Monday, July 20, 2026

ragavi

ragavi
228 POSTS 0 COMMENTS

சில நேரங்களில் சில முடிவுகள்…- 17.1

0
அத்தியாயம் - 17  ஜெயராணி வந்திருந்தார். வேணுகோபால் மாரடைப்பும், ப்ரீத்தியின் புற்று நோய் பற்றியும் விசாரிக்க. அதன் வீரியத்தைக் கூறவில்லை ஜோ. ட்ரீட்மென்ட் எடுக்க வேண்டும் என்பதோடு நிறுத்தியிருந்தான்.  “நீங்க மனச தளரவிடாதீங்க. இப்பல்லாம் முன்ன மாதிரி பயப்படவேண்டாம். எங்க பக்கத்து சொந்தம் இரண்டு பேருக்கு இப்படித்தான் புற்று நோய்னு சொன்னாங்க. ஆறு மாசம் ஒரு வருஷம்னு ட்ரீட்மென்ட் எடுத்துகிட்டு இப்ப நல்லா இருக்காங்க.  என்ன உங்க இரண்டு பேருக்குமே பணக்கார வியாதி. இன்சூரன்ஸ் எதுவும்..?”, என்று நிறுத்த, கீர்த்தியின் இல்லை என்ற தலையசைப்பில்,  “ஜோசஃப் அப்பாக்கு முடக்கு வாதம் வந்து ஹாஸ்பிட்டல்ல சேர்த்தப்போ, பணம் தண்ணியா கரைஞ்சுது. கடன் வாங்கி, வீட்டை அடமானம் வெச்சுன்னு அப்படி செலவு செஞ்சும், அந்த கவலையிலேயே மாரடைப்பு வந்து போயிட்டார். இன்சூரன்ஸ் எதுவும் இல்லை. செலவு குடும்பத்தையே முடக்கிடுச்சு. ஜோசஃப் தலையெடுத்து, கஷ்டப்பட்டுதான் இப்ப தலை நிமிர்ந்தோம். இங்க நீங்க திடமா இருக்கணும் சம்மந்தி. பெரிய பொண்ணு உடம்பை பார்க்கணும், சின்னவ கல்யாணத்தையும் பார்க்கணும்.”  அறிவுரையை பொழிந்தார். வேணுகோபால் தலையாட்டி கேட்டுக்கொண்டார். அருகே அமைதியாக அமர்ந்திருந்த கீர்த்தியைப் பார்த்தவர், “தைரியமா இருக்கணும் கீர்த்தி. குடும்பத்துக்கு ஒன்னுன்னா ஓடி வந்ததுலேயே உன்...

சில நேரங்களில் சில முடிவுகள்…-16.2

0
“உங்க ப்ரெண்டோட அப்பா என்ன சொன்னார் ஜோ. உண்மையை சொல்லுங்க ப்ளீஸ்?”, என்று கெஞ்ச, மெல்ல அவள் உச்சந்தலையில் முத்தமிட்டவன், “கொஞ்சம் சீரியசா தெரியுது ஜோ, உடனே கான்சர் ஸ்பெஷலிஸ்ட் பார்க்கறது பெட்டர்னு சொன்னார்டா”, எனவும் மளுக்கென்று கீர்த்தியின் கண்கள் நிறைந்தது.  “ஹே... ரொம்ப யோசிக்காதே. போய் ஒரு அம்பதாயிரத்தை உங்க அப்பா அக்கவுண்ட்டுக்கு ட்ரான்ஸ்பர் பண்ணு. எப்படியும் ஸ்கான் அது இதுன்னு எடுக்க சொல்லுவாங்க. கையோட பண்ண முடிஞ்சா பண்ணிடட்டும்”, என்று சொல்ல சரியென்று எழுந்துகொண்டாள்.  ‘ஹ்ம்ம்... எடுத்ததெல்லாம் பத்தாதுன்னு அடுத்து உன் உழைப்பையும் உறியப்போறாங்க’, என்று ஓடியது ஜோவின்...

