Thursday, May 1, 2025

    துணையான இளமானே..

    5 சஞ்சலம் கலைத்தல்.. கண்கள் உன்னை கண்டிட…. காலங்கள் நான் மறந்திட.. இது காதல் தானோ.. என் காயங்கள் கலைக்கும் ஆறுதல் நீயோ!.. மகளின்  பிடிவாதத்திற்கு பணிந்து திருமணத்திற்கு  சம்மதம்  சொல்லி வந்த  வசுந்தரா கணபதிநாதனை தனிமையில் சந்தித்து, “இந்த பொண்ணுக்கு எப்படி  இப்படி ஒரு  எண்ணம்  வந்ததுன்னு புரியல!” என்றார்.  “எனக்கு முன்னாடியே இப்படி ஒரு யோசனை  இருந்தது, ஆனா பொண்ணு மனசுல என்ன இருக்குன்னு தெரியாம முடிவு எடுக்ககூடாதுன்னு...
    10 மோதலில் மலரும்  காதல்.. உன்னை விட்டு விலக மனமில்லாமல் விட்டுக்கொடுக்கின்றேன் என் விருப்பங்களை.. கல்லூரி படிப்பு முடிந்து கட்டுமானப்பணி பயிற்சி மேற்கொள்ளும் எண்ணத்தில்   கோயம்புத்தூர் தனியார் அலுவலகத்தில்  சிலகாலம் பணிபுரிந்து அதன் பயனாக மதுரையில் சொந்தமாய்  கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி துவங்கியவன் சிறுகச்சிறுக வளர்ச்சியடைந்து தன் தொழிலை விரிவுபடுத்த கோயம்புத்தூரில்  அலுவலகம்  துவங்கினான். அந்த ஊரின் தட்பவெப்பநிலையும் மனிதர்கள் பழகும் விதமும் தொழில்...
    8 இருமணம் இணைந்தது.. கள்ளம் கொண்டது உன் கண்கள்.. களவாடப்பட்டது என் இதயம்…   திருமணத்திற்கு வேண்டிய அனைத்து  வேலைகளையும் முகம் சுழிக்காமல்  முன் நின்று முறையாய் செய்து  கொண்டிருந்தார் வசுந்திரா.   பெரிய பெண்ணிற்கு செய்ய முடியாததை சின்னவளுக்கு செய்து திருப்தி அடையும் மனைவியின் மனமாற்றம் புரிந்து மனநிம்மதி கொண்டார் கணபதிநாதன். நாளும் ஒரு கவிதையை குறுஞ்செய்தியாய் விதுரன் அலைபேசிக்கு அனுப்பி அவன் இதயத்தை வெல்லும் முயற்சியை...
    9 காதல் மலரும் தருணம்.. எத்தனை  காயங்கள் என்னுள் இருந்தாலும்.. அத்தனையும் மறந்து போகிறேன்.. உன் கொஞ்சல் மொழியில் கரைந்து போகிறேன்.. விதுரன் உருவமில்லா எதையோ  பின்தொடர்ந்து செல்ல, ‘விது மாமா என்னை விட்டு போகாதீங்க. நீங்க இல்லாம என்னால வாழ  முடியாது, என்கிட்ட வாங்க மாமா’ என்று கத்திகொண்டே ஹனிகா   கதறலுடன்   அழைக்க,  ‘ஹனி’  என்று  ஏக்கத்துடன் அழைத்து தயங்கி நின்ற விதுரன், மறுநொடி  ...
    6 இணைசேரும்   நாள்  அறிவிப்பு… உன் கரம் கோர்க்கும் நாளுக்கு தான்.. தவம் கிடக்கின்றேன்.. உன் வாழ்வில் இணைந்திடவே வரம் கேட்கின்றேன்.. என் தவமும்  தவத்தின் வரமும் நீயே..   குலதெய்வ கோவில்  திருவிழா நாளில்  திருமணம் நிச்சயம் செய்வதற்கு சம்மதம் சொன்ன விதுரன் மறுநாளே தன்  தொழிலை கவனிக்க  ஊருக்கு  சென்று விட தேன்மொழி மட்டும் நிச்சய ஏற்பாட்டை கவனிக்க சொந்த ஊரிலேயே தங்கிக்கொண்டார். திருமணத்திற்கு சம்மதம் சொன்னதும் தன்னை...
