Monday, May 12, 2025

    அமுதம் பொழியும் குமுதம் மலரும்!

    அத்தியாயம் 6 மாலை நேரமானாலும் படு உற்சாகமாகத் தன் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தான் அமுதன். இன்னும் சற்று நேரத்தில் அவன் உற்சாகம் பறிபோகப் போவது தெரியாமல் மெலிதாகச் சீழ்க்கை கூட அடித்துக் கொண்டான். அந்த நேரம் இன்டெர்காம் கிணுகிணுக்க எடுத்துக் காதில் பொருத்தினான். “ம்ம்ம்.சொல்லுங்க!” “ஐயா! உங்களைப் பார்க்க ஒரு பொண்ணு வந்துருக்கு!” “பொண்ணா? ஆரு?” “குமுதான்னு சொல்றாங்க” அவன் மனம் இறக்கை...
    அத்தியாயம் 5 காலை நான்கு மணிக்கு யாரும் எழுப்பத் தேவையில்லாமலே எழுந்து விடும் பழக்கமுள்ள குமுதா அதே பழக்கத்தை மரகதத்தின் வீட்டிலும் பின்பற்றினாள். எழுந்ததும் முகம் கழுவிக் கொண்டு படிக்க உட்கார்ந்து விடுவாள். தானும் நான்கு மணிக்கு எழுந்து விடும் மரகதம் மாடுகளுக்கு வைக்கோல் போட்டு விட்டு, பால் கறக்க வரும் மன்னாருவிடம் முதல் நாள் பகலிலேயே...
    அத்தியாயம் 4 புது இடம் அவள் உறங்க நேரம் ஆகலாம். காலையிலும் தாமதமாகக் கிளம்பினால்... என யோசித்துக் கண்ணாயிரத்தைக் கொஞ்சம் முன்னதாகவே அமுதன் அனுப்பி இருக்க அவளோ காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து தன் வேலைகளை முடித்துத் தயாராக இருந்ததினால் கண்ணாயிரம் வந்ததும் மரகதத்திடம் சொல்லிக் கொண்டு கிளம்பி விட்டாள். இப்போதோ இத்தனை சீக்கிரமாக ஏன் வந்தோம்...
    அத்தியாயம் 3 அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கோடனூர். தலைமை ஆசிரியரின் அறைக்கு முன் போடப்பட்டிருந்த நீள பெஞ்சில் அமர்ந்திருந்தாள் அவள். கண்களோ வலது பக்கமிருந்த பெரிய நுழைவு வாயிலை அடிக்கொருதரம் தொட்டு மீண்டு கொண்டிருந்தன. மனமோ முதல் நாள் மாலை நடந்த நிகழ்வுகளை அசை போட்டுக் கொண்டிருந்தது. முந்தைய தினம் மாலை அமுதன் அவள் கையில் அந்தப் பைகளைக் கொடுத்ததும் மனதில்...
    அத்தியாயம் 2 வீட்டின் உணவு மேஜையில் தன் எதிரில் அமர்ந்து கொஞ்சமும் லஜ்ஜையின்றி உணவு வகைகளை ஒரு வழி செய்து கொண்டிருந்த அந்தப் பையனை விழிகளில் ஒருவித சுவாரசியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் அமுதன். சில மணித் துளிகள் முன்பு ஆலமரத்தினடியில் மயக்கமாகக் கிடந்தவனைக் காணவும் பதற்றத்துடன் சென்று வண்டியில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து முகத்தில்...
    அத்தியாயம் 1 “அங்காளம்மா எங்கள் செங்காளம்மா மங்கலம் பொங்கிட மனதினில் வந்திடும் மாரியம்மா! கருமாரியம்மா!” என்று அந்த அதிகாலை வேளையில் ஒலிப்பெருக்கியின் வாயிலாக எல்ஆர் ஈஸ்வரி பக்திப் பெருக்கில் உச்சஸ்தாயியில் அலறிக் கொண்டிருந்தார். பாடல் போட ஆரம்பிப்பதற்கு முன்பாகவே விழித்தெழுந்து தன் படுக்கையில் அமர்ந்த நிலையிலேயே உள்ளங்கைகளை விரித்து சில வினாடிகள் பார்வையிட்டவன் பின் அந்தக் கைகளாலேயே முகத்தைத் துடைத்து...
    error: Content is protected !!