Uyirin ularal - episode 7

Advertisement

vishwapoomi

Writers Team
Tamil Novel Writer
உயிரின் உளறல் அத்தியாயம் 7

மும்பையில் இருந்து சென்னைக்கு வந்த அபியை " ஹாய் அம்மு " என்று பாதி அணைத்து வரவேற்றான் ரிஷி ட்ராலியை வாங்கிபடி.

அவனுடன் பிடிவாதமாய் வந்திருந்த ப்ரியாவின் கண்ணில் அனல் வீசியது.
" ஹாய் சின்னத்தான் எப்படி இருக்கீங்க, பார்த்து இரண்டு மாதம் ஆயிட்டு " என்றாள் அபி அவன் வரவேற்பை ஏற்று.

" அதான் தினமும் வீடியோ சாட் செய்தேனே" என்றான் ரிஷி.

அம்மு சிரிக்க " ஹாய் அபி " என்று சற்று இறுக கட்டி அணைத்தாள் அபியை ப்ரியா.

அந்த கட்டியணைப்பில் ஏதோ ஒரு செய்தி இருந்தது. வேறன்ன இதெல்லாம் இப்போ சகஜம் என்பதுதான். ரிஷியும் அணைத்தானே அதனால்தான்.

" ஹாய் ப்ரியா அக்கா " என்றாள் அபி.

" அபி எப்படி இளைச்சிட்ட, முகமே களையிழந்து போயிட்டு, வா வீட்டுக்கு போய் அக்கா கையாள சமைத்ததை ஒரு வாரம் சாப்பிட்டா போதும் பழையபடி ஆகிடுவ, ரிஷியிடம் நான் எவ்வளவோ சொன்னேன், நாம் இருவரும் சேர்ந்து மும்பைக்கு போய் அபியை கூப்பிட்டு வருவோம் என்று, கேட்டால் தானே, டைம் வேஸ்ட், அந்த நேரத்திற்கு உன்னை (ப்ரியா )சென்னையில் நாலு இடத்திற்கு கூட்டிட்டு போயிடுவேன் " என்று சொல்லிவிட்டார்." என்றாள் சிரித்தபடி.

ரிஷி எந்த உணர்ச்சியையும் காட்டாமல் சிரித்தபடி அமைதியாக நின்றான். அவனை பார்த்த அபி பதிலுக்கு சிரித்தாள். அந்த சிரிப்பு கண்டிப்பாக ப்ரியா சொன்னதை நம்பவில்லை என்றது.

" இல்ல நான் தான் வரவேண்டாம் என்றேன். மும்பையில் இருந்து சென்னைக்கு தனியே வருவதற்கு என்ன ? நான் இந்தியாவில் அநேக மாநிலங்களுக்கு என் பிரெண்ட்ஸுடன் போயிருக்கிறேன். அதனால் எனக்கு ட்ரவல் பியர் கிடையாது " என்றாள் அபி.

" என்ன பிரெண்ட்ஸுடனா, பரவாயில்லை அபி, என்னை இந்த சென்னையை தாண்ட விடமாட்டார்கள் என் அம்மா. அம்மா என்றாலே அப்படிதான், அதிக பாசம், கட்டுப்பாடு கொண்டவர்கள். பாவம் உனக்கு அது தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை " என்று பேச்சிலே தாக்கினாள் ப்ரியா.

" அம்மா இல்லை என்றால் என்ன ? எனக்கு என் அத்தை இருக்கிறார்கள், அப்புறம் என் சின்னத்தான், எனக்கு எங்கே என்ன பிரச்சனை என்றாலும் அடுத்த நொடியே வந்து நிற்பார் வேறென்ன ? சின்னத்தான் போகலாமா ? எனக்கு பசிக்கு போற வழியில் ஹோட்டலில் சாப்பாடு வாங்கி தாங்க, நாக்கு செத்து போயிட்டு தமிழ் நாட்டு சாப்பாடு இல்லாமல் " என்றாள் கண்ணில் இருந்த கண்ணாடியை கழற்றிவிட்டு கூலிங்க்ளாஸ் மாட்டியபடி.

ப்ரியாவுக்கு உள்ளே பற்றி எறிந்தது. பந்தை எப்படி வீசினாலும் சிக்ஸராக விளாசுகிறாளே, அக்கா ஏதோ சொன்னாள் கோழை , முதுகெலும்பு இல்லாத புழு என்று இவள் சீறும் பெண் சிங்கமாக இருக்கிறாள் என்று எண்ணினாள்.

