Saththamindri Muththamidu 10

Advertisement

sindu

Well-Known Member
ஆண் வாரிசு தேவை படுகிறது வேண்டுதல் எதற்கு பராம்பரியம் காப்பாற்றவா .......
அவன் பார்க்காமல் பார்த்தான் கவனிக்காமல் கவனித்தான் இதெல்லாம் ஓகே ..............அவளுக்கான நியாயங்கள், மதிப்புகள், மரியாதைகள் கிடைக்க ஏன் எதுவும் செய்யலை அப்போ? மனமொழி அறியவில்லை உடல்மொழி மட்டுமே அறிந்ததால் இப்போதும் அவன் அறிவை உணர்வை உடல் மொழியால் நியாப்படுத்திவிட்டீர்களா அல்லது அவளுக்கு மனமொழியே இல்லை இதுவரை என்கறிர்களா..........................அவளுக்கானதை எப்படி தேர்ந்தெடுத்தாலோ அப்படித்தான் இவையெல்லாவற்றயும் பெற்று இருக்க வேண்டும் இதுவரை அப்படித்தான் என்று நினைக்கிறானா......................

உடல் மொழி மட்டும் உணர்ந்து இருக்கான்
அவளுக்கு பக்க பலமாவோ பாதுகாப்பு அரணாவோ இருக்கிரேன் என்பதை அவளுக்கும் உணர்த்தவில்லை
சுற்றி இருபவர்க்கும் உணர்த்தவில்லை
அவளை பிறர் எள்ளி நகையாடிய போதும்
ஏளனமா பேசிய போதும்
கூட நிற்கவில்லை
நீ இப்படி இருந்ததால் தான் உன் தம்பி கூட அண்ணி என்று கூப்பிடவில்லை
இப்போ அவளை பார்க்காததற்கு காரணம்
what a stupid reason...
அவள் மனம் அறிய ஒரு முறை கூட விழையவில்லையே


காதல் என்பது உடல் சார்ந்தது மட்டும் இன்றி மனம் சார்ந்தது என்பதை எப்போ அறிவான் ????
அவன் அவளை உணர்ந்தால் போதுமா???

உணர்த்த வேண்டாமா
 

banumathi jayaraman

Well-Known Member
அகிலாண்டம், பையன் கூட
அனுசரித்து போகச்
சொல்லுவது சரிதான்
ஆனால், முதலில் அந்தப்
பையன், திரு இவளை,
துளசியை திரும்பிப்
பார்க்கணுமில்லே,
அயிலா டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
மகன்களின் நல்வாழ்வுக்காக,
மேகநாதனும், அகிலாண்டமும்
திருப்பதி கோயிலுக்குப் போனால்,
அவரை சேவிக்க வருவதற்குள்ளேயே,
நம்ம திருப்பதி பாலாஜி,
இவங்களுக்கு அருள் பாலித்து
விட்டாரே, மல்லிகா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
வேறு ஜாதி இருந்திருந்தால்
கூட, பரவாயில்லை=ன்னு
மேகா சார் ஷெரினாவை
ஏற்றுக் கொண்டிருப்பாரோ?
வேறு மதம்-ங்கிறதாலே,
விஷ்ணு பக்தர், பெருமாள்
கோவில் தர்மகர்த்தா=ங்கிற
பதவிக்கும், பெருமைக்கும்
பங்கம் வந்திடுச்சே=ன்னு,
மகனை, மேகநாதன் ஏதாவது
ஏடாகூடமா திட்டியிருப்பாரோ,
மல்லிகா டியர்?
 

Joher

Well-Known Member
Epi பொறுத்தவரை excellent writing........

இத்தனை வருட வாழ்க்கைக்கு பின் கணவனின் அணைப்பு........ பேச்சு........ எல்லாமே துளசிக்கு சந்தோசம் தான்.......... துளசியின் இத்தனை வருட வாழ்க்கையில் அவளுக்கு கிடைக்காதது......... கிடைக்குமா என்று ஏங்க வைத்தது............. என்ன இருந்தாலும் வேதாளம் திரும்பவும் முருங்கை மரத்தில் ஏறுமான்னு ஒரு பயமும் இருக்கு...........

ஆனால் திரு........ இன்று வரை 4 வாக்கியம் சேர்த்து பேசியதில்லை........
13 வருட வாழ்வென்றால் எத்தனையோ தேவைகள்...... எதிர்பார்ப்புகள்...... நிகழ்வுகள்..........
எதுக்குமே அவளை consider பண்ணியதில்லை........ அப்படிருக்கும் போது ஒரு அணைப்பும் ஆதூரமான பேச்சும் போதுமா அவளின் காயத்தை ஆற்றுவதற்கு.........

ஆனால் திரு......... நினைக்க நினைக்க ஆறவில்லை......... துளசிக்கு இது மட்டும் போதுமாமாம்...... துளசி பற்றி அவன் நினைப்பு தான் என்ன?????? அவனோட தரப்பை சொல்லுறான்............ பார்த்தால் முத்தமிட தோணுதுன்னு யாராவது மனைவியை பார்க்காமல் இருப்பார்களா????????? முட்டா பையன்........ செய்றதையும் செஞ்சுட்டு விளக்கம் வேற..........

