யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 37

793

அத்தியாயம் – 37

முகிலன் மதியிடம் கண்ணசைக்க மதி, “ஒரு நிமிடம். நான் உன்னை அந்த அறைக்கு அழைத்துச் செல்கிறேன்.” என்று விந்தியாவுடன் சென்றாள்.

மதி விந்தியாவுடன் அந்த அறையை விட்டுச் சென்றபிறகு, ஆரம்பம் முதல் கடைசி வரை முகத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் நின்ற நந்தனை பார்த்து முகிலன், “பவளன், நீ முன்பு சொன்ன அந்த மனித யாளி பெண் இவள்தானா?” என்று கேட்டான்.

அதற்குப் பதிலேதும் சொல்லமல் ஆமாம் என்பது போலத் தலையசைத்தான் நந்தன்.

அவன் தலையசைப்பதை பார்த்து, “ஓ… ” என்று ஏதோ யோசிப்பது போல நெற்றி சுருக்கி நின்றான் முகிலன்.

“என் இளவரசிக்கு இந்தப் பெண்மீது சந்தேகம் இருந்த போதும், அவள் குணம் பற்றி அந்த வீட்டு கடைசி பெண் விதுனாவிடம் பேசியதில், தன் சுகத்திற்காக 10 பெண்களின் உயிர் பாதிக்கக் காரணமாக இவள் இருக்காமலும் இருக்கலாம் என்று நினைத்தாங்க.” என்று நந்தன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மதி மீண்டும் அந்த அறைக்குள் வந்தாள்.

நந்தன் தொடர்ந்து, “அதனால் முழுதும் உண்மை தெரியாமல் ஒரு பெண்ணைக் குற்றம் சாட்டுவது தவறு என்று இளவரசி எதுவும் சொல்லவில்லை. வெறும் தூண்டில் போல நேற்று என் இளவரசி அந்தப் பெண்ணைப் பார்த்துப் பேசிவிட்டு வந்தாங்க. உண்மையில் அந்தப் பெண் இப்படி வரக் கூடுமென்று நினைக்கவில்லை.” என்றான்.

அவன் சொன்னதன் அர்த்தம் புரிந்த முகிலன், “இந்தப் பெண் சொல்வதை எந்த அளவுக்கு முழுதும் நம்பலாம் என்று தெரியவில்லை. நல்லவேளை அவந்திகாவை போன்றே மற்றொரு பௌதிகாவை போன்ற பெண்ணை நம்முடன் தயார் செய்து வைத்திருந்தோம்.

அந்தப் பெண்ணிடம் பேசிக் கொண்டிருக்கும்போது, பவளன் நீ ஆன்ம இணைப்பில் எங்களுக்கு நினைவூட்டவில்லையென்றால், உண்மையான பௌதிகாவின் அறைக்கு விந்தியாவை அனுப்பியிருப்போம்.” என்றான்.

உள்ளே வந்த மதியும், முகிலனின் வார்த்தையை ஒப்பி, “ஆமாம். வேதன் குறித்து இந்தப் பெண் சொன்னதற்கும் அவர் வீட்டில் நாம் இருந்தப் போது அவர் நடந்ததற்கும் ஏக வேறுபாடு. நாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.” என்றாள்.

முகிலன், “அப்படி வேதன்தான் இந்தப் பெண் விந்தியாவை தூண்டி விட்டார் என்றால், அவர் பெண் பாதிக்க அவரே காரணமாயிருப்பாரா? அதனோடு இப்படி செய்வதால் விந்தியாவிற்குதான் அவள் கணவன் கிடைப்பான். ஆனால் வேதனுக்கு இதில் என்ன லாபம்.?” என்று கேள்வியாகக் கேட்டு நின்றான்.

தன் இளவரசியின் சிநேகிதர்கள் மாற்றி மாற்றிப் பேசிக் கொண்டு நிற்பதை பார்த்த நந்தன் அசட்டையாக, “எது எப்படியோ?! நான் கைப்பாவை சக்கரம் உருவாக்கிய மாதங்க யாளியையும் இளவரசியையும் கண்கானித்துக் கொள்கிறேன்.

முகிலன் நீ, வேதன் வீட்டிற்கு சென்று அங்கு நிகழும் செயல்களைக் கவனித்துதகவல் அனுப்பு. மதி நீ பௌதிகா மற்றும் விந்தியாவை பார்த்துக்கொள். நாளை மறுநாள் விடியற்காலை 4 மணிக்குச் செந்நிற பௌர்ணமி ஆரம்பித்து, 6 மணி நேரம் நீடிக்கும்.

வேறெதுவும் நேரில் பேச வேண்டுமென்றால் நாளை இரவு மீண்டும் சந்திக்கலாம். இல்லையென்றால் நம் எதிரி அடுத்த நடவெடிக்கை எடுப்பதற்காகக் காத்திருப்போம்.” என்றான்.

