மெட்டியால் வந்த சொந்தம்
காலை எட்டு மணிக்கெல்லாம் இளம்பிறை தான் வேலை செய்யும் வீட்டைச் சென்றடைந்தாள்.
அது அவளுடைய வீட்டைப் போலச் சிறிய வீடு கிடையாது. இரண்டு மாடிகளைக் கொண்ட பெரிய வீடு. வாசலில் அழகான தோட்டம், கார் நிறுத்தும் இடம், வீட்டைச் சுற்றிலும் விதவிதமான செடிகள் என வசதிக்குக் குறைவில்லாத குடும்பம்.
ஆனால், அங்கே வேலை செய்யும் இளம்பிறையின் உழைப்புக்கு...
மெட்டியால் வந்த சொந்தம்
❤️ அத்தியாயம் 08 ❤️
பேரூர் – கோயம்புத்தூர்.
கோவையின் மேற்குப் பகுதியில் அமைந்திருந்த பழமையும் புதுமையும் கலந்த அழகான ஊர் பேரூர்.
புகழ்பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோயில், நொய்யல் ஆறு, ஆங்காங்கே தென்படும் தென்னை மரங்கள், சிறிய கடைகள், குறுகிய தெருக்கள் என அந்த ஊருக்கென்று தனித்துவமான அழகு இருந்தது.
நகரத்தின் வளர்ச்சி ஒருபுறம் இருந்தாலும்,...
முகிலின் குடும்பம்…
கலைவாணியின் வீட்டிலிருந்து திரும்பிய பாக்கியலட்சுமி, வீட்டிற்குள் நுழைந்ததும் சோர்வாகக் கதிரையில் அமர்ந்தார். உடனே மாலதி தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்து அவரிடம் கொடுத்தாள். கார்முகிலரசன், அவனுடைய தங்கைகள், மாதவன், சின்ன தம்பி என அனைவரும் பாக்கியலட்சுமியின் முன்னால் அமர்ந்திருந்தனர்.
கலைவாணியின் வீட்டில் நடந்த ஒவ்வொரு வார்த்தையும் முகிலின் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.
தன் மகனுக்குக் கலைவாணியைத் திருமணம் செய்து...
மெட்டியால் வந்த சொந்தம் ❤️
அத்தியாயம் — 07
பாக்கியலட்சுமி தன்னுடைய குடும்பத்தினருடன் கிளம்பிச் சென்றதும், ராஜசேகரனின் வீட்டில் சிறிது நேரம் யாருமே பேசவில்லை.
அந்த அமைதியைக் கலைத்த இந்திராணி, தன்னுடைய கணவரைப் பார்த்தார்.
“என்னங்க, அந்த அம்மா பேசிட்டுப் போனதைப் பார்த்தீங்களா? பார்க்க எவ்வளவு எளிமையா இருக்காங்க! ஆனா, பேசுற பேச்சைப் பாருங்க. அவங்க மகளுக்கும் நம்ம மகனுக்கும்...
மெட்டியால் வந்த சொந்தம் ❤️
❤️ அத்தியாயம் — 06 ❤️
மூன்று நாட்களாகச் சித்தரின் தரிசனத்திற்காகக் காத்திருந்த ஆதிவேந்தனின் பொறுமையைச் சோதித்துப் பார்த்த சித்தர், நான்காவது நாளில் அவனுக்குக் காட்சி கொடுக்க முடிவு செய்தார்.
அன்றும் ஆதிவேந்தனும் அவனுடைய பெற்றோரும் கோயிலுக்கு வந்து நீண்ட நேரமாகக் காத்திருந்தார்கள்.
நேரம் செல்லச் செல்ல ஆதிவேந்தனின் முகத்தில் சலிப்பு அதிகரித்துக்கொண்டே இருந்தது....
சித்தர் தொடர்ந்தார்.
"நான் கூறும் அனைத்து சேவைகளையும் நீங்கள் எட்டு ஊர்களிலும் ஒரே மாதிரியாகச் செய்ய வேண்டும். உங்கள் குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் இதைச் செய்ய வேண்டும்.
இதைச் செய்தால் பாவம் போகும், குழந்தை பிறக்கும், திருமணம் நடக்கும் என்ற எண்ணம் உங்கள் மனதில் துளியும் இருக்கக் கூடாது.
