Sunday, July 19, 2026

ragavi

ragavi
228 POSTS 0 COMMENTS

நின் வசமானேன் – 17.2

0
தீக்ஷனா எப்போதோ கிளம்பிப் போயிருந்தாள். சஞ்சயிடம் சொல்லிக்கொள்ளாமலே சென்றுவிட்டாள். அன்று ஆஃபீசில் சந்தித்து சண்டையிட்டதுடன் சரி. அமெரிக்கா கிளைக்குக்கூட எப்போதாவதுதான் வந்து செல்கிறாள். இந்த நிலையில்தான் மோகன் சஞ்சயை தடுத்துவிட்டு தான் செல்கிறேன் என்று...

நின் வசமானேன் – 17.1

0
அத்தியாயம் - 17 சஞ்சய் ப்ரபோஸ் செய்து இதோ இரண்டு வாரங்கள் முடிந்திருக்க, இடைப்பட்ட நாட்களெல்லாம் கனவுலகம் போன்றுதான் இருந்தது. சஞ்சய் செய்யும் குறும்புகள், இவளின் துடுக்குத்தனத்தையும் கிளப்பிவிட, வெகு நாட்களுக்குப் பிறகு மிகவும் மகிழ்ச்சியாக...

நின் வசமானேன் – 16.2

0
நேற்று இரவே அஞ்சலியிடம்  பேசியிருந்தாள். சஞ்சய் ப்ரபோஸ் செய்தது, தான் சரியென்றது என்று ஆரம்பித்து, அடுத்த ஞாயிறு ப்ளான் வரை எல்லாம் சொல்ல, “அடிப்பாவி, ஓகே சொன்னதுமில்லாம, அவர் வீட்டுக்குப் போய் மொக்கிட்டு...

நின் வசமானேன் – 16.1

0
அத்தியாயம் - 16  அன்றைய பொழுது மிகமிக இனிமையாகக் கழிந்தது. “அப்படியே அம்மா வெக்கற ரசம் மாதிரியே இருக்கு ஜெயந்தி. செம்ம”, சந்தோஷத் திகைப்பில் இருந்தவன், அவள் கைவிரல்  பிடிக்க, “சஞ்சய்….”, என்று ஒரு சின்ன சிரிப்புடன்...

நின் வசமானேன் – 15.2

0
“லுக்கிங் ப்யூட்டிஃபுல். வா வா”, என்றவன், உள்ளே அழைக்க, கவனமாக வலது கால் வைத்து கேட்டைக் கடந்தாள். ஒரு புறம் அவன் காரை பார்க் செய்திருக்க, மிச்ச இடம் விசாலமாக இருந்தது. தனி...

நின் வசமானேன் – 15.1

0
அத்தியாயம் – 15 ஒரு மணி நேரம் போதும் வாழ்க்கையை பிரட்டிப்போட என்பதை அனுபவத்தில் உணர்ந்திருந்தாள் ஜெயந்தி. அவள் தந்தையை இழந்தபோது முதலில் அனுபவித்தது. அப்போது அன்னை இருக்கவும், தடுமாறினாலும் தேறிக்கொண்டாள். இருவரும் கோவிட்டில்...

நின் வசமானேன் – 14.2

0
ஆஃபீஸ் இந்த இரண்டு நாட்களாக எப்படி போனது என்று பொதுவாக கேட்டுவிட்டு, “இப்பவாவது என் மேல உங்க கோவம் போயிடுச்சா ?”, என்றான் ஒரு புன்னகையோடு. “சாரி சஞ்சய். நீங்க அவங்க சீன் கிரியேட்...

நின் வசமானேன் – 14.1

0
அத்தியாயம் -14 வால்ட் வழமைபோல இயங்கிக்கொண்டிருந்தது. நேற்று முழுவதும் சஞ்சய் அலுவலகம் வரவில்லை. மோகனும் வந்தவன் மதியமே சென்றுவிட்டான்.  பார்ட்னர்ஷிப் அக்ரீமென்ட் படித்த பின் ஸ்ரீதர் பிரிவது என்று முடிவெடுத்தால் கணிசமான பாதிப்பு என்பதை...

நின் வசமானேன் – 13.2

0
ஒரு மணி நேரம் கழித்து வந்த மோகன் நேராக சஞ்சய் அறைக்குச் சென்று, “கங்ராட்ஸ்டா மச்சான் ! உன் ஆளு சொன்ன மாதிரி குறைச்சு போட்டது வொர்க் ஆகிடுச்சு போல. சோ ட்ரீட்...

