E5 Nee Enbathu Yaathenil

Advertisement

Sundaramuma

Well-Known Member
இதுக்கு என்னோட பதில் சரியா தெரியல..
ஆனா இது நான் பீல் பன்னது..

அந்த நாவல் வர வரைக்கும் நாவல் கதாநாயகிக்குனு ஒரு வரைமுறை இருந்துச்சு..

நல்லவங்க நேர்மை பண்பு பனிவு...
அச்சம் மடம் நானம்..
உண்மையா நாவல்ல மட்டும் பார்க்கிர
சித்தரிக்க படுகிற கதாபாத்திரங்கள்..

இதை எல்லாம் ஒடைச்சிட்டு வந்த
கதாபாத்திரம் தான்..
அன்னலஷ்மி..
ஸ்பாயில்ட் சைல்ட ஹீரோயினா போட்டு
நாவல்கள்ள மாற்றம் கொண்டுவந்தாங்க..

Realism..
தப்பு பன்னாம இருக்க முடியாது..
Hero heroine ah இருந்தாலும்..
அது தான் அவங்க சக்ஸஸ்..

First change over நாவல் அதுனால..
அன்னலக்ஷமி பெஸ்ட்னு தோன்றும்..
True.....
 

banumathi jayaraman

Well-Known Member
Hi friendssss,

Herecomes the 5 th episode of nee enbathu yathenil

EPISODE 5

Sorry friends, like podalai yaarukkum pathil kodukkalai
Niraiya velai college la veetla
Ithukku naduvula naan theeyaa velai seiyyaraen kathai mudikka
So only
Please dont mistake
Mudikkanum perfect aa nnu antha tesion vera

Hope to be atleast good
Happy reading friends.
லைக்'' போடாவிட்டால் பரவாயில்லை, மல்லி டியர்
பதில்'' கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, மல்லி செல்லம்
நீங்கள் நாவலை மட்டும், கொடுத்தால் போதும், மல்லி டியர்
காலேஜில், வீட்டில், குழந்தைகளுடன், என்று எத்தனையோ வேலைகளுக்கிடையில், எங்களுக்காக, நீங்கள் இவ்வளவு
அழகாக, அருமை, அருமையான, கதைகளை/நாவல்களை
தருவதே, எங்களுக்கு மிகவும் சந்தோசம், மல்லி செல்லம்
நேரம் இருக்கும்பொழுது ''லைக்'', பதில்'' எல்லாம் போடுங்க
நேரம் இல்லாவிட்டால், வேண்டாம், மல்லி டியர்
YOU NEED NOT WORRY, மல்லி செல்லம்
TAKE YOUR OWN TIME AND COME ASAP, மல்லி டியர்
 

Sundaramuma

Well-Known Member
உண்மைதான், மீரா டியர்
இவன்தான் முதலில் வரணும், மீரா செல்லம்
அவளை தாழ்வாக எண்ணுவதற்கு, கண்ணனுக்கு
தகுதியில்லை, மீரா டியர்
அழகும் நிறமும் மட்டும் சோறு போடாது, மீரா செல்லம்
குணம், மனம் வேண்டும், மீரா டியர்
இது இரண்டும் நம்ம சுந்தரிக்கிட்ட நிறையவே இருக்கு, உனக்கு வேணுமா, துரை ராசா?
உங்க கமெண்ட் படிக்கறதே ஒரு சுகமான அனுபவம் ... பானு :D:D:D
அதுவும் இப்போ தமிழ்ல பின்னுறீங்க பா ......
 

banumathi jayaraman

Well-Known Member
எனக்கு இந்த epi படிச்சு கொஞ்சம் mixed feelings (உமா மாம் HIFI )
அப்புறம் உங்க cmts உம் படிச்சப்புறம்
கொஞ்சம் எனக்கு புரிஞ்ச அளவில ஒவ்வொரு charecterayum
இன்று வரை அவர்களின் எண்ணங்களை
வைத்து சொல்லி இருக்கிறேன்


