Saturday, May 4, 2024

YogeshwariJ

69 POSTS 0 COMMENTS

யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 48

அத்தியாயம் - 48 குதிரைகுட்டியின் வலி நிறைந்த கனைப்பு நின்றதும், வாசிக்கும் புல்லாங் குழலை நிறுத்திவிட்டு நிமிர்ந்து குதிரை இருந்த இடத்தைப் பார்த்தாள் வன்னி. குதிரையை மீண்டும் அந்த மனித யாளிகள் அடிக்க வராமல் இருக்க அந்தப் பாதுகாக்கும் சக்கரத்தை அவள் நீக்கவில்லை. குதிரையை நோக்கித்...

யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 47

அத்தியாயம் - 47 வன்னி கண் இமைக்கும் நேரத்தில் காணாமல் போக, காவலர்கள் பயந்து அவளை தேட ஆரம்பித்தனர். ஒரு கடையின் பின்னே சுவர் மறைவிலிருந்து அவளது பாதுகாவலர்கள் திண்டாடித் தேடுவதை பார்த்து வன்னி மீண்டும்...

யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 46

அத்தியாயம் - 46 425 வருடங்களுக்கு முன்பு… பரி அரசின் அரசவையில் அனைவரும் அடுத்த வரவிருப்பது குட்டி ராணியா அல்லது குட்டி ராஜாவா என்ற சலசலப்பில் இருந்தனர். ஆன்ம பிணைப்பு ஏற்பட்டு 600 வருடங்களுக்குப் பிறகு பரி அரசின் ராணி நண்மலர் கருவுற்று...

யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 45

அத்தியாயம் - 45 சத்திரத்தின் அறைக்கே வந்துவிட்டிருந்த காலை உணவின் நறுமணத்தில், கண்கள் கசக்கியப்படி எழுந்த பாவனா கைகளைத் தலைக்கு மேலே உயர்த்தி நெட்டி முறித்தப்படி, “ஏய் குதிரைவால் அதற்குள் உணவு வந்துவிட்டதா?” என்றாள்.(1) ஆனால்...

யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 44

அத்தியாயம் - 44 பரி அரசின் அரண்மனை அருகில் செல்லச் செல்ல அவந்திகா அவளையும் அறியாமல் லேசாகப் பதற்றமுற்றாள். இப்போது வேறு உருவில் இருந்தபோதும் தன்னை வன்னி என்று யாரும் இனம் கண்டுக் கொள்ள...

யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 43

அத்தியாயம் - 43 அவந்திகா கண்கள் மூடியதும், அங்குக் கருநிற முக்காடு உருவம் அவள் எதிரே உருவானது. அவந்திகாவின் களைத்து உறங்கிக் கொண்டிருந்த முகத்தைப் பார்த்து அந்தக் கருநிற உருவம், “மாறுவதாக இல்லை. மீண்டும் இறப்பதுதான் உன் விருப்பமென்றால், அதனை...

யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 42

அத்தியாயம் - 42 பின் சரி என்பது போலத் தலையசைத்து, விந்தியாவின் குத்தூசியை எடுத்தாள் அவந்திகா. விந்தியாவும் கண் விழித்தாள். கண் விழித்த விந்தியா அங்கிருப்பவர்கள் அனைவரையும் கோபமுடன் மாறி மாறிப் பார்த்து, எழுந்து அமர்ந்து, “என்ன செய்ய நினைத்துக் கொண்டிருக்கிறீகள். என்ன கேட்டாலும் நான் உங்களிடம் நான் எதுவும்...

யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 41

அத்தியாயம் – 41 “என்னவென்று தெரியாமல் இப்படி நிகழ்ந்துவிட்டது அதனால்...” என்றவர் அதற்கு மேலும் பேச முடியாமல் அப்படியே நிறுத்தினார் வேதன். முகிலன், “வேதன். இந்தக் கடிதம் எழுதப்பட்ட கால நிலை மற்றும் எழுதியது விந்தியாதான் என்ற உண்மை...

யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 40

அத்தியாயம் - 40 முகிலன் எரிச்சலுற்று, “மதி… நீ...நீ...” என்று பற்களைக் கடித்தான். உவா அவர்களின் பேச்சைக் கேட்டுச் சுவாரசியமான கண்களுடன் பார்த்துக் கிளுக்கி சிரித்தாள். பின் சிரிப்புடனே, "நீங்க இருவரும் வெவ்வேறு யாளிகளாக இருந்த போதும், நெருங்கிய சிநேகிதர்கள்...

யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 39

அத்தியாயம் - 39 பின் அவர்களைச் சுற்றி போடப்பட்டிருந்த பாதுகாக்கும் சக்கரத்தை விலக்கி அங்கிருந்து இடம்மாற்றும் சக்கரம் மூலமாக மீண்டும் ஊர் எல்லையிலிருந்த குளத்தை அவந்திகாவும் நந்தனும் அடைந்தனர். தங்கள் எதிரில் இருந்த குளத்தில் தாமரை கொடி...

யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 38

அத்தியாயம் - 38 ஆனால் அவந்திகாவையோ, இந்தப் பவளன் என்ற புதியவனையோ அவர்கள் இருவருக்கும் நினைவில் இல்லை. குழப்பமுடன் யாரென்று கேட்டனர். முதல் முறையாக அதித்ரி அவள் திட்டம் பாதிக்கப் பட்டுவிடுமோ என்று பயந்தாள். நந்தன் அவர்களது கேள்விக்குப் பதில்...

யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 37

அத்தியாயம் - 37 முகிலன் மதியிடம் கண்ணசைக்க மதி, “ஒரு நிமிடம். நான் உன்னை அந்த அறைக்கு அழைத்துச் செல்கிறேன்.” என்று விந்தியாவுடன் சென்றாள். மதி விந்தியாவுடன் அந்த அறையை விட்டுச் சென்றபிறகு, ஆரம்பம் முதல் கடைசி வரை முகத்தில் எந்த மாற்றமும்...

யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 36

அத்தியாயம் - 36 அவளிடம் வந்து அவள்மீது அமர்ந்த அந்தப் பட்டாம்பூச்சியை பார்த்த அவந்திகா, அதன் இறகை லேசாக வருடி, “நன்றி நந்தன்.” என்று மனதில் இதம் பொங்க சிரித்தாள். அவந்திகா இயல்புக்கு மாறிவிட்டத்தை பார்த்த நந்தன் மென்னகையிட்டு,...

யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 35

அத்தியாயம் - 35 இந்தக் கனவு சக்கரத்திற்குள் நந்தனால் அவனது ஆன்மீக ஆற்றலை முழுதும் மீளுருவாக்கம் செய்ய முடியவில்லை. அதனால் நந்தன், அந்தக் கருநிற உருவத்தைக் குறைத்து எடை போடவில்லை. நந்தன், எதிரில் இருந்தவனின் பலம் பலவீனம் அறியும்...

யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 34

அத்தியாயம் - 34 நந்தனும் அவளது சிநேகிதர்களும் அந்த வீட்டை விட்டுச் சென்றபிறகு கைப்பாவை சக்கரத்திலிருந்து விடுப்பட்டனர். ஆனால், அவந்திகா மட்டும் இன்னமும் கைப்பாவையாகவே இருந்தாள். நந்தன் தந்த தைரியத்தில் அச்சமயம் அவள் மனம் சற்று இயல்பான போதும், அவந்திகாவின் மனதுள் இன்னமும் ஏதோ நெருடலாகவே இருந்தது. இனம்புரியாத...

யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 33

அத்தியாயம் - 33 உள்ளூர விஷமமாகப் புன்னகைத்தவிதமாக, வெளியில் லேசான சங்கடமுடன் பொம்மி என்ற பெண்ணுடன் நடந்தான் நந்தன். பொம்மி தன் அக்காவின் நிலையையும் தனக்கு மாமாவாக வரவிருப்பவரின் ஆர்வத்தையும் பார்த்து அவர்கள் இருவரும் ஒருவரை...

யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 32

அத்தியாயம் - 32 பின் மதியும் முகிலனும் சாதாரண மனித யாளிகள் போல இயல்பான ஆடைகளுக்கு மாறி, அவர்களின் ஆன்மீக ஆற்றலைத் தளர்த்தி, 25 தோற்ற வயதிலிருந்து, 50 தோற்ற வயதிற்கு இருவரும் மாறினர். நந்தன் வெள்ளை நிற பட்டு வேஷ்டி சட்டைக்கு...

யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 31

அத்தியாயம் - 31 ஒரு அடிபின் நகர்ந்த போதும், அவந்திகாவை பற்றியிருந்த பிடியை மதியும் முகிலனும் விடவில்லை. எதிரில் இருந்த இருவரையும் பார்வையாலே எரித்து விடுபவன் போலப் பார்த்த பவளநந்தன் தன் வலது கையை உயர்த்தினான்....

யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 30

அத்தியாயம் - 30 அவள் விழி மறைவில் குறும்பு செய்யும் குழந்தைப் போல நந்தனின் இதழ் ஒரு புரமாக விரிந்து அவன் கண்ணில் ஒரு ஒளி வெட்டு ஏற்பட்டு மீண்டது. அதன் பிறகு அவந்திகா, “நந்தன், நான்...

யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 29

அத்தியாயம் - 29 ஆனால் எதிரில் இருந்தவன் பளிச்சென்ற புன்னகையுடன், “இளவரசி, என் முழு பெயர் பவளநந்தன்.” என்றான். பவளனை எதிர்பார்த்து இருந்தவளுக்கு நந்தன் எதிரில் வந்து நிற்க அதிர்ந்து, தலை நிமிர்ந்து எதிரில் புன்னகையுடன்...
error: Content is protected !!