E5 Nee Enbathu Yaathenil

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அம்மா
முதல்ல இவன் வரணும்
அவள் எண்ணம் அது தான்
இவன் அவள் வீட்டை தாழ்வாக எண்ணியதும்
ஒரு காரணம்
உண்மைதான், மீரா டியர்
இவன்தான் முதலில் வரணும், மீரா செல்லம்
அவளை தாழ்வாக எண்ணுவதற்கு, கண்ணனுக்கு
தகுதியில்லை, மீரா டியர்
அழகும் நிறமும் மட்டும் சோறு போடாது, மீரா செல்லம்
குணம், மனம் வேண்டும், மீரா டியர்
இது இரண்டும் நம்ம சுந்தரிக்கிட்ட நிறையவே இருக்கு, உனக்கு வேணுமா, துரை ராசா?
 

Sundaramuma

Well-Known Member
பேரன் வந்ததும் தானே அம்மா
அப்படி மட்டும் இருக்காதுன்னு என்னோட எண்ணம் .....
நண்பரின் மகளும் கூட ......மருமகளின் கஷ்டம் நினைத்தவர் மனைவின் மன உணர்வுகளை நினைத்து பார்க்க தவறி விட்டார்....
 
S

semao

Guest
உண்மைதான், மீரா டியர்
இவன்தான் முதலில் வரணும், மீரா செல்லம்
அவளை தாழ்வாக எண்ணுவதற்கு, கண்ணனுக்கு
தகுதியில்லை, மீரா டியர்
அழகும் நிறமும் மட்டும் சோறு போடாது, மீரா செல்லம்
குணம், மனம் வேண்டும், மீரா டியர்
இது இரண்டும் நம்ம சுந்தரிக்கிட்ட நிறையவே இருக்கு, உனக்கு வேணுமா, துரை ராசா?
சூப்பரா
சொன்னீங்கம்மா
 

Sundaramuma

Well-Known Member
இன்று வரை நான்
கண்ணன் நான்
துரைக்கண்ணன் நான்
பாதி முன்பு சொன்னேன்
மீதி இங்கே சொல்வேன்


பொறியாளனாய் ஆனதால்
பெரியவன் ஆனேனோ
கர்வத்தால்
பெரியவன் ஆனேனோ
தந்தையின் சொற்கள்
சவுக்கடி தான் எப்போதும்
ஆம்
என் தந்தையின் சொற்கள்
சவுக்கடி தான் எப்போதும்
எனக்கு மட்டுமல்ல
சேதாரம் பொதுவே
சொல்லே என்றாலும்
வளர்த்தது என்றாலும்
ஏனிங்கே வந்தது
கணக்கு ஏனிங்கே வந்தது
வந்தபின்னே வார்த்தையை
தாண்டுதல் முடியுமோ நம்மால்
இல்லை
தாக்கம் தான் குறையுமோ


சுந்தரியின் சுந்தரனாம்
சுந்தரியை விட்டபின்பு
வெறும் எந்திரனாய் மாறி
உழைத்தேன் மீட்க
சேர்த்தேன் பணத்தை
மறந்தேன் உறவை
பிரிந்தேன் அவளை


பிடிக்கவில்லை அவளை
பார்க்க மட்டுமல்ல
நினைக்கவும் தான்
அன்றும் பிடிக்கவில்லை
வாழ பிடிக்கவில்லை
இன்றும் தெரியவில்லை
கூடி வாழ தெரியவில்லை
கூடி வாழ்வதா
என்றே தெரியவில்லை


பக்கவாட்டில் பார்த்தாலும்
பக்கம் நின்று பார்த்தாலும்
எட்டி எட்டி பார்த்தாலும்
ஏக்கம் கொண்டு பார்க்கவில்லை
அவளை ஏக்கத்தில் பார்க்கவில்லை
முளைத்த விதை முகம் பார்க்கவில்லை
நான் ஏக்கத்தில் பார்க்கவில்லை
அன்று வந்த அன்று
ஆனால் இன்று
அவனை தூக்கத்திலும் மறக்கவில்லை
தொலைவில் இருந்தாலும்
தொடாமல் இருந்தாலும்
தூக்காமல் போனாலும்
மன்னன் அவன் இன்று
என் உலகின் மன்னனவன்
பற்றுவிடுமோ விழுது
விட்டுவிலகுமோ உறவு




