Monday, July 14, 2025

    Sanda Kozhi

    சண்ட கோழி அத்தியாயம் 9 மித்ரா அவர்கள் பகுதிக்கு வந்தபோது... ஹாலில் பாய் விரித்து, ஜன்னகள் எல்லாம் காற்றுக்குத் திறந்து விட்டு, ஏற்கனவே ஈரத்துணி எல்லாம் போட்டு வைத்து, இப்படி எல்லாச் செட்டப்பும் செய்து வைத்திருந்தான் மதியழகன். அவனைப் பார்த்து சிரித்தபடி உள்ளே வந்த மித்ரா, கதவை சாற்றிவிட்டு நைட்டி எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றாள்....
    சண்ட கோழி அத்தியாயம் 8 மதியழகன் செல்லில் காலை ஆறு மணிக்கு அலாரம் வைத்திருக்க, அடித்ததும் மித்ரா எழுந்து கொண்டாள். அவளுடனே அவனும் எழுந்துகொண்டான். “இப்ப நான் என்ன பண்ணும்?” மித்ரா கேட்க, “என்ன வேணா பண்ணலாமே.” என்றவன், அவளை அணைக்கச் செல்ல, அவனைப் பிடித்துத் தள்ளி விட்டவள், “நான் இதைச் சொல்லலை...இந்த வீட்ல எனக்கு...
    சண்ட கோழி அத்தியாயம் 7 அன்று சம்பந்தி விருந்து என்பதால்.... காலையிலேயே மித்ரா எழுந்து குளித்து, தனது பெட்டிகளில் மிச்சம் மீதி வைக்க வேண்டியது இருந்தவைகளையும் வைத்துக் கொண்டு இருந்தாள். சுபத்ராவும், அவள் அம்மாவும் அவளுக்கு உதவிக் கொண்டு இருந்தனர். வீட்டில் வைத்தால் இடம் பத்தாது என வீட்டிற்குப் பக்கத்தில் இருந்த சின்ன மண்டபத்தில்...
    மாலை இருவரும் படத்துக்குச் சென்றனர். இடைவெளியில் மதியழகன் மித்ரா கேட்ட கோன் ஐஸ் வாங்கிக் கொடுக்க, அதைப் பாதிச் சாப்பிடும் வரை, அருகில் இருந்த கணவன் கூடத் தெரியவில்லை. பிறகுதான் நினைவு வந்து, “உங்களுக்கு வேணுமா?” என்றாள். “நீ கையில வச்சிருக்க ஐஸ்கிரீம் விட... அதைச் சாப்பிட்ட உன் உதடு தான் டேஸ்ட் அதிகம்....
    சண்ட கோழி அத்தியாயம் 6 ஜன்னல் திரைசீலையையும் மீறி விழுந்த வெளிச்சத்தில் கண்கள் கூச, மதியழகன் மெல்ல கண் விழித்தான். பக்கத்தில் சங்கமித்ரா இல்லை. குளியல் அறையில் நீர் விழும் சத்தம் கேட்டது. அவன் செல்லை எடுத்து நேரத்தை பார்க்க, காலை ஒன்பது மணி. முதல் தடவை இப்படி நேரத்தை பார்க்க எழுந்தது தான்....
    சண்ட கோழி அத்தியாயம் 5 ஜெய் காரை ஓட்ட அவன் அருகில் இருந்த இருக்கையில் சுபத்ராவின் பிள்ளைகள் இருவரும் இருந்தனர். பின்புறம் மதியழகன் சங்கமித்ரா மற்றும் சுபத்ரா அமர்ந்துகொள்ள... கார் புதுக்கோட்டையை நோக்கி சென்றது. ஜெய் காரில் பாடல் ஓடவிட்டு வண்டி ஓட்டுவதில் கவனம் செலுத்த, சுபத்ரா அந்தப் பக்கம் ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கை...
    சண்ட கோழி அத்தியாயம் 4 காலை ஏழரை ஒன்பது முஹுர்த்தம் என்பதால்.... சாப்பிட்டதும் உள்ளூர் மற்றும் வெளியூர் ஆட்கள் கிளம்பி விட, மாப்பிள்ளையின் பக்கம் நெருங்கிய உறவினர்களும், பெண் வீட்டினர் தாங்கள் பஸ் பிடித்து அழைத்து வந்த சொந்தங்கள் மட்டும் இருந்தனர். பன்னிரெண்டு மணிக்கு மதிய உணவு முடிந்ததும் அவர்களும் கிளம்பி விடுவார்கள். நல்ல நேரத்தில்...
    சண்ட கோழி அத்தியாயம் 3 அடுத்து வந்த முஹுர்த்த நாளில். அவர்கள் ஊர் பெரிய கோவிலில் வைத்து, பரிசம் போட்டு முடித்தனர். மதியழகனை தவிர அனைவரும் வந்திருந்தனர். “நீ வீட்டையும், கடையையும் பார்த்துக்கோ. நாங்க போயிட்டு வரோம்.” என அவன் அப்பா சொல்லும் போது, அவனால் மட்டும் என்ன செய்ய முடியும். வேறு வழியில்லாமல்...
    சண்ட கோழி அத்தியாயம் 2 தம்பியின் அழைப்பை ஏற்று எழிலரசியும் தன் பிறந்த வீட்டிற்கு வந்துவிட்டாள். அவளைப் பக்கத்துக்கு ஊரில் தான் கட்டி கொடுத்து இருக்கிறார்கள். பதினெட்டு வயதிலேயே கட்டி கொடுத்து விட்டனர்.   பன்னிரெண்டாம் வகுப்பு வரைதான் படித்து இருக்கிறாள். படிப்பும் சரியாக வரவில்லை. அதனால் நல்ல சம்பந்தம் வர, உடனே திருமணம் முடித்து விட்டனர்....
    சண்ட கோழி அத்தியாயம் 1 “ஏம்ப்பா மதியழகா, என்னோட கொஞ்சம் வந்திட்டு போப்பா.” “என்ன திம்சு உன்னோட இம்சையா இருக்கு. என்னவோ கட்டின பொண்டாட்டியை கூப்பிடுற மாதிரி கூப்பிடுற.” “என்னப்பா நீதான் நியாயத்தைச் சொல்வேன்னு கூப்பிட்டா, நீ ஏதோ லந்து அடிச்சிட்டு இருக்க.” “சரி சீக்கிரம் சொல்லு, என்ன உன் பிரச்சனை?” “இந்தச் சேகர்...
    error: Content is protected !!