கற்பூர முல்லை Episode 37

Advertisement

Jeevitha Ram prabhu

Active Member
மலர் 37

அடுத்த நாள் காலை தமிழ் வழக்கம் போல் அலுவலகத்தில் இருந்தாள். சுந்தர், அகிலன் இருவரும் மதியம் வருவதாக கூறி இருந்தனர். இருவருக்கும் மதிய உணவு அரேன்ஜ் செய்து இருந்தாள்.

மதியம் ஆனதும் முதல் ஆளாக வந்து சேர்ந்தான் அகிலன்..அவனை பார்த்ததும் என்னது.... இவ்வளவு சீக்கிரம் வந்து விட்டீர்கள் என்றாள். என் தேவதையை பார்க்க எப்பொழுது வந்தால்தான் என்ன....? என்று கேட்டான்.

என்ன....?இன்னும் சுந்தர் வரவில்லையா? என்று கேட்டான்.
இப்பொழுது தான் பேசினேன் இன்னும் அரை மணி நேரத்தில் வந்துவிடுவார் என்று கூறினாள்.
ஏதாவது சாப்பிடுகிறீர்களா...? என்று கேட்டாள். அவன் இல்லை எதுவும் வேண்டாம் என்றான்.
இன்னும் ஹாப் ஹவர் ஆகும் என்றால் அதுவரை நீ உன் வேலையை பாரு.... நான் உன்னையே பார்க்கிறேன் என்று கேலியாக கூறினான்.
அய்யோ..... இது ஆபீஸ் என்றாள் ....ஆமாம் அதனால் தான் நானும் அளவோடு இருக்கிறேன் என்று சிரித்தவாறு பதில் கூறினான். பின் அவளது வேலைகளை கவனிக்கலானாள். பேருக்கு கையில் புத்தகத்தை வைத்துக்கொண்டு அவள் வேலையாட்களிடம் வேலை சொல்லிக் கொண்டிருக்கும்போது யாரும் அறியாது அவளை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான்.

கரெக்டாக அரை மணி நேரத்தில் சுந்தரும் அவன் மனைவி உமாவும் அங்கு வந்து சேர்ந்தனர். தமிழுக்கு சுந்தர் வருவது மட்டுமே தெரியும் . ஆனால் அவனுடன் உமாவையும் பார்த்தது தமிழுக்கு ஆச்சரியமாக இருந்தது. உமா தமிழை பார்த்ததும் வந்து கட்டிக் கொண்டாள். எப்படி இருக்கிறீர்கள் தமிழ்? என்று கேட்டாள். இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்து விட்டு உங்களுக்கு உங்க எம்டி மட்டும்தான் தெரியும் எங்களையெல்லாம் தெரியவே தெரியாது. ஒரு போன் கூட பண்ணுவதே இல்லை சென்னை வந்த பிறகு என்று கூறினாள். அதெல்லாம் இல்லை கொஞ்சம் வேலை காரணமாக பிசியாக இருந்துவிட்டேன் அதுபோக இன்னொரு பிரான்சும் தொடங்கி உள்ளதால் கொஞ்சம் வேலை அதிகமாக இருந்தது என்று கூறினாள்.

பிறகுதான் அங்கிருந்த அகிலனை பார்த்து இவர் தான் உங்கள் அவரா.... என்று கேட்டவாறு அவனிடமும் நலம் விசாரித்தாள்.
அந்த நேரம் அங்கு வந்து சேர்ந்தான் கைலாஷ். கைலாஷ் வருவதும் தமிழுக்கு தெரியாது இது சுந்தரின் ஏற்பாடு. சுந்தர் தான் அவனை வர சொல்லி இருந்ததால் அவனும் வந்தான்.

அவன் அங்கு வந்து சேர்ந்ததும் நான்தான் தமிழ் இவனையும் வர சொன்னேன் என்று தமிழிடம் கூறினான்.

அடுத்து சரி வந்த வேலையை பார்க்கலாமா..... என்று உமாவிடம் கூறினான்... அவள் சரி என்று சொல்ல, தாங்கள் கொண்டு வந்திருந்த பையில் இருந்து இது கவர்களை எடுத்து வெளியில் வைத்தான். அந்த இரு கவர்களில் உடைகள் இருந்தது.தாம்பளம் எடுத்து பூ பழம் இவைகளை வைத்து அந்த இரு கவர்களையும் வைத்து அதன் மேல் தங்கையின் திருமண பத்திரிகையை வைத்து அகிலனையும் தமிழையும் ஒரு சேர நிறுத்தி இருவருக்கும் சுந்தரம் உமாவும் பத்திரிகை கொடுத்தனர்.

அதை பார்த்த தமிழ் என்ன சார் அடிக்கடி உங்கள் வீட்டுப் பெண் உங்கள் வீட்டுப் பெண் என்று கூறுவீர்கள் எனக்கே பத்திரிக்கையா...? என்று கேட்டாள்.

என்னதான் எங்கள் வீட்டு பெண்ணாக இருந்தாலும் எனக்கு ஒரு சகோதரி என்று கொடுத்திருந்தால் பத்திரிக்கை கொடுக்காமல் இருந்தால் சும்மா இருப்பாளா.... என்று சுந்தர் கேட்கவே தமிழுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை சரி என்று அகிலனும் தமிழும் பத்திரிக்கையை வாங்கிக் கொண்டனர்.
சுந்தரம் உமாவும் நீங்கள் இருவரும் கண்டிப்பாக கல்யாணத்திற்கு ஒரு வாரம் முன்னதாகவே வரவேண்டும் என்று கூறினர். அகிலனையும் கண்டிப்பாக நீங்களும் வர வேண்டும் என்று இரண்டு மூன்று முறை அழைத்தனர். கண்டிப்பாக வருகிறேன் என்று அகிலனும் கூறினான்.
பிறகு கைலாசுக்கும், அதே முறையில் பத்திரிக்கை கொடுத்தனர். கைலாஷ், சார் ...எனக்கு எதற்கு பத்திரிக்கை நீங்கள் வா என்று சொன்னால் அடுத்த நிமிடம் வரப்போகிறேன் என்று கூறினான். அது அப்படி இல்லை எதுவாக இருந்தாலும் ஒரு முறை என்று ஒன்று இருக்கிறது அல்லவா இதற்காகத்தான் உங்கள் இருவரையும் இன்றைக்கு இங்கு வர செய்தேன் என்று சுந்தர் கூறினான். சரி நான் கிளம்புகிறேன் என்று அவன் சொல்லிக்கொண்டு கிளம்பவே, தமிழ் இருங்கள் எல்லாருக்கும் லஞ்ச் அரேஞ்ச் செய்திருக்கிறேன் என்று கூற அனைவரும் டைனிங் ஹாலுக்கு சென்று சாப்பிட அமர்ந்தனர். இவர்கள் வருவதாக சொல்லவும் தமிழ் அனைத்தையும் ஸ்பெஷலாக ரெடி பண்ண சொல்லி இருந்தாள். தமிழ் பரிமாற மற்ற நால்வரும் சாப்பிட்டனர்.

சாப்பிட்டு முடித்ததும், சரி ஈவினிங் வருகிறேன் என்று கூறி அகில் அனைவரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பினான். அதனை தொடர்ந்து மற்ற அனைவரும் கிளம்பினர்.

மலரும்.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top