இன்று வரை நான்

சந்திரன் நான்
வளர்ந்து பின் தேயும் அல்ல
தேய்ந்து வளரும் பிறை சந்திரன் நான்
ஆம்
தேய்ந்து போனேன் மகனின் விவாகரத்தால்
வளருவேன் மகனின் மறுவாழ்வால்
பௌர்ணமி ஆவேன் பேரனின் வரவால்


மனைவியின் அழகு கண்டேன்
நண்பனின் பணம் கண்டேன்
மகனின் மனம் தவிர்த்தேன்
மருமகளை மறந்தே விட்டேன்
பேரனை காண தவிக்கிறேன் இன்று


சொல்லின் கூர்வாளால்
வெட்ட தயங்கவுமில்லை நான்
யாரையும் கொட்டவும் தயங்கவுமில்லை
தப்பென்று தோணவில்லை
அது தவறென்று அறியவுமில்லை நான்
அதற்கு காலம் இன்னும் கனியவில்லை
குணத்தை பார்க்கவில்லை
யாரின் குணத்தையும் பார்க்கவில்லை
அதற்கு காலம் இன்னும் கனியவில்லை
ரொம்பவே அழகாக; வெகு அருமையாக சொல்லியிருக்கீங்க,
மீரா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
இன்று வரை நான்
விமலா

அழகால் வந்தேன் ரோகினியாக
சந்திரனின் ரோகினியாக


வந்தது இரு மகவு
ஆண் மகவு என் நிழலே
அழகிலும் என் நிழலே
என் மகனின் முதலாக
தாயவள் இருக்கிறேன்
மன்னவனோ நிந்தித்தாலும்
என்மகனின் அன்பினாலே
மகிழ்வேன்

சுற்றமே ஆனாலும்
சூழவே இருந்தாலும்
மற்றவர்கள் பின்னே
நானிங்கே முன்னே
இதுவே என் எண்ணம்
அதுவே என் திண்ணம்


மகனின் மணத்தை
பணம் கொண்டு
கண்டிட்டார் என்னவர்
தன்னது மட்டும் அழகாயிருக்க
முன்னவனின் மனைவியோ
அழகியில்லை என் சொல்ல
வெளுப்புமில்லை கறுப்புமில்லை
சுந்தரியின் சுந்தரத்தில்
எனக்கு ஒரு விருப்புமில்லை
பெண்ணவளை வைத்திருக்க
மனதில்லை
இங்க வாழவிடவும்
விருப்பமில்லை
எனக்கும் வாழ விருப்பமில்லை
காரணம் கூறவில்லை
இப்போது காரணம் கூறவில்லை
காத்திருக்க கூறுகிறேன்
சிறிது பொறுத்திருக்க கூறுகிறேன்