இது பரிகாரம் அல்ல; எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்,...
தோட்டத்தின் ஓரத்தில் இருவரும் நின்றார்கள்.
“நீ காலேஜ் படிச்சிட்டு இருக்கும்போதே கல்யாணம் பண்ணிக்க உனக்கு விருப்பமா? இல்ல, உன் வீட்டுல சொல்றதால சம்மதிக்கிறியா?” என்று நேரடியாகக் கேட்டான் முகில்.
அவனை ஒருமுறை பார்த்த கலைவாணி நிதானமாகப் பேசத் தொடங்கினாள்.
“அதுக்கு முன்னாடி நான் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும். அதைச் சொன்னதுக்குப் பிறகு உங்களுக்கு என்னைத் திருமணம் செய்துக்க...
மெட்டியால் வந்த சொந்தம் ❤️
அத்தியாயம் 05
கடந்த ஒரு மாதமாக கார்முகிலரசனுக்குப் பெரிய விழாக்களுக்கான அழைப்புகள் எதுவும் வரவில்லை. அவனுடைய பந்தல், கதிரை, சவுண்ட் செட் தொழிலுக்கு அந்த மாதம் கிடைத்த ஆர்டர்கள் வெறும் இரண்டே இரண்டுதான். ஒன்று பிறந்தநாள் விழா; மற்றொன்று மஞ்சள் நீராட்டு விழா.
வருமானம் குறைந்ததால், கையில் இருந்த பணமும் கொஞ்சம் கொஞ்சமாகக்...
அடுத்த நாள் காலை…
மூவரும் அந்தக் கோயிலுக்கு வந்தார்கள்.
“இதோ வந்துட்டோம். உங்க சித்தர் எங்கே காணோம்?” என்று ஆதிவேந்தன் கேட்டான்.
“இதோ வந்துடுவார். கொஞ்சம் பொறுமையா இரு, ஆதி.”
ஆதிவேந்தன் எதுவும் பேசாமல் கோயிலின் ஒரு பக்கத்தில் அமர்ந்துகொண்டான்.
சிறிது நேரத்தில் சித்தர் காட்சி தந்தார்.
அவரைப் பார்த்ததும் ராஜேந்திரவர்மனும் மீனாட்சியும் எழுந்து நின்றார்கள். ஆதிவேந்தனும் எழுந்து அவரைப் பார்த்தான்.
ஆனால், சித்தர்...
மெட்டியால் வந்த சொந்தம் ❤️
அத்தியாயம் 04
ஆதியின் திருமணத்தை நினைத்துக் கவலைப்படும் மீனாட்சிக்கு ஏற்கெனவே ரத்த அழுத்தமும் சர்க்கரை நோயும் இருந்ததால், அவருடைய உடல்நிலையைக் கண்டு ராஜேந்திரவர்மனும் அஞ்சினார்.
அப்படியொரு சூழ்நிலையில்தான் அவர்களுக்கு அந்தக் கோயிலைப் பற்றித் தெரிய வந்தது.
சென்னையிலிருந்து சற்றுத் தொலைவில் இருந்த பழமையான கோயில் அது. அங்கே அவ்வப்போது வந்து செல்லும் ஒரு சித்தரைப்...
மறுநாள் காலையில் பிரவீன் தொடர்ந்து அழைத்ததால், ஒருகட்டத்தில் கோபத்துடன் அழைப்பை ஏற்றாள்.
"எதுக்கு திரும்பத் திரும்பப் போன் பண்றீங்க?"
"கலை, நேத்து நடந்ததைப் பெருசுபடுத்தாதே. நான் உன்னை விரும்புறேன். அதனாலதான் அப்படி நடந்துக்கிட்டேன்."
"விரும்புறதுக்கும் என்னோட சம்மதம் இல்லாம நடந்துக்க முயற்சி பண்றதுக்கும் வித்தியாசம் இருக்கு. இனிமேல் எனக்குப் போன் பண்ணாதீங்க!"
"நீ என்னைத் தப்பா புரிஞ்சுக்கிட்ட!"
"நான் உங்களை இப்பதான்...
