவுக்குத் திருநெல்வேலியிலேயே தேர்வு மையம் அமைந்திருக்க, என்னதான் பக்கம் என்றாலும் காலையில் கோடனூரில் இருந்து கிளம்பிச் செல்வது நேர விரயம் என்று கருதியவன் முதல் நாளே தேர்வு மையத்தின் அருகிலேயே ஒரு தங்கும் விடுதியில் அறை பதிவு செய்து அவளை அழைத்துக் கொண்டு சென்றிருந்தான். திருநெல்வேலியில் அவனுக்குச் சொந்தமாக, தங்குவதற்கு வீடுகள் இருந்தாலும் காலைப்...
    அத்தியாயம் 23 தேர்வெல்லாம் முடிந்து முடிவும் வந்து விட்ட பிறகும் கூட ஒன்பது மணிக்கு உறங்கும் வழக்கத்தைக் குமுதா மாற்றிக் கொள்ளவில்லை. அதனால் சீக்கிரமே உண்டு முடித்து வந்து படுத்து விடுபவளுக்கு அவன் எத்தனை மணிக்கு வருகிறான் என்பது கூடத் தெரியாது. ஒன்பதரைக்கோ, ஒன்பதே முக்காலுக்கோ சில நேரம் பத்து மணிக்கோ கூட வருபவன் மரகதம் உணவைப்...
    அத்தியாயம் 25 மறுநாள் காலை அவளை அழைத்துக் கொண்டு அவன் சென்ற இடம் சார்பதிவாளர் அலுவலகம். மலங்க மலங்க விழித்துக் கொண்டு நின்றவளை அழைத்துச் சென்று பதிவாளர் முன்னாலிருந்த பதிவேட்டைக் காட்டி அவன் கையெழுத்திடச் சொல்ல அப்போதுதான் தங்கள் திருமணத்தைப் பதிவு செய்ய வந்திருக்கிறார்கள் என்பது அவளுக்குப் புரிந்தது. பதிவே செய்யாத திருமணத்தை ரத்து செய்யப் போகிறானோ எனப்...
    அத்தியாயம் 27 அவன் கேட்ட கேள்வியில் அவனைக் குழப்பமாகப் பார்த்தவளிடம் தன் திட்டத்தை விவரிக்கலானான். “இதுனால உங்க பேரு கெட்டுடாதா?” “என் பேரு கெட்டா என்ன? என்னை எவ்வளவுக்கு கெட்டவனாக் காட்டுதோமோ அவ்வளவுக்கு ஒன் அண்ணனுகளால ஒனக்குப் ப்ரச்சனை வராது.” “அதெல்லாம் வேணாம். என்னை மட்டும் வில்லியம் கூட அனுப்பிருங்க. நான் ஓடிப் போனவளாக் கெட்டவளா இருந்துட்டுப் போறேன். உங்க...
    error: Content is protected !!