என் எண்ணம் கண்டு
பின் பெண் வண்ணம் கண்டு
கூறுவீர் நியாயத்தை
என் பக்க நியாயத்தை
ஹய்யோ, எவ்வளோ அழகா சொல்லிட்டீங்க, மீரா டியர்
ஆனால், எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும், மீரா செல்லம்
என்ன நியாயம் சொல்லணும், மீரா டியர்?
யாருக்கு, மீரா செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
என்னா ஒரு வில்லதனம்
பஸ் கிளம்பிவிட்டது,ராமனுக்கு மழிச்சி தாங்க முடியால,ஜனகராஜ்போல் ஒடானும்,சத்தம் போடணுனும்என்று, “,என் பொண்டாட்டி ஊருக்கு போயிடா,”னு,குதிக்கனும்போல் இருத்தது,சந்தோசமாக வீடு வந்தான்.குளித்து விட்டு சமையல் அறை சென்றான்.அங்கு அடுப்பு அருகே ஒரு கடிதம் இருத்தது.எடுத்தான், பிரித்தான், படித்தான், மயங்கிவிழுந்தான். கடிதத்தில், ‘நான் எங்க அம்மா வீட்டுக்கு குழந்தையுடன் போகிறேன். திரும்பிவர 1௦ நாள்கள் ஆகும்,எனவே நண்பர்களை அழைத்து கொட்டமடிக்க வேண்டாம்,போனமுறை ஷோபா பின்புறம் நாலு பாட்டிலும்,சிகரெட்டு பாக்கெட்டும் ஏடுத்தேன்.வேலைக்காரிக்கு சம்பளம் தந்தச்சி, உங்க தாரளமனசைகாட்டவேண்டாம்,காலையில் பேப்பர் போட்டச்சனு பக்கதுவீட்டுலகேட்கவேணாம்,நமக்கு வேறா பேப்பர்காரங்க,சமையல்கட்டு பக்கம் போகவேணாம்,சிங்க்கை காவிகலருக்கு மாற்றினா சும்மா இருக்கமாட்டேன்.வாக்கிங் போகும் போது T.SHIRT போடவும்,ஜிப்பா வேணாம்.ஜிப்பா கலரும்,சுடிதார் கலரும் ஒரே மாதிரியாக இருக்கும்.அன்னைகி செல்வி சிரிச்சதே போதும்.food coupon, credit card என்னிடம் இருக்கு,பிரோவை உருட்டவேண்டாம்.ரெண்டு security card கும் 100 ரூ கொடுத்துள்ளேன்.நீங்க லேட்டா வந்தா கதவைத்திறக்கவேணாம்என்று .பால் ஒரு வாரத்துக்கு வேண்டாம் என்று கூறியுள்ளேன் வீணா,ஸீன் போடாம வெளியபோய் சாப்பிடவும்.உங்க உள்ளாடைகள் ப்ரோவில் வலது பக்கமும்,பசங்களோடது இடபக்கமும் இருக்கு மாற்றி போட்டு புலம்பதிங்க,தூங்கி எழுத்து பால்கனி பக்கம் போய் பல் விளக்கதீங்க,AM,PM பார்த்து செய்ங்க.என் தங்கச்சி பிறந்த நாள் முடிந்து விட்டது,வீனா நைட்டுல போன் பண்ணி வழியவேணாம்,என் தோழிங்க யாரும் ஊரில் இல்லை.உங்க உடம்பு நல்ல இருக்கு,அந்த லேடி டாக்டரை போய் பார்க்கவேணாம்.பத்து நாளைக்கு wifi cute,கம்ப்யூட்டரில் password மாற்றிவிட்டேன்.கடைசியாக ஒன்று நான் எப்போது வேணாலும் வருவேன்.புத்திசாலிதனாமாக நடப்பதகா நினைக்கவேணாம் என்று இருந்தது.{FACEBOOKல் பார்ந்த துணுக்கை வைத்து எழுதிய சிறு கதை}
ஹா, ஹா, சூப்பர், சகோதரரே
 

banumathi jayaraman

Well-Known Member
இன்று வரை நான்
கண்ணன் நான்
துரைக்கண்ணன் நான்
பாதி முன்பு சொன்னேன்
மீதி இங்கே சொல்வேன்


பொறியாளனாய் ஆனதால்
பெரியவன் ஆனேனோ
கர்வத்தால்
பெரியவன் ஆனேனோ
தந்தையின் சொற்கள்
சவுக்கடி தான் எப்போதும்
ஆம்
என் தந்தையின் சொற்கள்
சவுக்கடி தான் எப்போதும்
எனக்கு மட்டுமல்ல
சேதாரம் பொதுவே
சொல்லே என்றாலும்
வளர்த்தது என்றாலும்
ஏனிங்கே வந்தது
கணக்கு ஏனிங்கே வந்தது
வந்தபின்னே வார்த்தையை
தாண்டுதல் முடியுமோ நம்மால்
இல்லை
தாக்கம் தான் குறையுமோ


