Thursday, May 9, 2024

Vanmathy Hari

50 POSTS 0 COMMENTS

வசுந்தரா தேவி 9

புள்ளிமானாகத் துள்ளி வந்து தன் காரின் முன்பக்க கதவைத் திறந்து கொண்டு உள்ளே அமர்ந்தவளைக் கண்ட அர்ஜுன், சில நிமிடங்கள் அவளையே தான் பார்த்துக் கொண்டு இருந்தான். தான் வந்த பின்பும், காரை ஸ்டார்ட்...

வசுந்தரா தேவி 8

8 வசுந்தரா தன் ஜுனியர்களிடம், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அர்ஜுனின் கேஸை அலசி ஆராய்ந்து, அதிலிருந்து ஏதாவது அவர்களுக்குச் சாதகமாகக் கண்டுபிடிக்குமாறு சொல்லி இருந்தார். அதை வேதவாக்காக எடுத்துக் கொண்டு, பல நாட்களாக...

வசுந்தரா தேவி 7

தன்னறையில் இருந்து வெளியேறிக் கொண்டு இருந்தவளைத் தடுத்து நிறுத்த சொல்லி மனம் அடித்துக் கொள்வதை உணர்ந்தவனுக்கு, அதை எப்படிச் செய்வது என்ற தர்க்கம் அவனுள் நடந்து கொண்டு இருந்ததில், யாழினி அறையின் கதவை...

வசுந்தரா தேவி 6

பொழுது விடிந்ததில் இருந்தே சிந்தனையுடன் நடமாடிக் கொண்டு இருக்கும் கணவனைக் கண்டும், “என்ன ஏது?” என்று அவரிடம் கேட்காது, அமைதியாகத் தன் வேலைகளை அதாவது அவருக்கான பணிவிடைகளைச் செய்து கொண்டு இருந்தார் சித்ரா. ஆபீஸ்...

வசுந்தரா தேவி 5

“மேம்! நீங்க சொல்றது உண்மையா? அர்ஜுன் சாரா இந்தக் கொலையைச் செய்தார்?” என்று நம்ப முடியாத பாவனையில் அருண் கேட்டான். அதற்குக் காரணம், அவன் அறிந்த அர்ஜுன், முரடன் மற்றும் கொஞ்சம் முன்கோபி. ஆனால்...

வசுந்தரா தேவி 5

“மேம்! நீங்க சொல்றது உண்மையா? அர்ஜுன் சாரா இந்தக் கொலையைச் செய்தார்?” என்று நம்ப முடியாத பாவனையில் அருண் கேட்டான். அதற்குக் காரணம், அவன் அறிந்த அர்ஜுன், முரடன் மற்றும் கொஞ்சம் முன்கோபி. ஆனால்...

வசுந்தரா தேவி 3

3 ஏஜே பேலஸ்.. பெயருக்கு ஏற்றார் போலவே சென்னையின் மையப் பகுதியில் பிரம்மாண்டத்தைத் தன் தோற்றத்திலும், ஆடம்பரத்தைத் தன் அலங்காரத்திலும் காட்டிக் கொண்டு, தன்னைக் கடந்து செல்வோரை எல்லாம் தன் பளிங்கு கண்ணாடி பளபளப்பில் வசீகரித்துக்...

வசுந்தரா தேவி

அத்தியாயம் 2 வசுந்தராவின் பதிலில் மொத்த மாணவர்களும் குழப்பத்தில் ஆழ்ந்து இருப்பதைக் கண்ட போதும், அதற்கு நின்று விளக்கமளிக்க விரும்பாதவர், தன் கையில் இருந்த மைக்கை டேபிளில் வைத்து விட்டு, மேடையை விட்டு இறங்கி...

வசுந்தரா தேவி 1

அத்தியாயம்  1 டெல்லி சட்ட கல்லூரி.. “சர்மிளா மேம், பூங்கொத்து எங்கே?” என்று கோ-ஒர்க்கர் பதட்டம் நிறைந்த அதே நேரம் தணிந்த குரலில் கேட்டவருக்கு, “அப்பவே வாங்கிட்டு வர ஆள் அனுப்பிட்டேன் மேடம். இதோ பாக்கிறேன்!”...

வசுந்தரா தேவி 1

அத்தியாயம்  1 டெல்லி சட்ட கல்லூரி.. “சர்மிளா மேம், பூங்கொத்து எங்கே?” என்று கோ-ஒர்க்கர் பதட்டம் நிறைந்த அதே நேரம் தணிந்த குரலில் கேட்டவருக்கு,“அப்பவே வாங்கிட்டு வர ஆள் அனுப்பிட்டேன் மேடம். இதோ பாக்கிறேன்!” என்று சொல்லித் திரும்பிய நேரம், அங்கே கையில் பூங்கொத்துடன் ஓடி வந்து நின்றார் பியூன் மணி. “ஹப்பா சாமி! சரியான நேரத்துக்கு வந்து என்னைக் காப்பாத்துனப்பா” என்று அவசர அவசரமாக அவர் கையில் இருந்ததைப் பறிக்காத குறையாகப் பறித்துச் சென்று, அதை அந்தக் கல்லூரியின் துணை முதல்வர் கைகளில் கொடுத்தார். மெயின் கேட்டில் நுழைந்த வெள்ளை நிற பென்ஸ் காரைக்காணவுமே, வளாகத்தின் உள் நின்று கொண்டு இருந்தவர்களுள் ஒரு சிறு சலசலப்பு உண்டாகியது, “வந்துட்டாங்க! வந்துட்டாங்க!” என்று. தங்களின் முன் வழுக்கிக் கொண்டு வந்து நின்ற காரின் இடப்பக்க கதவைத் திறந்து கொண்டு வெளிவந்தவரைக் கண்ட கல்லூரி முதல்வரின் கண்களில் ஒரு சிறு ஆச்சரியம் வந்தவரின் தோற்றம் கண்டு! ஆனால் அதை அதிகம் வெளிப்படுத்தாது  “வெல்கம் மேம்!” என்றார். புன்னகையுடன் பூங்கொத்தை கைகளில் வாங்கிக் கொண்டவரிடம், தன்னுடன் நின்று இருந்தவர்கள் அனைவரையும் அறிமுகப்படுத்தி வைத்தார் முதல்வர். அறிமுகப் படலம் முடிந்து, “ஷால் வீ கோ மேம்?” என்று பில்டிங்கை நோக்கிக் கையை நீட்டிக் கேட்டவரிடம், “சூர்!” என்றார் வந்திருந்தவர். மற்றவர்கள் படை சூழ மீட்டிங் ஹாலை நோக்கி நடந்து கொண்டு இருந்தவர்களுக்கு முன், அங்கே ஆஜார் ஆக வேண்டுமென்ற வேகத்துடன் ஓடி வந்து சேர்ந்த நான்காம் வருட மாணவி ஒருத்தி, அங்கே கடலென கூடி இருந்த கூட்டத்தைக் கண்டு வாயைப் பிளக்காத குறையாக, “அடப்பாவிகளா! நான் லேட்டா வரும் போது தான் இப்படி நீங்க எல்லாம் நேரத்துக்கு வரணுமா?” என்று நொந்து போனாள். ‘எங்கேயாவது கண்ணுக்கெட்டுன தூரத்துல நமக்கு ஒரு சீட் கிடைக்குதா?’ என்று ஹாலை விழிகளால் அவள் அலசிய நேரம் கூட்டத்தில் இருந்து, “ஏய்! இங்கே..” என்று கையசைத்து அவளை அழைத்தனர் அவளின்...
error: Content is protected !!