சில நேரங்களில் சில முடிவுகள்…-16.1

0
அத்தியாயம் - 16  சரோஜினியோடு பேசிக்கொண்டிருந்தாள் கீர்த்தி. ஜெயராணியும் ஸ்டீஃபனும் சென்னை வந்து பேசுவதாக கூறவும் சற்றே பரபரப்பாக இருந்தார்.  “நாளை கழிச்சு சனிக்கிழமை சாயங்காலம் வரதா சொல்லியிருக்காங்க. அன்னிக்கு பாட்டிமை. ஆனா அப்பா வரேன்னு சொல்றவங்ககிட்ட அதெல்லாம் சொல்ல வேணாம்னு சொல்லிட்டார்.” குறைபட்டுக்கொண்டார் சரோஜினி.  “...”  “என்னடி?”   “சொல்லுமா. கேட்டுகிட்டுதான் இருக்கேன்.”  “நீ சொல்லமாட்டியா அவங்ககிட்ட?”  “அவங்க அதெல்லாம் பார்க்கலைங்கும்போது என்னத்த சொல்ல சொல்ற? அவங்க என்ன பொண்ணு பார்க்கவா வராங்க? உங்களையெல்லாம் பார்த்து அடுத்து பேச வராங்க. பொண்ணு எப்ப ஊருக்கு வராங்கறதைப் பொறுத்து கல்யாணம் வெச்சுக்கலாம்னு சொல்லுங்க.”  “உங்கிட்ட வந்து சொன்னேன் பாரு”, சரோஜினி நொடிக்கவும்,  “எல்லாத்துக்கும் நாள் நட்சத்திரம் பார்த்து ப்ரீத்தியை கட்டிக் கொடுத்து என்ன நல்லது நடந்துடுச்சு?  நீதான் சொல்லுவியே, என் விதிப்படித்தான் எல்லாம் நடக்குதுன்னு, அதே மாதிரி இதுவும் நடக்கட்டும் மா. சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் அவங்ககிட்ட பேசமுடியாது”, கீர்த்தி பேசிய பேச்சில் சரோஜினி வாயை மூடிக்கொண்டார்.  “ப்ரீத்திக்கும் உடம்பு சரியில்லை. சாப்பாடே சாப்பிடமாட்டேங்கறா. மஞ்சக் காமாலை மாதிரி இருக்கு. டாக்டர் கிட்ட போலாம் வாடின்னா இப்பதான் வேலையில சேர்ந்திருக்கேன், லீவு போட முடியாதுங்கறா. பத்தாததுக்கு உன் மாமியா வேற வராங்க. வந்து போகட்டும் அடுத்த வாரம் பார்க்கலாம்னு சொல்லிட்டா”, அடுத்த குற்றப்பத்திரிக்கை வாசித்தார்.  “சாயந்திரம் போய் டாக்டரை பார்த்தா என்னவாம்? போய் ப்ளட் டெஸ்ட் எடுக்கச் சொல்லு. மஞ்சக் காமாலைன்னா ஒழுங்கா மாத்திரை எடுக்கணும். அந்தம்மா வரதுக்கும் இவ டாக்டரை பார்க்கறதுக்கும் என்ன சம்பந்தம்? நீ அப்பாவை அப்பாயிண்ட்மென்ட் போட சொல்லி கூட்டிட்டு போ”, கீர்த்தி கடியவும்,  “ம்க்கும்... நான் என்ன சொல்லாமலா இருக்கேன்....

சில நேரங்களில் சில முடிவுகள்…-15.2

0
அவன் தோள் மீது சாய்ந்து கொண்டவள், “இல்லை  நானே பேசறேன். ஆனாலும் கல்யாணத்துக்கு ஒரு வருஷம் ஆகட்டும்னுதான் சொல்லுவாங்க ஜோ.” என்றாள் சங்கடமாக.  “வீட்டுல சொல்லி அவங்க சரின்னு, அப்பறம் அம்மா பார்த்து பேச...

