Sunday, May 11, 2025

    அநிருத்தன்

    அத்தியாயம் - 24 ஜோதியின் பேச்சு ஓய்ந்தவுடன் அந்த இடமே அமைதியானது. அவருடைய ஆதங்கம், ஆத்திரம், அங்கலாய்ப்பு அனைத்திற்கு என்ன எதிர்வினை ஆற்றுவது என்று விஜயாவிற்குத் தெரியவில்லை. ஆறுதல் சொல்லும் அளவிற்கு அறிமுகம் இல்லாததால் அமைதியாக இருந்தார். அவர் சொன்னதை உள்வாங்கிய ஷண்முகமும் அவனுடைய அம்மாவைப் போல் அமைதியாக தான் இருந்தான். அந்த அமைதி தான்...
    அத்தியாயம் - 23 கை சொடுக்கும் இடைவெளியில் முகத்திலிருந்து கால் வரை பலரை அலசி ஆராயந்து செயல்படும் மகனின் திறமை அம்மாவிற்கு கிடையாது. மகனின் தன்னிலை விளக்கத்தை கேட்டு சினேகாவின் எதிர்வினையை ஓரளவிற்கு விஜயாவின் மனது ஏற்றுக் கொண்டிருந்தாலும் அவரது மனத்தின் அலைப்புறுதல் ஓய்ந்தபாடில்லை. இன்றும் வலுக்கட்டாயமாக அவரைக் கடைக்கு அழைத்து வந்திருந்ததால் அவரது முகத்தில்...
    அத்தியாயம் - 22-1 அதுவரை பொறுமையாக இருந்த அந்த இளைஞன்,”ஆன்ட்டி” என்று ஜோதியை அழைத்து, அவனது கைப்பேசித் திரையைக் காட்டி ஹிந்தியில் ஏதோ சொன்னான். அவனது கைப்பேசியைத் தீவிரமாக சில நொடிகளுக்குப் பார்த்த ஜோதி,”ஆன்லைன்லே வாங்கிக்கோங்க.” என்று இரண்டே வார்த்தைகளில் நிர்தாட்சண்யமாக பதில் கொடுக்க,”டீக் ஹே ஜி” என்று சொல்லி விட்டு வெளியேறி விட்டான் அந்த...
    அத்தியாயம் - 22 கடையின் வாசலை பெருக்கி விட்டு, வெளியே இருந்த விளக்கை போட்டு, கண்ணாடிக் கதவைச் சாத்திக் கொண்டு கையில் துடைப்பத்துடன் உள்ளே சென்றார் ஜோதி. வீட்டுக்கு செல்லும் கதவைத் திறந்து அதற்குப் பின்னால் துடைப்பத்தை வைத்து விட்டு வரவேற்பறை விளக்கை ஒளிர விட்டு, கதவைச் சாத்தி விட்டு கல்லாவில் வந்தமர்ந்து கொண்டார். சில...
    அத்தியாயம் - 21-1 “கொஞ்ச நாள், கொஞ்ச நாள்னு நிறைய நாள் ஆகிடுச்சு விஜயாம்மா..இன்னும் கொஞ்ச நாள் போச்சுன்னா தில்லிலே குளிர் பிச்சிட்டுப் போகும்..அப்போ எப்படியும் சென்னைக்கு பறந்து வரத் தான் போறீங்க.” என்று கேலி செய்தாள் நித்யா. “அப்படி எதுவும் நடக்காது..இங்கே இருக்கறவங்க எல்லாம் மனுஷங்க இல்லையா? வெய்யிலைச் சமாளிக்கற மாதிரி குளிரையும் சமாளிக்கக் கத்துக்க...
    அத்தியாயம் - 21 பிரகாஷின் தில்லி விஜயம் நடந்து கிட்டதட்ட ஒரு மாதமாகி இருந்தது. அந்த விஜயத்திற்குப் பின் பிரகாஷின் சொல்வளத்திலிருந்து போலீஸ்க்காரன் என்ற வார்த்தை நிரந்தரமாகக் காணாமல் போயிருந்தது. அதே சமயம் அந்த ஒரு மாதத்தில் மகன் மீது சினேகாவிற்கு ஏற்பட்ட தவறான அபிப்பிராயமானது அவள் மீது தவறான அபிப்பிராயத்தை விஜயாவின் மனத்தில் ஏற்படுத்தியிருந்தது....
    அத்தியாயம் - 20 - 1 அதில் தலையை உயர்த்திய பிரகாஷ், குற்றம் சாட்டும் அவளது பார்வையைச் சந்திக்க முடியாமல் உடனேயே பார்வையைத் தாழ்த்திக் கொள்ள,”அவன் போலீஸ்காரனில்லை கண்ணு.” என்று சொல்லி பிரகாஷிற்கு ஷாக் கொடுக்க, டக்கென்று தலையை உயர்த்தி அதை வெளிப்படுத்தினான் பிரகாஷ். அதற்கு சினேகா எதிர்வினை ஆற்றும் முன்,”அத்தை என்ன உளர்ற?” என்று ஏகவசனத்தில்...