நின் வசமானேன் – 13.1

0
அத்தியாயம் – 13 அசரடிக்கும் அழகை எடுத்துக் காட்டும் உடலை ஒட்டும் ஒரு கருப்பு ஃப்ராக் முட்டிக்கு சற்று மேலே நின்றது. வாழைத் தண்டு கால்களின் பாதங்கள் கருப்பு நிற கிட் பூட்ஸ்சில் அடங்கியிருந்தன....

நின் வசமானேன் – 12.2

0
“ஓ… ஒரு கைகலப்பே நடந்துச்சா? அப்பறம்?” “அவ பிள்ளையை விட்டுட்டு நீ வேற மாப்பிள்ளை பார்க்க போனதுல, உன் மேலையும் கோவமாத்தான் இருக்கா.”, உர்ரென்று வந்த அவரது குரலில், “ஐயோ… சஞ்சய் அவங்க பிள்ளைன்னு நீங்க...

நின் வசமானேன் – 12.1

0
அத்தியாயம் – 12 வீட்டிற்குள் நுழைந்தவள், “குரு சார்… கண்டிப்பா என் கூடவேதான் வந்திருப்பீங்க. இருக்கீங்களா?”, கைப்பையை சோஃபாவின் மூலையில் போட்டுவிட்டு தானும் அமர்ந்து கொண்டு எதிர்புறம் அவர் வழக்கமாக அமரும் ஒற்றை சோஃபாவை...

நின் வசமானேன் – 11.2

0
“உங்க சர்ப்பரைஸ் புரியுது”, அவள் முழிப்பதை தப்பர்த்தம் செய்து கொண்டவன், “ஆனாலும், இப்ப ஸ்ரீதர் அங்கிளோட ரியாக்ஷன் எப்படி இருக்கும்னு தெரியலை. இன் கேஸ் அவர் பார்ட்னர்ஷிப் விலகறதா சொன்னா, என்ன பே...

நின் வசமானேன் – 11.1

0
அத்தியாயம் 11 வேலை மும்மரத்தில் இருந்தவளை, வாட்சப் குறுஞ்செய்தி வந்த ஒலி கலைத்தது. வழக்கமாக சைலன்ட்டில் போடுவாள், இன்று மறந்துவிட்டாள் போலும். எடுத்துப் பார்க்கையில், “ஹை ஜெயந்தி, ஐ அம் ரஞ்சித்” என்ற அறிமுக செய்தி...

நின் வசமானேன் – 10.2

0
மறு நாள் அலுவலகம்  அதன் வழமையான பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. தீ்க்ஷனா வராததில்  அவரவர் வேலையில் கவனம் வைத்திருந்தனர்.   சஞ்சையுடன் ஒரு மணி  நேரம் அமர்ந்து டெண்டருக்கான மிச்ச சொச்ச விபரங்களை சரிபார்த்துக்கொண்டிருந்தாள். அவளே செய்துவிட்டு...

