Advertisement

அத்தியாயம்  1

டெல்லி சட்ட கல்லூரி..

சர்மிளா மேம், பூங்கொத்து எங்கே?” என்று கோஒர்க்கர் பதட்டம் நிறைந்த அதே நேரம் தணிந்த குரலில் கேட்டவருக்கு, “அப்பவே வாங்கிட்டு வர ஆள் அனுப்பிட்டேன் மேடம். இதோ பாக்கிறேன்!” என்று சொல்லித் திரும்பிய நேரம், அங்கே கையில் பூங்கொத்துடன் ஓடி வந்து நின்றார் பியூன் மணி.

ஹப்பா சாமி! சரியான நேரத்துக்கு வந்து என்னைக் காப்பாத்துனப்பாஎன்று அவசர அவசரமாக அவர் கையில் இருந்ததைப் பறிக்காத குறையாகப் பறித்துச் சென்று, அதை அந்தக் கல்லூரியின் துணை முதல்வர் கைகளில் கொடுத்தார்.

மெயின் கேட்டில் நுழைந்த வெள்ளை நிற பென்ஸ் காரைக் காணவுமே, வளாகத்தின் உள் நின்று கொண்டு இருந்தவர்களுள் ஒரு சிறு சலசலப்பு உண்டாகியது,வந்துட்டாங்க! வந்துட்டாங்க!” என்று.

தங்களின் முன் வழுக்கிக் கொண்டு வந்து நின்ற காரின் இடப்பக்க கதவைத் திறந்து கொண்டு வெளிவந்தவரைக் கண்ட கல்லூரி முதல்வரின் கண்களில் ஒரு சிறு ஆச்சரியம் வந்தவரின் தோற்றம் கண்டு! ஆனால் அதை அதிகம் வெளிப்படுத்தாதுவெல்கம் மேம்!” என்றார்.

புன்னகையுடன் பூங்கொத்தை கைகளில் வாங்கிக் கொண்டவரிடம், தன்னுடன் நின்று இருந்தவர்கள் அனைவரையும் அறிமுகப்படுத்தி வைத்தார் முதல்வர்.

அறிமுகப் படலம் முடிந்து,ஷால் வீ கோ மேம்?” என்று பில்டிங்கை நோக்கிக் கையை நீட்டிக் கேட்டவரிடம்,சூர்!” என்றார் வந்திருந்தவர்.

மற்றவர்கள் படை சூழ மீட்டிங் ஹாலை நோக்கி நடந்து கொண்டு இருந்தவர்களுக்கு முன், அங்கே ஆஜார் ஆக வேண்டுமென்ற வேகத்துடன் ஓடி வந்து சேர்ந்த நான்காம் வருட மாணவி ஒருத்தி, அங்கே கடலென கூடி இருந்த கூட்டத்தைக் கண்டு வாயைப் பிளக்காத குறையாக,அடப்பாவிகளா! நான் லேட்டா வரும் போது தான் இப்படி நீங்க எல்லாம் நேரத்துக்கு வரணுமா?” என்று நொந்து போனாள்.

எங்கேயாவது கண்ணுக்கெட்டுன தூரத்துல நமக்கு ஒரு சீட் கிடைக்குதா?’ என்று ஹாலை விழிகளால் அவள் அலசிய நேரம் கூட்டத்தில் இருந்து,ஏய்! இங்கே..” என்று கையசைத்து அவளை அழைத்தனர் அவளின் தோழிகள்.

அதைக் கண்டு தெய்வங்களா!” என்றபடி அவர்கள் அருகில் சென்று அமர்ந்தவள் ஆமா, இன்னைக்கு யார் வரா? இவ்ளோ கூட்டம் கூடி இருக்குஎன்று கேட்க,

அதற்குப் பதிலளிக்காமல் அவளை முறைத்தனர் தோழிகள் அனைவரும்.