    அத்தியாயம் - 20 கேமரா கண் வழியாக பார்க்காமல் நேரடியாக பிரகாஷைப் பார்த்த நொடியில் அவனது கள்ளத்தனம் உறுதியாக சினேகாவின் மனம் உலைக்களமானது. எதிரில் இருந்தவனை கண்களால் எரித்தவளின் மனது அவளுக்குத் தெரியாமல் அவளைக் கேமரா வழியாக நோக்கியிருந்தவனைப் பஸ்மமாக்கும் அளவிற்கு பொங்கியது. அன்று சத்தம் செய்யாமல் கடையினுள் ஷண்முகம் நுழைந்தது இன்று திருட்டுத்தனமாக நுழைந்தது...
    அத்தியாயம் - 19-1 அந்தப் பதில் சரியான பதில் தானலென்றாலும் அதில் ஏதோ தப்பாக இருக்கிறது என்று உணர்ந்த சினேகாவிற்கு அது என்ன என்ற ஆராய்ச்சியில் இறங்க அவகாசம் கிடைக்கவில்லை. ,”ஷண்முகவேல் என்னோட மகன் கண்ணு..அன்னைக்கு வந்திருந்தானே.” என்றார் விஜயா. “யெஸ்..அன்னைக்கு கடைக்கு வந்திருந்தாங்க..நியாபகமிருக்கு.” என்று சினேகா சொல்ல அதற்கு அடுத்து அந்த உரையாடல் எந்தப் பாதையில்...
    அத்தியாயம் - 19 பெருக்கி சுத்தம் செய்திருந்தாலும் கடை கந்தகோளமாக இருந்தது. கல்லாவில் ரசீதுகள் இறைந்து கிடந்தன. கௌண்டர் மீது துணிகள் குமிந்து கிடந்தன. மொத்தத்தில் சுலபமான வேலையை அவன் பங்காக செய்து விட்டு கடினமானதை சினேகாவிடம் தள்ளியிருந்தான் மனோகர். அவளுடைய மடிக்கணினியோடு கல்லாவில் போய் அமர்ந்து கொண்ட சினேகா, முந்தைய தினத்தின் ரசீதுகளை ஒரு...
    அத்தியாயம் - 18-1 அம்மா, சினேகாவின் உதவி, புரிதல் இல்லையென்றால் ஷிக்காவிற்கும் அவனிற்கும் இடையே இருந்த பேதங்கள் அவர்களை எப்போதோ பிரித்திருக்கும். அவனது திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்திருக்கும். காதலிக்கும் போது அவனும் ஷிக்காவும் உணர்ந்தது கல்யாணத்திற்கு பின் அவர்கள் உணர்வது முற்றிலும் வேறாக இருந்தது. அதாவது அவர்களுக்கிடையே இருக்கும் அன்பு  பலமடங்கு பெருகியிருந்தாலும் அவர்களின்...
    அத்தியாயம் - 18 மனோகர் கதவைத் திறப்பதற்குள் விடாமல் அழைப்பு மணியை அழுத்திக் கொண்டிருந்தாள் சினேகா.  “வரேன்..வரேன்.” கத்தியபடி வேகமாக வந்து கதவைத் திறந்தவனைத் தள்ளிக் கொண்டு வீட்டினுள்ளே வந்தவள், அங்கே இருந்த நாற்காலி மீது அவளது லேப் டாப் பேக்கை தொப்பென்று போட்டு விட்டு, வாசல் கதவிற்கு நேரெதிரே இருந்த ஆளுயரக் கண்ணாடியில் தலை முதல்...
    அத்தியாயம் - 17 விஜயாவின் அதிர்ச்சியைப் பார்த்து வேகமாக வந்த ஷண்முகம், வாசலில் நின்றிருந்த பிரகாஷைப் பார்த்து,”என்ன டா இப்படி திடீர்னு வந்து நிக்கற?” என்று கேட்டபடி சங்கிலியை விடுவித்து வாசல் கதவை முழுவதுமாகத் திறந்தான். பெரிதாக புன்னகை சிந்தியபடி,“என்ன அத்தை என்னைப் பார்த்து அப்படியே அதிர்ச்சியாகிட்டே? போலீஸ் வீட்லே தலைமறைவா இருந்தா கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைச்சேயா?”...