போராட வேண்டுமடா கண்ணா
போராட வேண்டும் நீ
சுற்றி நீ போனாலும்
வழி சுற்றி நீ போனாலும்
சுந்தரியின் பாதையிலே போனாயே
சீர்கெட்ட வழிவிட்டு
இப்போது
சீரான வழி தொட்டு போனாயே
நன்று
நீ போராட வேண்டுமடா கண்ணா
இன்னும்
போராட வேண்டுமடா கண்ணா


தந்தையை எதிர்ப்பது
தாயென்று வரும் போது மட்டுமா
சுந்தரியை தாரமாக்கும் போதில்லையா
வார்த்தைகளை மீதம் பிடிக்க சொன்னாயே
நீ உன் வாழ்வின் மீதியை எப்போது பிடிப்பாய்
பெண்ணவள் கல்லவள் இப்போது
கல்லுக்குள் ஈரமாய்
அவளின் கவிதை அபி அவனிருக்க
ஈரத்தினால் அடையாமல்
உளியால் உடைத்து விடு
காதலெனும் உளியால் உடைத்து விடு
அதை கண்டறிய என் செய்வாய்
அகத்தை அறியாமல்
அகந்தை அகற்றாமல்
சினமே வைத்து
மனதை பாராமல்
குணத்தை எண்ணாமல்
உளியது கிடைக்காது
வலியது போகாது
பெண்ணவள் வலியது போகாது


மலையேற வேண்டாம்
கடல் தாண்ட வேண்டாம்
ஊர் தாண்டி வா
மண் சேர வா
பெண் வருவாள் பின்னே
ஆனால் முன்னே
நீ போராட வேண்டுமடா கண்ணா
இன்னும்
போராட வேண்டுமடா கண்ணா

OOoooh....My ......
அற்புதம் ...அருமை இது .....:):):)


பொறியாளனாய் ஆனதால்
பெரியவன் ஆனேனோ
கர்வத்தால்
பெரியவன் ஆனேனோ

சொல்லே என்றாலும்
வளர்த்தது என்றாலும்
ஏனிங்கே வந்தது
கணக்கு ஏனிங்கே வந்தது

சுந்தரியின் சுந்தரனாம்
சுந்தரியை விட்டபின்பு
வெறும் எந்திரனாய் மாறி

பக்கவாட்டில் பார்த்தாலும்
பக்கம் நின்று பார்த்தாலும்
எட்டி எட்டி பார்த்தாலும்
ஏக்கம் கொண்டு பார்க்கவில்லை
அவளை ஏக்கத்தில் பார்க்கவில்லை
முளைத்த விதை முகம் பார்க்கவில்லை
நான் ஏக்கத்தில் பார்க்கவில்லை

தந்தையை எதிர்ப்பது
தாயென்று வரும் போது மட்டுமா
சுந்தரியை தாரமாக்கும் போதில்லையா
வார்த்தைகளை மீதம் பிடிக்க சொன்னாயே
நீ உன் வாழ்வின் மீதியை எப்போது பிடிப்பாய்

மலையேற வேண்டாம்
கடல் தாண்ட வேண்டாம்
ஊர் தாண்டி வா
மண் சேர வா
பெண் வருவாள் பின்னே
ஆனால் முன்னே
நீ போராட வேண்டுமடா கண்ணா
இன்னும்
போராட வேண்டுமடா கண்ணா
 

Ansadoss

Well-Known Member
E

Eswar ah thittadheenga madam
ஆயிரகணக்கானோர் படிக்கிறாங்க நூற்றுக்கணக்கானோர் ஈஸ்வரை ஆதரிக்கிறாங்க. ஒரு நாலு பேராவது அவனை திட்ட வேண்டாமா.

புத்தன் ஏசு காந்தி போன்ற மகான்களையே எதிர்க்க ஒரு கூட்டம் இருந்தது.

இந்த பித்தனை (வர்ஷி பித்தன்) திட்டுவது தவறா தோழி?

இருகை தட்டினால் தான் ஓசை. எல்லோரும் ஓரே மாதிரி விமர்சனம் எழுதினால் சுவாரசியம் இருக்காது தோழி. அவ்வபோது சிவகாசி பட்டாசு வெடிச்சா தான் ஜாலியா இருக்கும்.
 
