E4 Nee Enbathu Yaathenil

Advertisement

Manimegalai

Well-Known Member
தென்காசிசுவாமிநாதன் ஐயா, 2009 september மாதம் இறந்து விட்டார்,சகோதரி.நம் கூகுள் கடவுளிடம் கேளுங்கள்,அவருடைய விக்கிப்பீடியாவே உள்ளது சகோதரி.அதை பார்த்து நான் காப்பி அடிகிறேன் சகோதரி.
ஆமாம் அண்ணா...பார்த்தேன்...நன்றி.
எங்க மாவட்டத்தை சேர்ந்தவர்...போட்டு இருக்கு விக்கிப்பீடியா...நானும் பெரம்பலூர் மாவட்டம்...நீங்க எழுதின பிறகு அவர் ஞாபகம் வந்தது...அவரை ஞாபக படுத்தியதற்கு நன்றி.
 

Adhirith

Well-Known Member
விளையாட்டாய்
கடந்துவந்த பயணம்
வளரும் பாதை
கரடுமுரடாய்
கற்கள்....

கடந்துவந்தால்... பக்கம் ஓடும்
பதம் பார்க்கும்
சுடுநீர்கால்வாய்....

விளையாட்டாய் தாண்டி வந்தால்
கொளுத்தும் வெயில்.....
மணல் பாதை.....

போகட்டும்... என்று
தப்பிதாவி கடந்தும்
முன்னாள்.... ஒரு மேடு பள்ளம்

வீழ்வேனோ... என்று
பலம் திரட்டி
பாதையை பிடித்தால்......

கால் உபாதை
இளைப்பாறலாமென்றால்....
இடைவிடாத மழை

நனைந்தே வந்தும்
கால் முழுவதும் சகதி
பக்கம் ஓர் ஓடை
சுகமாய் குளிர்ந்து
உறவாடி எழுந்த பின்

ஒட்டி கொண்டன மண்ணும் தூசியும்
காய்ந்த பின்பும் அதன் வாசனை
நேர்கோட்டில் பாதை

பாதை முழுவதும்
பசுமையும் ஆங்காங்கே........
எங்கிருந்தோ ஓர் பாடல்
மனதிற்கும் உடலுக்கும்
இதமாய்
ஏற்று கொள்ளும்
கொல்லும் விதமாய்

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா

கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

வேண்டியதை தந்திட வெங்கடேஸன் நின்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா


கவிதையல்ல இது
வெறும் சொல்வடிவம் தான்





வளைந்து வந்த பாதையில்,
கற்களும்,முட்களும்,மேடு பள்ளங்களையும்
கொளுத்தும் வெயில்,அடை மழையில்
கடந்து வந்தாலும்
முடிவில் பசுமையான நேர் பாதை
பயணிக்க.....
தான் பயணித்த பாதையில்,
பயணிக்கும் பாதையில்
குறை காணத நிறைவு....
கடவுளின் துணையுடன்...


கவிதையா,இல்லை சொல் வடிவமா
தெரியாது....
மனதை நிறைத்த ,உணர்த்திய வரிகள்....


Poovizhi, you are always a delightful to read....
Wishes....
 

Ansadoss

Well-Known Member
சோளா பூரி பெரிய பிரச்சனை
ஸ்டப்புடு பூரி அவங்களுக்குள் பிரச்னை
சின்ன சின்ன பூரி மற்றவர்காளால் ஏற்படுத்தப்படட பிரச்னை இப்படி நினைத்து சொல்லிட்டேன்
:Dபிரமாதம் பூவி. பூரிகுள்ள இவ்வளவு பெரிய தத்துவம் ஒளிஞ்சி இருக்கா?
 

Ansadoss

Well-Known Member
ஒரு பூரிக்குள் இவ்வளவு விளக்கமா மறைந்துள்ளது....
Ha.....ha....
இனிமேல் ,பூரியைப் பார்த்தாலே
உங்க விளக்கம் தான் ஞாபகம் வரும்.....
:D
:rolleyes::rolleyes::rolleyes: ஹேய்ய்ய்ய் நானும் பூவிக்கு இதே போல Reply கொடுத்திருக்கேன் ராணிமா:cool::cool:
 

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் மல்லிகா,
சுந்தரியின் ஆளுமை அருமை. தனியாக இருக்கும் பெண்களிடம் எல்லோரும் ஒரு அட்வான்டேஜ் எடுத்துக்கொள்கிறார்கள், கேட்பதற்கு யாருமில்லை என்ற எண்ணத்தில். நிலைமையைக் கணித்துவிட்ட யதார்த்தமான பதில் சிந்தாவினுடையது.
சுந்தரியின் வலிக்கான காரணமும் யதார்த்தம், "சண்டையிட்டு பிரியவில்லை, நிராகரிப்பினால் வந்த வலி அது " என்பது. ஒருவரால் நிராகரிக்கப்படுகிறோம் என்பது மிகவும் கொடுமையான ஒன்று. இதிலிருந்து சுந்தரி எப்படி மீண்டு வருவாள் ?

ஒருவரால் நிராகரிக்கப்படுவது என்பது மிகவும் கொடுமையான ஒன்றுதான், மைதிலி மணிவண்ணன் டியர்
மிக மிக கொடுமையான வலி, மைதிலி டியர்
சுந்தரி மீண்டு வருவாளா=ன்னு, மல்லி டியர் தான் சொல்லணும், மைதிலி செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
:)
கோபம்
பச்சாதபம்...உழைப்பாக மாறி இன்று உரமாக ...உயர்ந்து நிற்கிறாய்....

வீம்பாய்போனவன்....
வீரத்தைப் பார்த்து சிலாகிக்க...

பக்குவமில்லா மனம்...
நிராகரித்து....
சீக்கிரம் பரிதவிக்குமோ...

வீரத்தாய் உன் போல
மறவனாக வளர்க்க வில்லையே

வேண்டாம் என்று மனம் அடிச்சுக்க
வண்டி ஓட்டும் அழகு....மயக்குதே
சின்ன கண்ணனோடு ஒப்பிட்டு
திருப்தி கொள்ளும் மனம்...
பெரிய கண்ணனை நாடாதோ...

நன்றி சொல்ல வந்தவனை
நடு வீதியோடு திருப்பிய மறமங்கை

சக இனமாக...கொடூர மாமியாருக்கும்
தாயுள்ளம் காட்டும் ..மனம் ...இன்றும் என் சமுகம்
நிமிர்ந்து நிக்க காரணம்...

துரும்பென வீணாப்போனவனை கூட
வைக்க வேண்டிய தலையெழுத்து..
என் அழகிக்கு....
முதல் உறவு தவறானதால்...
ஏமாத்த எண்ணம் துளிக்கிறதோ...பாதகா

இது வரமா ..சாபமா...
மனுசன மனுச சாப்பிடுறானே...

மண்ணை விரும்பிய ..தங்காய்
மண்ணின் மைந்தனையும்
விரும்பும் நாள் திருநாளே..

தமிழர் திருநாளே......
சித்திரைத் திருநாளே.....

புது வாழ்வைக் காண...
புத்தாண்டை நோக்கி.....
காத்திருப்பதில் இன்பம் உண்டு..
அருமை, அருமை, பொன்ஸ் டியர்
ரொம்பவே அழகாக, அருமையாக, உள்ளத்து
உணர்வுகளை, இந்த பகுதியின் மொத்தப் பதிவை,
லயமான வார்த்தைகளால், வடித்திருக்கிறீர்கள்,
பொன்ஸ் செல்லம்
HATTS OFF TO YOU, MY SWEETEST பொன்ஸ் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top