மதியும் முகிலனும் சரி என்பது போலத் தலையசைத்தனர். அதற்கு மேலும் அவர்களிடம் வழவழக்காமல் அங்கிருந்து சாம்பல் நிற மின் துகள்களாக மாறிக் கரைந்துவிட்டான் நந்தன்.

கட்டளைபோலச் சொல்லிவிட்டு காணமல் போன நந்தனை நினைத்து மதி முகிலன் இருவருமே எரிச்சலுற்றனர். முகிலன் வாய்விட்டு, “தகவல் அனுப்புனு சொல்லிட்டு போய்ட்டான். அவனது ஆன்மீக இணைப்பு கடவுச்சொல் கூடச் சொல்லாமல்?” என்று திட்டினான்.

அப்போது அவன் உச்சந்தலை மீது ஒரு ஈ முகிலன் கண்முன் பறந்துவந்தது. அதே சமயம் ஆன்ம இணைப்பில், “உனக்குத் தகவல் சொல்ல வேண்டுமென்றால் உன் எதிரில் பறக்கும் அந்த ஈ இடம் சொல். அது என்னிடம் தகவல் அனுப்பிவிடும்.” என்றான் நந்தன்.

எதிரில் பறந்த ஈயைப் பார்த்து முகிலன் திகைத்து விழித்தான். அவனுள் ஒலித்த நந்தனின் குரல் மதியிடமும் ஒலித்தது போல. அதனோடு முகிலன் முன் பறந்த அந்த ஈயைப் பார்த்து அவளுக்கு அடக்கமுடியாமல் சிரிப்பு வந்தது.

இருந்தும் அவள் வாய்விட்டுச் சிரிக்காமல் கண்களை உருட்டி எங்கோ பார்த்தாள். ஆனால் அவள் இதடுகள் முகிலனை எள்ளி நகையாடுவது போல அவள் கட்டுபடுத்திய உதடுகளைப் பார்த்ததில் அவனுக்குத் தெரிந்தது. உண்மையிலே முகிலனின் முகத்தில் ஈ ஆடவில்லை. வெறித்துக் கோபமுடன்எதிரில் பறந்த ஈயைப் பார்த்தான்.

இவ்வாறு மதி கேலி போலப் புன்னகைத்துக் கொண்டும் முகிலனும் எரிச்சலுற்றும் நின்றிருக்கும் போதே எங்கிருந்தோ மதியின் எதிரில் கொசு வந்து பறந்தது. அதே சமயம் அவள் ஆன்ம இணைப்பில், “மதி உனக்குத் தகவல் சொல்ல வேண்டுமென்றால், உன் எதிரில் பறக்கும் அந்தக் கொசுவிடம் சொல்.(1)” என்றான் நந்தன்.

இதனைக் கேட்டதும் மதியின் புன்னகை நின்றது. இப்போது சிரிப்பது முகிலனது முறையானது. “மதி…ஹா…ஹா…உனக்கு…ஹா….ஹா…என்னைவிட மோசம். என் ஈ ஆவது என்னைக் கடிக்காது. உன் கொசு உன்னைக் கடிக்கும். பார்த்துக்கொள் மதி. ஹா….ஹா…” என்று சிரித்தான்.

மதியும் முகிலனும் நந்தனால் கிண்டலாக நடத்தப்பட்டபோதும், அவர்கள் நந்தன் சொன்னபடி வேலையில் ஈடுபட்டனர். சிறிய அதிருப்தி நந்தன் மீது இருந்தபோதும், அவன் நோக்கம் தங்களின் நோக்கமும் ஒன்றாக இருக்க அவனது வார்த்தைகளை அலட்சியமாக விட அவர்கள் இருவருமே விரும்பவில்லை.

இவ்வாறாகத் திட்டமிட்டு மூவரும் மூன்று வெவ்வேறு இடங்களிலிருந்து வரும் நாட்களில் என்ன நடக்கிறது என்று கண்கானிக்கலாகினர்.

30 மணி நேரம் எந்த இடத்திலும் பெரிதாக அதிக மாற்றம் இல்லாமல் கடந்தது. செந்நிற பௌர்ணமி தினத்தன்று விடியற் காலை 3 மணி அளவில், விந்தியாவின் குழந்தை திடீரென்று கத்த ஆரம்பித்தது.

தன் அறையில் கண்கள் மூடிப் பத்மாசன நிலையில் அமர்ந்து தொடர்ந்து கவனிக்கும் சக்கரத்தின் மூலம் அடுத்த மூன்று அறைகளின்(2) நிகழ்வுகளைக் கண்காணித்துக் கொண்டிருந்த மதி குழந்தையின் அழுகையில் கண் திறந்தாள்.

மெல்ல எழுந்து விந்தியாவின் அறைக்குச் சென்று கதவைத் தட்டினாள். தூங்கிக் கொண்டிருக்க வேண்டிய (போலியான)பௌதிகா கதவு தட்டும் சத்தம் கேட்டுக் கதவைத் திறந்தாள். கதவு திறக்கப் பட்டதும், “ஏன் குழந்தை அழுகிறது? ஏதேனும் பிரச்சனையா?” என்றாள் மதி.