இப்போ நாம என்ன சொல்லிட்டோம்ன்னு இப்படிப் பார்க்கிறாளுங்க!” என்று எண்ணியவள்,ஒருவேள ஷாரூக் கான் வராரோ?’ என்று எண்ணிக் குதூகலித்துப் போனவளோ, அதையே அவர்களிடம் கேட்க போன நேரம், “நேத்து நைட் போட்ட குரூப் மெசேஜ் எதையும் நீ பார்க்கலையா?” என்று கேட்டாள், அவளுக்கு அருகில் இருந்த தோழி ஒருத்தி.

ஹீ! ஹீ! ட்ரைன்ல ஒரு பையனை தூங்காம சைட் அடிச்சுட்டு வந்தேனா, அந்தக் களைப்பில், வீட்டுக்கு வந்தவுடன் தூங்கிட்டேன் டார்லிங்என்று தன் முப்பத்திரண்டு பல்லைக் காண்பித்துச் சொன்னாள் அவள்.

தூ!!” என்று கேள்வி கேட்டவள் காரி துப்பிய நேரம், அவளை தள்ளிக் கொண்டு சீட்டு நுனிக்கு வந்த இன்னொருவள்,நிஜமாவே பையன் செமையா இருந்தானா மச்சி? போட்டோ எதுவும் எடுத்தியா?” என்று அசடு வழிய கேட்டாள்.

அதைக் கேட்டு முகம் சுருங்கிப் போனவளோ,அந்தக் கொடுமைய ஏன் மச்சி கேட்குற? எப்படியாவது அவனை கரெக்ட் பண்ணிடனும்ன்னு ஸ்டேஷனில் அவன் இறங்கவும்  அடிச்சு புடிச்சு தைரியத்தை வரவழைச்சுக்கிட்டு அவன் பின்னாடி ஓடினா..”

ஓடினா..???” என்று முன்னவள் எடுத்துக் கொடுக்க,

எனக்கு முன்னாடி ரெண்டு புள்ளைங்க ஓடி வந்து அவனை அப்பான்னு கட்டிப் புடிச்சுக்கிட்டு தொங்குதுங்கஎன்றவளின் துக்கத்தில் மற்றவர்கள் அடக்கமாட்டாது சிரிக்க ஆரம்பித்து விட்டனர்.

ஏன்டி போயும் போயும் ஒரு அங்கிளையா சைட் அடிச்ச?” என்று கூட்டத்தில் ஒருத்தி கேட்க,

சைட் அடிக்கும் போது அது அங்கிள்ன்னு தெரியாதே மச்சி!” என்று அழுகாத குறையாக அலுத்துச் சொன்னவளின் செய்கையில், மற்றவர்கள் அவளைக் குனிய வைத்துச் செல்லமாகக் கும்மி எடுத்தனர்.

அதையெல்லாம் அசால்ட்டாக வாங்கிக் கொண்டு நிமிர்ந்து அமர்ந்தவளோ,சரி சரி, அதை விடுங்க.. இப்போவாவது சொல்லுங்க, இன்னைக்கு வரப் போற அந்த கெஸ்ட் யாரு” என்று கேட்டாள்.

யாரா இருக்கும்ன்னு நீ நினைக்கிற?” என்று அவளிடமே கேள்வி கேட்டாள் ஒருத்தி.

ஏய்! அது தெரியாமத்தானே கேட்கிறேன், சொல்லுங்கடி!” என்றதும், சரி உனக்கு ஒரு க்ளூ கொடுக்குறேன், முடிஞ்சா கண்டுபிடி! நம்ம காலேஜ் ரொம்ப நாளா வலை போட்டுப் பிடிக்க ட்ரை பண்ணிட்டு இருந்தவங்க தான் இன்னைக்கு வர கெஸ்ட்என்று தோழி  சொல்லி முடிக்கும் முன்னேயே கேட்டுக் கொண்டு இருந்தவளின் கண்கள் ஆச்சரியத்தில் விரிய ஆரம்பித்தது.

ஏய் ஏய்! நிஜமாவா சொல்ற? அவுங்களா இன்னைக்கு நமக்கு கெஸ்ட் லெக்சர்?” என்று கேட்கும் போதே,அவுங்களா தான் இருக்கணும்!என்று அவளின் மனம் அடித்துக் கொண்டது.