சுந்தரியின் சுந்தரனாம்
சுந்தரியை விட்டபின்பு
வெறும் எந்திரனாய் மாறி
உழைத்தேன் மீட்க
சேர்த்தேன் பணத்தை
மறந்தேன் உறவை
பிரிந்தேன் அவளை


பிடிக்கவில்லை அவளை
பார்க்க மட்டுமல்ல
நினைக்கவும் தான்
அன்றும் பிடிக்கவில்லை
வாழ பிடிக்கவில்லை
இன்றும் தெரியவில்லை
கூடி வாழ தெரியவில்லை
கூடி வாழ்வதா
என்றே தெரியவில்லை


பக்கவாட்டில் பார்த்தாலும்
பக்கம் நின்று பார்த்தாலும்
எட்டி எட்டி பார்த்தாலும்
ஏக்கம் கொண்டு பார்க்கவில்லை
அவளை ஏக்கத்தில் பார்க்கவில்லை
முளைத்த விதை முகம் பார்க்கவில்லை
நான் ஏக்கத்தில் பார்க்கவில்லை
அன்று வந்த அன்று
ஆனால் இன்று
அவனை தூக்கத்திலும் மறக்கவில்லை
தொலைவில் இருந்தாலும்
தொடாமல் இருந்தாலும்
தூக்காமல் போனாலும்
மன்னன் அவன் இன்று
என் உலகின் மன்னனவன்
பற்றுவிடுமோ விழுது
விட்டுவிலகுமோ உறவு




போராட வேண்டுமடா கண்ணா
போராட வேண்டும் நீ
சுற்றி நீ போனாலும்
வழி சுற்றி நீ போனாலும்
சுந்தரியின் பாதையிலே போனாயே
சீர்கெட்ட வழிவிட்டு
இப்போது
சீரான வழி தொட்டு போனாயே
நன்று
நீ போராட வேண்டுமடா கண்ணா
இன்னும்
போராட வேண்டுமடா கண்ணா


தந்தையை எதிர்ப்பது
தாயென்று வரும் போது மட்டுமா
சுந்தரியை தாரமாக்கும் போதில்லையா
வார்த்தைகளை மீதம் பிடிக்க சொன்னாயே
நீ உன் வாழ்வின் மீதியை எப்போது பிடிப்பாய்
பெண்ணவள் கல்லவள் இப்போது
கல்லுக்குள் ஈரமாய்
அவளின் கவிதை அபி அவனிருக்க
ஈரத்தினால் அடையாமல்
உளியால் உடைத்து விடு
காதலெனும் உளியால் உடைத்து விடு
அதை கண்டறிய என் செய்வாய்
அகத்தை அறியாமல்
அகந்தை அகற்றாமல்
சினமே வைத்து
மனதை பாராமல்
குணத்தை எண்ணாமல்
உளியது கிடைக்காது
வலியது போகாது
பெண்ணவள் வலியது போகாது


மலையேற வேண்டாம்
கடல் தாண்ட வேண்டாம்
ஊர் தாண்டி வா
மண் சேர வா
பெண் வருவாள் பின்னே
ஆனால் முன்னே
நீ போராட வேண்டுமடா கண்ணா
இன்னும்
போராட வேண்டுமடா கண்ணா
ரொம்பவே லவ்லியாக, சொன்னீங்க, மீரா டியர்
ஆம்.
கண்டிப்பாக, துரைக்கண்ணன் இழந்தவற்றைப் பெற
வேண்டி (நான் சொல்லுவது மனைவி, மகன், and வாழ்க்கை) போராடத்தான் வேண்டும், மீரா செல்லம்
பார்ப்போம், ஜெயிப்பானா என்று, மீரா டியர்?
நம்ம மல்லி டியர், ஜெயிக்க வைத்துடுவாங்க,
மீரா செல்லம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top