குழந்தையைப் பற்றி எதுவும் தெரியாத பௌதிகா என்ன சொல்வதென்று புரியாமல் தவித்து மதி அறையினுள் வர வழிவிட்டு விந்தியாவை பார்த்து, “அக்கா, ரிஷிமுனி வந்திருக்காங்க? குழந்தைக்கு என்ன ஆச்சுனு கேட்டாங்க.” என்றாள்.

விந்தியா மதியை பார்த்துச் சிறிய பதட்டமுடன், “ரிஷிமுனி, குழந்தைக்கு ஜீரண பிரச்சனையென்று நினைக்கிறேன். வயிறு வலிக்கும் போல. அதனால் கத்துகிறான். நான் வரும் வேளையில் மருந்து எதுவும் கொண்டு வர மறந்துவிட்டேன்.” என்று கவலையாகச் சொன்னாள்.

விந்தியாவின் சோர்ந்த முகத்தையும் குரலை அடக்காமல் கத்திக் கொண்டிருந்த கைக்குழந்தையையும் பார்த்த மதி, குழந்தையின் அருகில் சென்று, “நான் பார்கிறேன்.” என்று குழந்தையின் கை மணிக்கட்டை தொட முயன்றாள்.

ஆனால் அதற்குள் விந்தியா ஒரு அடிபின் நகர்ந்து, குழந்தையை ஒரு கையிலிருந்து மற்றொரு கைக்கு மாற்றி, “அ…அதற்கு அவசியமில்லை ரிஷிமுனி. அ…அந்த மருந்து என் அறையில் இருக்கும் நான் போய் எடுத்து வந்துவிடட்டுமா? அதை உண்டால்தான் இவன் அமைதியாகுவான்.” என்று கேள்வியும் பதட்டமுமாகச் சொன்னாள்.

அவளை ஒரு நொடி கேள்வியாகப் பார்த்த மதி கண்களை உருட்டி, “உன் அறையில் எங்கிருக்கிறது என்று சொல். நான் சென்று எடுத்து வருகிறேன். நான் வரும் வரை இந்த அறையை விட்டு வெளியில் போக வேண்டாம். நான் உங்க அறையைச் சுற்றி பாதுகாக்கும் சக்கரமிட்டுவிட்டு போகிறேன்.” என்றாள்.

பின் விந்தியா பெருமூச்சுவிட்டு, மேம்போக்காக மதியிடம் மருந்திருக்கும் இடத்தைச் சொல்ல, மதியும் மீண்டும் மீண்டும் எச்சரித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினாள்.

அவள் சென்ற 10வது நிமிடத்தில் குழந்தை அழும் சத்தம் நின்றது. பௌதிகா விந்தியாவிடம், “அக்கா. உண்மையிலே இவர்கள்தான் அந்த 9 பெண்களும் நினைவிழக்க காரணமா? என்னையும் அதற்குதான் இங்கு அழைத்து வந்திருக்கிறார்களா?” என்று கேட்டாள்.

இதுபோல அந்தப் பௌதிகா இந்த 30 மணி நேரத்தில் 30 முறையேனும் விந்தியாவிடம் கேட்டுவிட்டிருப்பாள். மீண்டும் மீண்டும் பதில் சொல்லிக் கொஞ்சம் பொறுமையிழந்திருந்த விந்தியா, “நான் எத்தனை முறை சொல்வது. எனக்கு உண்மை தெரிந்ததால்தான் நான் உன்னைக் காப்பாற்ற வந்தேன்.

பார்த்தாயில்லை. இப்போதும் நாம் போய் மருந்தெடுத்து வருகிறோம் என்றதற்கு நம்மை வெளியில் விடாமல் அந்த ரிஷிமுனியின் முகம் போன விதம் நான் சொல்வது உண்மையென்று சொல்லவில்லை?” என்று பௌதிகாவிடம் கேட்டாள்.

பௌதிகாவும் ஆமாம் என்பது போலத் தலையசைத்தாள். இப்படி பாதி குழம்பியும் தெளிந்தும் நின்றிருந்த பௌதிகாவின் கைப்பற்றி, “வா. அந்த ரிஷிமுனி வருவதற்குள் இங்கிருந்து போய்விடலாம்.?” என்று விந்தியா அவளை இழுத்துக் கொண்டு அந்த அறையிலிருந்து வேக வேகமாகச் சென்றாள்.

இழுத்து வரப்பட்ட பௌதிகா பாதி தூரம் வந்த பிறகே, “அக்கா. எங்கே என்னை அழைத்துக் கொண்டு போறீங்க. நாம் எப்படி சக்தி வாய்ந்த ரிஷிமுனிகளிடம் தப்ப முடியும்?” என்றாள்.

விந்தியா ஒரு கையில் தோள்மீது கிடத்தப்பட்ட குழந்தையை லாவகமாகப் பிடித்துக் கொண்டும் மற்றொரு கையில் பௌதிகாவை பற்றிக் கொண்டும் வேகமாக நடக்க ஆரம்பித்திருந்தாள். பௌதிகாவின் கேள்விக்குப் பதில் சொல்லுமுன்னே அவள் எதிரில் ஒருவன் வந்தான்.

