நேச நதி -13

Advertisement

உதயா

Well-Known Member
:p:D:D... எப்போதும் அவனுக்கு விருப்பமானதை செய்யும் போது ஏற்படும் எதிர்ப்பு தானே..;)

அதனால் வழக்கமா நடக்குற விஷயமா தான் அவனுக்கு தெரியும்...

பாவனா உடனே போகலியே... ஒரு நாளோ...?இரண்டு நாட்களோ...? முழு நேரமும் அவளை மறந்து! !??? தானே நின்றான்... அப்போ இது தேவைதான்...​
ஒரு நாள் பாவனாவை விஜய் கவனிக்கல என்றால் அவனை விட்டுட்டு போயிடுவாளா அதுவும் அவனோட அம்மா உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும்போது அதற்கு காரணமும் அவங்க இரண்டு பேர் தான் எனும்போது விஜய் அம்மாவுக்கு என்ன ஆச்சு என்று தெரிஞ்சுக்கிற வரைக்கு இருந்துதானே ஆகணும்.
பாவனாவை அவனோட ப்ரண்ட் வீட்டில் தான் பாதுகாப்பாக தங்க வச்சிருந்தான். பிறந்ததில் இருந்தே இவளை தனியாக அனாதை மாதிரி விட்ட அப்பன் ரமணனை நம்பி போவாள். இவள் அம்மாவுக்கு கல்யாணம் ஆனவுடன் கூட பொண்ணு தனியாக இருப்பாள் என்று கவலை படாத அவ அப்பனை நம்பி அவன் சொன்ன பேச்சு கேட்பாள் ஆனால் அந்த நேரத்தில் அவள் கூடவே இருந்து அவளை பார்த்துக்கிட்ட விஜயை விட்டுட்டு போய்விடுவாளா நல்லா இருக்கு உங்கள் நியாயம். இவ அம்மா கல்யாணம் செய்ததும் விஜய்கிட்ட வந்து எப்படி எல்லாம் அழுதாள் எப்போது விஜய்கிட்ட பேசினாலும் தற்கொலை பண்ண போற மாதிரி தான் பேசுவாள்.‌ அதனால் தான் விஜய் இவ்வளவு அவசரமாக கல்யாணம் செய்தான் ஏன் இப்போது கூட ரமணன் ப்ரணவ் கிட்ட பேசும்போது கூட அவள் தப்பான முடிவு எடுத்துடுவாளோன்னு பயமாக இருக்கு அவ நல்லா இருக்கிறாளான்னு தானே கேட்கிறான் அந்த அளவு அவனுக்கு சாவு பயம் காட்டி வைத்திருகாகிறாள். விஜய் மத்தவங்க விஷயத்தில் எப்படி இருந்தாலும் பாவனா விஷயத்தில் முழுக்க முழுக்க அவளுக்கு ஆதரவாக தான் இருந்தான். அவள் கஷ்ட படும்போது எல்லாம் விஜய் கூட இருந்தான் இப்போ அவனுக்கு ஒரு கஷ்டம் வரும்போது அவள்தான ஆதரவா இருக்கணும் அந்த கஷ்டமும் பாவனாவுக்கு இந்த சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கௌரவமான அடையாளமும் கிடைக்கணும் என்பதற்கு தான் இவ்வளவு கஷ்டமும் அனுபவிக்கிறான். இதில் கூட துணையாக இல்லை என்றால் அவள் எல்லாம் என்ன ஜென்மம்.

