Tuesday, July 14, 2026

    K S U 4 1

    0

    K S U 6 2

    0

    K S U 5 1

    0

    K S U 8 1

    0

    K S U 9 1

    0

    K S U

    K S U 10 2

    0
    ஆனால், அவளின் தன்னகங்காரம் விட்டுவிடுமா? “என்ன பேசிட்டேன்? இதுக்கும் நான் இவ்வளவு பாடுபட்டும் பெருசா என் தொழிலில் ஜெயிக்க முடியலை. எனக்கான காலம் நேரம் இன்னும் வரலை போலன்னு நான் காத்துட்டு இருக்கேன். இதே கொஞ்சம் தொழிலில் பணம் வந்து நான் நல்ல மாதிரி இருந்திருந்தா இன்னும் என்னவெல்லாம் என்னைப் பார்த்து பேசியிருப்பீங்க, இதுவே உங்களை...

    K S U 9 1

    0
    காதல் சூழ் உலகு – 9 ஒருவித இனிய படபடப்புடன் வீடு வந்து சேர்ந்திருந்தாள் அனுராதா. அத்தை கனகதேவி அவளைக் கேலி புன்னகையுடன் பார்ப்பது போல இருக்க பெண்ணவளுக்கு ஒன்றும் புரியவில்லை. சங்கடத்துடன் அசட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டு தலையைக் குனிந்தபடி அறைக்குள் வந்துவிட்டவளுக்குக் காரணமின்றி கன்னங்கள் சூடேறியது. இன்னமும் கணவனின் நெஞ்சில் சாய்ந்திருப்பது போல மாயை. அவனது வலிய...

    K S U 10 3

    0
    ‘எந்த நேரத்தில் எதைப்பற்றிப் பேசுகிறாள்?’ என்று சுரேகாவின் பேச்சில் அனுவிற்கு ஆயாசமாக இருந்தது. உண்மையில் இந்த விஷயத்தில் அவளுக்கும் ஆதங்கம் இருக்கிறது தான், ஆனால், அது அவளது மனதளவில்! கனகதேவி கூட சுரேகாவிற்கு இடம் கொடுக்காதே என்று அவ்வப்பொழுது இவளிடம் கூறியிருக்கிறார். ஆனால், இவள் இதுவரை ஒரு வார்த்தை அது தொடர்பாகப் பேசியதில்லையே! அவளைப்...

    K S U 10 1

    0
    காதல் சூழ் உலகு – 10 அன்று வீட்டிற்கு வருகை தந்திருந்த சுரேகாவிற்கும் கனகதேவிக்கும் இடையே கடும் வாக்குவாதம். மகளுக்கு பீஸ் கட்ட, நோட்டு புத்தகங்கள் வாங்க என்று நந்தகுமாரிடம் ஒன்று விடாமல் லிஸ்ட் போட்டு பெரும் பணத்தை வாங்கிய மகளின் மீது அன்னைக்கு ஏக கடுப்பு. வழக்கமாக, ‘என்னவோ செய்து கொள்ளட்டும். அக்காவும் தம்பியும் சொல்லித் திருந்தும்...

    K S U 7 2

    0
    “ஆமா ஆமா. என் பொண்ணு சொன்ன மாதிரி பென்ச் தேய்க்கிற வேலை வேற... என்ன கஷ்டம் இருக்க போகுது” என்று கனகா முகத்தைத் தீவிரமாக வைத்துக்கொண்டு சொன்ன பாவனையில் அனுவிற்கும் சிரிப்பு வந்துவிட்டது. அவளது சிரிப்பை பார்த்தபடி, “ஏன் அனும்மா அவளை இன்னும் எத்தனை நாள் பொறுத்துப் போக முடியும்ன்னு நினைக்கிற, அவ பாட்டுக்கு இஷ்டத்துக்கு...

    K S U 1 2

    0
    “அதுசரி என்னை அக்கான்னு சொல்லு... அவரை அண்ணன்னு சொல்லு...” என அனு கேலி செய்ய, “அம்மா தான் அண்ணன் முறைன்னு சொன்னாங்க” என்றவள், “ம்ப்ச் உங்களை அண்ணின்னு இனி கூப்பிடணுமோ? என்னோட அத்தை பெத்த ரத்தினம்... அழகு ரத்தினம்... அனு அண்ணி...” என்று அழுத்திச் சொல்லி மீண்டும் கன்னம் கிள்ளி கொஞ்சினாள். ‘அலும்பு செய்யறாளே!’ என்று அனு எண்ணிக்...

    K S U 6 3

    0
    உண்மையில் அனுவுக்கு அவன் வார்த்தைகளில் மண்டைக் காய்ந்தது தான் மிச்சம். ‘உன் அக்கா அவ புருஷனை ஓட்டாண்டி ஆக்கிட்டு, இப்போ உன்கிட்ட வந்து நிற்கிறா என்று சொன்னால் மட்டும் இவனுக்கு புரிந்துவிடுமா என்ன?’ என்று கடுப்பானவள், என்னவும் செய்து கொள் என்னும் அலட்சியத்துடன், “டின்னருக்கு என்னன்னு பார்க்கிறேன்” என்றுவிட்டு அவன் கைப்பிடியிலிருந்து நகர்ந்தாள். எப்பொழுதும் அவன்...