ஆறடிக்குச் சற்று குறைந்து, சற்று பூசிணாற்(fat) போல, சாம்பல் நிற ஆடையில் வந்த மாதங்கயாளியை காட்டி, பௌதிகாவிடம் திரும்பி, “இவர் நம்மைக் காப்பாற்றிவிடுவார். இவர் மாதங்கயாளி ரிஷிமுனி.” என்று அவளது கையை வந்திருந்த மாதாங்கயாளியிடம் கொடுத்தாள் விந்தியா.

புதிதாக மற்றொரு ஆளைப் பார்த்ததும் பௌதிகா பயந்து போனாள். பயமுடனே, “அக்கா. எனக்குப் பயமாக இருக்கு. எதுவென்றாலும் விடிந்து வெளிச்சம் வந்தபிறகு பேசலாம். வாங்க நாம் இப்போது அந்தச் சத்திர அறைக்கு இல்லையென்றாலும் என் வீட்டுக்காவது போகலாம்.” என்றாள்.

விந்தியா, “பயப்படாதே. நான் உன்னுடனே இருப்பேன். இந்தப் பௌர்ணமி முடியும் வரை நாம் ஒழிந்துக் கொள்ளலாம் பிறகு வெளியில் வந்தால் யாராலும் உன்னை எதுவும் செய்ய முடியாது.” என்று நம்பிக்கை கொடுத்தாள்.

பௌதிகா தயங்கி தயங்கி, “அ…அது. சரி. இ…இப்போது எங்கே செல்வது?” என்று கேட்டாள்.

விந்தியா குரலில் பதட்டமுடன், “தற்காலிகமாக ஊர் எல்லைக்குப் போகலாம். அங்கு ஒருவர் வீட்டில் ஏற்கனவே சொல்லித் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். அங்கு யாராலும் நம்மைக் கண்டுபிடிக்க முடியாது.” என்றாள்.

கூடவே, நொடியும் தாமதிக்காமல் பௌதிகாவின் இரு கைக்களையும் அந்த மாதங்க யாளியும் விந்தியாவும் பற்றி இழுத்துச் சென்றனர். மெல்ல ஊரைக் கடந்து லேசாக மரங்கள் அடர்ந்த காட்டு பாதையில் விந்தியா அவளை இழுத்து செல்வதை பார்த்துப் பௌதிகா திகிலுற்று, “அக்கா. நான் உங்களோடு வரவில்லை. என்னை விடுங்க.” என்று அவர்களிடம் முரண்டு பிடிக்க ஆரம்பித்தாள்.

பொறுமை இழந்த மாதங்கயாளியாளன், “விந்தியா, இன்னும் என்ன பேசிக் கொண்டு, நான் என் கைப்பாவை சக்கரத்தைப் பயன்படுத்துவதுதான் சரி.” என்றான்.

விந்தியாவும் சரி என்பது போலத் தலையசைக்க, அடுத்த நொடி, மாதங்கயாளி பௌதிகாவை கைப்பாவையாக்கிவிட்டான். அதன் பிறகு அமைதியாகப் பௌதிகா அவர்களுடன் நடந்தாள். அடுத்த ஒரே நாழிகையில் அந்தக் காட்டிலிருந்த தாமரை குளத்தை மூவரும் அடைந்தனர்.

அந்தக் குளத்தைச் சுற்றி ஏற்கனவே யாரும் வர முடியாதப்படி மந்திரபூட்டு சக்கரம் யாரோ வரைந்துவிட்டிருந்தனர். குளம் முழுதும் சாம்பல் நிற ஒளியினால் ஆன ஒளி வட்டமாகக் கவனிக்கும் சக்கரத்தில் பார்க்கும்போது தெரிந்தது. சாதாரணமாகப் பார்க்கும்போது யாருமற்ற தாமரை குளமாகத் தெரிந்தது.

இந்த மந்திரபூட்டு சக்கரத்தை உருவாக்கியதே அவர்கள் என்பது போல அந்த மாதங்கயாளி கண்கள் மூடிச் சாம்பல் நிற ஒளியில் ஒரு ஒளி கோடுபோல் உருவாக்கி இவர்கள் மூவரும் அந்தக் குளத்தின் அருகில் போக ஒரு ஆள் நுழையத் தேவையான அளவுத் துளையை அந்தப் பூட்டு சக்கரத்தில் உருவாக்கினான்.

அந்தத் துளை வழியாக முதலில் விந்தியா செல்ல, அடுத்து பௌதிகா நுழைய, கடைசியாக அந்த மாதங்கயாளி உள்ளே நுழைந்தான். அவன் நுழைந்ததும் மாயம் போல அந்தத் துளை மெதுவாக மூடி மீண்டும் சாம்பல் நிற ஒளி கூடாக அந்தக் குளத்தைச் சுற்றி மாறியது.