அவர்களை ஏற்றிக்கொண்டு கார் ஒரு பெரிய ஹோட்டலில் போய் நின்றது. ரிஷிதான் உணவை ஆர்டர் கொடுத்தான். ப்ரியாவிடம் என்ன வேண்டும் என்று கேட்டவன் அபியிடம் எதையும் கேளாமல் அவனாகவே ஆர்டர் கொடுத்தான்.

" சின்னத்தான் என்ன இது ? உணவில் கூட என் ஆசைக்கு மதிப்பு கொடுக்கும் நீங்கள் அபியிடம் மட்டும் இப்படி நடக்கலாமா ? அவளுக்கு யாரும் இல்லை என்பதால் நீங்கள் வளர்க்கும் பெண்ணாக இருக்கலாம் அதற்காக இப்படியா ? அவளுக்கு உண்ணும் உணவில் கூட தேர்ந்தெடுக்கும் உரிமை இல்லையா ?" என்றாள் ப்ரியா.

' அட போடா, நீயும் உன் சொந்தமும், ஏதாவது சொல்லிவிட போகிறேன் நீயே பதிலை சொல்லு ' என்பதை போல பார்த்தாள் அபி ரிஷியை.

" ப்ரியா நீ என்னை வாடா போடான்னு கூட கூப்பிடு. ஆனால் முதலில் நீ சின்னத்தான் என்று என்னை அழைப்பதை நிறுத்து, அப்புறம் சாப்பிடும் இடத்தில் என்ன பாலிடிக்ஸ் ? அவளும் நானும் ஒரே வீட்டில் வளர்த்தவர்கள், நான் வளர்த்த பெண் அவள் அவளின் ஒவ்வொரு தேவையும் எனக்கு தெரியும். அதற்கு 'புரிதல் ' என்று சொல்லுவாங்க புரியுதா ? உன் உணவு வந்திடுச்சு சாப்பிடு. " என்று அவர்களின் உணவுக்காக காத்திருக்க தொடங்கினார்கள் மற்ற இருவரும்.

ப்ரியாவுக்கு உணவு தொண்டையில் இறங்க மறுத்தது. எதிரே இருக்கும் இருவரையும் கொல்ல வேண்டும் என்ற வெறி வந்தது.
ஆனாலும் அவள் வாய் சும்மா இருக்க மறுத்தது.

" சின்னத்தான் ஓஒ ஸாரி ரிஷி, நான் சின்னத்தான் என்று சொன்னால் மட்டும் பட்டிக்காடு மாதிரி இருக்கு, அபி மட்டும் அப்படி அழைக்கலாமா ?" என்று கேட்டாள் ப்ரியா.

" அவளும் நீயும் ஒன்னா " என்று ரிஷி பதில் கூற முயலவும் அபி முந்திக்கொண்டாள்.

" பிரியாக்கா நானும் நீங்களும் ஒன்றா ? நீங்கள் மாடல் க்கேல், சூப்பர் பிகர். நான் ஒரு சாதாரண பொண்ணு. அதான் சின்னத்தான் அப்படி சொல்றாரு, அப்படித்தானே " என்றாள் அபி ரிஷியை பார்த்து.

அவன் அவள் கூறிய பதிலில் உடன்பாடு இல்லாமல் அமைதியாக இருக்க அவனை உறுத்து பார்த்தாள் அபி, ரிஷியும் வேறு வழி இல்லாமல் " ஆமாம் " என்றான்.

அந்த பதில் ப்ரியாவை குளிர செய்தது. இன்று இவனுடன் வந்து இப்போதுதான் ஒரு நல்ல பேச்சை கேட்டிருக்கிறேன் என்று நினைத்து கொண்டாள்.

உணவை முடித்து கொண்டு வீடு வந்து சேர்ந்தனர். அபி ஹாலில் இருந்த அனைவருக்கும் சிறு புன்னகையை தந்துவிட்டு நேராக தன் அத்தையிடம் போய் அமர்ந்தாள் மண்டியிற்று. இருவரும் எதுவும் பேசவில்லை ஆனால் கற்பகத்தின் கை அபியின் முகம் எங்கும் தொட்டுப்பார்த்தது. இருவரின் கண்ணும் கலங்கியிருந்தது.