சில நேரங்களில் சில முடிவுகள்…- 15.1

0
அத்தியாயம் - 15  மறுபடி ஒரு சங்கடமான அமைதி. துபாய் பள்ளியின் நேர்காணலுக்குக் கூட இலகுவாகத்தான் இருந்தாள். ஆனால் இது அவள் வாழ்க்கைக்கான நேர்காணல், இது போனால் வேறொன்று என்று கடந்துவிட முடியாத நேர்காணல்.  அறிமுக...

சில நேரங்களில் சில முடிவுகள்…-13.2

0
“இப்ப வாழ்த்திட்டு போன வாயெல்லாம் என்ன பேசும்னு தெரியும்தானே? வீட்டுக்கு மூத்தவ இப்படி வந்தா, அடுத்து உன் தம்பியை யோசிச்சியா?”, கேவினார்.  “அம்மா... கொஞ்சம் அமைதியா இருங்க. பேசலாம். அவனுக்கு அருமையான மருமக நம்ம...

சில நேரங்களில் சில முடிவுகள்… – 14.1

0
அத்தியாயம் - 14  துபாய் வந்து இதோ ஒரு மாதம் ஓடிவிட்டது. ப்ரீத்தி அவள் வீட்டை காலி செய்து, பெற்றோருடன் வந்துவிட்டாள்.  அவளோடு ஓரிரு முறை மட்டுமே கீர்த்தியால் பேச முடிந்தது.   “அவ பாட்டு விட்டத்தை...

சில நேரங்களில் சில முடிவுகள்…- 13.2

0
“போலீஸ் வந்து விஷயம் எங்களுக்கு தெரிய வந்ததே பன்னெண்டாயிருச்சு மா. குழந்தை எங்க வீட்டுல இருக்கா. ப்ரீத்தி, உங்க அப்பா, அம்மா நான்  எல்லாம் இங்க ஹாஸ்பிட்டல்ல இருக்கோம். போஸ்ட் மார்ட்டம் முடிஞ்சுதான்...

சில நேரங்களில் சில முடிவுகள்… – 13.1

0
அத்தியாயம் - 13  அந்த வார விடுமுறையின் போது வெளியே சுற்றிவிட்டு கீர்த்தியின் வீடு வந்திருந்தார்கள். வாங்கி வந்திருந்த பொருட்களை மேசையில் வைத்து, அவனுடையதை தனியாக ஒரு பையில் போட்டுக்கொண்டிருந்தான்.   தேநீர் போட்டு எடுத்து வந்தாள்...

சில நேரங்களில் சில முடிவுகள்…-12.2

0
எடுத்ததுமே “அடுத்தவன்  நமக்கு தீங்கிழைத்தால் மன்னிக்கணும்னு சொல்றது சுலபம். ஆனால் அப்படி செய்ய முடியுமா? அவன் மீது கோவம் வருவது தானே இயற்கை? அவனை எதுவுமே செய்யாமல் மன்னித்துவிட்டேன் என்று சொல்லிவிட்டால் நம்...

சில நேரங்களில் சில முடிவுகள்…- 12.1

0
அத்தியாயம் - 12  சனிக்கிழமை விடுமுறை எனவும் நாள் முழுதும் சோஃபாவிலேயே கழித்தாள். அங்கேதான் அவளிடம் அடி வாங்கி மடிந்து அமர்ந்து மூச்சு விடவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தான் ஜோ. அன்றைய நிகழ்வு, அவளே மறக்க...

சில நேரங்களில் சில முடிவுகள்…-11.2

0
மோவாயை சற்றே உயர்த்தி சவால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தெரிவித்தவள், காற்றில் அளைந்த அவ விரல்களை அவன் கைகளுக்குள் அடக்கிப்பிடித்து லேசாய் இழுக்க, ஒரு ஆழ மூச்சுடன், மெல்ல குனிந்து லேசாய் மிக லேசாய் இதழ்களால்...