ஆமாம்!” என்று அவளின் தோழி தலையாட்டியதும் தான் தாமதம்! சந்தோசம் தாங்காது,வாவ்! வாவ்!” என்று அவளைக் கட்டிக் கொண்டு குதூகலிக்க ஆரம்பித்து விட்டாள் அவள்.

சட்டம் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும், இன்றைய தலைமுறையின் சிறந்த ரோல் மாடலாக ஒருவர் இருக்கிறார் என்றால், அது கண்டிப்பாக வசுந்தரா தேவியைத் தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது!

கோர்ட்டில் அவருடைய கர்ஜனையான வாதங்களைக் கண்ட, கேட்ட எவரும் சொல்வர்,இவருடன் வாதாடனும் என்றால் இன்னொரு முறை சட்டத்தை நாம் படிச்சுட்டு தான் வரணும்யாஎன்று!

அந்த அளவுக்குத் தன்னுடைய வார்த்தைகளில் எதிரியை சுற்றி சுழற்றி அடிப்பதில் கைதேர்ந்தவர், ஐகோர்ட் வக்கீலான இந்த வசுந்தரா தேவி.

நீதிபதியாக மாற பலமுறை வாய்ப்பு வந்த போதும்,நிரபராதிகளைக் காப்பாத்த தான் நான் சட்டம் படிச்சேனே தவிர, சும்மா உட்கார்ந்து குற்றவாளிகளை வெளியே விட அல்ல!என்று அதையெல்லாம் மறுத்து, இன்று வரை கோர்ட்டில் பலருக்கும் சிம்மசொப்பனமாக விளங்குபவர்.

அப்படிப்பட்டவருடன் உரையாடும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் யாரால் தான் குதூகலிக்காமல் இருக்க முடியும்??? அதன்பொருட்டே தங்களின் ஆஸ்தான நாயகியைக் காண வழி மேல் விழி வைத்து வாசலையே பார்த்திருந்தனர் அங்கு கூடி இருந்த அனைத்து மாணவர்களும்.

முதல்வர் முன் வர, அவரைத் தொடர்ந்து உள்ளே வந்த வசுந்தரா தேவியைப் பார்த்து, எழுந்து நின்ற மாணவர்கள் அனைவருக்குமே ஒருவித ஜெர்க் உண்டாகியது.

நாற்பதின் தொடக்கத்தில் இருப்பவர், அதுவும் ஒரு வக்கீலாக இருப்பவர். கருப்பு நிற ஜீன்ஸ் அண்ட் வெள்ளை நிற முக்கால் கை டாப்பில், சால்ட் அண்ட் பெப்பர் லுக் பாய் கட் ஹேர் ஸ்டைலில், கை-கால்-கழுத்தில் எந்தவித ஆபரணமுமின்றி, மிக மிக எளிமையாக, அதே நேரம் ஒருவிதமான மார்டன் லுக்கில் வந்திருப்பது, காண்போர் அனைவரையுமே லேசாக விழி உயர்த்த செய்து இருந்தது.

தன்னுடைய சாதாரண தோற்றத்தில் கூட மற்றவர்களை அசரடிக்க முடியுமென்றால், அது வசுந்தரா தேவியால் மட்டும் தான் முடியுமோ என்னவோ!!

ஹாலில் நடுநாயகமாக அமைக்கப்பட்டு இருந்த மேடையில் ஏறி, தனக்கென ஒதுக்கப்பட்டு இருந்த சேரில் கால் மேல் கால் போட்டு நிமிர்ந்து கம்பீரமாக அமர்ந்தவரின் புகழை மைக் பிடித்து முதல்வர் பாட ஆரம்பித்ததும், சடாரென எழுந்து நின்றார் வசுந்தரா.

