E5 Nee Enbathu Yaathenil

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
மல்லி,
துரை இங்கே வரக்காரணமே..கனகா..
அவர் தன் பொண்ணுக்கு வரன் அமைவதில் சிக்கல் என்று திட்டவே..
ப்ரச்னை என்று வந்தான்...
வந்தஅவனை அன்னை, தந்தை வரவேற்கவில்லை.
உடனே ஓடி வந்த சித்தப்பா..வருத்தமில்லாமல் பேசிய தங்கை..
இன்று அவனுக்கு ஊருக்கு வந்தப்பிள்ளை என்ற சமைக்கும் பாங்கு...இது தான் கூட்டு குடும்ப அழகு..கொண்டு விடவா என்று கேட்ட சித்தப்பா...எனக்கு பிடித்தது.
ஏன் வேண்டாம் சொன்னது...
ஆனால் வேற பொண்ணை நோக்க எண்ணாதது...
பாதிப்பு அந்த பொண்ணுக்கு தான் என்று அப்பாவிடமும்..
அந்தப் பொண்ணுக்கு பெயரில்லையா....உயிரை காப்பாற்றிய நன்றி வேண்டும்..என்பது..
அதை விட ...நான் கூட உடனே குதித்து இருக்கமாட்டேன் என்று தன்னை விட அவளோட உயர்வை ஏற்ற மனப்பக்குவம்....வயதானால் கூட வருவதில்லை சிலருக்கு...அவன் அப்பாவே எடுத்துக்காட்டு.
அவளாக வரமாட்டாள் என்று அவளை பற்றி தெரிந்து வைத்திருக்கிறானே..
அம்மை மகன் உலகில் தனக்கிடமே இல்லை என உணருதல் ...
நம்மளவு கூட நினைக்க மாட்டாள் என ஒத்துக்கொள்வது....
அவர்களை தொந்தரவு பண்ணாமல்...பகலில் வர வேண்டும்....என அதிகப்படி சுற்றி போனது....என நிறைய படிகள் ..மளமளவென ஏறிவிட்டான்.
அவளோட வாழ்வோமா...என்று அறியவில்லை ...மகன் மனதில் வந்துவிட்டான்...அவன் என் உரிமை என்று நினைக்காது....அவளது மனதை இனி கண்டிப்பாக மதிப்பான் என்று தோணுது.....நல்ல எபி மல்லி
MY SWEETEST, பொன்ஸ் டியர்
ரொம்ப சூப்பரா, எக்ஸ்லண்ட்டா, நம்ம மல்லி செல்லத்தோட,
இந்தக் கதையை, லவ்லியாக சொல்லி விட்டீர்கள்,
பொன்ஸ் செல்லம்
I LOVE YOU VERY MUCH, MY DARLING, பொன்ஸ் டியர்
 

sindu

Well-Known Member
அப்படியல்ல மேகலை நான் விமர்சனம் எழுதிய SJM & NEY இரண்டிலும் கதாநாயகி நாயகனால் துன்பப்படுவது போல் அமைந்துவிட்டது. அதனால் நாயகியின் கண்ணோட்டத்தில் இருந்து விமசிக்க வேண்டியுள்ளது.

இதுவே பூவையின் நெஞ்சம் கதையை இதுபோன்று படித்திருந்தால் நிச்சயம் நாயகனுக்கு ஆதரவாக தான் பேசி இருப்பேன்:)

மல்லி வரும் காலத்தில் அப்படியோர் கதை எழுதினால் நிச்சயம் உங்களுக்கு புரியும்.

கமலா சடகோபன் எழுதிய கதவு என்ற நாவலில் எனக்கு கதாநாயகன் மாதுவை தான் பிடிக்கும். நாயகியை அப்படியே அப்பனும் போல தோன்றும். :oops:

நாயகியால் நாயகன் பாதிக்கப்படுவது போன்ற நாவல்கள் அவ்வளவாக வருவதில்லை.

அநேகமாக ராணிமாவின் கருத்தும் இதுவாக தான் இருக்கும் என நினைக்கிறேன்.:)
poovai nenjam vaidhegi kooda mannithu vidalam

kathavu heroine, happa enna oru adam... I also hate that heroine...

athae maathiri sivasankari "ver illatha marangal" hero, heroine rendu peraiyum pidikathu
 

ThangaMalar

Well-Known Member
OOoooh....My ......
அற்புதம் ...அருமை இது .....:):):)