சில நேரங்களில் சில முடிவுகள்… – 11.1

0
அத்தியாயம் - 11  காலையில் ஷீத்தல் புன்னகைக்கலாமா வேண்டாமா என்ற ஒரு தயக்கத்தோடே கீர்த்தியைப் பார்த்து காலை முகமன் கூறினாள்.  அவளையே பார்த்து பதில் பேசாது நின்றிருந்த கீர்த்தியிடம், “ஹே...சாரி கீர்த்தி, நீ ஜோ சாரை...

சில நேரங்களில் சில முடிவுகள்…-10.2

0
அடைக்கும் தொண்டையை கனைத்து சரி செய்தவன், “நிறைய நிறைய பார்க்கலாம் கீத்து. ஆனா கொஞ்ச நாளைக்கு நீதான் டிக்கெட் எடுக்க வேண்டியிருக்கும். போன மாசம் சம்பளம் வந்தப்பறம்தான் கொஞ்சம் பணம் அனுப்பினேன். அம்மா...

சில நேரங்களில் சில முடிவுகள்… – 10.1

0
அத்தியாயம் - 10  துபாய் மெரினா என்று சொல்லப்படும் இடம் அங்கு வெகு பிரபலமான சுற்றுலா தளம். பல நாட்டு மக்கள் துபாயின் குளிர் காலமான டிசெம்பர் முதல் ஃபெப்ரவரி முடிய வந்து குவியும்...

சில நேரங்களில் சில முடிவுகள்…- 8.2

0
அவளை ஊடுருவிப் பார்த்தவன், “நீதான் உனக்கு தகுதி இல்லை. உனக்கு நான் வேணாம்னு சொன்ன”, என்று சொல்லவும், அவன் மார்பில் இரண்டு கைகளாலும் அடித்தவள், “சொன்னா?... சொன்னா?... கேட்டுட்டு விட்டுருவியா? இப்ப சொல்றேன்....

சில நேரங்களில் சில முடிவுகள்… – 8.1

0
அத்தியாயம் - 9  சனிக்கிழமை மதியமே ஷீத்தல் அழைப்பின் பேரில் அவள் வீட்டிற்குச் சென்றிருந்தாள் கீர்த்தி. சொதி செய்வதற்கான ஆயத்தப் பணிகளை பேசிக்கொண்டே ஆரம்பித்தனர். கீர்த்தியின் குக்கர், ஷீத்தலின் குக்கர் என்று இரண்டையும் சேர்த்து...

சில நேரங்களில் சில முடிவுகள்…-8.2

0
ஷீத்தலிடம் சவடாலாக பேசிவிட்டாலும், உள்ளுக்குள் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது.  கீர்த்தியை நெருக்குகிறோம் என்ற நினைப்பே கசந்தது. ஆனாலும் புரையோடிப் போன புண்ணை அறுத்துத்தான் சரி செய்ய வேண்டுமெனில் வலியை பொறுத்துத்தான் ஆக வேண்டும்.    நினைவு...

சில நேரங்களில் சில முடிவுகள்…- 8.1

0
அத்தியாயம் – 8  வகுப்பு நேரங்கள் தவிர்த்து,  நாட்கள் கடினமாக சென்று கொண்டிருந்தது கீர்த்திக்கு. அவளே கடினமாக்கிக் கொள்கிறாள் என்று புரிகிறது. விட்டு வெளியே வருவதற்கான வழிதான் புரியவில்லை.  செக்குமாடு கணக்காக மனம் ஒரே விஷயத்தை...

சில நேரங்களில் சில முடிவுகள்… – 7.2

0
ஒரு முறை ஒரே முறை, அவன் காலை மடியில் வைத்து, ஆசை தீர விரல்களை வருடி, சொடக்கெடுத்துவிட்டாள்.  மறுபடி அவன் தரவில்லை. அவள் என்னவன் என்று தான் பார்த்து ரசித்ததை இன்று ஷீத்தலும்...
error: Content is protected !!