அவரின் அந்தச் செயலில் மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமில்லை, முதல்வருமே கொஞ்சம் ஜெர்க்காகி, தன் பேச்சை நிறுத்தி விட்டு, வசுந்தராவைத்தான்என்ன?’ என்பது போல திடுக்கிட்டு பார்த்துக் கொண்டு இருந்தார்.

அவர்களை எல்லாம் கண்டும் காணாதது போல,சாரி பார் தி டிஸ்டர்பென்ஸ்! இந்த கெஸ்ட் புகழாரம் எதுவும் வேண்டாமே?என்று முதல்வரிடம் நேரடியாகச் சொன்னவர்,

நான் இங்கே வந்தது மாணவர்களுடன் கலந்துரையாட.. சோ ஸ்ட்ரைட்டா நாம அதுக்குப் போலாமா?” என்றவர், அதற்கு முன்னே இருப்பவர் பதில் சொல்லும் முன்,எனக்கு ஒரு மைக் கிடைக்குமா?” என்று கேட்டார்.

அதில் படபடப்பு அடங்காது, காற்றை கிழித்துக் கொண்டு, தன் கையில் இருந்த மைக்கை எடுத்துச் சென்று அவரிடம் கொடுத்தார் முதல்வர்.

தாங்க் யூ!” என்று அதை வாங்கிய வசுந்தரா,

குட் மார்னிங் மை யங் ப்ளட்ஸ்!!” என்று உரக்கச் சொன்ன நேரம், அந்த அரங்கத்தில் கரகோஷத்துடன் சேர்ந்து விசில் பறந்தது.

அதைக் கேட்ட முதல்வருக்கு ஒருவித சங்கடம் எழுந்தது,எங்கே வந்து இருப்பவர் மாணவர்களின் செயலில் கோபப்பட்டு விடுவாரோ?என்று! ஆனால்,நான் உங்களின் எண்ணங்களுக்கு எல்லாம் அப்பாற்ப்பட்டவள்’ என்பது போல இருந்தது, வசுந்தராவின் அடுத்த செய்கை.

நைஸ் வெல்கம் சவுண்ட் மை பாய்ஸ்!” என்று உரக்கவே சொன்னவரோ,என்ன கேர்ல்ஸ் உங்களுக்கு எல்லாம் விசில் அடிக்கத் தெரியாதா?என்றதில் அவ்வளவு தான்!! அதுவரை அடங்கி இருந்த பெண் சிங்கங்கள் எல்லாம் தடைகளை உடைத்துக் கொண்டு எழுந்து நின்று, அந்த அரங்கமே அதிரும்படி விசில் அடித்தனர்.

வானைக் கிழித்து எழும் சத்தத்தில்தட்ஸ் அவர் பவர்!!” என்றார் வசுந்தரா.

அங்கே அரங்கேறிக் கொண்டு இருக்கும் காட்சிகளைக் கண்டுகொண்டு இருந்த பெண் ப்ரொபசர்களுக்கோ,நாமும் இது போல விசில் அடித்தால் எப்படி இருக்கும்?என்றே தோன்றியது.

அதன் வெளிப்பாடாக தனக்கு அருகில் இருந்தவரிடம்,ஏன் மேடம், உங்களுக்கு விசில் அடிக்கத் தெரியுமா?” என்று ஷர்மிளா பக்கத்தில் யார் இருக்கிறார்கள் என்று பார்க்காது கேட்டு, அவரின் பதிலுக்காக அவரை நோக்கித் திரும்பிய நேரம், அங்கே மூக்கில் விசில் அடித்துக் கொண்டு இருந்தார் துணை முதல்வர்.

செத்தேன் நான்!!” என்று அலறாத குறையாக தலையில் குட்டிக் கொண்டவர்,

ஹீ ஹீ! உங்க வீட்டு குக்கர் நல்லா விசில் அடிக்குமான்னு கேட்க வந்தேன் மேடம். அதுக்குள்ள டங்கு சிலிப் ஆகிடுச்சுஎன்று வாயில் ரெண்டு போடு போட்டுச் சொன்னவரின் பேச்சைக் கேட்டவரோ,அடிக்குது! அடிக்குது!” என்று ஷர்மிளாவை முகத்தில் அடிக்காத குறையாகச் சொன்னதைக் கேட்டு,இதுக்கு இந்த அம்மா என்னை நாலு அடியே அடிச்சு இருக்கலாம்என்று தனக்குள்ளே அங்கலாய்த்துக் கொண்டார் ஷர்மிளா.