ஆராய்ச்சி பார்வை வேறு....... என்னிடம் சொல்ல விருப்பமில்லையா??????? திரும்ப போய்விடுவாளா???????? தடுமாற்றம்........ ஒன்னும் முடியல.........
முகம் பார்த்து பேசாமல் எங்கோ பார்த்து பேசுபவனுக்கு இன்று பார்த்ததுமே அவளுள் இருந்த வித்யாசத்தை கண்டு கொண்டான்.......... ஞானக்கண் இருக்குதோ??????:p:p:p

கலங்கிய முகத்தை பார்த்ததும் மனதில் ஏதோ பிசைந்ததாம்........... கிஸ்ஸடிச்சே கரெக்ட் பண்ணிப்பான் போல..........

சொல்லப்போனா நீ மேஜர் கூட ஆகல.......... குழந்தை பிறந்துடுச்சி.......... எப்படியெல்லாம் சமாதானம்....... இவ்வளவு பண்ணிவிட்டு இப்படி பேச கொஞ்சம் கூட வெட்கமாயில்லை.........

இவன் மனைவிக்கு அடிமை...........
தாலி இல்லாட்டியும் பிணைப்பு..........
புதிதாய் காதல் வந்த கன்னி பையன் போல.........
இதெல்லாம் இத்தனை வருடத்தில் தெரியவில்லையா இந்த முட்டாளுக்கு...........
நாங்களும் ஏற்றுக்கொண்டிருப்போம் 1 வருடத்தில்......... இல்லை 2 வருடத்தில் செய்திருந்தால்..........

13 வருடம் இந்த வீட்டில் அவள் பட்ட பாடு ஒன்று கூடவா இந்த ஞானக்கண்ணுக்கு தெரியல......... இவன் பண்ணுறது போதாதுன்னு உறவுக்காரங்க வேறு..........

ஒரே தங்கச்சி........... இன்று வரை தண்ணீர் கூட வாங்கி குடிக்கமாட்டாள்............
டேய் முட்டாள் உனக்கு இது தெரியுமா??????

உன் தம்பியை பார்த்து கற்றுக்கொள்.......... அவளை உங்கம்மாவே உன் சித்திகளிடம் கழுவி கழுவி ஊற்றினார்கள்........ அழகும் கிடையாது......... குணமும் கிடையாது........ அவளையே அவனால் விடமுடியவில்லை..........
உன் மனைவி தான் உனக்கு சொத்து........ நீ business-ல் ஊரையே கட்டி மேய்த்தாலும் வீட்டில் உனக்கு சேவைகள் செய்து உன் வீட்டை குலையாமல் பார்த்துக்கொள்கிறாள்......... யார் எப்படி என்ன பேசினாலும் முகத்தை காட்டாமல் வரவேற்பு.......... யாருக்கு வரும் இந்த குணம்........
காசு பணம் எல்லாம் வரும்.......... போகும்...........
ஆனால் குணம்........... அது துளசியிடம் அதிகம்...........

இந்த வீட்டின் முதல் மருமகள்........... அந்த மரியாதை உரிமையை அவளுக்கு கொடு..........
அவளையும் மனுஷியா எல்லோரும் நடத்த வழி பண்ணு..........
உன் பெண் எல்லாவற்றையும் கவனித்து கொண்டிருக்கிறாள்......... அவள் வாழ்க்கையையும் கருக விட்டுடாதே.........

ஒழுங்கா உன்னோட மனதை திறந்து பேசு............ அவளே உனக்கு மருந்தாய் இருப்பாள்........
 

banumathi jayaraman

Well-Known Member
நல்லது, கெட்டது தெரியாத
இரண்டுங்கெட்டான் 21 வயதில்,
அப்பாவிடம், திரு ஏதாவது
வாய் விட்டு, அதற்கு நம்ம மேகா சார்,
ஏறுக்குமாறா திட்டியிருப்பாரோ,
மல்லிகா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
இல்லை, என்னோட தூய்மையான (பப்பி)
லவ்வை கெடுத்த, அவர் பார்த்த
பெண் கூட நல்லா வாழ்ந்தால்தானே,
அப்பாவுக்கு சந்தோஷம்,
அதைத் தர மாட்டே-ன்னு,
என் காதல் தெரிந்தும், பணத்திற்கும்,
சொத்திற்கும், ஆசைப்பட்டுத்தானே
துளசியும் என்னை கல்யாணம் செய்தாள்?
அதனாலே அவளுக்கும் சந்தோஷம்
தர மாட்டே=ன்னு, அறிவாளித்தனமாய்
ஏதாவது கோக்குமாக்காய் சிந்தித்து
திருநீர்வண்ணன் டியர், துளசியிடம்
அப்படி நடந்து கொண்டானோ,
மல்லிகா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
அப்புறமா, ஷெரினாவின்
தொல்லை தாங்காமல்,
தெரியாத பிசாசை விட,
தெரிஞ்ச தேவதையே
மேல்=ன்னு நினைத்து,
குழந்தை வந்தால்,
வாழ்வில் ஒரு பிடிப்பு
வரும்=ன்னு, துளசியுடன்
ஒட்டாத ஒரு வாழ்வு
வாழ்ந்திருப்பானோ,
மல்லிகா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
எல்லாம் சரி, திரு ராசா
துளசியுடன் பேசாமல்,
முகம் திருப்பிய ஒரு மாதம்,
அல்லது அம்மா வீட்டில்,
அவள் இருந்த மூன்று மாதங்கள்,
இதில், எந்த நாளில்,
எந்த போதி மரத்தடியில்,
உனக்கு ஞானம் வந்தது,
திருநீர்வண்ணன் டியர்?
அந்த போதி மரம்,
எதுவோ தெரியலையே,
மல்லிகா டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top