Sunday, July 19, 2026

ragavi

ragavi
228 POSTS 0 COMMENTS

நின் வசமானேன் – 7.2

0
மறு நாள் காலையில் சஞ்சையுடனே ஆர்பாட்டமாக வந்தாள் தீக்ஷனா. கையில்லாத அடர் சிகப்பு ஷார்ட் டாப் உடல் அழகை எடுத்துக்காட்ட,  நீள சிறு பூக்கள் போட்ட ஸ்கர்ட் மென் இடையை பற்றி கணுக்கால்...

நின் வசமானேன் – 7.1

0
அத்தியாயம் - 7 இரவு சாதமும் சாம்பாரும் வைத்தவள், சூடாக தட்டில் போட்டுக்கொண்டு வந்து அமர, “அம்மா ஜெயந்தி”, என்ற குருபரனின் குரல் சோஃபாவிலிருந்து கேட்டது. “வாங்க சர். எப்படி இருக்கீங்க?” “ஹ்ம்ம்... இருக்கேன்மா. நீ சாப்பிடு....

நின் வசமானேன் – 6.2

0
கங்காதரன் சொல்லவும், “சார், எனக்கு டெக்னிகலா ஒன்னுமே தெரியாது. நான் என்னன்னு சொல்வேன் ?” என்று கேட்டாள் ஜெயந்தி. “சஞ்சய் வந்து சொல்ற வரை இரண்டு பக்கமும் பேசிக்காம பார்த்துக்கோ. மோகன் பாதி நேரம்...

நின் வசமானேன் – 6.1

0
அத்தியாயம் - 6 தி வால்ட்டின் புது ஃபனான்ஸ் சீஃப் பொறுப்பெடுத்து இரண்டு வாரமாகிறது. கங்காதரன் அவள் என்னவோ நேற்றுதான் காலேஜிலிருந்து வெளியே வந்த பெண் போல அரிச்சுவடியிலிருந்து ஒவ்வொரு விஷயமாக சொல்லித் தந்துகொண்டிருந்தார்....

நின் வசமானேன் – 5.2

0
“ஏன்மா? அப்படியெல்லாம் உன்னை நிர்பந்தம் பண்ண மாட்டேன். நீ தான் வேலை ஆஃபர் பத்தி யோசிச்சி முடிவெடுக்கறேன்னு சொல்லியிருந்தியே”, என்று சொல்லவும், “ஓ...அப்ப இன்னிக்கு எங்க ஆஃபீஸ்ல நடந்தது தெரியாதா சர்? நீங்க அங்க...

நின் வசமானேன் – 5.1

0
அத்தியாயம் - 5 அலுவலகம் அமைதியாக இருந்தது.   நிரஞ்சனும் பார்த்தியும் இல்லாததில் மூன்று வாரங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த வேலைகளை முடிப்பதில் முனைப்பாக ஈடுபட்டிருந்தாள் ஜெயந்தி. இருவரும் அவளிடம் நேற்றிலிருந்து பேசவில்லை. விட்டதடா தொல்லை என்று இவளும்...

நின் வசமானேன் – 4.2

0
மூன்று வாரங்கள் கழித்து ஒரு வழியாக அலுவலகம் வந்தாள் ஜெயந்தி. அவளது அருமை திறமையை முற்று முதலாக உணர்ந்திருந்தார்கள் நிரஞ்சனும், பார்த்தியும். காலாண்டிற்கான ரிப்போர்ட்கள் தாமதமாக அனுப்பி, அதிலும் தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டு என்று...

நின் வசமானேன் – 4.1

0
அத்தியாயம் – 4 தி வால்ட் என்ற அந்த நிறுவனம் பிரம்மாண்டமான அந்த கட்டிடத்தின் ஒரு மாடியில் பெரிதான அரவமோ ஆடம்பரமோ இல்லாதிருந்தது. குறித்த நேரத்திற்கு சற்று முன்னரே வந்தவளை ரிசெப்ஷனில் அமர வைத்திருந்தாள் ரிசெப்ஷனிஸ்ட்....

நின் வசமானேன் – 3.2

0
அடுத்த மூன்று நாட்கள் அமைதியாகக் கழிந்தது. வீடு , ஆஃபீஸ், இடையில் ஒரு முறை ரமா சித்தி வீடு என்று சென்றது தவிர்த்து ஒன்றும் நடக்கவில்லை. அலுவலகத்திலும் அன்று  நடந்ததைப்பற்றி எதுவும் பேசவில்லை. மதிய...

நின் வசமானேன் – 3.1

0
அத்தியாயம் – 3 உற்சாகமாக வீட்டுக்குள் நுழைந்தாள் ஜெயந்தி. கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்திக்கொண்டதில் வந்த மகிழ்ச்சி. சேல்ஸ் ஹெட் மட்டுமல்ல, கிளையன்ட் கூட திடீரென்று வந்தாலும், எல்லா கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் உடனுக்குடன் விளக்கம்...

நின் வசமானேன் – 2.2

0
“எந்த விவரமும் கேட்கலைன்னு சொல்றேன். திருப்பி திருப்பி அதையே கேட்டா? போய்  நான் சொன்னதை செய் சித்தி. ஏற்கனவே ஆஃபீஸ் கடுப்பு. அது பத்தாதுன்னு நீ வேற ஏழரையை கூட்டாத!”, இணைப்பை துண்டித்தாள். “துர்கைக்கு...

நின் வசமானேன் – 2.1

0
அத்தியாயம் – 2 ஜெயந்தி கண் விழித்த போது, சோஃபாவில் பாதி உடலும், கால்கள் தரையிலுமாக இருந்தாள். விலுக்கென்று நிமிர்ந்து பார்க்க, ஒற்றை சோஃபா காலியாக இருந்தது. மெல்ல எழுந்து அமர்ந்து ஹாலைச் சுற்றி...

நின் வசமானேன் – 1.2

0
“மண்ணாங்கட்டி”, என்று முணுமுணுத்தவள், “இப்ப நிரஞ்சன் சர் அவங்களோட லன்ச் போயிருக்காரா?” “ஆமாம். அவர் டீம்ல ப்ளஸ் ஒன்னா பார்த்திபன் போயிருக்கார்”,வசந்த் சொல்லவும், “கேட்டுச்சா? இப்பவாச்சம் மயக்கம் தெளிஞ்சுதா உனக்கு?” அடிக்குரலில் சீறினாள் அஞ்சலி. “வசந்த்....

நின் வசமானேன் – 1.1

0
அத்தியாயம் – 1 கார்ப்பரேட் அலுவலகம் என்பதற்கான சர்வ லட்சணங்களும் பொருந்தியிருந்த அந்த குளிரூட்டப்பட்ட விரிந்து பரந்த அறை, அனேகமாக காலியாக இருந்தது. மதிய உணவு நேரம் என்பதால் ஆங்கிலம், இந்தி, தமிழ் என்று...

