E5 Nee Enbathu Yaathenil

Advertisement

ThangaMalar

Well-Known Member
எனக்கு இந்த epi படிச்சு கொஞ்சம் mixed feelings (உமா மாம் HIFI )
அப்புறம் உங்க cmts உம் படிச்சப்புறம்
கொஞ்சம் எனக்கு புரிஞ்ச அளவில ஒவ்வொரு charecterayum
இன்று வரை அவர்களின் எண்ணங்களை
வைத்து சொல்லி இருக்கிறேன்


இன்று வரை நான்

சந்திரன் நான்
வளர்ந்து பின் தேயும் அல்ல
தேய்ந்து வளரும் பிறை சந்திரன் நான்
ஆம்
தேய்ந்து போனேன் மகனின் விவாகரத்தால்
வளருவேன் மகனின் மறுவாழ்வால்
பௌர்ணமி ஆவேன் பேரனின் வரவால்


மனைவியின் அழகு கண்டேன்
நண்பனின் பணம் கண்டேன்
மகனின் மனம் தவிர்த்தேன்
மருமகளை மறந்தே விட்டேன்
பேரனை காண தவிக்கிறேன் இன்று


சொல்லின் கூர்வாளால்
வெட்ட தயங்கவுமில்லை நான்
யாரையும் கொட்டவும் தயங்கவுமில்லை
தப்பென்று தோணவில்லை
அது தவறென்று அறியவுமில்லை நான்
அதற்கு காலம் இன்னும் கனியவில்லை
குணத்தை பார்க்கவில்லை
யாரின் குணத்தையும் பார்க்கவில்லை
அதற்கு காலம் இன்னும் கனியவில்லை
இன்று வரை நான்
விமலா

அழகால் வந்தேன் ரோகினியாக
சந்திரனின் ரோகினியாக


வந்தது இரு மகவு
ஆண் மகவு என் நிழலே
அழகிலும் என் நிழலே
என் மகனின் முதலாக
தாயவள் இருக்கிறேன்
மன்னவனோ நிந்தித்தாலும்
என்மகனின் அன்பினாலே
மகிழ்வேன்

சுற்றமே ஆனாலும்
சூழவே இருந்தாலும்
மற்றவர்கள் பின்னே
நானிங்கே முன்னே
இதுவே என் எண்ணம்
அதுவே என் திண்ணம்


மகனின் மணத்தை
பணம் கொண்டு
கண்டிட்டார் என்னவர்
தன்னது மட்டும் அழகாயிருக்க
முன்னவனின் மனைவியோ
அழகியில்லை என் சொல்ல
வெளுப்புமில்லை கறுப்புமில்லை
சுந்தரியின் சுந்தரத்தில்
எனக்கு ஒரு விருப்புமில்லை
பெண்ணவளை வைத்திருக்க
மனதில்லை
இங்க வாழவிடவும்
விருப்பமில்லை
எனக்கும் வாழ விருப்பமில்லை
காரணம் கூறவில்லை
இப்போது காரணம் கூறவில்லை
காத்திருக்க கூறுகிறேன்
சிறிது பொறுத்திருக்க கூறுகிறேன்


என் எண்ணம் கண்டு
பின் பெண் வண்ணம் கண்டு
கூறுவீர் நியாயத்தை
என் பக்க நியாயத்தை
Great meera.. Simply superb..

விட்டா மீரா பின்னாடி தொழுவத்துல கட்டியிருக்கற மாட்டுக்கு கூட ஒரு கவிதை எழுதி கொடுத்துடுவா...

பார்த்து கொடு மீரா...
கவிதைன்னு தெரியாம அது சாப்பிட்டுவிட போகுது... :p:D

Kidding friend..
Really awesome...
 

ThangaMalar

Well-Known Member
இன்று வரை நான்
கண்ணன் நான்
துரைக்கண்ணன் நான்
பாதி முன்பு சொன்னேன்
மீதி இங்கே சொல்வேன்


பொறியாளனாய் ஆனதால்
பெரியவன் ஆனேனோ
கர்வத்தால்
பெரியவன் ஆனேனோ
தந்தையின் சொற்கள்
சவுக்கடி தான் எப்போதும்
ஆம்
என் தந்தையின் சொற்கள்
சவுக்கடி தான் எப்போதும்
எனக்கு மட்டுமல்ல
சேதாரம் பொதுவே
சொல்லே என்றாலும்
வளர்த்தது என்றாலும்
ஏனிங்கே வந்தது
கணக்கு ஏனிங்கே வந்தது
வந்தபின்னே வார்த்தையை
தாண்டுதல் முடியுமோ நம்மால்
இல்லை
தாக்கம் தான் குறையுமோ


சுந்தரியின் சுந்தரனாம்
சுந்தரியை விட்டபின்பு
வெறும் எந்திரனாய் மாறி
உழைத்தேன் மீட்க
சேர்த்தேன் பணத்தை
மறந்தேன் உறவை
பிரிந்தேன் அவளை


பிடிக்கவில்லை அவளை
பார்க்க மட்டுமல்ல
நினைக்கவும் தான்
அன்றும் பிடிக்கவில்லை
வாழ பிடிக்கவில்லை
இன்றும் தெரியவில்லை
கூடி வாழ தெரியவில்லை
கூடி வாழ்வதா
என்றே தெரியவில்லை