அவர்கள் உள்ளே சென்றதும், அதற்காகவே காத்திருந்தது போல அந்த மந்திர பூட்டு சக்கரத்திற்கு வெளியே மூன்று இடமாற்றும் சக்கரம் மினுமினுத்து அதிலிருந்து நால்வர் தோன்றினர். ஒன்றில் கையில் வாளுடன் மதி தோன்றினாள்.

மற்றொன்றில் வில் அம்புடன் முகிலன் தோன்றினான். மற்றொன்றில் கையில் எதுவும் இல்லாமல் நந்தனும் அவந்திகாவும் ஒருவர் கையை மற்றொருவர் பற்றியப்படி தோன்றினர்.

முகிலன் கண்கள் மூடி எதிரில் கவனிக்கும் சக்கரத்தில் தெரிந்த சாம்பல் நிற மந்திரபூட்டு சக்கரத்தைப் பார்த்து ஏளனமாகச் சிரித்து, “நேரம் ஆக ஆக அவர்களை யாரும் கண்டுபிடித்துவிடுவார்கள் என்ற கவலையும் இல்லாமல் அவசர அவசரமாக இந்தப் பெண் விந்தியாவின் செயல்.!!என்னவென்று சொல்ல ஹப்பா.” என்றான்.

மதி, “இப்படி செய்து கொணரும் அவள் கணவனின் உயிர் மீண்டதை என்னவென்று இந்த ஊர் மக்களுக்கு விளக்கம் தருவாள் இந்தப் பெண்? அதற்கும் ஏதேனும் கதை கட்டுவாளோ!” என்றாள் கண்களை உருட்டியபடி.

அவந்திகா முகம் சோர்ந்து, “மற்ற யாளிகளை விட மனிதயாளிகள் குறைந்த காலம் வாழ்ந்தாலும், அவர்களின் இச்சைகளும், அவர்கள் செய்யும் குற்றங்களும்தான் எவ்வளவு கொடுமையாக இருக்கிறது?” என்றாள்.

நந்தன் இடமாற்றும் சக்கரத்திலிருந்து வந்ததிலிருந்து அவந்திகாவின் கைப்பற்றிக் கொண்டு அவந்திகாவின் முகத்தையே பார்த்திருந்தான். ஆனால் எதுவும் பேசினான் இல்லை.

அதிக நேரம் அவர்களுக்குள் பேசிக் கொண்டிராமல் அடுத்த நடக்க இருப்பதன் தீவிரம் உணர்ந்து, முகிலனும் மதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கண்ணசைத்து, இருவரும் அவர்களுக்குள் பரஸ்பர ஒத்துழைப்புடன் இயங்கினர்.

முகிலன் பறக்கும் சக்கரம் கொண்டு அந்தக் குளத்தின் இடது புரம் சென்று அதன் மையப்புள்ளியில் தன் அம்பை ஏய்தான். அதே நேரத்தில் மதியும் அவனுக்கு எதிர்புரம் சென்று குளத்தைச் சுற்றி உள்ளிருப்பதை மறைத்துக் கொண்டு நின்ற சாம்பல் நிற மந்திரபூட்டு சக்கரத்தின் மையப்புள்ளியில் அவள் வாளை வீசி மீட்டாள்.

முகிலனின் அம்பு மந்திரபூட்டு சக்கரத்தைத் தொட்டவுடன் வெள்ளை நிற ஒளி படலமாக மாறி அந்த மந்திரபூட்டு சக்கரத்தின் ஒருபாதியை வெள்ளை நிற ஒளியால் போர்வை போலப் போர்த்தியது. அதே போல மதியின் வாள் மந்திரபூட்டு சக்கரத்தைத் தொட்டதும் மஞ்சள் நிற ஒளி படலத்தை அதன் மறுபாதியில் உருவாக்கியது.

இரு வெவ்வேறு நிற ஒளி படலமும் மந்திரபூட்டு சக்கரம் முழுதும் மூடியது. அதன் அடியில் இருந்த சாம்பல் நிற ஒளி சக்கரம் பாதிக்கப்பட்டது போல், சிறிய சிறிய பிளவுகள் அந்த மந்திரபூட்டு சக்கரத்தில் உண்டாகியது. சில நொடிகளில், சிறிய பிளவுகள் விரிந்து பெரியதாகி மதி முகிலனின் இணைந்த சக்தியால் உடைந்து துகள் துகள் ஆனது.

இவ்வாறு மதியும் முகிலனும் இணைந்து செயல் பட்டுக் கொண்டிருக்க நந்தனின் கையசையில் அவந்திகாவின் காலடியில் சாம்பல் நிற பறக்கும் சக்கரம் உருவாகி அவளையும் பறாக்க செய்தது. நந்தனும் எளிதாக நகர வசதியாக இருக்க பறக்கும் சக்கரத்தை உருவாக்கிக் குளத்தின் மேல் பறந்தான்.