மெட்டியால் வந்த சொந்தம் ❤️
அத்தியாயம் 03
கலைவாணி!
செல்வச் செழிப்புக்குக் குறைவில்லாத ராஜசேகரனின் ஒரே மகள். இரண்டு அண்ணன்களுக்குப் பிறகு பிறந்த செல்ல மகள். அவள் பிறந்தபோது அந்தக் குடும்பமே சந்தோஷத்தில் திளைத்தது.
பெரிய தொழிலதிபரான ராஜசேகரனுக்குப் பல நிறுவனங்கள் இருந்தன. பணம், புகழ், அந்தஸ்து என எல்லாவற்றிலும் உயர்ந்த இடத்தில் இருந்தார். அவருடைய மனைவி இந்திராணிக்கோ நவீன...
---
அன்று மாலை, ராஜேந்திரவர்மன் வீட்டிற்கு வந்ததும் மீனாட்சி அவரிடம் காலையில் ஜோதிடரிடம் பேசிய விவரங்களைக் கேட்டார்.
"என்னங்க, ஜோசியர் என்ன சொன்னாரு?"
"இன்னும் முழுசா பார்க்கலைன்னு சொன்னாரு. நாளைக்குக் கூப்பிடுறேன்னு சொல்லியிருக்காரு."
மீனாட்சி சோர்வாக அமர்ந்தார்.
"இன்னும் எத்தனை நாள்தான் இப்படியே காத்திருக்கிறதுன்னு தெரியலைங்க."
"மீனாட்சி, கவலைப்படாதே. நாம நிதானமா யோசிச்சு அடுத்த கட்டத்தை முடிவு செய்வோம்."
அந்த நேரத்தில் ஆதிவேந்தனும் அலுவலகத்திலிருந்து...
மெட்டியால் வந்த சொந்தம் ❤️
❤️ அத்தியாயம் 02 ❤️
பணத்தால் வாங்க முடியாத சில விஷயங்கள் இந்த உலகத்தில் இருக்கின்றன.
எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும், காலத்தைத் தன் விருப்பப்படி நிறுத்திவைக்க முடியாது. பிறப்பையும் இறப்பையும் தன்னுடைய வசதிக்கேற்ப மாற்றிவிட முடியாது. அதுபோலவே, வாழ்க்கையில் எப்போது என்ன நடக்க வேண்டும் என்பதையும் மனிதர்களால் முழுமையாகத் தீர்மானித்துவிட முடியாது.
ஆனால்,...
இரவு வெகுநேரம் கழித்தே கார்முகிலரசன் வீட்டை அடைந்தான்.
வாசலில் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. வீட்டுக்குள் சென்றவன், யாராவது தன்னை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்களா என்று இயல்பாகப் பார்த்தான்.
ஹாலில் தொலைக்காட்சி அணைக்கப்பட்டிருந்தது. சமையலறையில் பாத்திரங்கள் கழுவி வைக்கப்பட்டிருந்தன.
அம்மாவின் அறைக் கதவு பாதி மூடியிருந்தது. உள்ளே அவர் தூங்கிக்கொண்டிருந்தார்.
தம்பியும் தங்கைகளும் அவரவர் அறைகளில் இருந்தார்கள்.
கார்முகிலரசன் வீட்டுக்குள் வந்த சத்தத்தைக்கூட யாரும் கவனிக்கவில்லை.
அவன்...
மெட்டியால் வந்த சொந்தம் ❤️
❤️ அத்தியாயம் 01 ❤️
காலையிலேயே கார்முகிலரசனின் கைப்பேசி ஒலித்தது.
அப்போது அவன் ஒரு கல்யாண வீட்டில் பந்தலைக் கழற்றிக்கொண்டிருந்தான். இரவு முழுவதும் நடந்த கல்யாணத்தின் அலங்காரங்களை அகற்றும் வேலை இன்னும் முடியவில்லை. உடம்பெல்லாம் களைப்பாக இருந்தாலும், அவனுடைய கைகள் மட்டும் ஓய்வில்லாமல் வேலை செய்துகொண்டிருந்தன.
கைப்பேசியை எடுத்துப் பார்த்தான். திரையில் தர்மனின் பெயர்...