நின் வசமானேன் – 10.1

0
அத்தியாயம் – 10  ரெட்மி டெண்டர் படிவத்தை மீண்டும் படித்து, அதில் கேட்டிருந்தவற்றுக்கான பதில்கள் எல்லாம் இருக்கிறதா, வேறு எதுவும் தரவுகள் எடுக்க வேண்டுமா என்று சரி பார்த்துக்கொண்டிருந்தாள் ஜெயந்தி. மாலை ஆறு மணி போல அலுவலகம் அனேகமாக காலியாகியிருந்தது.  “ஜெயந்தி… மீட்டிங் ரூம் வரீங்களா? எங்க பக்க டீடெயில்ஸ் ரெடி ஆகிருச்சு”, என்று மோகன் அழைத்தான்.  மடிக் கணியுடன் செல்ல, அங்கே சஞ்சையும் கணினிக்குள் கவனம் பதித்திருந்தான்.   “இன்னும் ஒரு இரண்டு மூணு பாயின்ட் க்ளாரிட்டி வேணும் மோகன்”, என்று தன் கணினியை இணைத்து பெரிய திரையில் தெரியும்படி செய்ய, அடுத்த இரண்டு மணி நேரம் பறந்தது.    “போதும், இன்னிக்கு இங்க நிறுத்துவோம். லேட் ஆகிடுச்சு. நாளைக்கு காலையில அந்த இரண்டு எஸ்டிமேட்ஸ் மறுபடி செக் பண்ணிட்டு  சாயந்திரம் ஃபைனல் பண்ணலாம். நாளைக்கு  இராத்திரி பன்னெண்டு மணி வரைக்கும் டைம் இருக்கே”, என்று நெட்டி முறித்தபடி எழுந்தான் சஞ்சய்.  வேலை திருப்தியாக சென்றதில் மூவருக்குமே உற்சாகம். “யூ.எஸ் ப்ராஜெக்ட்ஸ் மாதிரி இந்த டெண்டர் வேல்யூ பெரிசில்லை. ஆனா கிடைச்சா அது லோக்கலா இன்னும் நமக்கு பல கதவுகளை திறக்கும். கவர்ண்மென்ட் ப்ராஜெக்ட்ஸ் பண்ற சான்ஸ் இருக்கும். பார்க்கலாம். சவுத்ல நம்ம கம்பனியை விரிவாக்கலாம்.”, என்று சஞ்சய் அதன் முக்கியத்துவத்தை விவரிக்க, மூலையில் அமர்ந்திருந்த குருபரனின் கவனத்தை அது ஈர்த்தது.  ஜெயந்தி கிளம்ப யத்தனிக்க, “இருங்க ஜெயந்தி டின்னர் எங்களோடவே சாப்பிடுங்களேன். வீட்டுக்குப்போய் இதுக்குமேல சமைச்சு சாப்பிட இன்னும் லேட்டாகுமே”, சஞ்சய் கேட்க ஜெயந்தி நிதானித்தாள்.  “இங்க பக்கத்துலயே போகலாம். என்னடா அன்னிக்கு சொல்லிட்டு இருந்தியே புதுசா எதோ மெஸ் நல்லாயிருந்துச்சுன்னு?”, மோகனை கேட்க, சட்டென்று சுதாரித்து, “ம்ம்… சேரன் மெஸ், கேரளா ஐட்டம்ஸ் ஸ்பெஷல், ஃபிஷ் அட்டகாசம் ஜெயந்தி. வாங்க, நம்ம இப்படி எக்ஸ்ட்ரா வேலை வாங்கினதுக்கு சஞ்சய் டின்னராவது வாங்கித் தரட்டும்”, என்று உந்தவும், சம்மதித்தாள்.  ராகினியும் முன்னமே கூறியிருந்தாள். ஒரு நாள் லன்ச் செல்வோம் என்று பேசிக்கொண்டிருந்தார்கள்.  சிறிய உணவகம். காலியாக இருந்த ஒரு சிறிய டேபிளில் மூவரும் அமர, மெனு வந்தது.   “எல்லாரும் விதவிதமா ஆர்டர் பண்ணிட்டு ஷேர் பண்ணிக்கலாம். வரைட்டியா டேஸ்ட் பண்ண மாதிரி இருக்கும்”, என்று  சஞ்சய் சொன்னதும் ஜெயந்திக்கு பிடித்திருந்தது. அவளுக்கு அப்படி சாப்பிடத்தான் இஷ்டம். ஆனால் இவர்கள் அப்படி பகிர்ந்துண்ணுவார்களா என்று நினைக்கும் நேரமே அப்படியில்லை என்று உணர்த்தினான் சஞ்சய்.  “மச்சி…இறால் சொல்லவா?”, என்று மோகன் கண்ணடிக்க, “ஏண்டா? உங்க இரண்டு பேருக்கும் வேணா சொல்லு.”  சஞ்சய் இப்படி சொல்லவும், “உங்களுக்குப் பிடிக்காதா சஞ்சய்?” என்று ஜெய்ந்தி கேட்க, மோகனை முறைத்தான் சஞ்சய்.  “இல்லை…அது எனக்கு ப்ரான் மட்டும் அலர்ஜி”  “ஐ…அலர்ஜி இல்லை ஜெயந்தி… சாருக்கு அது செரிக்கற வரை சொரிய ஆரம்பிச்சிடும்”, என்று சிரித்தான்.  “ஒஹ்…அதுவும் ஒவ்வாமைதான். சரியாத்தான் சொல்லியிருக்கார். அப்போ அது ஆர்டர் பண்ண வேணாம். மத்த சீ ஃபூட் ஓகேவா?” இயல்பாக ஜெயந்தி கூற அவளும் எதாவது கலாய்ப்பாள் என்று எதிர்பார்த்திருந்த மோகன், அது நடவாமல் போக சஞ்சயைப் பார்க்க, சஞ்சயிடமிருந்து ஒரு பெருமிதப் பார்வை.  ‘என்னடா நடக்குதிங்க…’ என்று சென்ற யோசனை முகத்தில் தெரியாதவாறு இருவரையும் கவனிக்கத் தொடங்கினான் மோகன். சஞ்சய் தீக்ஷனாவை திருமணம் செய்ய முடியாது என்று ஸ்ரீதரிடம் சொல்லிவிட்டதாக சொன்னபோது அவள் ஒத்துவர மாட்டாள், பணத்தைவிட வாழ்க்கை முக்கியம் என்று நண்பன் எடுத்த முடிவாகத்தான் பார்த்திருந்தான் மோகன். ஜெயந்தி பற்றி டின்னரில் என்ன நடந்தது என்று ஸ்ரீதரிடமிருந்து கேள்விகள் வந்த போதும், ஃபார்திங்க்ஸ் ஸ்ரீதரின் மூலம் வந்ததால், கிளையன்ட் தவறாக எதுவும் நினைத்துக்கொண்டார்களோ என்று கேட்கிறார் என்றுதான் நினைத்தான்.  ஆனால் இப்போது நண்பன் வலிய டின்னர் அழைப்பு விடுத்ததும், ஆர்வமுடன் மெனுவில் இருந்த ஐட்டங்களைப் பற்றி விவாதிப்பதும் இதற்கெல்லாம் வேறு ஒரு பரிமாணம் இருக்கிறதோ என்று நினைக்க வைத்தது.  சஞ்சயைப் பற்றி அணுஅணுவாக தெரிந்ததால், அவனது விருப்பம் மோகனுக்கு உடனே புலப்பட்டது. ஆனால் ஜெயந்தியிடமும் அது எதிரொலிக்கிறதா என்பதை அவனால் அறிய முடியவில்லை.  டின்னர் கலகலப்பாக சென்றது. ஜெயந்தி, “ம்ம், புதினாவும் மசால்ல சேர்த்து அரைச்சிருக்காங்க போல, நானும் ட்ரை பண்ணனும். டேஸ்ட் செம்மையா இருக்கு” என்று சிலாகிக்க,   “சமையல் நல்லா வருமா ஜெயந்தி உங்களுக்கு?” சஞ்சயின் கேள்வியில்,  “ம்ம்..அம்மா போனதும் நானேதான செய்யணும். அம்மா இருக்கும்போதே கூட சமைப்பேன். பேசிக்ஸ் எல்லாம் தெரியும். அப்பறம் நானே யூ-ட்யூப் பார்த்து பண்றதுதான். எனக்கு மட்டும் செய்யணும்னு ஒரு சோம்பேறித்தனம் அதனால அனேகமா சிம்பிளாவே முடிச்சிடுவேன்.”  “அஹ்… அம்மாக்கு என்ன ஆச்சு?”  உதடு குவித்தவள், “கோவிட்ல …இத்தனைக்கும் முதல் வாக்சீன் எடுத்திருந்தோம். இரண்டு பேருக்குமே வந்துச்சு. என்னை விட்டுட்டு, அம்மாவை பிடிச்சிட்டு போயிடுச்சு”, ஒரே மூச்சாக சொல்லி முடித்தவள், “நீங்க சமைப்பீங்களா?” என்று பேச்சை மாற்றினாள்.  “மச்சான் சிக்கன் பிரியாணி பண்ணா, கூட்டம் சேரும் பாருங்க…காலேஜ் படிக்கறப்போ யூ.எஸ்ல ஒரு அப்பார்ட்மென்ட்ல நாங்க அஞ்சு பேர் தங்கியிருந்தோம். அப்போ ஒரு ரெஸ்ட்ராண்ட்ல சஞ்சயும் நானும் பார்ட்-டைம் வெயிட்டர்ஸ்சா வேலை பார்த்துக்கிட்டு இருந்தோம். எப்பவாச்சம் மிச்சம் சிக்கன் இருந்தா செஃப் குடுப்பார். மறு நாள் வீட்ல பிரியாணி களைகட்டும், எதிர் வீட்டு ஸ்பானிஷ் பொண்ணுங்க கூட மோப்பம் பிடிச்சிகிட்டு சஞ்சய் இஸ் குக்கிங்கின்னு வந்துடும்” என்று கதை கூற சஞ்சையும் மோகனும் அவர்களது தனிக்குடித்தனம், முதல் முறை வெளி நாடு சென்று அங்கே வாங்கிய பல்புகள் என்று பல சம்பவங்களை கூறக் கூற சாப்பிட்டு முடியும் வரையும் சிரித்துக்கொண்டிருந்தாள் ஜெயந்தி.  டின்னர் முடிந்து எப்போதும்போல மெட்ரோவில் சென்று விடுவதாக ஜெயந்தி கூற, அவளை அனுப்பிவிட்டு கார்-பார்க் வந்தனர் நண்பர்கள் இருவரும். மோகன் கார் அலுவலகத்தில் இருக்க, சஞ்சையுடன் அவன் காரில் ஏறினான்.   “மச்சி… தீக்ஷனா வேணாம்னது ஜெயந்தியை மனசுல வெச்சுதானா?”, மோகன் நேரடியாகவே விஷயத்திற்கு வர, சஞ்சய் அவனை ஏறிட்டான்.  “அப்படியா தோணுது?”  “டேய்..எங்கிட்டயேவா? உண்மையை சொல்லு. நீ அங்கிள் கிட்ட சொன்ன மாதிரி, ரிலாக்ஸ்டா பாட்டு, வீட்டு சாப்பாடுங்கறதெல்லாம், இப்ப ஜெயந்தியோட நீ இருந்ததுக்கு கரெக்டா செட் ஆகுது. இந்தளவு ஜாலியா நீ வேற எந்த பொண்ணுகூடவும் பேசி நான் பார்த்ததில்லை. லவ்வா?”  மெல்லிய ஒரு புன்சிரிப்புடன், “டேய் ! உடனே சினிமாட்டிக்கா லவ்வான்னெல்லாம் ஆரம்பிக்காதே. ஜெயந்தியோட அந்த அலட்டலில்லாத நிதானம், மெச்சூரிட்டி, அவங்க தன்மானத்தை காம்ப்ரமைஸ் பண்ணிக்காத குணம் எல்லாம் பிடிச்சிருக்கு. வழக்கமா நம்ம பார்க்கற அந்த போலி முகமூடி இல்லாம இயல்பா இருக்கற அந்த ரியாலிட்டி பழக நல்லாயிருக்கு”, என்று பேசிக்கொண்டிருந்த நண்பனைப் பார்த்து  நமுட்டுப் புன்னகையுடன், “போதும் போதும் லிஸ்ட் பெரிசா போவுது”, என்று வடிவேல் பாஷையில் கலாய்த்தவன், “மிச்சம் சிஸ்டர்கிட்ட சொல்லு. முப்பத்தி இரண்டு வயசுல லவ் வந்தா தப்பில்லை மச்சான், அதை லவ்வுன்னு சொல்றதிலேயும் தப்பில்லை இந்த அளவுக்கு நீட்டி முழக்க வேணாம்”, என்று சஞ்சயின் விலாவில் குத்தினான்.  “அப்படீங்கற?” என்ற சஞ்சையின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி.  வீட்டிற்குள் நுழைந்த ஜெயந்தியின் முகத்தில் இன்னும் சிரிப்பின் மிச்சம் இருந்தது. வெகு நாட்களாகியிருந்தது இப்படி அவள் சிரித்து. இரவு உடைக்கு மாறி வந்து அமர்ந்தவளை ரமா சித்தி அழைத்தார்.  “என்ன சித்தி? எப்படி இருக்கீங்க?”  “நல்லாருக்கேண்டி. டின்னர் முடிஞ்சுதா? வீட்டுக்கு வந்திட்டியா?”  “ம்ம்…இப்பதான் வந்தேன் சித்தி. சொல்லுங்க?”  “என்ன விசேஷம் ஆஃபீஸ்ல? டின்னர் கூட்டிட்டு போயிருக்காங்க?”  “அட அதெல்லாம் ஒன்னுமில்லை சித்தி. இன்னிக்கு ஒரு டெண்டர் கோடேஷனுக்கு ரெடி பண்ணவும் நேரமாகிடுச்சு. அதான் அப்படியே இரண்டு பாஸ்ம் சாப்பிட்டே போகலாம்னு பக்கத்துல புதுசா திறந்த ஒரு ஹோட்டல் போகவும் என்னையும் அழைச்சிட்டு போனாங்க”, விவரம் கூறினாள்.  “ம்ம்.. இந்த ஆஃபீஸ்லதான் அடிக்கடி வெளிய போறீங்க போல? அன்னிக்கும் எதோ வெளினாட்டு கிளையன்ட்டுன்னு போயிட்டு வந்தல்ல? முன்னாடி இருந்த கம்பனிதான் பெரிய கம்பனின்னு பேரு. இப்படி ஹோட்டலுக்கெல்லாம் கூப்பிடவேயில்லை.”, ரமாதேவி குறைபட, நிரஞ்சன் பார்த்தி ஞாபகம் வர உதட்டை சுழித்தாள் ஜெயந்தி.  “அதை விடுங்க. எதுக்கு போன் பண்ணீங்கன்னு சொல்லுங்க சித்தி.”  “ஆங்… அதை மறந்துட்டேன் பாரு. மாப்பிள்ளை வீட்டுலர்ந்து போன் பண்ணி அவங்க அம்மா பேசினாங்க. நல்லா கலகலப்பாதான் பேசினாங்க. இரஞ்சித் ஒரு வாரம் ஆஃபீஸ் விஷயமா பெங்களூரு போறாராம். வந்தப்பறம் மீட் பண்ணி பேசலாம்னு சொன்னதா சொன்னாங்க. அவருக்கும் உன் போட்டோ பார்த்ததும் பிடிச்சுதாம்”, அதற்கே பெருமையாகக் கூறினார் ரமா.  “ஓஹ்… சரி. ஒன்னும் அவசரமில்லை சித்தி. பொறுமையா பார்த்துக்கலாம்.”  அவளது அசிரத்தையான பதிலில், ‘இந்தப் பொண்ணு என்ன கொஞ்சம் கூட ஆர்வமே இல்லாம பேசறா?’ என்று நினைத்தாலும், ‘ஒரு வேளை பிள்ளையை பார்த்து பேசி முடிவு பண்ற வரைக்கும் எந்த நினைப்பும் வேண்டாம்னு இருக்காளோ என்னவோ? இந்த காலத்து பொண்ணுங்க எப்படி யோசிக்கறாங்கன்னே தெரிய மாட்டேங்குது’, என்று தனக்குத் தானே ஆறுதலும் கூறிக்கொண்டார். 