நந்தனின் கையசைவில் எங்கிருந்தோ பல மின்மினிப் பூச்சுகள் அவர்களைச் சுற்றியும் குளத்தைச் சுற்றியும் சூழ்ந்து குளத்தின் அருகில் இருப்பவர்களின் நிலையை நான்கு பறக்கும் சக்கரத்தில் இருந்தவர்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.

குளத்தினை நோட்டமிட்ட மதி முதலில் பார்த்தது மாதங்க அரசைச் சேர்ந்த அரசவை மந்திரியான இன்பனைதான். அவன் கைகள் பௌதிகாவினை நோக்கி வெறும் கண்ணுக்குத் தெரியாத ஏதோ நூல் போன்ற ஒன்றை செலுத்த அவள் கைப்பாவையாக, எந்த எதிர்ப்பும் இல்லாமல் குளத்தினுள் இறங்க ஆரம்பித்திருந்தாள்.

அதல்லாமல் குளத்தின் நடுவில் இருந்த பெரிய தாமரை இலைமீது சாம்பல் நிற ஒளிகோடுகளால் உயிர் மீட்கும் சக்கரம் வரையபட்டிருந்தது. அந்தத் தாமரை இலையின் மையபுள்ளியில் விந்தியா அவள் குழந்தையைக் கிடத்திவிட்டு குளத்திலிருந்து நீந்திக் கரை நோக்கி வந்துக் கொண்டிருந்தாள்.

திடீரென்று அவர்களது மந்திரபூட்டு சக்கரத்தை உடைத்துக்கொண்டு வந்த நால்வரை இன்பன் எரிச்சலுற்று பார்த்தான். விந்தியா பயமுடன் பார்த்தாள். இவர்கள் இருவர்தானா என்று அவந்திகா குழம்பி சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருக்கும்போது, “இளவரசி குளத்தினுள்.” என்றான் நந்தன்.

அவன் சொன்னதை கேட்டதும் கவனிக்கும் சக்கரத்தை உருவாக்கிக் குளத்தினுள் பார்த்தவளால் எதுவும் உணரமுடியவில்லை. குளத்தில் இருக்கும் யாளியின் சக்தி அவளது விடவும் அதிகமாக இருக்கும் போல. அதிருப்தியாகக் குளத்தினுள் சென்று நேரடியாகப் பார்க்க எத்தனித்தாள் அவந்திகா.

அவள் எண்ணம் உணர்ந்த நந்தன் அவள் அருகில் அவனது பறக்கும் சக்கரத்தை நொடியில் செலுத்தி அவள் கைப்பற்றி அவனது நெற்றியை அவள் நெற்றியில் ஒற்றினான். அவளது கவனிக்கும் சக்கரத்தில் காண முடியாத அந்த உருவம் நந்தனுடன் இணைந்த கவனிக்கும் சக்கரத்தில் கண்டாள்.

கண்டவள், “அதித்ரி.! அவளுக்கு எப்படி உயிர் மீட்கும் சக்கரம் தெரிந்தது?” என்று முனுமுனுத்தாள் அவந்திகா.

இப்படி அவந்திகா வியந்துக் கொண்டிருக்கும் போதே ஒரு மாதங்க யாளி பெண் குளத்தின் அடியிலிருந்து நீந்தி மேலே வந்தாள். மதி, அவந்தியை போலல்லாமல் அதித்ரி சாம்பல் நிற ஆடையுடன் சற்று பூசினாற்(little fat) போன்ற உடலுடன் குறைந்தது ஐந்தரை அடி உயரமுடன் நின்றிருந்தாள்.

வந்தவள், வந்திருந்தவர்களை ஏளனமாகப் பார்த்துப் புன்னகைத்து, “எவ்வளவு குழப்பியும் சரியான நேரத்திற்கு இங்கு வந்து தொலைந்தனர். ” என்று முனுமுனுத்தாள் அதித்ரி.

பொறுமை இழந்திருந்த இன்பன், “அதித்ரி. அப்போதே சொன்னேன். கடைசி நேரத்தில் இவர்கள் பிரச்சனை பண்ண வாய்ப்பிருக்கு. முதலில் அவர்களைக் கவனித்துவிட்டு உயிர் மீட்கும் சக்கரம் உருவக்கலாமென்று.

நீதான் கேட்கவில்லை. பார். இப்படி அழையா விருந்தாளிகளைப் போல நம் முன் வந்து முக்கியமான நேரத்தில் பிரச்சனை கொடுக்கிறார்கள்.” என்றான் குறையுடன்.

இன்பனின் கோபமான குரலில், “உன் கைப்பாவை சக்கரத்திலிருந்து மீள முடியாத இவங்களை நம்மால் எளிதில் சமாளிக்க முடியும். கவலை பாடாதே இன்பன். ” என்றாள் அதித்ரி.