" போம்மா போய் ரெஸ்ட் எடு " என்று அனுப்பி வைத்தார் அவர். பானுவின் பெண் இவளை அடையாளம் தெரியாமல் தகப்பன் பின்னே நின்றது.

" இங்கே வாங்க பபி " என்று அழைத்தாள் அபி குழந்தையை.

" போ உன் சித்திதான் " என்றான்

அருகில் வந்த குழந்தையை தூக்கியவள் அவளுக்காக தான் வாங்கிவந்த பொம்மை, சாக்லேட் என்று சகலத்தையும் கொடுத்தாள். பதிலுக்கு குழந்தை முத்தம் கொடுத்தது.

குழந்தையை கீழே இறக்கி விட்டவள் தன் அறையை நோக்கி போனாள்.

" பெண் பிள்ளைக்கு ஏன் வெளியூர் படிப்பு என்று சொன்னாள் கேட்டால் தானே, ஏற்கனவே அவள் ரொம்ப அழகுதான், இப்போ எலும்பும் தோலுமா பார்க்க சகிக்காம வந்திருக்கா, இப்படி இருந்தா எவன் இவளை கட்டிப்பான் " என்றாள் பானு.

மாடி படியேறிய அபியின் காதில் இது விழாமல் இல்லை, ஆனாலும் அவள் நிற்கவில்லை எதுவும் கேளாதது போல சென்றுவிட்டாள். கீழே ஹாலில் இருந்த ரிஷியும், அவன் தாயும் அதே போலவே அங்கிருந்து நகர்ந்தனர், தனியே பேசு என்பதுபோல.
**********

பயண களைப்பு நீங்க குளித்து உடையை மாற்றிவிட்டு கட்டிலில் விழுந்த அபியை ஓய்வு எடுக்க விடாமல் கதவு தட்டப்பட்டது.

" யெஸ் " என்றாள் அபி
கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான் ரிஷி.

" என்ன ? என்னாச்சு ? இந்த நேரத்தில் ?" என்றாள் அபி.

அவன் பதிலேதும் சொல்லாமல் திறந்த கதவில் கையை கட்டியபடி சாய்ந்து நின்றான்.

" ஓ நோ, சின்னத்தான் நீயே பதில் சொல் என்றால் ஒரு பெண்ணின் மனம் நோகும் அளவுக்கா பேசுறது, அவர்கள் அவர்களுக்கு தெரிந்த மாதிரி பேசுறாங்க, நீயும் அப்படி பேசணுமா ? கொஞ்சம் சாஃப்டா சொன்னா என்ன ? அப்புறம் அவர்களும் உனக்கு உறவுதானே ' சின்னத்தான் ' என்று கூப்பிட்டால் தான் என்ன ? அதான் நீ கிளறிவிட்ட கோபத்தை சூப்பர் பிகர் என்று நான் சாந்தபடுத்தினேன், அதற்கு இப்படி வந்து நிற்பாயா ? நான் ஏதோ கொலை குற்றம் செய்தது போல." என்றாள் அபி சிரித்து கொண்டு.

" உன்னை தவிர யாரும் என்னை அப்படி கூப்பிட்டா எனக்கு என்னவோ போல இருக்கு. அப்புறம் அவளை சூப்பர் பிகர் என்பதோடு நிறுத்திக்கொள்வதுதானே, உன்னை ஏன் சாதாரண பெண் என்று சொல்ல வேண்டும் " என்றான் அவன் வெடுக்கென்று.

" நான் உண்மையை சொன்னேன், அக்ச்சுவலா நீ எனக்கு தாங்க்ஸ் சொல்லணும்" என்றாள்.

" பெரிய உண்மை, நான் எதுக்கு உன் அசட்டு பேச்சுக்கு தாங்க்ஸ் சொல்லணும் " என்றான்.

" ப்ளீஸ் சின்னத்தான், என் செல்லம் இல்ல நான் ரொம்ப டயர்டா இருக்கேன், அப்புறம் சொல்றேன்னே " என்றாள் கெஞ்சியபடி.

" போய் தொலை குட் நைட் " என்று கூறிவிட்டு கதவை மூடிவிட்டு சென்றான் ரிஷி.