    K S U 4 2

    0
    சட்டென்று இப்படி சொல்லுவான் என்று எதிர்பார்க்காதவளின் முகம் தாமரை மலராக மலர்ந்து போனது. அவளைப் பொறுத்தவரையிலும் கணவன் திடீரென்று புன்னகைக்கிறான், பாராட்டுகிறான்! இதெல்லாம் பெரிய விஷயமாகவே தெரிந்தது. அத்தனை நேரமும் வீம்பாகப் பேசிக்கொண்டும் முறுக்கிக் கொண்டும் இருந்த மனைவியின் முகம் அழகாக மலர்ந்ததில் நந்தாவின் மனதில் ஆழப் பதிந்து போனது. நாட்கள் நந்தாவின் பரபரப்பிலும் வங்கி வேலையின்...

    K S U 9 3

    0
    சில நொடிகள் மௌனம் இருவரிடையேயும். பின்பு அனுவே மெதுவான குரலில், “இப்ப உங்க பினான்ஸியல் இஸ்ஸியூஸ் எல்லாம் சரி பண்ணிட்டீங்களா?” என்று கேட்டாள். சன்னமான பெருமூச்சு அவனிடம். “ஹ்ம்ம் கொஞ்சம் கொஞ்சமா சரியாயிட்டு வருது. அதுக்காகத்தான் ராத்திரி பகல் பார்க்காம ஓடறேன். ஆனா இப்ப முன்னாடி அளவுக்கு ஸ்ட்ரகிள் இல்லை. என்ன ஏதாவது ஒரு செலவு வந்துட்டே இருக்கு”...

    K S U 3 1

    0
    காதல் சூழ் உலகு – 3 தன் மனதிற்குப் பிடித்தவனுடன் தான் திருமணம் நடக்கப் போகிறது என்ற நிலையிலும் ஏனோ அனுராதாவால் முழுமனதோடு திருமணத்திற்குத் தயாராக முடியவில்லை. படித்து முடித்த கையோடு வேலைக்குச் செல்ல முயற்சி எடுத்து அதில் தேர்ச்சியும் பெற்றிருந்தவளுக்கு வேலையில் சேரும் முன்பு திருமணம் என்றால் அவளின் நிலையைச் சொல்லவும் வேண்டுமா? திருமண வாழ்க்கை, புது...

    K S U 2 3

    0
    முழுதாக வளர்ந்திடாத இந்த சிறுபிள்ளையிடம் ஏனடா இப்படி நடந்து கொண்டீர்கள் என்று அவளின் உள்ளம் கதறியது. இப்படி மிக மோசமாய் வளர்ந்து நின்ற ஆண்களைச் சபிப்பதை தவிர அந்த நேரத்தில் அவளால் எதுவுமே செய்ய முடியவில்லை. என்ன பெரிதாக செய்து விட முடியும்? அந்த தைரியம் தானே அவர்களுக்கும். ஆனால், இன்று செமத்தியாக வாங்கிக் கட்டிக்கொண்டார்கள்...

    K S U 7 3

    0
    “என் கல்யாணம் வரைக்கும் என்னை நான் குறைச்சு நினைச்சதே இல்லைம்மா. ஆனா ஒரு கோடு பக்கத்துல இன்னொரு கோட்டை பெருசா போகும்போது என்ன நிலை ஆகுமோ அதுதான் என் நிலையும். என் நிலைமை நல்லாத்தான் இருந்தது. வீட்டுக்கு ஒரே பையன் வேற, பயங்கர செல்லம். ராஜா வீட்டு கன்னுக்குட்டி. அப்பா அவரோட பென்ஷன் பணத்தை...

    K S U 5 2

    0
    சுரேகா வைத்திருக்கும் பொட்டிக்கிற்கு விளம்பரம் என்பது, கடைக்கு வரும் புதிய மாடல் உடை ஒன்றை அவளே அணிந்து கொண்டு, போஸ் கொடுத்து, புடவையை விரித்துக் காட்டி, கோல்கேட் விளம்பர மாடல் போல பல்லைப் பல்லைக் காட்டி என நாளுக்கு ஒன்றாக வீடியோ போடுவது தான். அப்படிப் போடாவிட்டால் அவளுக்கு அந்த நாளே போகாது. யாரும் ‘என்னம்மா...