சில நேரங்களில் சில முடிவுகள்…- எபிலாக்

0
எபிலாக்  சில வருடங்களுக்குப் பிறகு -  “மம்மி...”, இரண்டு வயதை நெருங்கும் குட்டிப் புயல் ஓடி வந்து கீர்த்தியின் மீது மோத, வேகமாக அடுப்பை நிறுத்தியவள், மகனை அள்ளிக்கொண்டாள்.  அடுக்களை வாசலில் சிறு புன்னகையோடு நின்றான் ஜோ.  எப்போதும் குரல் தரவேண்டும். அம்மாவை தீடீரென்று பாய்ந்து பயமுறுத்தக்கூடாது என்பது ஜோ ட்ரெயினிங். அவனுமே அதை கடைப்பிடித்தான். சின்ன விஷயம்தான், அவள் சறுக்கிவிடாமல் இருக்க இது போன்று பல சின்னச் சின்ன விஷயங்கள், வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே ஆகிவிட்டது.  பிள்ளையிடம் பாசம் வருமோ என்று பயந்ததெல்லாம், ஜோவுடன் ஒரு குழந்தை, ஜோவின் சாயலில் ஒரு குழந்தை என்ற ஆசையில் காணாமல் போய்விட்டது. குழந்தை என்று உறுதி ஆனதும், ஜோவின் மகிழ்வும் பூரிப்பும் பார்க்கும்போதே, கைகள் தானாக அவள் வயிற்றை சுற்றி பாதுகாப்பாக அணைத்துக்கொண்டது.  ஜெயராணி உடன் வந்து தங்கியிருந்தார். சரோஜினியின் காலும், வேணுகோபாலின் உடல் தளர்ச்சியையும் காரணம் காட்டி பிரசவத்திற்குக் கூட ஜோ சரோஜினியிடம் அனுப்பவில்லை. “வேணாம் கீர்த்தி, அவங்க வாய் சும்மா இருக்காது. உன்னை அங்க அனுப்பிட்டு என்னால கவலைப்பட முடியாது”, என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டான்.  மகனை உச்சி முகர்ந்தவள், “விளையாடி முடிச்சாச்சா தங்கம்?, குளிச்சுட்டு சாப்பிடலாமா?”, என்று கேட்டு வாயிலை நோக்கி நகர, “ஹ்ம்ம்... சாப்பிட்டதும் தூங்கிடுவான் அவ்வளவு டயர்ட் ஆக்கி வெச்சிருக்கேன்”, கண்ணடித்த கணவனை பொய்யாக முறைத்தவள், சிரிப்பை மறைத்து அறைக்குள்  நுழைந்தாள்.  சிரித்தபடியே, வரவேற்பறை சோஃபாவில் தண்ணீர் பாட்டிலோடு சரிந்தவன் கைப் பேசி அழைத்தது.  “அம்மா... எப்படி இருக்கீங்க”  “நல்லாயிருக்கோம்டா. சர்ச்சுக்கு போயிட்டு வந்தியா?”  “ஹ்ம்ம்...ஆச்சுமா.”  “ஜெபாவை கூட்டிட்டு போனியா தம்பி”, அடுத்து இந்தக் கேள்விதான் வரும் என்று தெரிந்து முகத்தை சுளித்தான்.   “ம்மா... காலையில் ஏழரைக்கு கிளம்பினேன். குழந்தை தூங்கிட்டு இருந்தான். இப்ப போனாலும் அவனுக்கு ஒன்னும் புரியாது. அஞ்சாறு வயசாகட்டும்”  “ம்க்கும்... ஷீத்தல் அவ பொண்ணை ஆறு மாசத்துலர்ந்தே அழைச்சிட்டு வரா. அதெல்லாம் குழந்தைங்க மனசுல பதியும் ஜோ. இதுக்குத்தான் அவ்வளவு தூரம் பெங்களூர்ல இருக்காதீங்கன்னு சொன்னேன்.”  “அம்மா...நான் விரும்பின வேலை, இந்த காலேஜ்க்கு இருக்க பேரு, இந்த சம்பளம், நான் செய்யற ரிசர்ச்க்குகான நேரம்...இதெல்லாம் கன்யாகுமரியில இல்லமா. இதெல்லாம் நிறைய வாட்டி பேசிட்டோம். வேற சொல்லுங்க”, என்று பேச்சை மாற்றினான்.  ஸ்டீஃபன், ஷீத்தல் தம்பதிகளுக்கு முதலில் ஒரு மகன் ஆன்டனிராஜ், அடுத்து மகள் ஸ்டெல்லா ஆறு மாதக் குழந்தை.   “ஸ்டெல்லா ஞானஸ்தானத்துக்கு வந்ததோட சரி. எப்ப தம்பி ஊருக்கு வரப்போறீங்க? ஜெபா கண்ணுக்குள்ள நிக்கறான்.”  “அப்போ நான் வேணாம். குழந்தையும் கீர்த்தியும் அனுப்பி வெச்சா போறுமா?”, அம்மாவிடம் வம்பு பேசி்னான்.  விஜய் ஜெபராஜ் குளித்து முடித்து, ஈர  உடலை துடைத்துக்கொண்டிருந்த கீர்த்தியிடமிருந்து விடுபட்டு, “அப்பா...” என்று ஓடி வந்தான்.  அவனை மடியில் அமர்த்தி வீடியோ காலுக்கு மாற்றினான் ஜோ. அடுத்த பத்து நிமிடமும் பாட்டியோடு மழலை பேசி, முத்தம் கொடுத்துக்கொண்டே, கீர்த்தி மாட்டிவிட்ட உடையை அணிந்து கொண்டு, உணவை வாங்க ஆரம்பித்தான். மகனிடமும் மருமகளிடமும் ஊருக்கு வந்து செல்லும்படி மீண்டும் கூறிவிட்டு வைத்தார் ஜெயராணி. ஜெபாவிற்கு அவர் விருப்பம்போல ஞானஸ்தானம் செய்ய கீர்த்தி சம்மதித்ததும் ராசியானவர், அவள் பதினோராம் மாதம் வேணுகோபால் ஆசைப்படி திருத்தணியில் மொட்டை போடவும் முறுக்கிக் கொண்டார். பேரனின் முதல் பிறந்த நாள் குமரியில் வைத்துக் கொண்டாடவும் குளிர்ந்தார். இப்படியாக மாற்றி மாற்றி சமாளித்துக்கொண்டிருக்கிறார்கள்.  ஒரு வழியாக குழந்தைக்கு ஊட்டி, அவன் விளையாடிக்கொண்டிருக்கையில் இவர்களும் உணவு உண்டு முடிக்க, கீர்த்தி மகனை தூங்க வைக்க அள்ளிக்கொண்டாள்.  ஜோ பாத்திரங்களை ஒழுங்கு படுத்தி சுத்தம் செய்துவிட்டு உள்ளே வர மகன் உறங்கியிருந்தான்.  கீர்த்தியை நோக்கி ஜோ கைவிரிக்க, அவளே எழுந்து வந்து அவன் அணைப்பில் பொருந்திக்கொண்டாள். “வா அந்த பெட்ரூமுக்கு போலாம்”, கிசுகிசுத்தான்.  அவன் இதழ்களில் ஒரு ஆறுதல் முத்தம் பதித்தவள், “பத்து நிமிஷம் ப்ளீஸ். வீட்டுக்கு பேசிட்டு வந்திடறேன்”, என்றாள்.  ஒழுங்கு காட்டியவன், “டைம் பார்த்துட்டே இருப்பேன். பத்து நிமிஷத்துல போனை பிடுங்கிடுவேன். பேசும் போது நீ எதாவது அப்செட் ஆனா, உடனே நடக்கும்”, எப்போதும்போல எச்சரித்தான்.  அவனிடம் பழிப்பு காட்டி ஹாலுக்கு நடந்தாள். சரோஜினிக்கும் முட்டி மிகவும் மோசமாகிடட, வாக்கர் வைத்துதான் நடக்கிறார். அறுவை சிகிச்சைக்கு மறுத்துவிட்டிருந்தார். வேணுகோபால் கடந்த ஓராண்டாக செய்து கொண்டிருந்த பகுதி வேலையையும் விட்டுவிட்டு வீட்டோடு இருக்கிறார். மேல் வேலைக்கு ஒர் ஆள் வந்து செல்ல, மெஸ்சிலிருந்து உணவு வந்துவிடுகிறது. வீட்டு வாடகையை கீர்த்தி செலுத்துகிறாள். அவர் ரிடையர்மென்ட் பணம், டேனியல் வேண்டாமென்று மறுத்துவிட்ட ஹர்ஷியின் பணம் இரண்டிலிருந்தும் வரும் வட்டி வைத்து அவர்கள் பிழைப்பு ஓடுகிறது.   “அப்பா, எப்படி இருக்கீங்க?”, என்று ஆரம்பிக்க சம்பிரதாய குசல விசாரிப்புகள் முடிய, சரோஜினி “ஹர்ஷிகிட்ட பேசினேன் கீர்த்தி. ஒரு பாசமாவே பேசலை”, அவரது ஆஸ்தான குற்றப் பத்திரிக்கையை ஆரம்பித்தார்.  “எட்டு வயசு பிள்ளைகிட்ட என்னம்மா எதிர்பார்க்கற? சாப்பிட்டியா, நல்லா படிக்கறியான்னு ஒரே கேள்வியை மாசா மாசம் கேட்டா அவளும்தான் வேற என்ன சொல்லுவா?”  “எனக்கு பேச தெரியலை. நீதான் பேசறது?”  “ஜோகிட்ட போன் தரேன். நீயே சொல்லு”  “இல்லல்ல...  அப்பறம் நான் பேசறதுக்கே தடை சொல்லிடுவாரு”, அவசரமாக மறுக்கவும், கீர்த்தி முகத்தில் புன்னகை.  “சரி... கால் எப்படி இருக்கு? அந்த புது எண்ணெய் எதாவது பெட்டரா இருக்கா?”, பேச்சை மாற்றினாள்.  அடிக்கடி போன் செய்து குழந்தைக்கு இதை செய்தாயா, அதை செய்தாயா என்று டேனியல் தம்பதிகளை விசாரணை செய்வது ஜோவிற்கு சொல்லப்படவும், துபாயிலிருந்தவன் போன் செய்து ஒரு ஆட்டம் ஆடித் தீர்த்துவிட்டான். ஒரு வருடம் வரையிலும் ஹர்ஷி, டேனியல் குடும்பத்தோடு பேசவே சரோஜினிக்குத் தடை. அவ்வப்போது குழந்தை போட்டோ மட்டும் அனுப்பி வைத்தான்.  மெல்ல மெல்ல தன் புது தாய் தந்தையோடும் உறவுகளோடும் குழந்தை ஒட்டிக்கொள்ள, அவள் இழந்த சிரிப்பை மீட்டெடுத்தார்கள்.  கீர்த்தியிடம் புலம்பினாலும் ஜோவிடம் பயம். மறந்தும் நீ வளர்த்திருக்கலாம் என்று கீர்த்தியிடம் புகார் படிக்கவில்லை. அதற்கும் ஜோ மிரட்டலே காரணம். அவன் குழந்தை பற்றி சொல்லும் தகவல்களை மட்டும் கேட்டுக்கொள்வார்.  பத்து நிமிடம் முடியவும், கட்டிலில் அமர்ந்து அவளை அவ்வப்போது பார்த்துக்கொண்டிருந்த ஜோ ஹாலுக்கு எழுந்து வரவும், அம்மாவிடம் சொல்லிக்கொண்டு இணைப்பை துண்டித்தாள்.  “அநியாயம் பண்ற ஜோ”, என்று சிரிக்க, அவளை இழுத்துக்கொண்டு இரண்டாவது படுக்கை அறைக்குச் சென்றபடியே, “நீதான் கீத்துமா அநியாயம் பண்ற. அவன் தூங்கறதே ஒரு மணி நேரம்தான். அதுல பத்து நிமிஷம் போச்சு”, என்று கதவடைத்தான்.  “பெத்துக்குடு பெத்துக்குடு...பொட்டப் புள்ளை பெத்துக்குடு”, என்று பாட்டிக்கொண்டே டீ-ஷர்ட்டை கழட்டி வீச, “ஒரு மாசமா இதை ஜெபம் பண்றதுக்கு சாமி பேரை ஜெபம் பண்ணா புண்ணியமாச்சம் கிடைக்கும்”, என்றவளின் இதழை அடைத்தவன், சற்று நேரம் சுவைத்து, “உன் மனசுதான் வேணும், புண்ணியமெல்லாம் வேணாம்”,  என்று எப்போதும்போல் அவன் படுக்கையில் விழுந்து, அவளை தன் மேல் போட்டுக்கொண்டான்.  “ஹ்ம்ம்... நோ”, என்றவள்,  தான் தள்ளிப் படுத்து, “நீ மேல வந்தாதான்”, என்று அழைத்தாள். “அண்ட் சும்மா என் மேல வெயிட் படாத மாதிரியெல்லாம் வேணாம்”, என்றாள் கட்டளை போல்.  “ஷ்... படுத்தாதடி... “, என்று அவளை இழுக்க, “ஜோ... நான் சொல்றேன் தானே. எனக்கு பிடிக்கலைன்னா உடனே சொல்லுவேன். எங்க அதுக்கு முன்னாடியே உனக்கே தெரிஞ்சிடுதே...”, என்று கைகளை விரித்தாள்.  உண்மைதான். இத்தனை வருடங்களில் அவள் அசைவுகள் அவனுக்கு அத்துப்படி. ஏதோ ஒரு நேரம் அவள் சற்று சங்கடப்பட்டாலும் “ஜோ..”என்று அவனை கண்டு, நுகர்ந்து என்று தளர்வாள். உடனே விலகுபவனை விடாது இழுத்துக்கொள்பவள், செயலை தனதாக்கிக்கொள்வாள்.  வாழ்க்கை இனிமையாக சென்று கொண்டிருந்தது.  அவ்வப்போது வரும் சிறு குடைச்சல்களை துணையின் துணை கொண்டு கடக்கப் பழகிக்கொண்டார்கள். குழந்தை வளர்ப்போடு...