பொறியாளனாய் ஆனதால்
பெரியவன் ஆனேனோ
கர்வத்தால்
பெரியவன் ஆனேனோ


சொல்லே என்றாலும்
வளர்த்தது என்றாலும்
ஏனிங்கே வந்தது
கணக்கு ஏனிங்கே வந்தது


சுந்தரியின் சுந்தரனாம்
சுந்தரியை விட்டபின்பு
வெறும் எந்திரனாய் மாறி


பக்கவாட்டில் பார்த்தாலும்
பக்கம் நின்று பார்த்தாலும்
எட்டி எட்டி பார்த்தாலும்
ஏக்கம் கொண்டு பார்க்கவில்லை
அவளை ஏக்கத்தில் பார்க்கவில்லை
முளைத்த விதை முகம் பார்க்கவில்லை
நான் ஏக்கத்தில் பார்க்கவில்லை


தந்தையை எதிர்ப்பது
தாயென்று வரும் போது மட்டுமா
சுந்தரியை தாரமாக்கும் போதில்லையா
வார்த்தைகளை மீதம் பிடிக்க சொன்னாயே
நீ உன் வாழ்வின் மீதியை எப்போது பிடிப்பாய்


மலையேற வேண்டாம்
கடல் தாண்ட வேண்டாம்
ஊர் தாண்டி வா
மண் சேர வா
பெண் வருவாள் பின்னே
ஆனால் முன்னே
நீ போராட வேண்டுமடா கண்ணா
இன்னும்
போராட வேண்டுமடா கண்ணா
செம செம செம உமா...
 

banumathi jayaraman

Well-Known Member
இன்று வரை நான்
விமலா

அழகால் வந்தேன் ரோகினியாக
சந்திரனின் ரோகினியாக


வந்தது இரு மகவு
ஆண் மகவு என் நிழலே
அழகிலும் என் நிழலே
என் மகனின் முதலாக
தாயவள் இருக்கிறேன்
மன்னவனோ நிந்தித்தாலும்
என்மகனின் அன்பினாலே
மகிழ்வேன்

சுற்றமே ஆனாலும்
சூழவே இருந்தாலும்
மற்றவர்கள் பின்னே
நானிங்கே முன்னே
இதுவே என் எண்ணம்
அதுவே என் திண்ணம்


மகனின் மணத்தை
பணம் கொண்டு
கண்டிட்டார் என்னவர்
தன்னது மட்டும் அழகாயிருக்க
முன்னவனின் மனைவியோ
அழகியில்லை என் சொல்ல
வெளுப்புமில்லை கறுப்புமில்லை
சுந்தரியின் சுந்தரத்தில்
எனக்கு ஒரு விருப்புமில்லை
பெண்ணவளை வைத்திருக்க
மனதில்லை
இங்க வாழவிடவும்
விருப்பமில்லை
எனக்கும் வாழ விருப்பமில்லை
காரணம் கூறவில்லை
இப்போது காரணம் கூறவில்லை
காத்திருக்க கூறுகிறேன்
சிறிது பொறுத்திருக்க கூறுகிறேன்


என் எண்ணம் கண்டு
பின் பெண் வண்ணம் கண்டு
கூறுவீர் நியாயத்தை
என் பக்க நியாயத்தை
ஹய்யோ, இந்த கலரைப் பார்த்தாலே, எனக்கு மிகவும்
பயமாக இருக்கே, மீரா செல்லம்
'' காளி, '' நீலி, '' சூரி, '' மகமாயி,
ஆனால் நம்ம விமலா டியருக்கு இந்த நிறம் மிகவும்
பொருத்தம் தான், மீரா டியர்
அவங்க மனசைப் போலவே! மீரா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
இன்று வரை நான்
கண்ணன் நான்
துரைக்கண்ணன் நான்
பாதி முன்பு சொன்னேன்
மீதி இங்கே சொல்வேன்


பொறியாளனாய் ஆனதால்
பெரியவன் ஆனேனோ
கர்வத்தால்
பெரியவன் ஆனேனோ
தந்தையின் சொற்கள்
சவுக்கடி தான் எப்போதும்
ஆம்
என் தந்தையின் சொற்கள்
சவுக்கடி தான் எப்போதும்
எனக்கு மட்டுமல்ல
சேதாரம் பொதுவே
சொல்லே என்றாலும்
வளர்த்தது என்றாலும்
ஏனிங்கே வந்தது
கணக்கு ஏனிங்கே வந்தது
வந்தபின்னே வார்த்தையை
தாண்டுதல் முடியுமோ நம்மால்
இல்லை
தாக்கம் தான் குறையுமோ


சுந்தரியின் சுந்தரனாம்
சுந்தரியை விட்டபின்பு
வெறும் எந்திரனாய் மாறி
உழைத்தேன் மீட்க
சேர்த்தேன் பணத்தை
மறந்தேன் உறவை
பிரிந்தேன் அவளை