தொடர்ந்து, “இருவர் 5 சக்கர சக்கரத்தின் இடைநிலை, ஒருவன் நாங்காம் சக்கர ஆரம்ப நிலை, கடைசியாக அறிவாளியாக இருந்த போதும் அதிகமாகச் சக்தியில்லாத ஒரு மனிதயாளி பெண். இவர்களைச் சமாளிக்க ஐந்து சக்கர கடைசி நிலையில் இருக்கும் நம் இருவரால் முடியாதா?” என்று நம்பிக்கையாகச் சொன்னாள் அதித்ரி.

ஆம் நந்தன் தன் உண்மையான ஆன்மீக சக்தி நிலையை மறைத்து வெறும் நான்கு சக்கர முதல் நிலையில் இருப்பது போலத் தெரியும்படி செய்திருந்தான். அதனால் அவனது உண்மையான நிலை யாருக்குமே தெரியாது.

ஏன் அவந்திகாவிற்கு கூடத் தெரியாது. மதிக்கும் முகிலனுக்கும் அவன் தங்களைவிட சக்தி வாய்ந்தவர்கள் என்று தெரிந்த போதும் அவர்களால் உண்மை அவனது உண்மை நிலை அறிய முடியவில்லை. அதனோடு அவன் எதிரியும் அல்ல என்பதால் அதனை அறியும் ஆர்வமுடனும் அவர்கள் இருக்கவில்லை.

இவ்வாறாக அதித்ரி பேசுவதை பார்த்திருந்தவர்கள், போலியான பௌதிகாவாக இருந்த போதும் கைப்பவையாகச் சென்று உயிர் உறிஞ்சும் சக்கரம் இருந்த தாமரை மலரைத் தொடும் தூரத்திற்கு சென்ற பிறகே கவனித்தனர்.

முகிலன், “மதி, அந்தப் பெண் உயிர் உறிஞ்சும் சக்கரம் வரைய பட்டிருந்த தாமரை மலரிடம் சென்றுவிட்டாள்.” என்றான்.

மதி நொடியும் தாமதிக்காமல் பௌதிகாவின் நிலைக்கண்டு மின்னலென வேகமாகப் பறந்து சென்று நீரில் தாமரை மலரைத் தொட இருந்த பௌதிகாவின் இடையில் தன் கையை வளைத்துப் பற்றி அவளைப் பற்றிய விதமாகப் பறந்து குளத்திலிருந்து தள்ளி வந்து தரையில் பௌதிகாவை நிறுத்தினாள்.

அதே சமயம், அவந்திகா தன் கொடியைக் கையிலிருந்து விரட்டி, “கொடி, குழந்தையைத் தூக்கிக் கொண்டு வா.” என்றாள். கொடியும் அவளது கையிலிருந்து சாட்டை போலப் பறந்துச் சென்று தாமரை இலை மீதிருந்த குழந்தையின் உடல் முழுதும் சுற்றி இழுத்து கொணர்ந்து அவந்திகாவின் கையில் கொடுத்தது.

திடுக்கிட்ட குழந்தை பயந்து கத்த ஆரம்பித்தது. குழந்தையின் கத்தலில் உணர்வு வந்தவளாக, “என் குழந்தை. என் குழந்தையை என்னிடம் கொடுங்க.” என்று அவந்திகாவை பார்த்துக் கேட்டாள்.

அவந்திகா விந்தியாவின் குரலில் அவளைத் திரும்பிப் பார்த்தாள். ஆனால் எதுவும் பேசவில்லை. எதுவும் பேசவில்லை என்ற போதும் அவளது பார்வையில் விந்தியா தொடர்ந்து பேச முடியாமல் விக்கித்து நின்றாள்.

குளத்திலிருந்து மீட்டு வந்தபிறகும் பௌதிகா கட்டுக்குள் வராமல் மீண்டும் குளத்தை நோக்கிச் செல்ல மதியின் கையிலிருந்து முரண்டு பிடிப்பதை பார்த்து, “பவளன்!” என்று விழித்தாள். பவளன் மதி சொல்லாமலே என்னவென்பதை உணர்ந்து தன் விரல் நுனி அசைத்து ஒரு சாம்பல் நிற பட்டாம்பூச்சியை பௌதிகாவின் மீது வீச அவள் நினைவுக்கு வந்தாள்.

கைப்பாவை சக்கரத்திலிருந்து எளிதில் பௌதிகாவை மீட்டதை இன்பன் அதித்ரி இருவருமே எதிர்பார்க்கவில்லை. திடுக்கிட்டு நந்தனை எச்சரிக்கையுடன் பார்த்து, “யார் நீ?” என்றனர். மதியையும், முகிலனையும் அதித்ரி இன்பனுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது.

ஆனால் அவந்திகாவையோ, இந்தப் பவளன் என்ற புதியவனையோ அவர்கள் இருவருக்கும் நினைவில் இல்லை. குழப்பமுடன் யாரென்று கேட்டனர். முதல் முறையாக அதித்ரி அவள் திட்டம் பாதிக்கப் பட்டுவிடுமோ என்ற அச்சம் லேசாகப் பரவியது.