ஓகே, என்னைப் பற்றி இன்ட்ரோ போதும்ன்னு நினைக்கிறேன். இனி நாம பேச ஆரம்பிக்கலாம்.

உங்க புத்தகத்தில் இருக்கிற எல்லாத்தையும் எனக்குத் தெரிந்து நீங்க எல்லாரும் படித்து இருப்பீங்க. சோ அதையே திருப்பி உங்களுக்கு லெக்சர் எடுப்பதில் எனக்கு விருப்பமில்லை.

சோ நாம ஒரு கான்வோ பண்ணலாம்.

உங்களுக்கு என்கிட்ட இருந்து என்ன என்ன தெரிஞ்சுக்கணுமோ கேளுங்க! அதுக்கு நான் பதில் சொல்றேன்என்றார் வசுந்தரா.

இதற்காகவே காத்திருந்தவர்களுள் துள்ளிக் கொண்டு எழுந்த ஒருத்தி,உங்களை மாதிரி திறமையான வக்கீலா ஆகணும்ன்னா, நான் என்ன செய்யணும் மேம்?” என்றதும்,

வாட் இஸ் யுவர் குட் நேம்?” என்று கேட்டார் வசுந்தரா.

மைதிலி மேம்..”

ஸீ மைதிலி! எப்பவும் யாரை மாதிரியும் நீங்க வரணும்ன்னு நினைக்கவே நினைக்காதீங்க. அப்புறம் உங்களுக்கான அடையாளம் இல்லாமல் போய்டும்என்றதில் ஒரு பலத்த கரகோஷம் அங்கே உருவாகியது.

மேம்! கோர்ட்டில் உங்க சக்சஸ் ரேட் 98%. சோ சீக்ரெட் ஆப் சக்சஸ் என்னன்னு நாங்க தெரிஞ்சு கொள்ளலாமா?” என்றதற்குக் கொஞ்சமும் தயங்காது,வேற என்ன? கண்டிப்பா என்னுடைய அந்த 2% தோல்வி தான்!” என்றார் கெத்தாக வசுந்தரா. அதில் அனைவரும் கண்களால் அவரையே இன்னும் ஆழமாக அதிசயித்துப் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

ஒரு திறமையான வக்கீலா ஆகணும்ன்னா நான் என்ன செய்யணும் மேடம்?”

நல்ல கேள்வி! பட் அதுக்கு உங்க காலேஜ் எஜூகேஷன் மட்டும் போதாது. வேறு ஒரு இடத்திற்கும் சென்று நீங்க படிக்கணும். அது எங்கேன்னு யாருக்காவது தெரியுமா???” என்று கை உயர்த்திக் கேட்ட வசுந்தராவின் கேள்விக்குப் பதிலளிக்க முடியாது மாணவர்கள் திணறியதால், நிசப்தமே பதிலாக வசுந்தராவுக்குக் கிடைத்தது.

அங்கு இருந்த அனைவருக்குமே, அந்தக் கேள்விக்கான பதிலை அறியும் ஆவல் மேலோங்கியதால், அவர்களின் பார்வை வசுந்தராவின் மீதே ஆழமாகப் பதிந்து இருந்தது.

யாரும் எதிர்பாராவண்ணம் தன்னுடன் மேடையில் அமர்ந்து இருந்தவர்களிடம்,இப் யூ டோன்ட் மைன்ட், நான் இந்த போர்டை யூஸ் பண்ணலாமா?” என்று தங்களுக்குப் பின் இருந்த சுவற்றைக் காட்டி வசுந்தரா கேட்கவும், நொடியும் தாமதிக்காது, மேடையில் இருந்தவர்கள் முதல்வரை பின்பற்றி தங்களுடைய இருக்கைகளுடன் கீழே சென்று அமர்ந்து கொண்டனர்.