பக்கவாட்டில் பார்த்தாலும்
பக்கம் நின்று பார்த்தாலும்
எட்டி எட்டி பார்த்தாலும்
ஏக்கம் கொண்டு பார்க்கவில்லை
அவளை ஏக்கத்தில் பார்க்கவில்லை
முளைத்த விதை முகம் பார்க்கவில்லை
நான் ஏக்கத்தில் பார்க்கவில்லை
அன்று வந்த அன்று
ஆனால் இன்று
அவனை தூக்கத்திலும் மறக்கவில்லை
தொலைவில் இருந்தாலும்
தொடாமல் இருந்தாலும்
தூக்காமல் போனாலும்
மன்னன் அவன் இன்று
என் உலகின் மன்னனவன்
பற்றுவிடுமோ விழுது
விட்டுவிலகுமோ உறவு




போராட வேண்டுமடா கண்ணா
போராட வேண்டும் நீ
சுற்றி நீ போனாலும்
வழி சுற்றி நீ போனாலும்
சுந்தரியின் பாதையிலே போனாயே
சீர்கெட்ட வழிவிட்டு
இப்போது
சீரான வழி தொட்டு போனாயே
நன்று
நீ போராட வேண்டுமடா கண்ணா
இன்னும்
போராட வேண்டுமடா கண்ணா


தந்தையை எதிர்ப்பது
தாயென்று வரும் போது மட்டுமா
சுந்தரியை தாரமாக்கும் போதில்லையா
வார்த்தைகளை மீதம் பிடிக்க சொன்னாயே
நீ உன் வாழ்வின் மீதியை எப்போது பிடிப்பாய்
பெண்ணவள் கல்லவள் இப்போது
கல்லுக்குள் ஈரமாய்
அவளின் கவிதை அபி அவனிருக்க
ஈரத்தினால் அடையாமல்
உளியால் உடைத்து விடு
காதலெனும் உளியால் உடைத்து விடு
அதை கண்டறிய என் செய்வாய்
அகத்தை அறியாமல்
அகந்தை அகற்றாமல்
சினமே வைத்து
மனதை பாராமல்
குணத்தை எண்ணாமல்
உளியது கிடைக்காது
வலியது போகாது
பெண்ணவள் வலியது போகாது


மலையேற வேண்டாம்
கடல் தாண்ட வேண்டாம்
ஊர் தாண்டி வா
மண் சேர வா
பெண் வருவாள் பின்னே
ஆனால் முன்னே
நீ போராட வேண்டுமடா கண்ணா
இன்னும்
போராட வேண்டுமடா கண்ணா
எனக்கு என்ன சொல்றதுனே தெரியல....
பின்னிட்டே... போ...
 
S

semao

Guest
Great meera.. Simply superb..

விட்டா மீரா பின்னாடி தொழுவத்துல கட்டியிருக்கற மாட்டுக்கு கூட ஒரு கவிதை எழுதி கொடுத்துடுவா...

பார்த்து கொடு மீரா...
கவிதைன்னு தெரியாம அது சாப்பிட்டுவிட போகுது... :p:D

Kidding friend..
Really awesome...
prescrption paper koduthale
thingala
intha papera thinga povuthu
 

banumathi jayaraman

Well-Known Member
Great meera.. Simply superb..

விட்டா மீரா பின்னாடி தொழுவத்துல கட்டியிருக்கற மாட்டுக்கு கூட ஒரு கவிதை எழுதி கொடுத்துடுவா...

பார்த்து கொடு மீரா...
கவிதைன்னு தெரியாம அது சாப்பிட்டுவிட போகுது... :p:D

Kidding friend..
Really awesome...
ஹா ஹா ஹா
 

Adhirith

Well-Known Member
அப்படியல்ல மேகலை நான் விமர்சனம் எழுதிய SJM & NEY இரண்டிலும் கதாநாயகி நாயகனால் துன்பப்படுவது போல் அமைந்துவிட்டது. அதனால் நாயகியின் கண்ணோட்டத்தில் இருந்து விமசிக்க வேண்டியுள்ளது.

இதுவே பூவையின் நெஞ்சம் கதையை இதுபோன்று படித்திருந்தால் நிச்சயம் நாயகனுக்கு ஆதரவாக தான் பேசி இருப்பேன்:)

மல்லி வரும் காலத்தில் அப்படியோர் கதை எழுதினால் நிச்சயம் உங்களுக்கு புரியும்.

கமலா சடகோபன் எழுதிய கதவு என்ற நாவலில் எனக்கு கதாநாயகன் மாதுவை தான் பிடிக்கும். நாயகியை அப்படியே அப்பனும் போல தோன்றும். :oops:

நாயகியால் நாயகன் பாதிக்கப்படுவது போன்ற நாவல்கள் அவ்வளவாக வருவதில்லை.

அநேகமாக ராணிமாவின் கருத்தும் இதுவாக தான் இருக்கும் என நினைக்கிறேன்.:)

கதாநாயகியை மட்டும் தான் நான் ஆதரிப்பேன்
என்று கூறுவது ,ஒரு sarcastic கமெண்ட்.
அதற்கு எதற்கு இவ்வளவு விளக்கம் ,அன்னு....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top