***********

ப்ரியா பானுவிடம் ஒன்றுவிடாமல் சொல்லிவிட " அந்த சோடா பொட்டிக்கி அவ்வளவு திமிரா, பார்த்துக்கொள்கிறேன் இனி என் காலடியில் தானே கிடந்தாகணும், அப்புறம் அந்த ரிஷி அவனை இனியும் விட்டுவைக்க கூடாது, நாளைக்கே அப்பாவை வரச்சொல் கல்யாணத்திற்கு நாள் குறிக்க சொல்வோம் " என்று எகிறினாள் பானு.

மறுநாள் ரிஷி ஆபீஸ் கிளம்பும் முன்னே பானுவின் பெற்றோர்கள் அவன் முன்னாடி இருந்தனர்.

" வாங்க மாமா, வாங்க அத்தை " என்று வரவேற்றான் ரிஷி.

" தம்பி ஆபீஸ் கிளம்பியாச்சா? ஒரு ஐந்து நிமிடம் அம்மாவிடமும், உங்களிடமும் பேசிவிட்டு போகலாம் என்று வந்தேன் " என்றார் பானுவின் அப்பா.

" அதுக்கு என்ன மாமா ? வாங்க அம்மாவை போய் பார்க்கலாம், அம்மா இப்போதான் தோட்டத்து பக்கம் போனாங்க " என்று அவர்களை அழைத்து சென்றான்.

" வாங்க வாங்க சம்மந்தி, ஏண்டா ரிஷி அன்னம்மாவை அனுப்பியிருந்தா நானே வந்திருப்பேனே" என்ற கற்பகம்மாள் இருவரையும் வரவேற்று உள்ளே அழைத்தார்.

" பரவாயில்லை சம்மந்தி இங்கேயே பேசலாம்" என்றவர் தயங்க, அவரின் மனைவி தொடர்ந்தார்.

" சம்மந்தி அது வந்து, எங்க மூத்த பெண்ணை உங்கள் வீட்டில் கொடுத்து அவள் எந்த குறையும் இல்லாமல் இருக்கா, இனி எங்கள் இரண்டாவது பெண்ணுக்கும் திருமணத்தை முடித்துவிடலாம் என்று பார்க்கிறோம், வயசு ஏறிட்டே போகுது பாருங்க. உங்களுக்கே தெரியும் ரிஷி தம்பியும் என் இளைய பொண்ணும் பழகுறது. இரண்டு பேருக்கும் பிடித்து போன பிறகு இடையில் நாம் என்ன பேச, அதான் திருமணத்திற்கு ஒரு நல்ல நாள் பார்க்கலாம் என்று வந்தோம் " என்றாள்.

' அட பாவிகளா முடிவே பண்ணிட்டிங்களா நான் ப்ரியாவை காதலிக்கிறேன் என்று ' என்று ரிஷி யோசனையில் இருக்க கற்பகம்மாள் பேசினார்.

" பிள்ளைகள் ஆசையில் நான் என்றுமே குறுக்க நிற்க மாட்டேன். என் ஆசையையும் அவர்கள் மேல் திணிக்க மாட்டேன், ஆனால் வீட்டில் திருமண வயதில் ஒரு பெண்ணை வைத்துக்கொண்டு இவனுக்கு எப்படி திருமணம் செய்ய முடியும் " என்றார் கற்பகம்மாள்.

" உங்களுக்கு பெண் பிள்ளை கிடையாதே, அப்புறம் என்ன ?" என்றாள் பானுவின் தாய்.

" ஏன் இல்லை, நீங்கள் அபிநேஹாவை பார்த்தது இல்லையா ? அவளை நான் என் பெண்ணாக வளர்க்காவிட்டாலும் அவளை என் மருமகளாக சட்டப்படி தத்து எடுத்துள்ளேன். இந்த வீட்டில் மற்றவர்களுக்கு இருக்கும் எல்லா உரிமையும் அவளுக்கு இருக்கு. அவளுக்கு ஒரு சிறு துன்பம் வந்தாலும் நாங்கள் கம்பி எண்ண வேண்டும் " என்றார் கற்பகம்மாள் சற்று காட்டமாக.

" புரியுது சம்பந்தி, அப்போ நாங்கள் கிளம்புகிறோம், நீங்க அபிநேஹாவுக்கு திருமணம் ஏற்பாடு செய்த பிறகு சொல்லுங்க, அப்புறம் நாங்கள் நாள் குறிக்க வருகிறோம் என் பெண்ணின் கல்யாணத்தை ரிஷியுடன் " என்று கிளம்பினார் பானுவின் அப்பா. மனைவியின் முட்டாள் தனமான பேச்சை நினைத்தபடி.