அந்த ஹாலில் ஆயிரத்துக்கும் மேலானோர் அமரும் வண்ணம் பெரிய பெரிய படிக்கட்டுக்கள் கீழிலிருந்து மேலாக செல்லும் அமைப்பில் அமைக்கப்பட்டு இருந்ததால், யார் எங்கே அமர்ந்தாலும் அவர்களால் போர்டைத் தெளிவாகப் பார்க்க முடியும் என்பதால் ஒரு சாக்பீஸை எடுத்து,வேர் டூ லேர்ன் ரியல் லா??” என்று போர்டில் எழுதி, அதற்கு கீழேதி கோர்ட் ரூம்என்று வேக வேகமாக எழுதி, மாணவர்கள் புறம் புயலாகத் திரும்பினார் வசுந்தரா.

யூ நோ ஒன் திங், நீங்க புத்தகத்தில் படிப்பது எல்லாம் உங்களை வக்கீலாக வேணா மாற்றலாம். ஆனா திறமையான வக்கீலா மாறணும்ன்னு நீங்க நினைச்சா,  நீங்க எல்லாரும் போக வேண்டிய இடம் இது தான்!” என்று தான் எழுதி வைத்ததைக் கோடிட்டுக் காட்டி அழுத்திச் சொன்னார் வசுந்தரா.

அவர் சொன்ன மிடுக்கான பதிலில் அதிகமாகக் கவரப்பட்ட சுஜிஅடுத்த கேள்வியை நான் தான் கேட்பேன்என்ற உந்துதலில், கையைத் தூக்கிக் கொண்டு எழுந்து நின்று விட்டாள்.

அவளின் புறம் திரும்பிய வசுந்தரா,எஸ்!” என்று அவளைப் பார்த்துக் கேட்டவுடன் தான், ‘ஐயோ! இப்போ எந்தக் கேள்வியைக் கேட்க?’ என்று ஜெர்க்காகிப் போனவளுக்கு, சட்டென்று மூளையே வேலை செய்ய மறுத்தது போன்று இருந்தது.

வசுந்தராவின் பார்வை அவளையே துளைத்திருப்பதை உணர்ந்தவள், கிடைத்த வாய்ப்பை நழுவ விடக் கூடாது என்பதை தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டு, நிமிடத்தில் மூளையைத் தட்டி வேலை செய்ய வைத்து, அவரிடம் கேட்க நினைத்த ஆயிரம் கேள்விகளில் இருந்து ஒரு கேள்வியை அந்நேரம் கேட்டாள்.

ஒரு கேஸில், அஸ் லாயரா, நாங்க முக்கியமா ஸ்டடி பண்ண வேண்டியதுன்னு நீங்க எதை நினைக்குறீங்க மேம்???”

ப்ரில்லின்ட் கொஸ்டீன்!” என்று அவளைப் பார்த்து புன்னகைத்த வசுந்தரா, சொன்ன நொடியே, வானில் சிறகில்லாமல் பறக்க ஆரம்பித்து இருந்தாள் சுஜி.

அதை அவளின் முகப் பிரகாசத்திலேயே கண்டுகொண்டனர் அவளின் தோழிகள். நண்பியின் நிலை கண்ட ஒருத்தி,இன்னைக்கு இவ தூங்குவான்னு நீ நினைக்கிற?” என்று அருகில் இருந்தவளிடம் ரகசியம் கேட்டாள்.

அவளோ,எனக்குத் தெரிஞ்சு இன்னும் ஒரு வருஷத்துக்கு அவ பல்லையே விளக்க மாட்டான்னுதான் நினைக்கிறேன்என்று முன்னவள் போல மெதுவாகப் பதில் சொல்லவும், “ஏன்?” என்றவாறு இன்னொருத்தி புரியாது பார்த்து வைத்தாள்.