சில நேரங்களில் சில முடிவுகள்…-19.2

0
அவன் பேசி முடிக்க ப்ரீத்தி யோசனையானாள். “ஹர்ஷியோட பாதுகாப்புங்கற அளவுலதான் யோசிச்சேனே ஒழிய இந்த விஷயமெல்லாம் நான் நினைக்கலை”, என்றவள் “நல்லவங்களா கிடைச்சா தத்து குடுக்க எனக்கு சம்மதம். நீங்க சொன்ன மாதிரி எட்ட நின்னு பார்த்துக்கணும் அந்த வாக்குறுதி மட்டும் குடுங்க போதும்”, கைக்கூப்பினாள்.  அவன் அம்மாவை சரிகட்டத்தான் இன்னுமே மெனக்கெட வேண்டியிருந்தது. துபாயிலிருந்து திரும்பியதும் கீர்த்தி வளர்க்கலாமே, ஏன் தத்து தரவேண்டும். அவள் ஏன் வேண்டாமெங்கிறாள் என்று குடைந்து குடைந்து கேட்டுக்கொண்டிருந்தார்.  “ம்மா. எங்ககிட்ட வளர்ந்தா, என்னிக்கும் அவ எங்க குழந்தைக்கு அடுத்தபடியாத்தான் இருப்பா. என்னிக்கும் ஹர்ஷிக்கு நாங்க அப்பா அம்மா ஆகிட முடியாது. அப்படி ஒரு ஏக்கத்தோட எதுக்கு குழந்தையை வளர்க்கணும்? பிள்ளை வரம் வேணும்னு காத்திருக்கவங்க வீட்டுக்குப் போனா, அங்க அவதான் இளவரசியா இருப்பா. அவளுக்குன்னு முதன்மையா ஒரு குடும்பம் இருக்கணும். நாங்க ஒரேடியா விலகிடப்போறதில்லை, தள்ளி நின்னு பார்த்துக்கறோம்”, என்றபின் அவன் கூறியதில் இருந்த உண்மையை யோசித்தவர், அவர்கள் சர்ச், பாதிரியார் மூலம் விசாரிக்க ஆரம்பித்தார்.  ஆனால் இறுதியில் ஷீத்தல் பெற்றவர்கள் மூலமாக டேனியல் ஜெசிக்கா தம்பதியர் தெரியவந்தனர். ஜெசிக்காவிற்கு குழந்தை இறந்து பிறக்க அதில் கருப்பையும் எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு சென்றது. வேறு மணம், அல்லது டேனியல் உயிரணுவுடன் வேறு கருமுட்டை சேர்ந்து வாடகைத் தாய் மூலம் குழந்தை என்ற எதையுமே வசதியிருந்தும் டேனியல் ஏற்கவில்லை. தத்து எடுத்துக்கொள்கிறோம் என்று அரசு தத்தெடுக்கும் மையம் காராவில் பதிந்துகொண்டார்.  டேனியலுடன் பேசிய ஜோவிற்கு இதுவே ஒரு மரியாதையை தோற்றுவித்தது. ஜெசிக்கா கிண்டர்கார்டன் டீச்சர்,  சிறு குழந்தைகளை கையாளத் தெரிந்தவர் என்பதும் ஏற்புடையதாகவே இருந்தது. ஷீத்தலின் அம்மா வகையில் அவர்கள் சொந்தம் என்றதும் சேர்ந்துகொள்ள, முதல் கட்டமாக ஜெயராணி அவர்கள் பற்றிய விசாரணையை மேற்கொண்டார். ஜெயராணியே வேணுகோபாலுடன் பேசி, அடுத்து ப்ரீத்தி, ஹர்ஷிதாவின் சந்திப்பையும் ஏற்பாடு செய்தார். ஒரு வாரம் போல சென்னையில் இருந்து அவர்களோடு பேசி  குழந்தையோடும் பழகிட, அவர்கள் இந்து இல்லையே என்ற சரோஜினியின் முணுமுணுப்பைத்தாண்டி மற்ற எல்லா வகையிலும் பொருந்திப்போக, ஜோ கீர்த்தி திருமணம் முடிந்த மறுனாள் வக்கீல் அலுவலகத்தில் ஹர்ஷிதா இரகுராமன், ஹர்ஷிதா டேனியலானாள். கீர்த்தியை அந்த நிகழ்விற்கு அழைத்துச் செல்லவில்லை ஜோ.  “வேணாம் கீர்த்தி. கண்டிப்பா ப்ரீத்தியை, உங்கம்மாவை உன்னால பார்க்க முடியாது. அங்க வெச்சு அந்த நேரம் எதாவது பேசினாலும் பேசிடுவாங்க. உனக்கு எதுவும் தெரிய வேணாம். நான் பார்த்துக்கறேன்”, என்று விட்டுச்சென்றிருந்தான்.  தத்துக் கொடுத்துவிட்டாலும், ப்ரீத்தி, தான் நடமாடிக்கொண்டிருக்கும் வரையிலாவது குழந்தை என்னோடு இருக்கட்டுமே என்று கேட்டுக்கொண்டதில் அவள் நிலையறிந்து டேனியல் தம்பதியர் திரும்பிச் சென்றுவிட்டனர்.  ஜோ திருமணம், வரவேற்பு, ஸ்டீஃபன் ஷீத்தல் திருமணம் எல்லாம் இவர்கள் விடுப்பெடுத்து வந்திருந்த இரு வாரங்களில் நடந்தேற அனைவருமே அதிகம் யோசிக்க நேரமின்றி சுற்றிக்கொண்டிருந்தனர்.  பொங்கல் விடுமுறையில் ஹர்ஷிதாவைப் பார்க்க இருவரும் சென்னையிலிருப்பதாக நேற்றுதான் டேனியல் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். அவளோடு வண்டலூர் சென்று வந்திருந்தனர். கூடவே, ப்ரீத்தியின் உடல் மேலும் மோசமாகியிருப்பதாகவும், ஹர்ஷிதாவை தங்களோடே அழைத்து செல்லுமாறு கூறியிருப்பதாக சொல்லியிருந்தார்.  திங்கள் வீடு திரும்பியதும் கீர்த்தியிடம் பக்குவமாகச் சொல்ல வேண்டும். இப்போது சென்று பார்த்தால், ப்ரீத்தியின் இறப்பிற்கு போக கண்டிப்பாக விடுமுறை கிடைக்காது. அல்லது ஒரு சனி ஞாயிறு சென்று வரவேண்டும். யோசனைகளோடே உறங்கிப் போனான்.  அபுதாபி சென்று வந்து ஒரு மாதம் முடியும் முன்னரே ப்ரீத்தி இறந்திருந்தாள். செய்தி வந்தபின்  கீர்த்தி கிளம்பிச் சென்றாள். “ப்ரீத்தி இறந்துட்டா அங்க எல்லா வேலையும் பார்க்க நான் இருக்கணும் ஜோ.  அதுக்கு முன்னாடி போய் அப்படி ஒரு கோலத்துல அவளை என்னால பார்க்கமுடியாது. அவளை பார்த்து பார்த்து புழுங்கிட்டு இருக்கற அப்பா அம்மாவையும் பார்க்க முடியாது”, என்று கூறியிருந்தவள், இதோ செய்தி கேட்டதும் புறப்பட்டுவிட்டாள். ஜோ செல்லவில்லை. டெய்லர் மேடம் என்னதான் அவர்கள் சூழ் நிலையை புரிந்துகொண்டாலும், மீண்டும் மீண்டும் விடுப்பெடுப்பது தர்மசங்கடமாகிப் போகும். கீர்த்திக்குமே எண்ணி ஐந்து நாட்கள்தான் கிடைத்தது. சனி ஞாயிறு உட்பட.   இரகுராமனுக்கு செய்த அனுபவம் இருக்க, ப்ரீத்தியின் இறப்பு சாங்கியங்களை சென்றதும் கையில் எடுத்துக்கொண்டாள். ஹர்ஷிதா டேனியல் ஜெசிக்கா வர சரோஜினி பேத்தியை கட்டிப்பிடித்து அப்படி ஒரு அழுகை. குழந்தையும் பயத்தில் இன்னும் அழ,   “அம்மா.... அவ பட்ட வேதனையெல்லாம் முடிஞ்சு நிம்மதியா போயிட்டா. அதை நினை. அப்பாவை பாரு”, என்று அதட்டினாள்.   “அப்பா... அம்மாக்குன்னு இருக்கறது நீங்கதான். போனவளை நினைச்சு நீங்களும் அம்மாவை விட்டுட்டு போயிடாதீங்கப்பா.”, என்று தந்தைக்கும் அறிவுரைத்து அவர்கள் சாய்ந்து கொள்ள தூணாய் நின்றாள்.   ஐந்தாம் நாள் இவள் கிளம்பும் முன்னரே காலையில் ப்ரீத்தியின் காரியம் முடிந்தது. “ஹர்ஷிதாவை அப்பப்ப தாத்தா பாட்டி கூட பேச வைங்கக்கா. அவ மட்டும்தான் இப்போதைக்கு அவங்களுக்கு ஆறுதல்”, என்று ஜெசிக்காவிடம் கூற, “திருநெல்வேலி வந்து எங்களோட கொஞ்ச நாள் இருக்கச் சொல்லி நாங்களே சொல்லியிருக்கோம் மா. ஹர்ஷி எங்களோட இருந்தாலும், அப்பப்ப அம்மா நினைப்பு வருது. இந்த இரண்டு வாரம் ப்ரீத்திக்கு பேச முடியலை. ப்ரீத்தி அவளுக்கு அனுப்பன வாய்ஸ் மெசேஜ் கேட்டு சமாதானமாகிடுறா. எனக்கே அதை பார்க்க தாளலை. ஹர்ஷியை எப்படி மீட்டு கொண்டு வரதுன்னு கேட்டுக்க ஒரு சைல்ட் சைக்காலஜிஸ்ட் கிட்ட போறோம். என் உயிரா பார்த்துப்பேன் அவளை.  நீ கவலைப் படாத கீர்த்தி”, என்றதும் கீர்த்தியின் கண்கள் கலங்கிவிட்டது.  கனத்த மனதோடுதான் துபாய் வந்திறங்கினாள் கீர்த்தி.  ஷீத்தலும் ஜோவும் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.   “கீர்த்தி...”, என்று கட்டிக்கொண்டாள் ஷீத்தல். இரவு ஷீத்தலும் உண்டு பேசி விடைபெற ஜோ மடியில் படுத்துக்கொண்டாள் கீர்த்தி. எல்லாவற்றையும் ஒற்றையாளாக சமாளித்து வந்து இதோ அவனிடம் இளைபாறும் மனைவியைக் கண்டு பெருமிதமாக உணர்ந்தான். என்னதான் அவளை அவர்கள் முன்னிருத்தவில்லை என்றாலும், கீர்த்தி அவள் கடமை தவறவில்லை. ஹர்ஷி விஷயத்தில் நான் தப்பு செய்தேனா என்று பலமுறை அவனிடம் கேட்டிருந்தவள், இந்த முறைதான், “கண்டிப்பா என்னால ஜெசிக்கா மாதிரி ஹர்ஷியை பார்த்துக்க முடியாது ஜோ” என்று கூறியிருந்தாள்.  “நமக்குன்னு ஒன்னு வரும்போது தானா வரும் கீர்த்தி”, அவள் பயம் என்ன என்று உணர்ந்து சொல்லவும், அவன் வயிற்றில் முகம் புதைத்துக்கொண்டாள்.  “உனக்கு மட்டுமில்லை, உன் குழந்தைக்கு கூட எல்லாம் பழசுதான் ஜோ”  “என்னது..?”  “என் கருப்பையிலிருந்து, தாய்ப்பால் வரைக்கும் எதுவும் புதுசில்லைதானே?”, வருத்தமாய் கேட்க, மனம் கசிந்தவன், “கீத்து, உன் காதல் எனக்கும், தாய்ப்பாசம் நம்ம குழந்தைக்கு மட்டும்டா. அதுல யாருக்கும் பங்கில்லை. புரியுதா? இப்படி பாசிடிவ்வா யோசிமா...”  அதில் புன்னகைத்தவள், “எப்படி ஜோ... ?”, அவள் கன்னம் கிள்ளி கொஞ்சினாள். அதுதான் கீர்த்தி. சட்டென்று தேறிக்கொண்டாள். அதைக் கேட்டால், அவள் சறுக்கும்போது தாங்கிப்பிடிக்க ஜோ இருக்க, அதற்கும் பழகிக்கொண்டதாகக் கூறுவாள்.  மதியம் உணவு  நேரம், ஜோ, கீர்த்தி, ஷீத்தல் வந்து அமர்ந்தார்கள். “என்ன ஷீத்து..கான்ட்ராக்ட் முடிய இன்னும் நாலு மாசம்தான். ஹஸ்பென்ட் பார்க்க வெயிட்டிங்கா?”, வணிகவியல் ஆசிரியர் ஷர்மாஜி கேட்க,  “ஆமாம் ஷர்மாஜி", என்று புன்னகைத்து அனுப்பிவிட்டு, “அதுவும் நீங்க பண்ற அலப்பறையைப் பார்த்து இன்னும் கஷ்டாமாயிருக்கு”, என்று எதிரில் இருப்பவர்களைக் கண்டு நொடித்தாள்.  “ஹே... நாங்க என்ன பண்றோம்?“, ஜோ பதற,  "ம்க்கும்... கீர்த்தி ஊர்ல இருந்த இந்த அஞ்சு நாளும் சோக கீதம் வாசிக்கலை? என்னடா மாசக் கணக்கா ஒருத்தி பிரிஞ்சிருக்காளேங்கற எண்ணமே இல்லாம, கீர்த்தி புராணமா படிச்சீங்களே ஜோஅத்தான்...”, என்று பொய்யாய் அழுக, அதுவரை புன்னகை பூத்திருந்தவள்,  “அத்தான் நொத்தான்னு சொன்ன கொன்னுடுவேன்”, கீர்த்தி உறுமினாள்.  “அப்போ ஜோ மாம்ஸ் ஓகேவா?”  “உனக்கு கொழுப்பு கூடிப்போச்சு. ஒழுங்கா அண்ணா சொல்லுடி”, கீர்த்தி அதட்ட,  “அய்ய அத்தை புள்ளை எப்படி அண்ணா முறை வரும்? அப்ப என் புருஷனும் எனக்கு அண்ணனா? அய்யய்ய....இந்த சென்னை மக்களுக்கு எல்லாரும் அண்ணா, அக்கா முறைப்பா”, ஷீத்தல் நொடித்தாள்.  கீர்த்தி முறைக்க அதை கண்டுகொள்ளாதவள், “அப்போ  நான் வேணா இந்த புஷ்பா புருஷன் மாதிரி கீர்த்தி புருஷன்னு கூப்பிடவா?”, என்று பல்லைக் காட்டினாள்.  “வெட்டிருவேன்...”  “ஏன் ஷீத்தல் அவளை டென்ஷன் பண்ற?”, பொங்கும் சிரிப்பை அடக்கி ஜோதான் இடையிட்டான்.  “நான் ஜோசஃப் சார்னு கூப்பிட்டா எங்க அண்ணன் இன்னும் உனக்கு சாரான்னு உங்க தம்பி திட்டறார். இவங்க மத்தியில நான் படற பாடு இருக்கே...”, என்று நெற்றியை பிடித்துக்கொண்டாள்.  ஷீத்தலில் பாவனையில் கீர்த்தியும் ஜோவுடன் இணைந்து சிரிக்க, தோழியின் மனதை இலகுவாக்கும் தம்பி மனைவியின் மீது ஜோவிற்கு இன்னுமே மரியாதை உண்டானது.  “ஒன்னு செய்யலாம்...” என்று எழுந்தவள் ஷர்மாவிடம் சென்று எதோ கேட்டுவிட்டு  வந்தாள்.  “ஓகே... இந்த பஞ்சாயத்தை இன்னியோட முடிச்சிக்கலாம்... இனி ஜோசஃப் சாரும் இல்லை, ஜோ அத்தானும் இல்லை, ஜோ மாம்ஸ்ம் கிடையாது... இன்று முதல் ஜீஜு... இந்தியில புருஷனோட அண்ணாவை இப்படித்தான் கூப்பிடுவாங்களாம். நீங்க எனக்கு ஜீஜூ ஓகே ?”  “கொஞ்சம் ஜூ ஜூன்னு நாயக் கூப்பிடற மாதிரி இருக்கே? என்ன கீர்த்தி?”, ஜோ அவன் பங்குக்கு கலாய்க்க,  “ஏன் ஜீஜா ஜீ... முழுசா அவசரமா கூப்பிட்டா சீசீசீன்னு சொல்லிடப் போறேன்னு அவர் சுருக்கி சொன்ன ஆப்ஷன் எடுத்துகிட்டு ஜீஜூன்னு சொன்னேன். அதுவும் வேணாமா?”, இம்முறை கவலையாக கேட்க, மீண்டும் ஒரு சிரிப்பலை.  “நீ கிளம்பிட்டா கண்டிப்பா எங்களுக்கு  போர் அடிக்கப்போகுது ஷீத்தல்”, ஜோ உணர்ந்து கூறினான்.  “பொய்...நான் கிளம்பிட்டா, இரண்டு பேரும் இன்னும் உருகுவீங்க. இங்க கரடியா உட்கார்ந்திருக்கேன் நானு.”  “உருகிட்டே இருக்க முடியுமா ஷீத்து?”, கீர்த்தி சமாதானம் செய்தாள்.  “உங்கூட? கொஞ்சம் கஷ்டம்தான். ஜீஜூ எதாவது சொல்ல, அதுல தப்பு கண்டுபிடிச்சு சண்டை போடுவ...அவர் சரண்டர் ஆவாரு...”, என்றவள், “இதெல்லாம் நம்ம மாமியார் பார்த்தா என்ன ஃபீல் பண்ணுவாங்கன்னு நினைக்கற கீர்த்தி? “, கன்னம் தட்டி கள்ளச் சிரிப்போடு கேட்டாள் ஷீத்தல்.  ஜோ சிரிக்க,  “ஹ்ம்ம்...அவங்க முன்னாடில்லாம் இப்படி இருக்க மாட்டேன்”, என்று சொல்லும்போதே கீர்த்திக்கும் புன்னகை தொற்றியது.  “நீ என்ன, வேலைக்கெல்லாம் போகப்போறதில்லை. உங்க கூட வீட்டுல கொஞ்ச மாசம் இருக்கேன் அத்தைன்னு சொன்னியாம்? நிஜமாவா?”, கீர்த்தி வினவ,  “அதுக்குள்ள உனக்கு சொல்லிட்டாங்களா? ஊருக்கு வந்துட்டு என்ன பிளான்னு கேட்டாங்க. உங்களுக்கு ஒரு பேரக் குழந்தையை பெத்து குடுக்கறதுதான்னு எப்படி சொல்ல? அதுதான், வீட்டுல இருக்கேன்னு சொன்னேன்”, வெட்கமே இல்லாமல் பெருமையாக ஷீத்தல் கூற, மீண்டும் சிரிப்பலை.  “பாவம் என் தம்பி...”, என்றான் ஜோ.  “அவரா பாவம்? அப்பாவி லூக்ல இருக்க கேடி!” என்று நொடித்தவள், “இல்ல கீர்த்தி, இத்தனை வருஷம் ஓடி, காசு சேர்த்து, செலவு சமாளிச்சுன்னு லைஃப் திரும்பிப் பார்த்தா வெறும் ஓட்டமாவே இருக்கு. அதுதான் ஒரு வருஷம் பிரேக் எடுக்கணும்னு ஆசை. ஸ்டீஃபனுக்கும் அதுல சந்தோஷம்தான். எங்க வீட்டுலேயும் தம்பி இப்ப வேலைக்கு போறான். அப்பா விவசாயம் பார்க்கறது, அவங்க செலவுக்கு போதும். உங்களை மாதிரி வேலையில சாதிக்கணும்னு எனக்கு இல்லை. தேவைக்காகத்தான் வேலைக்கு வந்தேன். அதுதான்..”, தோளை குலுக்கினாள்.  எளிமையான அவள் எண்ணங்கள் பார்த்து கீர்த்திக்குமே புன்னகை. “அப்ப சரி. ஊருக்கு போனதும் டைம் வேஸ்ட் பண்ணாம சீக்கிரமே நல்ல செய்தி சொல்லு”, என்று தட்டிக் கொடுத்தாள்.  “நீங்க எப்ப குழித்துறைக்கு வந்து செட்டிலாவீங்க?இரண்டு வருஷம்னு சொன்னார் உங்க தம்பி?”  “இந்தியா வந்தாலும் குழித்துறை டவுட் மா. அங்க வந்தா காலேஜ் லெக்சரரா சேரத்தான் இஷ்டம். சில ஐடியாஸ் இருக்கு. பார்க்கலாம். நீ அம்மாகிட்ட எதுவும் சொல்லிக்காதே.“   “ஓ..”, என்று நிதானித்தவள், “அப்போ ஒரே வீட்டில இருந்து நாம ஒரகத்தி சண்டையெல்லாம் போட மாட்டமா கீர்த்தி? “, என்று நிஜமான வருத்தத்துடன் கேட்டாள்.  அதில் புன்னகைத்த கீர்த்தி, “பண்டிகை விசேஷம்னு வரும்போது போட்டா போச்சு. ஆனா ...”, தோளை குலுக்கினாள்.  “ஆக எங்கிட்ட பொறுப்பை தள்ளிவிட்டுட்டு நீ ஜாலியா தனிக்குடித்தனம் இருக்கப் போற... ஹ்ம்ம்...  நடக்கட்டும். நமக்கெல்லாம் தனியா இருந்தா போர் அடிச்சிடும். இங்க இருந்ததே நீ இருக்கற தைரியத்துலதான். சோ எனக்கொண்ணும் பிரச்சனையில்லை”, ஷீத்தல் இலகுவாகக் கூற, ஜோ கீர்த்தி இருவர் முகத்திலுமே நிம்மதியின் சாயல்.  “அம்மாவை அப்பப்ப நாங்க கூட்டிட்டு வந்துக்கறோம் ஷீத்தல். உங்களுக்கும் ப்ரேக் வேணும்”, ஜோ சொல்ல, “அதெல்லாம் பார்த்துக்கலாம் ஜோ..ஜீஜூ”, என்று பெயரில் தடுமாற, ஜோ கீர்த்தி இருவர் முகத்திலும் புன்னகை.  “எதுக்கு கஷ்டப்படற? அவங்க அம்மா ஜோவை தம்பின்னு சொன்னா, அவங்க அக்கா ஆயிடுவாங்களா? அண்ணான்னு சொன்னாதான் என்ன? அவ்வளவு வீம்பு”, ஷீத்தலிடம்  கீர்த்தி மல்லுகட்ட, ஜோ முகத்தில் நிறைவு.   காலேஜ் நாட்களின் கீர்த்தி இப்போதெல்லாம் அடிக்கடி வெளி வருகிறாள். அவர்களின் தனிமை நேரங்கள் இன்னும் இனிமை ஆக ஆக, இருக்கும் கொஞ்ச நஞ்ச இறுக்கங்களும் பறந்துவிடும் என்று உறுதியாக தோன்றியது. கீர்த்தி ஐந்து வருடக் கனவாகக் கூறிய, அவர்களுக்கான ஒரு தனிக் கூடு. அதில் அவனுடன் அவர்களுக்கான ஒரு மழலை கண்டிப்பாக வசப்படும். 