பிடிக்கவில்லை அவளை
பார்க்க மட்டுமல்ல
நினைக்கவும் தான்
அன்றும் பிடிக்கவில்லை
வாழ பிடிக்கவில்லை
இன்றும் தெரியவில்லை
கூடி வாழ தெரியவில்லை
கூடி வாழ்வதா
என்றே தெரியவில்லை


பக்கவாட்டில் பார்த்தாலும்
பக்கம் நின்று பார்த்தாலும்
எட்டி எட்டி பார்த்தாலும்
ஏக்கம் கொண்டு பார்க்கவில்லை
அவளை ஏக்கத்தில் பார்க்கவில்லை
முளைத்த விதை முகம் பார்க்கவில்லை
நான் ஏக்கத்தில் பார்க்கவில்லை
அன்று வந்த அன்று
ஆனால் இன்று
அவனை தூக்கத்திலும் மறக்கவில்லை
தொலைவில் இருந்தாலும்
தொடாமல் இருந்தாலும்
தூக்காமல் போனாலும்
மன்னன் அவன் இன்று
என் உலகின் மன்னனவன்
பற்றுவிடுமோ விழுது
விட்டுவிலகுமோ உறவு




போராட வேண்டுமடா கண்ணா
போராட வேண்டும் நீ
சுற்றி நீ போனாலும்
வழி சுற்றி நீ போனாலும்
சுந்தரியின் பாதையிலே போனாயே
சீர்கெட்ட வழிவிட்டு
இப்போது
சீரான வழி தொட்டு போனாயே
நன்று
நீ போராட வேண்டுமடா கண்ணா
இன்னும்
போராட வேண்டுமடா கண்ணா


தந்தையை எதிர்ப்பது
தாயென்று வரும் போது மட்டுமா
சுந்தரியை தாரமாக்கும் போதில்லையா
வார்த்தைகளை மீதம் பிடிக்க சொன்னாயே
நீ உன் வாழ்வின் மீதியை எப்போது பிடிப்பாய்
பெண்ணவள் கல்லவள் இப்போது
கல்லுக்குள் ஈரமாய்
அவளின் கவிதை அபி அவனிருக்க
ஈரத்தினால் அடையாமல்
உளியால் உடைத்து விடு
காதலெனும் உளியால் உடைத்து விடு
அதை கண்டறிய என் செய்வாய்
அகத்தை அறியாமல்
அகந்தை அகற்றாமல்
சினமே வைத்து
மனதை பாராமல்
குணத்தை எண்ணாமல்
உளியது கிடைக்காது
வலியது போகாது
பெண்ணவள் வலியது போகாது


மலையேற வேண்டாம்
கடல் தாண்ட வேண்டாம்
ஊர் தாண்டி வா
மண் சேர வா
பெண் வருவாள் பின்னே
ஆனால் முன்னே
நீ போராட வேண்டுமடா கண்ணா
இன்னும்
போராட வேண்டுமடா கண்ணா
ஹா, ஹா, காதலுக்கு நீல நிறம் தான், பொருந்துமோ, மீரா
டியர்?
இந்த ப்ளூ நிறத்தைப் பார்த்த பிறகாவது, நம்ம
துரைக்கண்ணன் டியருக்கும், நம்ம சுந்தரி செல்லத்துக்கும்
காதல் வருமா, மீரா செல்லம்?
சர்வமும் மல்லியே அறிவார், மீரா டியர்
 

Sundaramuma

Well-Known Member
ஹா, ஹா, காதலுக்கு நீல நிறம் தான், பொருந்துமோ, மீரா
டியர்?
இந்த ப்ளூ நிறத்தைப் பார்த்த பிறகாவது, நம்ம
துரைக்கண்ணன் டியருக்கும், நம்ம சுந்தரி செல்லத்துக்கும்
காதல் வருமா, மீரா செல்லம்?
சர்வமும் மல்லியே அறிவார், மீரா டியர்
Blue is the colour of truth. Banu :):):)
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் ...பொன்ஸ்:):):)
இன்னும் பல படிகள் ஏறணும்..... ஏறுவான்.....
நன்றி உமா....ஊக்கப்படுத்துவதில் உங்களை அடிச்சிக்கவே முடியாது உமா...ரெம்ப நன்றி...தளராத உங்கள் பணி மேலும் சிறக்கட்டும்..வாழ்க வளமுடன்
:)
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
MY SWEETEST, பொன்ஸ் டியர்
ரொம்ப சூப்பரா, எக்ஸ்லண்ட்டா, நம்ம மல்லி செல்லத்தோட,
இந்தக் கதையை, லவ்லியாக சொல்லி விட்டீர்கள்,
பொன்ஸ் செல்லம்
I LOVE YOU VERY MUCH, MY DARLING, பொன்ஸ் டியர்
நன்றி பானு..ஐ லவ் யூ டியர் பானு...
:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top