    K S U 5 1

    0
    காதல் சூழ் உலகு – 5 “ந... ந்... தா...” “ம்ம்கூம்... நந்தன்... ம்ம்ம்... நந்து...” “அச்சோ! அதுவும் சரியா வராது. அத்தை கூட அப்படித்தானே கூப்பிடறாங்க... ஆனா நந்து தான் நல்லா இருக்க மாதிரி இருக்கு. அதைவிட்டா வேற எப்படி கூப்பிடறது? நந்தன் கூட நல்லா தான் இருக்கு...” என்று முணுமுணுப்பாகத் தனக்குத் தானே பேசிக் கொண்டவளுக்குத்...

    K S U 11 1

    0
    காதல் சூழ் உலகு – 11 திருமண வாழ்க்கையின் அஸ்திவாரம் நேசமும் அன்பும் அக்கறையும் மட்டும் தானா? எல்லாவற்றையும் விட நம்பிக்கை தானே அதிமுக்கியமான அஸ்திவாரம். அது இல்லாத உறவில் வேறு என்ன நிறைந்திருந்து என்ன பயன்? அனுராதாவிற்கு கணவனின் சொற்களைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவள் எப்போதாவது உன் அக்காவிற்குப் பணம் தருவதில் எனக்கு விருப்பமில்லை...

    K S U 2 1

    0
    காதல் சூழ் உலகு – 2 அனுராதாவிற்கு தன் மனநிலை என்ன என்றே புரியவில்லை. அவளின் அம்மா தேவகி, ‘இந்த சம்பந்தம் ஓரளவிற்கு முடிவானது போலத்தான், மாப்பிள்ளை மட்டும் நேரில் பெண்ணைப் பார்த்து விட்டுப் பிடித்திருந்தால் சம்மதம் சொல்லுவாராம்’ என்று தான் அவரின் தம்பி பத்மநாபனிடம் அவர் மனைவி சாந்தியிடமும் சொல்லியிருந்தார். அம்மா, அத்தை, மாமாவிற்கு பெரும் நம்பிக்கை!...

    K S U 1 1

    0
    காதல் சூழ் உலகு – 1 புகைப்பட சட்டகத்தினுள் சட்டமாக அமர்ந்திருந்த தந்தை வேணுகோபாலனின் புகைப்படத்தை தன் தளிர்க்கரங்களால் வருடிக் கொண்டிருந்த அனுராதாவின் கண்களில் நீர் திரையிட்டிருந்தது. அவளின் பதினான்காம் வயதில் விண்ணுலகம் சேர்ந்துவிட்ட தந்தையின் நினைவுகள் இன்னும் அவள் நெஞ்சினில் பசுமையாய் இருக்கிறதென்றால், அவரை இழந்து விட்ட வலியின் ஆழத்தை எடுத்து சொல்ல எந்த உதாரணங்களும் பொருந்தாது! இளம் பெண்ணின்...

    K S U 3 2

    0
    “அப்பறம் என்னாச்சு?” என்றாள் அனு குழப்பமாக. “அது... வேகமா வந்து விழாம பிடிச்சாங்க அண்ணி. அப்ப... அப்ப...” “சீரியல் மாதிரி இழுக்காம முழுசா தான் சொல்லேன்” பொறுமையே போய்விடும் நிலையில் அனு இருந்தாள். லேசாக உடல் பதற, “அவங்க பிடிச்சப்ப, இங்கே கை பட்டுடுச்சு அண்ணி. எனக்கு உடனே அன்னைக்கு அந்த பசங்க மோசமா நடந்துக்கிட்டது ஞாபகம் வந்துடுச்சு. அதுதான்...

    K S U 6 1

    0
    காதல் சூழ் உலகு – 6 சுரேகா வாய் கூசாமல் தம்பியின் காதில் சுற்றிய பூவுக்கு, “ஓ…” என்பது தான் நந்தாவின் பதில் ரியாக்ஷன். கூடவே, “இருக்கா ரெபிரஷ் ஆயிட்டு வந்துடறேன்” என்று சொல்லிவிட்டு அறைக்குள் சென்றவனின் பார்வை மின்வெட்டாய் மனைவியைத் தழுவி சென்றது. அனுராதாவிற்குப் படபடப்பு! இது அவ்வப்போது நடப்பது தான்! அவன் என்னவோ திட்டுவதற்காகத்தான்...

    K S U 2 2

    0
    கனகதேவி மகனின் செய்கைகளை ஆச்சரியமாகப் பார்த்திருந்தார். தனக்காகச் சம்மதம் சொல்லியிருப்பானோ, அவனுக்குப் பிடிக்காமல் இருந்தால் அவர்களது திருமண வாழ்க்கை சிக்கலாகிப் போகுமே என்று பரிதவிப்புடன் மகனை பார்த்திருந்தவருக்கு அவனின் செய்கை பெரும் ஆசுவாசத்தைக் கொடுத்தது. மணமாகப் போகிறவர்களின் சம்மதம் கிடைத்ததைத் தொடர்ந்து திருமணப் பேச்சுக்கள் நல்லவிதமாக நடக்க நகை, பணம், சீர் வரிசையைப் பற்றிய பேச்சு வரவே...
    error: Content is protected !!