சில நேரங்களில் சில முடிவுகள்…-19.1

0
அத்தியாயம் - 19  கடல் அலைகள் பெரிதான ஆர்பாட்டமின்றி கரையை தொட்டுத் தொட்டு சென்று கொண்டிருந்தது. மாலை மயங்கும் வேளை பாரசீக வளைகுடாக் கடலின் காற்று உடலை மெல்ல வருடித் தந்தது.  அபுதாபியின் கார்னீஷ் பீச்.  சாய்வு நாற்காலிகள் இரண்டில் அருகருகே படுத்திருந்தார்கள். ஜூஸ் வாங்கி வருவதாய்ச் சொல்லி கீர்த்தி சென்றிருந்தாள். அவன் மனைவி கீர்த்தி. திருமணம் முடித்து ஒரு மாதம் முடிந்திருக்க, வார விடுமுறையில் அதைக் கொண்டாட அபுதாபி வந்திருந்தார்கள்.  வெள்ளிக் கிழமை தலை பொங்கல் என்று புதிது உடுத்தி, கீர்த்தி செய்த சர்க்கரைப் பொங்கல் வடையை காலி செய்துவிட்டு கிளம்பியிருந்தார்கள். வரும் வழியில் பிரதமர் மோடி வந்து பிரபலமாக்கிய பாப்ஸ் ஹிண்டு மந்திர் சென்று வழிபட்டுவிட்டு வரும் வேளையே மதியமாகியிருந்தது.  வாழ்க்கை அவனைப் பொறுத்த வரை அழகாகத்தான்் சென்று கொண்டிருந்தது. ஆனால் கீர்த்திக்கு கவலை. “ஒரு மாசமாகியும் இன்னும் பிரம்மச்சாரியாவே இருக்கியே ஜோ.... “, என்று நேற்றும் அழுதிருந்தாள்.  அதை இப்போது நினைக்க, ஒரு மெல்லிய புன்னகை உதித்தது ஜோவின் இதழ்களில். இந்த நாலு வாரங்களில் அவன் கீத்துமா கடந்து வந்திருந்தது அதிகமே. சின்னச் சின்ன முன்னேற்றங்களெல்லாம் அவளுக்குப் போதவில்லை.  பதிவுத் திருமணம் முடித்து, வரவேற்பிற்கு கன்னியாகுமரி சென்று அவன் வீட்டில், அவர்கள் அறையில் குளித்துவிட்டு துண்டோடு வந்தவனைப் பார்த்து கண்கள் விரிய உறைந்து நின்றாள்.  இரு கைகளையும் உயர்த்தியவன், “உங்கிட்ட வர மாட்டேன் கீத்துமா. அதுக்காக பாத்ரூம் ஈரத்திலையும் துணி மாத்திக்க மாட்டேன். என் மேல நம்பிக்கை இருந்தா, இரு, இல்லைன்னா கொஞ்ச  நேரம் வெளிய இரு”, என்றவன் அவள் பதிலுக்குக் காத்திராமல் கப்போர்டில் உடைகளை எடுக்க, அவள் அங்கேயே அவனுக்கு முதுகு காட்டி நின்றிருந்தாள்.  அதில் நமுட்டுச் சிரிப்பு சிரித்தவன்,  “என் மேல ஆசையிருந்தா, திரும்பி வேடிக்கை கூட பார்க்கலாம். நான் தப்பால்லாம் நினைக்க மாட்டேன். நீதான் தைரியசாலி ஆச்சே...”, என்று கிண்டலாக சொல்ல, “எனக்கொன்னும் பயமில்...”, திரும்பியவள் குரல் அவன் அரை குறை நிலையைக் கண்டு தேய்ந்தது.  பாண்ட் போட்டு முடித்தவன், வேண்டுமென்றே ஆர்ம்ஸ் பார்க்கறியா என்று கைகளை மடக்கி போஸ் தர, பெண்ணின் கண்கள் அவனை வெட்கத்தோடு  மேய்ந்தது. மெதுவாய் எடுத்து வைத்த டீ-ஷர்ட்டை அவளை பார்த்துக்கொண்டே அணிய, சற்று நிதானம் பெற்றவள், “ஹ்ம்...ரொம்பத்தான்”, என்று நொடித்தாள்.   நின்ற இடத்திலிருந்தே கையை விரிக்க, ஒடி வந்து கட்டிக்கொண்டாள். “என்னைப் பார்த்துப் பழகிக்கோ கீத்துமா”, என்றான் லேசாய் அணைத்து.  அப்படி ஆரம்பித்து, படுக்கையை இடையில் தலையணை வைத்து பகிர்ந்து படுத்து, துபாய் திரும்பியதும் அதையும் அவளே தூக்கிப்போட்டாள். சில நாட்களிலேயே அவனை அணைத்தபடி படுத்துக்கொண்டாள்.  துபாய் திரும்பும் முன் ஜெயசந்திரனை இருவரும் சென்று பார்த்திருந்தார்கள். கீர்த்தி தனியாகவும் பேசினாள். அடுத்த ஐந்து வருடங்களில் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று நினைத்து அதை நோக்கி செல்ல பார் என்று அவளிடம் அறிவுரை வழங்கினார். அவனிடமோ, கீர்த்தியை அணுகும்போது, பொறுமை முக்கியம். கன்ட்ரோல் எப்போதும் அவளிடம் இருக்க வேண்டும். நெருக்காதே, உன் பாரம் அவளை அழுத்தக்கூடாது. பேசிகொண்டே இரு, உன் குரல், உன் வாசம் என்று அவள் உணர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்று பலப்பல அறிவுறுத்தல்கள்.  ஆன்லைன் கன்சல்டேஷனுக்கு அவருக்குத் தெரிந்த பெண் சைக்கியாட்ரிஸ்ட் ஒருவரையும் பரிந்துரைத்திருந்தார். அவர்களையும் பார்த்து வந்திருந்தாள் கீர்த்தி.  அவன் அப்பார்ட்மென்டில் இருப்பதனால், உள் அறையில் உடை மாற்ற யோசித்தவள், இன்று  அவன் முன்னே புடவை கட்டும் அளவு முன்னேறியிருக்கிறாள். அவன் தொடுகைக்கும் பழகிக்கொண்டிருக்கிறாள். ஆனாலும் கீர்த்திக்குப் போதவில்லை. அவனுக்கும்தான். அதுவே அவளுக்கு குற்ற உணர்ச்சியாகிப் போகின்றது. “உன்னை ரொம்ப நோகடிக்கறேன் ஜோ...”, என்று அழுதாள்.   “என்ன ஜோ.. தூங்கிட்டியா?” கண்விழித்து கீர்த்தியைப் பார்த்தவன்,   “ம்ம்... போன வாரம் நீ எனக்கு ஆயில் மசாஜ் பண்ணது ஞாபகம் வந்துச்சுமா...”, என்று கண்ணடிக்க, சில்லென்ற தர்பூசணிப் பழசாறு துளிகள் சில கன்னத்தில் பட்டது.  “வரும் வரும்... உனக்குன்னு சொல்லி நீ எனக்கு பூசி விட்டு...அழிச்சாட்டியம் பண்ண...”, கண்களை உருட்டினாலும் முகம் சிவந்தாள்.  அறைக்குத் திரும்பியதும் கீர்த்தி குளிக்கச் சென்று வர, அடுத்து இவன் புகுந்து கொண்டான்.  பத்து நிமிடங்களில் நீராவிப் புகை மூட்டதிலிருந்து வெளியே வர, எதிரில் கீர்த்தி மெல்லிய ஒரு நைட்டியில் நின்றிருந்தாள். பாடல் ஒன்றை ஒலிக்க விட, சின்மயி முத்த மழை பொழியக் கேட்டார்.  ‘கூல் டா... அவ போற முடிய போ..அதுக்கு மேல எதுவும் எதிர்பார்க்காதே...’, இந்த ஒரு மாதமாக அவன் தாரக மந்திரமாகிவிட்டதை உச்சரித்துக் கொண்டே...  “அப்படியா.... நீ பொழியறியா இல்லை நான் பொழியவா மேடம்?”, என்று இலகுவாகக் கேட்டான். அவளே தொடங்கி வைத்தாள்.   “இன்னிக்கு முல்லை இரவு பத்தி எரியணும்... எரிய வெக்கற”, என்று கட்டளையிட்டவள் மீண்டும் தொடர, புன்னகையோடே இணைந்து கொண்டான்.  “வெச்சிருவோம்... பேபி”, என்றவன் கைகள் அத்துமீற, பழகிய எல்லைகள் இன்னும் விரிவடைந்தன.  நெஞ்சம் படபடத்தாலும், கண்கள் திறந்து வைத்திருந்தாள் கீர்த்தி. ஜோவின் முகமும், தொடுகையையும் கண்டும் உணர்ந்தும் உள்வாங்கிக்கொண்டிருந்தாள். ஜோவின் நிதானம் சற்றே தப்ப, தன்னை மீட்டுக்கொள்ள முயன்றவனை கட்டிலில் தள்ளியவள், நொடியும் யோசிக்காது அவன் மேல் விழுந்து வைத்தாள்.  “ஹேய்...கீத்துமா...”, என்றவனை...”ஹ்ம்ம்... ஜோ...”, என்றவள், சின்மையியுடன் சேர்ந்து,  “பாலை நிலத்தினில் சோலை நிழலென காதல் சொல்வேன், காதில் காதல் சொல்வேன்”, என்று காதருகில் பாட, அவளை பிரட்டிப் போட்டு ஆள எழுந்த வேட்கையை அடக்கியவன்,  “சொல்லாதடி... செய்”, என்று அவளுக்கு காதில் சொல்லிக் கொடுக்க, கீர்த்தி இன்னும் சற்று தளைகளை உடைத்து முன்னேறினாள். தயங்கும் நேரம் ஜோவின் ஊக்கம், அல்லது “இப்ப வந்து நிறுத்திடாத கீத்துமா...” என்ற கெஞ்சல் என்று அவளை உந்த.... அவனை இன்னும் இன்னும் வதைக்கக்கூடாது என்ற வைராக்கியமும் இணைந்து ஜோவின் பிரம்மசரியத்தை முடித்து வைத்தது.  அவன் மேல் படுத்திருந்தாள் கீர்த்தி.  ஜோவின் கை அவள் கூந்தலை அளைந்து கொண்டிருந்தது. “சோ ஸ்வீட் கீத்துமா... ப்ரேவ் கர்ள்’, என்று சிலாகிக்க, அவன் மார்பைக் குத்தினாள்.  “என்னடா...”  “ஹ்ம்ம்.... இப்படித்தான் குதிரை ரேஸ் மாதிரி, கமான் கமான்னு கத்துவியா”, என்று  நிமிர்ந்து முறைக்க,  “அப்படியா சொன்னேன்... ஞாபகமே இல்லையே.... நீ எங்க நிறுத்திருவியோன்ற பயத்துல இருந்தேன்“, என்றான் நமுட்டுச் சிரிப்புடன்.   “ஜோ...”, பாவமாக கீர்த்தி பார்க்க... “இன்னிக்கு ஒரு பெரிய ஸ்டெப் வெற்றிகரமா எடுத்திருக்கோம். மத்தது மாதிரி இதுவும் பழகும்... நம்புடா...”, என்றவனை முத்த மழையில் நினைத்தாள்.  இரவு விளக்கின் ஓளியில் படுத்திருக்கும் மனைவியின் முகம் நிர்மலமாக இருந்தது.  ஒவ்வொரு முறை அவள் முயன்றும் முடியாது விலகி ஓடி, பின் அவனிடமே வந்து கதறும் போதும் இரகுராமனையும் அவள் குடும்பத்தையும் அடித்து நொறுக்கும் வேகம் எழும். இனியாவது அவள் குற்ற உணர்வு குறையும் என்று நிம்மதியானான். கவலையின்றித் திளைக்க இன்னும் காலமாகலாம் ஆனால் முதல் தடையை உடைத்தாகிவிட்டது.   நினைவுகள் ஏனோ ஹர்ஷிதாவிடம் சென்றது. அவளைப் போல கீர்த்தியின் சாயலில் ஒரு குழந்தை வரம் கிடைத்தால் என்ற நினைப்பே இனித்தது. அவன் மனைவி அந்த ஆசையையும் அவனுக்காகவே நிறைவேற்றுவாள். அவனுக்கு கண்டிப்பாகத் தெரியும்.  அன்று ப்ரீத்தியையும், சரோஜினியையும் அத்தனை வசைபாடியவன், ஹர்ஷிதாவைப் பார்த்ததும்தான் நிதானித்தான்.நாட்களை எண்ணிக்கொண்டிருப்பவள் குலுங்கி அழ, அதற்கு மேலும் அவர்களை வருத்தத் தோன்றவில்லை. கேட்டும் பிரயோஜனமில்லை என்பதும் ஒரு காரணம்.  ஒரு பெருமூச்சுடன், “கீர்த்தியும் நானும் ஹர்ஷிதாவை வளர்க்க முடியாதுன்னுதான் சொன்னேன். அதுக்காக அவளை காப்பகத்துல கொண்டு போய் விட்டுட்டு மறந்துடுவேன்னு சொல்லலை. நீங்க வீணா கற்பனை பண்ணிக்காதீங்க”, என்று சொல்லவும் ப்ரீத்தி நிமிர்ந்து பார்த்தாள்.  “குழந்தைக்காக ஏங்கி தத்து கேட்டு நிக்கறவங்க இருக்காங்க. நல்லவங்களா பார்த்து, நீங்க இருக்கும்போதே தத்து குடுத்திடலாம். அதுக்கான நடைமுறையெல்லாம் லாயர் வெச்சு லீகலா செய்யலாம். அதுக்கு நான் பொறுப்பெடுத்துக்கறேன். அப்பறமும் விட்டுட மாட்டேன். எட்ட நின்னு பார்த்துக்கறேன். ஆனா இதுல கீர்த்தி எங்கேயும் வரமாட்டா. எதுவா இருந்தாலும் என்கிட்ட மட்டும் பேசுங்க”, என்று அவன் யோசனையை முன் வைத்தான்.  “இப்ப நீங்க எடுக்கற முடிவு மட்டும்  நீங்க சொன்ன மாதிரி நியாய தர்மப்படியா? சொந்தம்னு இருக்கும்போது யாரோ அசலார்கிட்ட விடுறதுக்கு உங்க மனசாட்சி சரின்னு சொல்லுமா?”, ப்ரீத்தி அத்தனை உடல் நலிவிலும் எழுந்து அமர்ந்தாள்.  “கீர்த்தியும் ஹர்ஷியும் ஒன்னா இருக்கறது இரண்டு பேருக்குமே நல்லதில்லைன்னு புரிஞ்சுதான் இந்த முடிவுக்கு வந்தேன்.  இது பத்து நாள் ஒரு மாச பொறுப்பு கிடையாது. அடுத்த  இருவத்தியஞ்சு முப்பது வருஷம், ஹர்ஷி கல்யாணம், குழந்தைன்னு செட்டில் ஆகற வரை இருக்கப்போகுது. கீர்த்தியால அவளை சகிச்சக்க முடியறதே பெரிய விஷயம். காரணம் தெரியலைன்னாலும் அந்த விலகல் குழந்தைக்கு சீக்கிரமே புரியும். வளர்ந்து காரணம் கேட்டாலும் சொல்ல முடியாது. என்னை சகிச்சுக்க வேணாம்னு அவளே ஹாஸ்ட்டல்ல சேர்க்க சொல்லுவா. சின்ன வயசுல பெத்தவங்களை தொலைச்சுட்டு நிக்கற குழந்தை அன்புக்கு ஏங்கித்தான் வளருவா. அது தேவையா? இப்பதான் கொஞ்சமா தேறிகிட்டு வரா கீர்த்தி. எங்களுக்கு குழந்தை பிறந்தாலும் அவளால பாசம் காட்ட முடியுமான்னு இப்பவே அவளுக்குள்ள நிறைய சந்தேகம் இருக்கு. ஹர்ஷி கூட இருந்தா, இன்னொரு குழந்தை பெத்துக்க மாட்டா, இல்ல எனக்காக பெத்துக்கிட்டாலும், குழந்தைகிட்ட பாசம் காட்டும்போது ஹர்ஷிகிட்ட அப்படி இருக்க முடியலைன்னு குற்ற உணர்ச்சியில எங்க குழந்தைகிட்டயும் தள்ளி நிற்பா. இதெல்லாமே அவளை கொஞ்சம் கொஞ்சமா சிதைச்சிடும். வெறுப்பு ஹர்ஷிமேலயும் திரும்பலாம். என் பொறுமை போய் நானுமே கீர்த்தியை, ஹர்ஷியை எதாவது ஒரு சந்தர்ப்பத்துல பேசிடலாம். வாழ்க்கை எல்லாருக்குமே நிம்மதியில்லாம போறதுக்குத்தான் வாய்ப்பு அதிகம். ஹர்ஷிக்கு அவளை முதன்மையா பார்த்து அவளுக்கு முழுமனசா பாசம் காட்டுற ஒரு குடும்பம் அமையணும். அது அசலாரா இருந்தாதான் நல்லது.  கீர்த்திக்கு இனிமேயாவது வாழ்க்கை அவ விரும்பற மாதிரி அமையணும்னு நினைக்கறேன். யாருக்கும் பெருசா சேதாரம் ஆகாம இருக்க இது ஒன்னுதான் ஆப்ஷன்.”   ப்ரீத்தியின் ஆயுள் எண்ணப்படுகிறது என்று தெரிந்ததிலிருந்து, இந்த நிலைமை வரும் என்று புரிந்தது முதல் ஜோ இதைப் பற்றி யோசித்திருந்தான். டாக்டர் ஜெய சந்திரனுடனும் பேசித் தெளிந்திருந்தான். இருந்த கொஞ்ச நஞ்ச சலனமும் அவர்தான் தீர்த்து வைத்திருந்தார். ஊரார் மெச்சுதலுக்காக வளர்ப்பதாக சொல்லிவிட்டு, வீட்டுக்குள் எல்லோரும் அவஸ்த்தை படுவது தேவையில்லை என்ற முடிவில் திடமாக இருந்தான். 