" இது வேறா ? அந்த அழகிக்கு எங்கே போய் மாப்பிள்ளை தேட ?" என்றாள் பானு எரிச்சலில்.

மறுநாள் காலையில் தன் அறையில் இருந்து இறங்கி வந்த அபியை பார்த்த பானு
" அபி கொஞ்சம் பவியை பார்த்துக்கொள், அவளுக்கு புரி கிழங்கு வேணுமாம், குளிக்க வைத்துவிட்டு பூரி செய்து கொடு, எனக்கு கொஞ்சம் டயர்டா இருக்கு " என்று திரும்பியவளை நிறுத்தினாள் அபி.

" ஸாரிக்கா நான் ஆபிஸ் கிளம்பிவிட்டேன்" என்றாள்.

" என்ன ? ஆபிஸ் போறியா, சரிதான் ஆளு பார்க்கத்தான் லூசு மாதிரி இருக்கன்னு பார்த்த உள்ளேயும் ஒன்றும் இல்லையா ? நீ பரதேஷியாக இருந்தாலும் நீ இருக்கும் குடும்பம் எப்படி பட்டது என்று தெரியுமா ? இந்த குடும்பத்தில் இருந்து கொண்டு வேலைக்கு போறியா ? என்ன வேலைக்கு ? நீ படித்த அக்கவுண்டன்சி படிப்புக்கு உனக்கு மேனேஜர் உத்தியோகமா கிடைத்துவிட போகிறது, ஏதாவது ஒரு ஆபிஸில் கணக்கு எழுதும் வேலைக்கு உனக்கு இவ்வளவு திமிரா ? போ போய் பிள்ளையை குளிப்பாட்டு " என்றாள் பானு எகத்தாளமாக.

பானுவின் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த கற்பகம்மாளுக்கோ "பாதகி " என்றிருந்தது. ரிஷியை சொல்லவே வேண்டாம், தாயின் பார்வையில் பல்லை கடித்துக்கொண்டு நின்றான்.

ஆனால் அபி சிரித்தபடியே பதில் சொன்னாள். " நான் ஏன் கணக்கு எழுதும் வேலைக்கு வேறு ஆபிசுக்கு போகிறேன் அக்கா. நான் என் சொந்த ஆபீசுக்கு போகிறேன். " நேஹா சொலுஷன் " என் கம்பெனி. அதில் நான் சேர்மன். நான் படித்தது CA. அப்புறம் எனக்கு கொஞ்சம் வர்த்தகத்தை பற்றியும் தெரியும். ஸோ ஐ அம் அ பினான்சியல் கன்சல்டர். இன்றைக்கு என்னுடைய முதல் நான், ஸோ ஸாரி அக்கா பாப்பாவை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள், சின்னத்தான் " என்று அபி அவனை அழைக்கும் முன்

" அவர் என் தங்கைக்கு நிச்சயமாக போகிறவர், அவருடன் நீ வெளியெல்லாம் போக கூடாது. அவர் உனக்கு கார் ஓட்டி இல்லை " என்றாள் வெடுக்கென்று.

" மறுபடியும் ஸாரி அக்கா, நான் அவருடன் செல்லவில்லை, எனக்கு கார் ஓட்ட யாரும் தேவையும் இல்லை. எனக்கு நன்றாகவே கார் ஓட்ட தெரியும் " என்றவள்
" சின்னத்தான் என் கார் கீயை தாருங்கள், நான் கோவிலுக்கு போயிட்டு ஆபிஸ் போகிறேன்" என்றாள்.

" ஸாரி அம்மு கார் இன்னும் டெலிவரி ஆகவில்லை, நீ என் காரில் போ நான் வேறு காரில் போய் கொள்வேன், இந்தா " என்று இருந்த இடத்தில் இருந்து சாவியை தூக்கி போட்டான். அதை சரியாக பிடித்த அபி
" போயிட்டுவரேன் அத்தை " என்று ஒரு தலை அசைப்புடன் அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.

பானு அதிர்ச்சியில் அப்படியே நின்றாள். அவள் நின்ற கோலத்தை பார்த்த ரிஷி ஊமை சிரிப்புடன் கிளம்பிவிட்டான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top