அந்தப் பார்வையின் அர்த்தம் புரிந்தவளும்,பின்ன! வாயால தானே வசுந்தரா மேம்கிட்ட பேசி இருக்கா, அப்புறம் எங்கே இருந்து அதைக் கழுவுவா?” என்று முன்னவள் சொன்ன பாவனையில் மற்ற இருவருக்குமே சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.

அதே நேரம் பதில் வர ஆரம்பிக்கவும், பெண்கள் தங்களின் கவனத்தை அங்கே திருப்பினர்.

ஸீ! எந்த ஒரு கேஸாக இருந்தாலும் முதலில் நீங்க அதில் கான்சன்ரேட் பண்ண வேண்டியது, மூணே விஷயங்களில் தான்!” என்று சொன்ன வசுந்தரா, போர்டை நெருங்கி அதில் எழுதியபடியே,

நம்பர் ஒன்! சாட்சிகள்

நம்பர் டூ! சஸ்பெக்ட்ஸ்

நம்பர் திரீ! ஆதாரங்கள்

இந்த மூணும் எந்த நேரத்திலும், எந்த நிமிடத்திலும் உங்க கேஸின் திசையையே மாற்றக் கூடியவைஎன்று அவைகளை வட்டமிட்டபடி சொன்னவர், மேலும்,சோ முதலில் நீங்க தேட வேண்டியதும்தெளிவுபடுத்திக்க வேண்டியதும்இந்த மூன்றையும் தான்!!” என்று ஆணித்தரமாக அடித்துச் சொல்லித் திரும்பிய நேரம் மாணவர்களிடம் ஒரு பேரமைதி சூழ்ந்து இருந்தது.

அதைக் கண்டு அவர்களிடம்,வாட்??” என்று தலையாட்டிச் செய்கையில் வசுந்தரா கேட்ட நேரம்,ப்ரில்லியன்ட் மேம்!!” என்று எழுந்து நின்று ஒரு மாணவன் கைத் தட்டியதும், அவனைத் தொடர்ந்து மாணவர்கள் மட்டுமில்லாது கல்லூரி முதல்வர் முதற்கொண்டு அனைவருமே வயது பாகுபடின்றி அந்நேரம் கைத்தட்ட ஆரம்பித்தனர்.

எட்டுத்திக்கும் இடியாக முழங்கிக் கொண்டு இருந்த முழக்கத்துக்குப் பின்னே வசுந்தரா குறித்த பிரமிப்பு எங்கும் வியாபித்து இருந்தது.

ஓகே ஓகே, ஸ்டாப்!” என்று சொன்னவரின் பேச்சைத் தொடர்ந்து அடங்கியிருந்த சத்தத்தைத் தொடர்ந்து,யூ ஆர் மார்வெலஸ் மேடம்!!” என்று பூரிப்புடன் சொன்னாள் சுஜி.

ஒஹ்ஹ கம்மான்.. இட்ஸ் பேசிக் ஸ்டடி ஆப் லாஎன்று சாதாரணமாகச் சொன்னார் வசுந்தரா. அதைத் தலையாட்டி ஆட்சேபித்த சுஜி,நோ மேம், இட்ஸ் ஒன்லி யுவர் லா!” என்று பெருமிதமாக மறுத்துச் சொன்னாள்.

நைஸ் ஆர்க்யூமென்ட்!” என்று ஒரு வக்கீலாக மாறி, தன்னால் அவளுக்கு உடனே பதிலிக்க இயலாத நிலையைக் குறிப்பிட்டுச் சொல்லி, அவளைப் பாராட்டினார் வசுந்தரா. அதைக் கேட்டவளின் இதழ்களோ புன்னகையில் பூத்துக் குலுங்கியது.

வேற ஏதாவது கேள்விகள் இருக்கா?”

ஒரு மாணவன் எழுந்து,ஏதாவது வழக்கில் உங்களுக்குக் கிடைத்த எந்தத் தோல்வியாவது உங்களை அதிகமா டிஸ்டர்ப் பண்ணி இருக்கா மேம்?”

