Friday, May 3, 2024

    Aval Nan Payanam

    அவள் நான் பயணம் - 5 உன் காந்தப்புலத்தின் மையத்தையே தேடிச் சுழல்கிறதடி என் துருவமெல்லாம்…         உனைத்தேடியே என் பயணம்… பயணத்தின் தடைகளை தாகத்தின் நீட்சியென கடந்து வருகிறேன். பாலைவனத்தின் பகல் பொழுதாய் எனை வதைக்காதே. கார்கால இரவாய் காதோரம் கதைக்க வருகிறேன். கயல்விழியில் கனல் பேசி கொல்லாதே. தீண்டிச் செல்லும் பூங்காற்றின் நாசி நுழைந்த வாசமாய் பாசம் காட்டிவிட்டு, அடுத்த மூச்சில்...
    அவள் நான் பயணம் - 4 உன் விழி மையின் வேர் தேடி முகிழ்த்து எழுகிறதடி என் வலிமையெல்லாம்… உன் விழித்திரை படைக்கும் காவியம் படிக்க புவியில் எனையன்றி புலவன் இல்லையடி. படைப்பவள் இங்கே என் முகம் படிக்கும் வாசகியாகிப் போனாய். உன் காவியம் படிக்க வந்த நானோ புலவனாகிப் போனேன். முரண் பார்த்தாயா முகில் தீட்டும் கோலங்கள் நிலவில் வெண்மையாகிப்...
    அவள் நான் பயணம் - 3 உன் புருவத்திடை பள்ளத்தாக்கில் வீழ்ந்து கிடக்கிறதடி என் வீரமெல்லாம்… ஆம் வீரம் பேசும் என் கண்கள் உன் இமைகளுக்குள் சிறைபட்டு கிடக்கிறது. விடுவிக்க உனக்கும் எண்ணம் இல்லை. விடுபட எனக்கும் விருப்பம் இல்லை. வரமென நான் வாழும் வசந்த வாயிலடி அது. என்ன மாயம் செய்தாயடி பெண்ணே… உன்னுள் என்னை புதைத்துக் கொண்டாய்… எழுந்து...
    அவள் நான் பயணம் - 2   என் கம்பீரமெல்லாம் அவளின் கால் மெட்டி நெகிழ்வில் நொருங்கிப் போகிறது… ஆம் என் சிகை வணங்கா கம்பீரங்களெல்லாம், அவளின் மெல்லிய தலை கோதலில் மேற்கு சூரியனாய் வீழ்ந்துவிடுகிறது. நாணலாய் நிற்க வேண்டிய தருணங்களில் தென்னையாகிப் போனதால் ஒடிந்த மனதை காதலெனும் ஓடையில் செலுத்தி அவளைத் தேடிச் செல்கிறேன். இவ்ளோ கூட்டத்தில சீட்டு கெடைக்குறதே பெரிய விசயம்,...
    அவள் நான் பயணம் - 1   என் கிறுக்கல்களை அவள் வளைவுகளால் ஓவியமாக்கிவிட்டாள் வண்ணச் சித்திரமாய் என் வாழ்க்கை… ஆம் வாழ்வென்னும் வண்ணச்சித்திரத்தை வரைய நான் தூரிகையாய் நின்ற போது வண்ணமாய் வந்து என் வாழ்வை வடிவமைத்தவள் அவள். அவளைத் தான் காணச் செல்கிறேன். ஒரு நீண்ட தூரப் பயணம் இது. வாழ்வை மட்டுமல்ல வரலாற்றையே மாற்றும் சக்தி கொண்டவை பயணங்கள். மாற்றத்தை...
    error: Content is protected !!