    11 உணர்வுகளின் உறவாடல்.. என் அத்தனை துன்பங்களையும் ஒற்றைப் புன்னகையில் விழுங்கிவிடுகிறாய்.. உன் இதழில் இருப்பது புன்னகையா!! புதைகுழியா! ராதா சொல்லிச் சென்றது போல் விதுரன் குடும்பத்திற்கு வேண்டிய  உணவை தயாரித்து வந்தவருடன்  அவரின்  பிள்ளைகள் ஹரிதரனும், தருணிகாவும் வந்திருந்தனர். கொழுகொழு கன்னத்துடன்  மழலை குரல் மாறாத நான்கு  வயது தருணிகா  ஹனிகாவை கண்டதும் ஒட்டிக்கொண்டிட  ஹனிகாவிற்கும்   அவளை    பிடித்துப்போனது.  உணவைப்  பரிமாறியபடி, “என்ன விதுரா, உன் கல்யாணத்துக்கு...
    7 நினைவின் துணையில்.. உறக்கம் என் விழிகளை தழுவும் போதெல்லாம் போர்வையென போர்த்திக்கொள்கிறேன் உன் நினைவுகளை.. கோவிலிலிருந்து விதுரன் சொல்லாமல் வந்ததும் அவன் அலைபேசி எண்ணிற்கு, உன் கவலை கண்டு அணைத்து ஆறுதல் கூற துடிக்கின்றேன்.. என் காதலை கண்டு அருவருப்பாய் எண்ணி அவமதித்து விடுவாயோ என்று தயங்கி   துவண்டு நிற்கிறேன்.. என்று தன் உள்ளத்தின் வரிகளை வார்த்தைகளால் அச்சிட்டு குறுஞ்செய்தி ஒன்று அனுப்பிவிட்டு விதுரன் பதிலுக்கு ஆவலுடன் ஹனிகா காத்திருக்க, கவிதையை கண்ட அடுத்தநொடி  ...
    14 தொடரும் மர்மம்.. நாளாக நாளாக.. உன் காதலால் நானும் நானாக இல்லாமல் … நீயாக மாறிப்போகிறேன்.. தினம் தினம் விடியலில் விதுரன்  முகம் கண்டு  இரவில் அவன் நெஞ்சில்  சரிந்து  உறக்கம் கொண்டு அவன் நினைவுகளை மட்டும் சுவாசித்து வாழ்ந்து கொண்டிருந்தாள் ஹனிகா.  எறும்பு ஊற கல்லும் தேயும் என்பார்கள். கன்னியவள் காதல் அவள் கணவனின்  கல் மனதையும் கரைக்க துவங்கியிருந்தது. தன் துணையான...
    12 உருகும் மனம்… சூறாவளியில் சிக்கிய சிறு வாழை குருத்தாய் சிதைந்து கிடந்தேன், நானடி.. பட்டும் படாமல் தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சியாய் என் வாழ்வில் நுழைந்து பசுமை செய்தாய் நீயடி.. மாலை மறைந்து இருள் படர்ந்த வேலை,தன் வெளியூர் பயணத்தை முடித்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார் ராதாவின் கணவர் மாதவன்.  தனது அன்றாடப் பணிகளை கவனிக்க துவங்கிய கணவரிடம் காலையிலிருந்து நடந்த நிகழ்வுகளை வரிசையாய் அடுக்க துவங்கினார் ராதா.  “ என்ன  பொருத்தம் தெரியுமா...
    19 நிச்சயதார்த்த விழா.. குழப்பங்கள்  என்னை சூழ்ந்து நிற்கும் போதெல்லாம் வெளிவர முடியாமல் திணறித்தவிக்கிறேன்.. உன் காதல் கொண்டு என்னை மீட்டெடுத்து.. தவிப்புகளை தீர்த்திடு..  விதுரனின் நல்ல நேரமோ இல்லை ஹனிகாவின் கெட்ட நேரமோ தெரியவில்லை ஹனிகா வந்து  சென்ற சில மணிநேரம் கடந்து,  இட விற்பனை விஷயமாக  செல்வதாக சொல்லிச்சென்ற விதுரன் தன் சொந்த வேலைகளை முடித்துக்கொண்டு பாலாவின் தங்கை பாக்யாவின் திருமணத்திற்கு வேண்டிய சில ஏற்பாடுகளையும்...