S

semao

Guest
OOoooh....My ......
அற்புதம் ...அருமை இது .....:):):)


பொறியாளனாய் ஆனதால்
பெரியவன் ஆனேனோ
கர்வத்தால்
பெரியவன் ஆனேனோ


சொல்லே என்றாலும்
வளர்த்தது என்றாலும்
ஏனிங்கே வந்தது
கணக்கு ஏனிங்கே வந்தது


சுந்தரியின் சுந்தரனாம்
சுந்தரியை விட்டபின்பு
வெறும் எந்திரனாய் மாறி


பக்கவாட்டில் பார்த்தாலும்
பக்கம் நின்று பார்த்தாலும்
எட்டி எட்டி பார்த்தாலும்
ஏக்கம் கொண்டு பார்க்கவில்லை
அவளை ஏக்கத்தில் பார்க்கவில்லை
முளைத்த விதை முகம் பார்க்கவில்லை
நான் ஏக்கத்தில் பார்க்கவில்லை


தந்தையை எதிர்ப்பது
தாயென்று வரும் போது மட்டுமா
சுந்தரியை தாரமாக்கும் போதில்லையா
வார்த்தைகளை மீதம் பிடிக்க சொன்னாயே
நீ உன் வாழ்வின் மீதியை எப்போது பிடிப்பாய்


மலையேற வேண்டாம்
கடல் தாண்ட வேண்டாம்
ஊர் தாண்டி வா
மண் சேர வா
பெண் வருவாள் பின்னே
ஆனால் முன்னே
நீ போராட வேண்டுமடா கண்ணா
இன்னும்
போராட வேண்டுமடா கண்ணா

உங்கள் கைவண்ணத்தில் ரங்கோலி தான்
 

Sundaramuma

Well-Known Member
மல்லி,
துரை இங்கே வரக்காரணமே..கனகா..
அவர் தன் பொண்ணுக்கு வரன் அமைவதில் சிக்கல் என்று திட்டவே..
ப்ரச்னை என்று வந்தான்...
வந்தஅவனை அன்னை, தந்தை வரவேற்கவில்லை.
உடனே ஓடி வந்த சித்தப்பா..வருத்தமில்லாமல் பேசிய தங்கை..
இன்று அவனுக்கு ஊருக்கு வந்தப்பிள்ளை என்ற சமைக்கும் பாங்கு...இது தான் கூட்டு குடும்ப அழகு..கொண்டு விடவா என்று கேட்ட சித்தப்பா...எனக்கு பிடித்தது.
ஏன் வேண்டாம் சொன்னது...
ஆனால் வேற பொண்ணை நோக்க எண்ணாதது...
பாதிப்பு அந்த பொண்ணுக்கு தான் என்று அப்பாவிடமும்..
அந்தப் பொண்ணுக்கு பெயரில்லையா....உயிரை காப்பாற்றிய நன்றி வேண்டும்..என்பது..
அதை விட ...நான் கூட உடனே குதித்து இருக்கமாட்டேன் என்று தன்னை விட அவளோட உயர்வை ஏற்ற மனப்பக்குவம்....வயதானால் கூட வருவதில்லை சிலருக்கு...அவன் அப்பாவே எடுத்துக்காட்டு.
அவளாக வரமாட்டாள் என்று அவளை பற்றி தெரிந்து வைத்திருக்கிறானே..
அம்மை மகன் உலகில் தனக்கிடமே இல்லை என உணருதல் ...
நம்மளவு கூட நினைக்க மாட்டாள் என ஒத்துக்கொள்வது....
அவர்களை தொந்தரவு பண்ணாமல்...பகலில் வர வேண்டும்....என அதிகப்படி சுற்றி போனது....என நிறைய படிகள் ..மளமளவென ஏறிவிட்டான்.
அவளோட வாழ்வோமா...என்று அறியவில்லை ...மகன் மனதில் வந்துவிட்டான்...அவன் என் உரிமை என்று நினைக்காது....அவளது மனதை இனி கண்டிப்பாக மதிப்பான் என்று தோணுது.....நல்ல எபி மல்லி
சூப்பர் ...பொன்ஸ்:):):)
இன்னும் பல படிகள் ஏறணும்..... ஏறுவான்.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top