நின் வசமானேன் – 9.2

0
“நீ ஓகேன்னா, மேற்கொண்டு போட்டோ பறிமாறிக்கலாம். அவங்களுக்கு ஜாதகம் பார்க்கற நம்பிக்கையெல்லாம் கிடையாதாம்”, என்று தகவல் சொல்ல, வேறு வழியில்லாது வரன் பற்றிய விவரத்தைப் பார்த்தாள். “ஏன் சித்தி..”, என்று முனக, “இந்தாடி… வயசு...

நின் வசமானேன் – 9.1

0
அத்தியாயம் – 9 ஈ.சி.ஆர் சாலையில் வழுக்கிக்கொண்டு ஓடியது சஞ்சயின் ஆடி கார். இரவு மணி பத்தரையை தாண்டியிருந்தது. காரில் மெலிதான பாடல் ஒலித்துக்கொண்டிருக்க, ஜெயந்தி, “நீங்க சீக்கிரம் கிளம்பினதுல ஸ்டீவ் தப்பா எதுவும் நினைச்சுப்பாரா?...

நின் வசமானேன் – 8.2

0
தீக்ஷனாவிடம் பேசச் சென்றவன் பத்து நிமிடத்தில் மறுபடியும் டெக்-டீம் இருந்த மீட்டிங் அறைக்குள் நுழைய, கடுகடுத்த முகத்தோடு வெளியே வந்த தீக்ஷனா, ஜெயந்தியை முறைத்துவிட்டு அலுவலகத்தை விட்டு வெளியேறினாள். பின் மதியம் அவள் மோகன்...

நின் வசமானேன் – 8.1

0
அத்தியாயம் - 8 திங்கள்கிழமை அலுவலகம் வழமையான பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது.  சஞ்சய் டெக் டீமுடன் ஐக்கியமாகியிருக்க, மோகனைக் காணவில்லை. முக்கியமாக தீஷனாவையும் காணவில்லை. நெட்டி முறித்து எழுந்த ராகினி, “ஜெய் வா, ஒரு காபி சாப்பிட்டு...
error: Content is protected !!