சில நேரங்களில் சில முடிவுகள்…-18.2

0
உள்ளே சரோஜினியும் , ப்ரீத்தியும் மட்டுமே இருந்தனர்.  சுற்று முற்றும் பார்த்தவன், “ஹர்ஷிதா எங்க?” என்ற கேள்வியில்,  “அது, ப்ரீத்தி வாந்தி எடுக்க, குழந்தை பயப்படப் போறான்னு எதிர்க்க இருந்த ஒரு பாட்டிமா, அவங்க ரூமுக்கு கூட்டிட்டு போனாங்க தம்பி. கீர்த்தி வீட்டுல வெச்சிருந்திருக்கலாம்...”, குறையாக சரோஜினி ஆரம்பிக்கவும்,  “நாளைக்கு கிளம்பப்போறவளை எதிர்பார்க்காதீங்க ஆன்ட்டி.  அதுக்கப்பறம் நீங்கதான பார்த்தாகணும்? துணைக்கு வேற ரிலேஷன் யாரும் வரவெச்சிக்கலையா?”, என்று அவர் கவனத்தை தன்புறமே திருப்பினான்.  “எனக்கு இப்பவே இது எல்லாருக்கும் தெரிய வரதுல விருப்பமில்லைங்க. அதுதான்...” பதில் ப்ரீத்தியிடமிருந்து வந்தது.  “வயசானவங்க சமாளிக்கணுமே? உறவுக்காரங்க இல்லைன்னா உங்க ஃப்ரெண்டு யாராவது வர சொல்லலாமே? எல்லா பாரத்தையும் குடும்பத்துல இருக்கவங்களே உங்களுக்காக எல்லா நேரமும் சுமக்க முடியுமாங்க?”  “...”  ப்ரீத்தி எந்த பதிலும் சொல்லாது அமைதியாக இருக்கவும், “சரி, அது உங்க விருப்பம். நான் திடீர்னு கிளம்பி வந்தது,  எங்க சம்மந்தப்பட்ட சில விஷயங்களை பேசி தெளிவுபடுத்திடணும்னுதான்”, பார்வை வட்டத்துள் ப்ரீத்தியும் சரோஜினியையும் கொண்டுவந்தான்.  “நேத்து நீங்க குழந்தை பத்தின உங்க எதிர்பார்ப்பை சொன்னீங்கன்னு கீர்த்தி சொன்னா...”, என்று நிறுத்தினான். இருவருமே அவன் முகத்தைத்தான் பார்த்திருந்தனர். அவள் நேற்று சொன்னதும், இப்படி காலையில் வந்து நிற்பவனைக் கண்டு சற்று மிரட்சிதான். ஏன் அவனிடம் சொன்னாய் என்றும் கேட்க முடியாது. அவர்களோடு ஹர்ஷி வளர அவனும் சம்மதிக்க வேண்டுமே.  “உங்க நிலைமையில இப்ப இதை பேசறது கஷ்டமா இருந்தாலும், நான் உடைச்சே பேசறேனே? ஏற்கனவே கீர்த்தி மண்டையை கழுவி குழந்தையை பெத்துக்க வெச்சீங்க. உங்களுக்கு வேணான்னு இருந்தா திருப்பி குடுக்க அவ என்ன அமெசான் ஆர்டரா? கீர்த்தி இல்லாம வேற வாடகை தாய் மூலமாவே பெத்திருந்தீங்கன்னா, இப்படித்தான் தேடிப்போய் ரிட்டர்ன் குடுப்பீங்களா?”, சுட்டெரிக்கும் அவன் பார்வையையும், சுள்ளென்று வந்த கேள்விகளையும் தாங்க முடியாது,  “தம்பி... அவளே நாளை எண்ணிட்டு இருக்கா...”, என்று கண்ணீர் விட்டபடி பெரிய மகளுக்காக சரோஜினி பேச,  “தெரியுங்க. அதனாலதான பேச வேண்டியிருக்கு? எந்த தைரியத்துல ப்ரீத்தி குழந்தையை  கீர்த்தி பார்த்துப்பான்னு அவளைக் கூட கேட்காம நீங்களே முடிவு பண்ணீங்க?”  அதற்குள் தன்னை மீட்டுக்கொண்ட ப்ரீத்தி, “ஹர்ஷி அவ இரத்தம். அந்த உரிமையிலதான்..” என்றவளை கையமர்த்தியவன்,  “உரிமை..? நக்கலாக இடைமறித்தான். “ அவ சம்மதிமில்லாம் ஜனிச்ச உயிரை, விருப்பமேயில்லைன்னாலும்  உங்க வற்புறுத்தல்ல பெத்து குடுத்துட்டா. உயிரை அழிச்ச பாவம் வேணாம், புண்ணியம் சேரும்னு  சொன்னீங்க. இப்ப உன் இரத்தம், காப்பகத்துல விட்டா உனக்கானது மாதிரி அவளுக்கும் ஆயிடும், பழி வாங்கறியான்னு கார்னர் பண்றீங்க. இதுக்கு பேர் என்ன தெரியுமா?  உங்க புருஷன் ஒரு தரம் அவ உடம்பை ரேப் பண்ணான்.... நீங்க...  அவ உழைப்பை, அவ மனசை, உணர்வுகளை திரும்பத் திரும்ப அழிக்கறீங்க. இதுவும் ரேப் தான். எமோஷனல் ரேப்”, என்று அழுத்தமான குரலில் பேசியவன்,  “உங்க பணம் உங்ககிட்ட இருக்கணும், நகை இருக்கணும், ஆனா அவ காசு எடுத்துக்கலாம். கல்யாணம் தள்ளி போட்டுக்கலாம். நீங்களே சம்மந்திகிட்ட பேசுவீங்க? எனக்கு புரியலை ...இந்த குடும்பம் அப்படி என்ன கீர்த்திக்கு பண்ணுச்சு? அவ எதுக்கு எல்லா பிரச்சனைக்கும் தீர்வா இருக்கணும்?  இரகுராமன் அவளை நாசம் பண்ணதும், உங்கூட வாழ முடியாதுன்னு சண்டை போட்டு கீர்த்திக்காக உங்க புருஷனை விட்டுட்டு வந்தீங்களா ப்ரீத்தி? அவருக்காகத்தான வாதாடினீங்க?”, ப்ரீத்தி தலை குனிய, சரோஜினியைப் பார்த்தவன்,   “நீங்க அவனுக்கு தண்டனை வாங்கி குடுத்தீங்களா? தப்புன்னு தெரிஞ்சும் ப்ரீத்தி அவ புருஷனுக்கு நின்னா, உன் உறவே வேணாம்னு அவளை தள்ளி வெச்சிட்டு உங்க சின்ன பொண்ணுக்காக பெத்தவங்களா நீங்க நின்னிருக்கணும். செய்யலை.  சரி அட்லீஸ்ட் குழந்தை எதுவும் வந்துடாம இருக்க, ஒரு டாக்டரையாவது பார்த்து எதாவது செஞ்சீங்களா? இல்லை. குழந்தை வந்ததும் என்ன பண்ணிருக்கணும்? கீர்த்தி வேணாம்னு சொன்னதை மதிச்சு கலைச்சிருக்கணுமா இல்லையா? அதுக்கு அம்மாவா அக்காவா  நீங்க அவ கூட நின்னீங்களா? அது என்ன? கெட்டதுல நல்லதா குழந்தை வந்தது? பிள்ளை பெத்து தரணும்ன்றது கீர்த்தி விதியா? முன் ஜென்ம கடனா?”, கோபத்தில் அவன் குரல் சற்றே ஓங்க, சரோஜினி,   “இப்படியெல்லாம் ஆகும்னு அப்போ தெரியாதுங்களே! நடந்ததை மாத்த முடியாது. அதோட விளைவுனால ஒரு பிரச்சனையாவது முடியும்னு இருக்கவும், அந்த முடிவை எடுத்தேங்க. இவங்க நல்லபடியா குழந்தையை வளர்ப்பாங்கன்னுதானே நினைச்சேன்”, முந்தானைக்குள் கேவினார்.  தன்னை சற்றே நிதானித்துக்கொண்டவன், “யாரும் தீர்க்கதரிசி இல்லைங்க. எல்லாருக்கும் இக்கட்டான சூழ்நிலை வரும். அந்த நேரத்துல நமக்குத் தெரிஞ்சதை வெச்சுத்தான் முடிவெடுக்கணும். இல்லைன்னு சொல்லலை. ஆனா அதை...