    அத்தியாயம் - 16 அம்மாவின் அலைப்புறுதலை உணர்ந்தவன், அதைச் சரி செய்யும் பொருட்டு,”.ஒரு வாக்கிங் போயிட்டு வரலாமா? உப்பும்மா செய்திட்டீங்களா?” என்று வினவினான். “ஆச்சு..சட்னி மட்டும் தான் அரைக்கணும்.” என்றார் விஜயா. “அதுக்குள்ளே எப்படி ம்மா செய்தீங்க?” என்று அவன் ஆச்சிர்யப்பட, “அது சாமி கஞ்சிக்காக அரிசி உடைச்சு வைச்சிருந்தேனில்லே அதையே போட்டு கிளறி வைச்சிட்டேன்.” என்று விஜயா விளக்கம்...
    அத்தியாயம் - 15 - 1 விஜயா தில்லிக்குப் போகப் போகிறார் என்று தெரிந்தவுடன் ஜெயந்தி, வசந்தி இருவரும் மாறி மாறி,’என்ன சித்தி இப்படித் திடீர்னு முடிவு எடுத்திட்டீங்க..என் வீட்டுக்கு வாங்க.’ என்று இருவரும் அவரது மனசை மாற்ற முயல, விஜயாவும் கொஞ்சம் போல் கரைய ஆரம்பித்தார். பெற்றோர் இருவரும் வீட்டில் இல்லாமல் முக்கியமாக அவனுடைய...
    அத்தியாயம் - 15 மகாவுடன் விஜயா பேசிக் கொண்டிருந்த போது மீண்டும் அதே இலக்கிலிருந்து அழைப்பு வர,”அக்கா, அதே நம்பர்லேர்ந்து ஃபோன் வருது..யாரா இருக்கும்?” என்று அவரிடம் கேட்க, “இரண்டு முறை ஃபோன் செய்யறாங்கண்ணா உனக்கு தெரிஞ்சவங்களா தான் இருக்கும்.” என்றார். “எனக்கு தெரிஞ்சவங்களா?” என்று உரக்க யோசனை செய்த போது அழைப்பு நின்று போனது. “ஆமாம்..நம்ம சொந்தக்காரங்களா கூட...
    அத்தியாயம் - 14-1 அதே போல், ஜெயந்தி, வசந்தி இருவரின் திருமணத்தின் போது சபாபதி மாமா கேட்ட பெரிய தொகையை கொடுத்து அக்காவிற்கு உதவிக்கரம் நீட்டினார் விஜயா. அது மட்டுமில்லாமல் வர் சார்பாக இருவருக்கும் அஞ்சு லட்சம் பெருமானம் கொண்ட தங்க நெக்லெஸ் செட் வாங்கிக் கொடுத்தார். ஜெயந்தியின் பிள்ளை சித்து பிறந்த போது சித்தி...
    அத்தியாயம் - 14 அவரின் தேநீரை சமையலறையிலேயே குடித்து முடித்தவர் ஷிக்காவிற்காக தயார் செய்த தேநீரோடு வரவேற்பறைக்கு சென்றார். அதை மேஜை மீது வைத்து விட்டு லேசாக சாத்தியிருந்த கதவைத் திறந்து கடைக்குs சென்றார் ஜோதி. கைக்குழந்தையோடு இருந்த பெண்மணிக்கு பார்ட்டியில் அணியக் கூடிய விலையுர்ந்த சல்வார் கமீஸ் செட்களைக் காட்டிக் கொண்டிருந்தாள் ஷிக்கா. ஜோதியைப்...
    அத்தியாயம் - 13 -1 தொண்டை ஒரு மாதிரி கரகரவென்று இருந்ததால் சாதாரண தேநீருக்குப் பதிலாக இஞ்சி போட்ட தேநீரோடு சோபாவில் விஜயா அமர்ந்த போது பக்கவாட்டு மேஜையில் இருந்த அவரது கைப்பேசி ஒலித்தது. அழைத்தது அவருடைய அக்கா மகாலக்ஷ்மி.  காணொளி அழைப்பை ஏற்றவுடன்,“விஜி, டீ குடிக்கறேயா?” என்று அவர் கையிலிருந்த தேநீர் கோப்பையப் பார்த்து விசாரிக்க,  “ஆமாம்...
    அத்தியாயம் - 13 கைப்பேசி அழைப்பைச் சினேகா துண்டித்த பின்னும் அதே இடத்தில் அமர்ந்திருந்தார் ஜோதி. வெளியே, கடையில், வாடிக்கையாளருடன் ஷிக்கா உரையாடவது காதில் விழுந்தாலும் அது அவரது கருத்தில் பதியவில்லை. கவனம், கருத்து இரண்டையும் மகள் தான் நிறைந்திருந்தாள். காலமானது அதன் போக்கில் ஓடிக் கொண்டிருக்க இருபத்தி நாலு வயதாகியும் மகளின் கல்யாணம் இன்னும்...
    error: Content is protected !!