இப்போது கூட ரமணன் அவளை தலைமறைவாக வைத்து தான் உதவி செய்கிறானே தவிர தன்னோட வீட்டுக்கு அழைச்சுட்டு போய் என்னோட மகள்ன்னு அடையாளம் கொடுக்க விரும்பல ஆனால் விஜய் ஊரறிய தன்னோட மனைவின்னு கௌரவமான அடையாளம் தான் கொடுக்கிறான் அது கூட புரியலையா அவளுக்கு.
இனிமேல் என்ன சினிமாவில் கதை புத்தகத்தில் தான் ரொம்ப மலிவாக கிடைக்கிற வேலை IAS தான் இந்த பாவனாவும் கலேட்டர் ஆகி திரும்ப வருவாங்க விஜயும் ஏத்துக்கனும் .
எனக்கு இந்த மாதிரி கதைகளும் பிடிக்காது கஷ்டப்படும் போது விட்டுட்டு போயிட்டு அவங்க அந்த கஷ்டத்திலும் பிரச்சினையிலும் தனியாக நின்னு போராடி மீண்டு நல்ல நிலைக்கு வந்த பிறகு அந்த ஓடி போனவங்க திரும்ப வருவாங்க இவனும் ஏத்துக்கிட்டு சந்தோஷமா வாழ்கிற மாதிரி முடிச்சுடு வாங்க
கஷ்டத்தில் கூட இல்லாத வாழ்க்கை துணை நல்லா இருக்கும் போது மட்டும் எதுக்கு
விஜய் அவனோட சந்தோஷத்திற்காக போராடல பாவனாவோட சந்தோஷத்திற்காக தான் போராடுகிறான் அதிலயே அவ கூட இல்லை. யார் என்னவேணாலும் சொல்லட்டும் அவள் விஜய் கூட உறுதியாக நின்றிருக்கணும்.
 

Sathya Velusamy

Well-Known Member
எப்போதும் அவனுக்கு விருப்பமானதை செய்யும் போது ஏற்படும் எதிர்ப்பு தானே
அவனுக்கு விருப்பமானதைத் தான் செய்தான்....ஆனா யாருக்காக செய்தான்.....யாருக்காக செய்தானோ அவளே அவனோட கஷ்டத்தில் கூட நிற்கலைனா அதற்கு என்ன அர்த்தம் ?????
அதனால் வழக்கமா நடக்குற விஷயமா தான் அவனுக்கு தெரியும்
அது எப்படிங்க குடும்பத்தை ஏமாற்றி அவளை மட்டும் முன் நிறுத்தி கல்யாணம் பண்ணும் போது வந்த எதிர்ப்பை ஒன்றாக எதிர் கொள்ளாம தாலியை கழட்டி கொடுத்துவிட்டு போறத எப்படி வழக்கமா நடக்கிற விஷயமா அவனுக்கு தெரியும்.....

பாவனா உடனே போகலியே... ஒரு நாளோ...?இரண்டு நாட்களோ...? முழு நேரமும் அவளை மறந்து! !??? தானே நின்றான்
மறந்தானா??? மறந்துவிட்டு ஊரை விட்டு ஓடியா போய்டான்.......அவளை அவனோட friend family ஓட தானே அனுப்பி வைத்தான்......
அந்த நேரத்தில் அங்க உயிருக்கு போராடற அம்மாவ தான பார்க்கனும்....அதுதானே நியாயம்.....அதுவும் அந்த நிகழ்வுக்கு மூல காரணமே இவங்க தான்னு போது .....

விஜய் அவனை பெத்தவங்களுக்கு தான் நம்பிக்கை துரோகம் செய்தான் .....அது கூட இவளுக்காக.....
ஆனா பாவனாக்கு அவன் எப்பொழுதும் நல்ல துணையாகத்தான் இருந்தான்
 

P.Barathi

Well-Known Member
விஜய் அவனோட முடிவிலா உறுதியா இருக்கான்.
நல்ல வேலை பிருந்தா தைரியமா முடிவெடுத்தா.
பெரியவங்க எல்லோரும் பிள்ளைகளை பொம்மைகள் மாதிரி நடத்தறாங்க.
விஜய் சொன்னமாதிரி அவனோட தனிமையான காத்திருப்பு பாவனாவுக்கு, அவனோட குடும்பத்துக்கு அவனோட உறுதிய உணர்த்தலாம்.
 

Nithi_lovesReading

Well-Known Member
பாவனா தானே போய் இருக்க வாய்ப்பே இல்லை. இது கண்டிப்பா அரங்கநாதன் + சியாமோட வேலையாதான் இருக்கும்.
பிருந்தா சூப்பர். அரங்கத்தோட ரியாக்ஷன் சொல்லிருந்தா நல்லா இருந்திருக்கும். ஸ்டெப்னி பிரசன்னா இல்லனா இவரே கல்யாணம் பண்ணிப்பாரோ? Irritating fellow...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top