சில நேரங்களில் சில முடிவுகள்…-18.1

0
அத்தியாயம் - 18  காலை நேரம் பரபரப்பாக சமையலில் இருந்தாள் கீர்த்தி. இயந்திரத்தனமாக வேலைகள் நடந்து கொண்டிருந்தன.  நேற்று ப்ரீத்தி வீசிய அணுகுண்டின் அதிர்வலைகளில் ஹாஸ்பிட்டலிலிருந்து சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறியிருந்தாள்.  மனம் கொதித்துக்கொண்டிருந்தது. நான் பழிவாங்க வேண்டி குழந்தையை ஏற்றுக்கொள்ள மாட்டேங்கிறேனா? என் பக்கமிருந்து கொஞ்சமும் பார்க்க மாட்டார்களா? எப்படியெல்லாம் தன்னை முடக்குகிறார்கள் என்று எண்ண எண்ண, எவ்வளவு தூரம் நடந்தே வந்திருக்கிறாள் என்பது ஒரு ஆட்டோகாரர் இடிப்பது போல வந்து திட்டிய பின்புதான் புலப்பட்டது.  வெயிலில் வேர்த்து விறுவிறுத்து, மூச்சு வாங்க முழிப்பவளைப் பார்த்து அவரே சற்று பரிதாபப்பட்டு, “எங்கம்மா போகணும்? நான் கொண்டு போய் விடவா?”, என்று கேட்டார்.  சுற்றிப் பார்த்தவள், அருகில் ஒரு கோவில் தெரிய, அவரை மறுத்துவிட்டு, அருகில் ஒரு பெட்டிக் கடையில் தண்ணீர் பாட்டில் வாங்கி குடித்துக்கொண்டே, கோவிலில் சென்று அமர்ந்துவிட்டாள்.  கைப்பேசியில் அவள் அன்னை அழைக்க, அணைத்து வைத்துவிட்டாள். துபாய் கிளம்பிவிட்டால், திரும்ப வரவே வேண்டாம் என்று தோன்றிவிட்டது. தன்னைக் கேட்காமலேயே எவ்வளவு பெரிய முடிவு எடுத்திருக்கிறார்கள்? அதுவும் அம்மாவும் உடந்தை. அப்பாவிற்கு தெரியுமா? தெரிந்தும் அப்போது போலவே அமைதியாக இருக்கிறாரா ? தனக்காக யாருமே இல்லையா? என்று யோசிக்க ஜோ நானிருக்கிறேன் என்றது நினைவில் வந்தது.  மணியைப் பார்த்தாள், அங்கே வகுப்பில் இருப்பான். கண்ணீர் பொங்கியது. ஒரு வாய்ஸ் மெசேஜ் பதிவு செய்து அனுப்பியிருந்தாள். என்ன பேசினாள் என்று கூட தெரியாது ஆனால், நீயாவது என்னை புரிஞ்சுக்கோ ஜோ என்ற மன்றாடலுடன் நிறுத்தியிருந்தாள்.  மதியம் போல் பசி உரைக்க, ஹோட்டலில் ஒரு தயிர் சாதம் உண்டுவிட்டு, வீடு வந்து சேர்ந்தாள்.   “போன் என்னம்மா ஆச்சு? உங்க அம்மா நிறைய வாட்டி ட்ரை பண்ணாளாம்? நானும் பண்ணேன், ஜோசஃப் தம்பி இப்ப பண்ணுச்சு, நீ வந்த உடனே கூப்பிட சொன்னாரு.”, சாதாரணமாகப் பேசும் தந்தையிடம் என்ன கேட்பது என்று தெரியவில்லை.   “சார்ஜ் போடணும்பா. இப்ப பேசறேன்”,  என்றவள், அறைக்குள் நுழைந்துகொண்டு கைப்பேசியை உயிர்பித்தாள்.  ஜோ மிஸ்ட் கால் மற்றும் மெசேஜ்கள் இருந்தது. தலையில் தட்டிக்கொண்டவள், வேகமாக அவனுக்கு அழைத்தாள்.  “கீர்த்தி? என்னாச்சு? நீ ஓகேதான?”, வேகமாய் கேட்டான்.  “சாரி ஜோ. அம்மா திரும்ப திரும்ப கூப்பிடவும் எரிச்சலாகி ஆஃப் பண்ணிட்டேன்.”  “ஷ்....”, நிதானித்துக்கொண்டவன்,  “என்ன மெசேஜ் விட்ட? அழுகையில புரியவே இல்லை. எப்பவும் உன் கூடத்தான் இருக்கேன். என்ன விஷயம்?” , என்று கேட்டதுதான் தாமதம், மீண்டும் அழுகை பொங்கியது.   மெல்ல அவளிடம் கொஞ்சம் கொஞ்சமாய் நடந்ததைக் கேட்டவன் “அவங்க என்ன வேணாலும் சொல்லட்டும். நீ எதுவும் பேசாத, ஹாஸ்பிட்டல் பக்கம் போகாத.   நான் இருக்கேன்”, என்றதோடு வைத்துவிட்டான்.  சற்றே ஏமாற்றமாக இருந்தாலும், அவனும் துபாய் வந்துவிட சொல்கிறான் என்பது வரை புரிய, தன்னை தேற்றிக்கொண்டு படுத்துவிட்டாள்.  மாலை தந்தை வந்து எழுப்பவும். “அம்மாவை கான்டீன்ல பார்த்துக்க சொல்லுங்கப்பா. நமக்கு இட்லி வார்க்கறேன். எனக்கு முடியலை”, என்றாள். மகளின் நலுங்கிய தோற்றத்தில் வேணுகோபாலும் “சரிம்மா இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி எழுந்திரு. அப்பறமா ஊத்திக்கலாம்”, என்று விட்டார்.  இரவு “கீர்த்திமா, நாளைக்கு காலையில் கொஞ்சம் சாப்பாடும் , குழந்தைக்கு இட்லியும் பண்ணி எடுத்துட்டு வர முடியுமான்னு கேட்கறா உங்கம்மா. ஹர்ஷிக்கு கான்டீன் சாப்பாடு பிடிக்கலையாம். அப்படியே மாத்து ட்ரெஸ் வேணுமாம்.”  “சரிப்பா” என்றவள்தான் இப்போது சமைத்துக்கொண்டிருக்கிறாள். சற்றே வெறுப்பு வந்தது. ‘இப்பவும் ஆர்டர் போடறாங்க, நான் ஆடறேன்’, என்று தோன்றவும், “ம்ப்ச்... முடியாம படுத்துகிடக்கறா, குழந்தைக்குன்னும்போது என்னத்தை செய்யறது”, என்று  நினைப்போடு தாளிப்பை முடித்தாள்.  ஆனால் இவள் எடுத்துச் செல்லப்போவதில்லை. போனில் போர்ட்டர் சர்வீஸ் புக் செய்திருந்தாள். இன்னேரம் வரவேண்டும். அவன் கொண்டு போய் கொடுத்துவிடுவான். அவசரமாக டப்பர்வேர் டப்பாக்களை நிரப்பினாள். வாசலில் மணியடித்தது.  வேகமாக சென்று கதவு திறந்தவள், “ஒரு டூ மினிட்ஸ் இருங்க, பையில....”, என்றவள் குரல் தேய்ந்து அதிர்ச்சியில் நின்றது.  எதிரில் ஜோ நின்று கொண்டிருந்தான். கண்களை இமைத்தவள் அவன் பிம்பம் இல்லை என்று புரிந்து, கை நீட்டி அவனை தொட்டவள், “ஜோ... இங்க... எப்படி?”  அவள் முழிப்பதை ரசித்தவன், “உள்ள கூப்பிட மாட்டியா? இங்கயே விசாரணையா? யார்னு நினைச்சு டூ மினிட்ஸ் கேட்ட?”  ஜோ பேசப் பேச, அவன் நிஜமாகவே தன்னைத் தேடி பறந்து வந்துவிட்டான் என்ற நெகிழ்வில் இருந்தவளுக்கு பேச்சே வரவில்லை.  “யாரும்மா”, என்று கேட்டு வேணுகோபால் வர, வாசலில் நின்றிருந்தவனைப் பார்த்தவர் நெற்றியை சுருக்க,  “நகரு”, என்று உள்ளே வந்தவன்,  தோளிலிருந்த பையை அவளிடம் தந்துகொண்டே, “அங்கிள், நான் ஜோசஃப்”, என்றான். போனில் பேசியிருந்தார், போட்டோ மட்டுமே பார்த்திருந்தார். அதில் சட்டென்று அடையாளம் தெரியவில்லை.  “அடடே... என்ன திடீர்னு? கீர்த்தி சொல்லவே இல்லை. வாங்க வாங்க”, என்று திணறி வரவேற்றார்.  “ஹ்ம்ம்...அவளுக்கும் தெரியாது. சர்ப்ரைஸ்“, என்று சொல்ல, வாசலில் மீண்டும் மணி அடித்தது.  இந்த முறை போர்ட்டர் சர்வீஸ் ஆள்.  “இதோ இரண்டு நிமிஷங்க. பையில போட்டு எடுத்துட்டு வரேன்”, என்று உள்ளே ஓடினாள்.  “நீங்க உட்காருங்க. அது ஹாஸ்பிட்டலுக்கு டிஃபன், மதியம் சாப்பாடு கட்டி அனுப்பறா. அவளுக்கு போக முடியலை அதான் குடுத்து அனுப்பிடலாம்னு புக் பண்ணா”, என்று வேணுகோபால் விளக்கிக் கொண்டிருக்கையிலேயே பையோடு கீர்த்தி வந்தாள்.  ஜோ அவளை முறைக்க, கண்களை சுருக்கியவள், வந்தவனிடம் பையை கொடுத்து, மீண்டும் ஒரு முறை ரூம் நம்பர், பெயர் எல்லாம் சொல்லி அனுப்பி வைத்தாள்.  “உடம்பு முடியலைன்னா அங்க பக்கத்துலேயே சுவிகி போட்டு விடறதுதானே மா? ப்ரீத்திக்கு எப்படியும் அவங்க ஹாஸ்பிட்டல்ல தர சாப்பாடுதானே?”, என்றான் மையமாக.  “ஆமாங்க தம்பி. ஆனா ஹர்ஷி சாப்பிட மாட்டங்கறாளாம்”, வேணுகோபால் நேற்று சரோஜினி சொன்னதை சொல்ல,   “நீங்க போய் ஃப்ரெஷ் பண்ணிட்டு வாங்க ஜோ. காஃபி ரெடி பண்றேன்”, என்று அனுப்பி வைத்தாள் கீர்த்தி.  அடுத்த இருபது நிமிடங்களில் காஃபியுடன் அமர்ந்தான் ஜோ. வேணுகோபால் நலம் விசாரித்தவன், அடுத்து பேசும் முன்,  “அம்மா வந்திருந்தாங்க தம்பி. கல்யாணம் சீக்கிரம் வைக்கணும்னு சொன்னாங்க. நீங்க உங்க இரண்டு பேர் தோது பார்த்துட்டு சொல்லுங்க. கல்யாணத்துக்குன்னு அவ சேர்த்து வெச்சது கரையறதுக்கு முன்ன முடிச்சிடணும். நானும் ப்ரீத்தியும் இருக்கும்போதே உங்க கல்யாணத்தைப் பார்த்துடணும்”, என்றார். துக்கத்தில் குரல் பிசறடித்தது.  “ஹ்ம்ம்....ப்ரீத்திக்கு இப்படிங்கறது வருத்தம்தான். கேட்கறேன்னு தப்பா நினைக்காதீங்க, குழந்தையை என்ன பண்ணப் போறீங்க அங்கிள்?”, பார்வையும் குரலும், தனக்கு சம்மந்தமில்லாத விஷயத்தை கேட்டுக்கொள்வதைப்போல இருந்தது.  முகம் கசங்கிய வேணுகோபால், “என்ன செய்யமுடியுங்க? நானும் சரோஜினியும்தான் வளர்க்கணும். ஆண்டவன் அதுக்கான ஆயுசைக் கொடுக்கணும்.”, வேதனை மண்டியது அவர் குரலில்.  சமையலறை வாசலில் சிலையாக நின்றிருந்தாள் கீர்த்தி.  “உங்க ஆயுசுக்கப்பறம் அவளை நாங்க பார்த்துக்கணும்னு எதிர்பார்ப்பு எதுவும் இருக்கா?”  ஜோவின் கேள்வியில் சங்கடமாக, “நாங்க கேட்கறதுக்கு எந்த உரிமையும் இல்லையே தம்பி. ஆனாலும் எங்க காலத்துக்கு அப்பறம்,  நல்ல ஹாஸ்ட்டல்ல சேர்த்து, படிக்கவெச்சு, ஒரு கார்டியனா இருந்து அவளுக்கு ஒரு வாழ்க்கையை அமைச்சு குடுத்தா நல்லாயிருக்கும்”, என்று இறைஞ்சுதலாக கைகூப்பிக் கேட்டார்.  “உங்க பெரிய மகளுக்கும், மனைவிக்கும் வேற எதிர்பார்ப்பு இருக்கும் போல இருக்கே? உங்களுக்கு தெரியாதா இல்லை  அவங்க அதிகபட்சமா கேட்டு நீங்க குறைஞ்சபட்சமா கேட்கறீங்களா?”, ஜோவின்  ஊடுருவும் பார்வையும், கேள்வியின் போக்கும் புரியாமல் கீர்த்தியை பார்த்தார் வேணுகோபால்.  கல்லாக சமைந்திருந்தவள் முகத்தில்  எதுவும் படிக்க முடியாமல், “நீங்க என்ன கேட்கறீங்கன்னு புரியலை தம்பி. நான் என் எதிர்பார்ப்பை சொன்னேன். முடியாதுன்னு மறுக்க எல்லா உரிமையும் உங்களுக்கு இருக்கு. ப்ரீத்தி என்ன சொன்னா? எனக்கு தெரியலைங்களே?”, மீண்டும் மகளையும் மருமகனாகப் போகிறவனையும் மாறி மாறிப் பார்த்தார்.  “என்னம்மா...அம்மா எதுவும் சொன்னாளா?”, சொன்னால் அவருக்கு எதுவும் ஆகிவிடப் போகிறதோ என்ற பயத்தில் லேசாய் தலையை இல்லை என்று அசைத்தாள்.  “உங்க அப்பாக்கு வேண்டியது எடுத்து வெச்சி்டு, நாம டிஃபன் சாப்பிட்டு கிளம்பலாம் கீர்த்தி. போய் உங்க அக்காவை பார்த்துட்டு வரலாம்.”, என்றான்.  “எதுவும் பிரச்சனையாமா? தம்பியும் திடீர்னு வந்திருக்காரு...”  “ஒன்னுமில்லை அங்கிள். நாங்க போய் பார்த்து பேசிட்டு வந்து சொல்றோம். நீங்க மனசை போட்டு உழப்பிக்க வேணாம். அவங்களுக்கும் சொல்லாதீங்க. சர்ப்ரைசா இருக்கட்டும்”, என்று விசனப்படும் அவரை சமாதானம் செய்தவன் கீர்த்தியை பார்க்க, அவள் அடுக்களைக்குள் புகுந்துகொண்டாள்.  மதியம் பார்வையாளர்  நேரம் தொடங்கும் போது ப்ரீத்தி இருந்த அறைக்கு வந்தார்கள் இருவரும்.  “வா கீர்த்தி..”, என்ற சரோஜினி உடன் வந்த ஜோவைப் பார்த்து முழிக்க, மருந்தின் தாக்கம் ஆரம்பித்து, அப்போதுதான் காலை உணவின் மிச்சத்தை வாந்தியெடுத்துவிட்டு படுத்திருந்த ப்ரீத்தி அடையாளம் கண்டு, “வாங்க. எப்ப வந்தீங்க?”, என்று சற்று நிமிர்ந்து அமர்ந்தாள்.  “காலையிலதான் வந்தேன். கீர்த்திக்கும் நான் வரப்போறது தெரியாது”, என்று சொல்லவும், வந்திருப்பது யார் என்று புரிந்து, சரோஜினி அமரச் சொல்லி உபசரிக்க, அங்கிருந்த ஒற்றை நாற்காலியில் அமர்ந்தான்.  வரும் வழியில் கிடைத்த தனிமையில் “என்ன ஜோ? திடீர்னு வந்திருக்க? எத்தனை நாள் லீவு?”, என்று மனதில் குடைந்து கொண்டிருந்த கேள்வியை கேட்டாள் கீர்த்தி.  “வராம ? மறுபடியும் உன்னை கார்னர் பண்ணி குழந்தையோட எங்கேயாவது கண்காணாத இடத்துக்கு அனுப்பிட்டா? இன்னொரு ப்ரேக்-அப் எல்லாம் தாங்கற சக்தி இல்லை எனக்கு”, என்றவனை முறைத்தாள்.  “நான் நடந்தது எல்லாத்தையும் உங்கிட்ட சொன்னேந்தானே? திரும்ப அப்படி செய்வேனா ஜோ?”, குறையாய் கேட்டவளின் தோளை இடித்தவன்,  “ஹ்ம்ம்...அப்ப நான் செய்யாம விட்டதை இப்ப செய்யணும்னுதான் கிளம்பி வந்தேன். இரண்டு நாள்தான். நாளைக்கு உன் கூடவேதான் கிளம்பறேன். உங்க அம்மாக்கும் ப்ரீத்திக்கும் சிலது புரிய வைக்கத்தான் வந்ததே“, என்றான்.   “ஜோ...”, என்ற ஒற்றை அழைப்பிலேயே அவள் நெகிழ்ச்சியையும் நன்றியையும் கடத்தியிருந்தாள். அவன் கையை அழுத்தமாக பிடித்திருந்தாள்.  “இது நான் பேசணும் ஜோ. எனக்கு நான் தான் நிக்கணும்.”, என்று கூறினாலும் அவளின் சஞ்சலம் கண்ணில் தெரிந்தது.   “இப்பவும் நீதான் நிக்கற. உன் முடிவு நீ சொல்லிட்ட. அது மாறப்போகுதா?”  முகம் கசங்க அவனை நோக்கியவள், “அவ கடைசியா சொன்னது மனசை பிசையுது ஜோ. யாருக்குமே நான்...

சில நேரங்களில் சில முடிவுகள்…-17.2

0
ஏதோ தோன்ற, “கீர்த்தி....” என்று ஆரம்பித்தவன், பின் இப்போது வேண்டாம் என்று அமைதியாகிவிட்டான்.  “என்ன ஜோ?”  “ஹ்ம்ம்... ஒன்னுமில்லைடா. நான் ஏற்கனவே சொன்னதுதான். எதுனாலும் நான் இருக்கேன் உங்கூடங்கறதை மறந்துடாத”, என்று வலியுறுத்தியவன், ஜெய ராணி அவளைப் பற்றி நிறைவாகப் பேசியதை பகிர்ந்துகொண்டான்.  “நேர்ல இன்னும் நல்லா இருக்கா ஜோ, பக்குவமான பொறுப்பான பொண்ணுதான்னு சர்டிஃபிகேட் குடுத்துட்டாங்க எங்கம்மா”, என்று சிலாகித்து சொல்ல, கீர்த்தி முகத்திலும் புன்னகை.  “ஆன்ட்டி உன்னை பத்திதான் கேட்டாங்க. கொஞ்சம் நான்-வெஜ் சமைச்சு தரணுமாம் உனக்கு. நேரத்துக்கு சாப்பிடறயான்னு பார்த்துக்கணுமாம்”, அவங்க சொன்னதுக்கெல்லாம், சரி ஆன்ட்டின்னு சொன்னேனே, அதுக்கே பிடிச்சிருக்கும்”, என்று...
error: Content is protected !!