    17 மறைமுக உதவி… பிரச்சனை ஒன்று வரும்போது உன் நிலையில் நின்று யோசிக்கும் போது.. உனக்கு சாதகமான பதில் மட்டுமே கிடைக்கும்.. அடுத்தவர் நிலையில் நின்று யோசிக்கும் போது சரியான பதில் கிடைக்கும்…  இதுவரை வெறும்  வார்த்தைக்கு மட்டுமே கணவன்  மனைவியாய் வாழ்ந்து கொண்டு   இருந்தவர்கள் வாழ்விலும் ஒன்றிணைய  விதுரன் மீது படித்திருக்கும் களங்கத்தை துடைக்க இருமடங்கு வேகத்துடன் பாலா   இருக்கும் இடத்தை கண்டறியும் முயற்சியில்  இறங்கினாள் ஹனிகா.  தன்னுடன்...
    13 உண்மை அறியும் முயற்சி.. காரணம் இல்லாமல் காரியமில்லை.. நடந்த காரியத்தின் காரணத்தை ஆராயாமல் வாழ்வில் நிம்மதி  கிடைப்பதில்லை… திருமணம் முடிந்து சில நாட்கள் நகர்ந்திருந்தது. விதுரன் வீடு ஹனிகாவிற்கும், ஹனிகாவின் குறும்பும்  துருதுருப்பும் விதுரன் வீட்டில் உள்ளவர்களுக்கும்  பழகி இருந்தது. அடிக்கடி அலைபேசி  மூலம் அழைத்து மகளின்  நலனை விசாரித்துக் கொண்டார் வசுந்தரா, “  நீங்களும்  சலிக்காம  போன் பண்ணும் போதெல்லாம்      இதே கேள்விய  கேட்குறீங்க!  நானும்    சலிச்சுகிட்டே ...
    15 ஊடலும் காதலில் ஓர்  பாகம்.. உன் விழி என் விழியுடன் மௌன மொழி பேசிடும் போது.. என்னை விட்டு இடம் பெயர்ந்து கொள்கிறேன் உன்னுள்… பானுவிடம்   வேண்டிய விபரம் அறிந்து  வந்த  ஹனிகா மன நிம்மதிக்காக சாய்பாபா காலனியில் இருக்கும் பிரசித்தி பெற்ற  சாய்பாபா கோவிலுக்கு சென்று அமைதி முகத்துடன் அருள்பாலிக்கும் பாபாவை மனமுருகி வேண்டிக்கொண்டவள் கோவிலின் வளாகத்தில் அமர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி...
    16 ஊடலின் முற்றுப்புள்ளி கூடல் .. எதைப்பற்றி யோசித்தாலும் உன்னிடம் வந்து நிலைக்கிறது என் நினைவுகள்.. உனைப்பற்றி யோசித்தால் என்னவாகும் என் நிலை… பாராமுகம் காட்டி சென்ற தன்னவன் கோபத்தை  எண்ணி பெண்ணவள்  மனம்  ரணமாய் வலித்தது, தன் வேதனையை வெளியில் காட்டிக்கொள்ள மனமில்லாமல்  பசியில்லை என்று பொய்யுரைத்து,  இரவு உணவை தவிர்த்து அறைக்குள் சென்று முடங்கினாள் ஹனிகா. ஹனிகாவிடம் முகம் திருப்பி சென்றவன் இரவு  வெகுநேரம் கடந்தே வீடு வந்து  ...
    18 ஊர் பயணம்.. உதவி என்பது கேட்டுப் பெறும் தட்சனை அல்ல உண்மைக்கு தானாய் கிடைக்கும் வெகுமானம் நியாயம் உன் பக்கம் இருக்குமெனில் உதவியும் கேட்காமல் கிடைக்கும் பாலாவின் தங்கை நிச்சயவிழாவிற்கு  செல்வதற்காக,  வேலை விஷயமாக வெளியூர் பயணம்  என்று பொய்யுரைத்து தன் சொந்த ஊருக்கு கிளம்பத் தயாரானான்.  கோபமாய் இடையில் கைவைத்து முறைத்து நின்ற ஹனிகா,“எப்படி, எப்படி  நான் இல்லாத  இடத்துல இருந்தா உங்களுக்கு மூச்சு முட்டுமா?, ஒரு நிமிஷம் கூட...
    error: Content is protected !!