Author Note:

(1) Hero sir. இது எந்த விதத்தில சரினு நீங்கலே சொல்லுங்க. உங்க இளவரசிக்கு மட்டும், Glittering அழகான Butterfly-அ help பண்ண அனுப்புவீங்க… ஆனா மத்தவங்களுக்கு அருவருப்பான ஈயையும் கொசுவையும் help பண்ண அனுப்புவீங்களா? at least முன்ன use பண்ண சிட்டுகுருவியையாவது அனுப்பியிருக்கலாமல?!.

(2) 3 அறைகளில் யார் யார் இருக்கிறார்கள் என்று குழப்பமாக இருந்தால், 1- மாப்பிள்ளையும் அவன் பெற்றோர்களும், 2- உண்மையான பௌதிகா. 3- இரண்டாவது போலியான பௌதிகாவும் விந்தியாவும் அவளது குழந்தையும்.

Author Trapped by Character 1. (Chat Room Story)

=====================================

‘இந்த அத்தியாயத்தைத் திருப்தியுடன் எழுதிவிட்டு Author நிம்மதியாகத் தூங்கவிட்டார். ஆனால் இன்று நிம்மதியான தூக்கம் Authorக்கு கிடைக்க வாய்பில்லை. தூங்கிக் கொண்டிருக்கும்போது யாரோ எழுத்தாளரைக் கூப்பிட்டாங்க. அப்போது Authorக்கும் நம்ம Hero sir – க்கும் நடந்த பேச்சுவார்த்தை.

Author: “யாரு?”

பவளநந்தன்: Author, நான் யாருனு தெரில.

Author: (மண்டைக்கு மேல் பல ??????) நான் கனவு காணலயே. என் கதைல இருக்க பவளநந்தன் எப்படி என் கண்முன் வந்தான்.

பவளநந்தன்: (சின்ன சிரிப்பை உதிர்த்து) “என்மீது Author உங்களுக்கு என்ன கோபம்.?”

Author:‘@_@’. எனக்கென்ன கோபம்.? எதுவுமில்லையே(ஹய்யா நா எழுதுற Story Hero-வப் பாத்துட்டேனே.)

பவளநந்தன்: அப்போது ஏன் என்னைத் திருட்டு பூனை சொல்றீங்க. நீ சொன்னது மட்டுமல்லாம நல்ல பிள்ளையாக இருந்த என் இரசிக வாசகர்களையும் திருட்டு பூனைனு சொல்ல வச்சிடீங்க.

Author: அப்போ நீங்க எந்தத் திருட்டு வேலையும் செய்யல.

பவளநந்தன்: (பாவப்பட்ட பிள்ளையின் முகத்துடன் ஆமாம் என்பது போலத் தலையசைப்பு.)

Author: நானும் என் readers-ம் தான் உங்கள தப்பா குற்றம் சாட்றும். அப்படிதானே.

பவளநந்தன்: (ஆமாம் என்பது போல மீண்டும் தலையசைப்பு. Wronged child face).

Author: கேட்டுக்கோங்க Readers. நாமதான் தப்பா நம்ம hero sir -அ குறை சொல்றோமாம். இனிமே அப்படி யாரும் பண்ண கூடாது. இப்போது சந்தோஷமா, Hero sir. வேறெதாவது குறை இருக்க? (இரு இரு. இனி வர Episodes – ல எல்லாத்திலயும் உங்க திருட்டு பூனைனு சொல்றேன்).

பவளநந்தன்: ம்ம். இருக்கு. என் இளவரசி பட்டாம்பூச்சி போல Beautiful. அதனால் நாப்பட்டாம்பூச்சியை கொடுத்தேன். ஆனா அந்த மதியும் முகிலனும் எனக்குக் கொசு, ஈயைப் போலத் தான். அதனால அவங்களுக்கு கொசுவையும் ஈவையும் கொடுத்தேன் அதை ஏன் குறை சொன்னீங்க?

Author: -_- (Speechless). மன்னித்துவிடுங்க. இனி சொல்லவில்லை. வேற.

பவளநந்தன்: நானும் என் இளவரசியும் இருக்கிற போல நிறைய காட்சிகள் வேண்டும். @_@. (la la la lala என்று மனதில் பாட்டுச் சத்தம்)

Author: -_- (Again Speechless). ஏற்கனவே உங்க ரெண்டு பேரும் இருக்கிற போலக் காட்சிகள் அதிகம் add பண்ணி, கதையே Next Arc- க்கு Move ஆகல. இதுல. இன்னும் அதிக காட்சிகள் வைக்கனுமா? பேசாம கதை பெயரை யாளிலிருந்து, ‘பவளநந்தனும் அவனது இளவரசியுமுனு மாத்திட்றேனே!’ எப்படி வசதி Hero sir.

பவளநந்தன்: …(Processing…) நல்லாதான் இருக்கும். இருந்தாலும் என் இளவரசியிடம் கேட்டுச் சொல்கிறேன். Because my Princess wants to save the world. If world only has we two, it wont be possible right?

Author: (அதிர்ந்து மயக்கம் ஏற்பட்டுவிட்டது).