அந்தக் கேள்வியில், கையில் இருந்த சாக்பீஸை டேபிளில் வைக்கப் போனவரின் கரங்கள் ஒரு நிமிடம் தன்னிலை மறந்து ஸ்தம்பித்தது, வசுந்தராவின் மனதைப் பிரதிபலிப்பது போன்று.

அப்படியே முடங்கிப் போனால் அது வசுந்தரா இல்லையே! சட்டென்று தன்னைத்தானே மீட்டுக் கொண்டு நிமிர்ந்து, அந்த மாணவனை இன்முகத்துடன் எதிர்கொண்டவர்,

தன்னுடைய குரலை சரிசெய்வது போலத் தன்னைத்தானே சரிசெய்து கொண்டு மைக்கை இறுகப் பிடித்து,  “என்னுடைய ஒரே ஒரு தோல்வி மட்டும் தான், என்னைப் பொறுத்தவரை, இப்ப வரை என்னை டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்குஎன்று வெளிப்படையாக ஸ்டேட்மென்ட் கொடுத்தார்.

அதில் அரங்கமே,அது எதுவாக இருக்கும்?என்று மண்டையைப் பிய்த்துக் கொண்டு இருந்த நேரம்,

பட், நான் உங்களுக்கு பைனலா சொல்ல விரும்புவது இது மட்டும் தான்! நீ யார், உன்னுடைய திறமை என்னன்னு உனக்குத் தெரிஞ்சுக்கணும்னா, கண்டிப்பா சில தோல்விகளும் வேண்டும்.

ஏன்னா எந்த வெற்றியும் சொல்லிக் கொடுக்காத வாழ்க்கை பாடத்தை ஒரு தோல்வி உங்களுக்குச் சொல்லிக் கொடுத்திடும்என்றவரின் வார்த்தைகள், அங்கு கூடி இருந்த மாணவர்களின் மனதில் ஆழமாகவே பதிந்ததால்,சூர் மேம்என்றனர் அனைவரும் கோரசாக.

கிளம்ப வேண்டிய நேரம் நெருங்கி விட்டதை உணர்ந்த வசுந்தரா, அத்தோடு தன் உரையாடலை முடித்துக் கொள்ள எண்ணி,ஓகே ஸ்டுடென்ட்ஸ், உங்ககிட்ட பேசினதில் எனக்கு மிகவும் சந்தோசம்! ஹோப் யூ ஆல்சோ என்ஜாய்ட்.

ஹாவ் வொண்டெர்புல் லைப் அண்ட் ஆல் தி பெஸ்ட் பார் யுவர் ப்ரைட் ஃபியூச்சர்!!” என்று வாழ்த்து சொல்லி மேடையை விட்டு கீழே இறங்க முயன்ற நேரம்,

மாணவர்கள் கும்பலில் இருந்து சடாரென எழுந்து நின்ற ஒரு மாணவி,ஒன் லாஸ்ட் கொஸ்டீன் மேம்! கேட்கலாமா?” என்று கேட்டதில், தன் நடையை நிறுத்தி குரல் வந்த திசையை திரும்பிப் பார்த்த வசுந்தரா,எஸ், கோ ஹெட்என்று சொன்னார்.

ஆனால் அந்தப் பெண் கேட்ட கேள்வியில், அதுவரை இருந்த உற்சாகம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயிருந்த நேரம்,

ஒரு க்யூரியாசிட்டில தான் கேட்கிறேன் மேம்.. உங்களை இப்ப வரைக்கும் டிஸ்டர்ப் பண்ணுற அந்தத் தோல்வி அடைந்த  வழக்கு என்னனு நாங்க தெரிஞ்சுக்கலாமா???” என்ற வார்த்தைகளில் நிதானமாக, “நான் அடைந்த தோல்வி என் வழக்கில் இல்லை, என் வாழ்க்கையில்..!!” என்று முற்பாதியை வெளியிலும், பிற்பாதியை மனதிலும் சொன்னார் வசுந்தரா தேவி.

Advertisement