Superb and Excellent,ஹாய் மல்லி,
நல்லதுக்கு காலமில்லை!
நல்லவர்க்கு நியாயமில்லை!
திக்குத் தெரியாத காட்டில்
சிக்கித் தவித்த கூட்டில்
தத்தித் திரிந்த பாவை
சித்தி புரிந்த கோதை
அவள் ஒன்றும் அறியா பேதை!
பற்று இல்லா வாழ்வினிலே
முற்று இல்லா தாழ்வினிலே
சற்று மீண்ட புத்தன்
கற்றுக் கொண்ட வித்தன்
அவன் என்றும் புரியா சித்தன்!
வலியில் சொந்தம் மறந்தவள்
வாழ்வில் வசந்தம் வருமோ...?
பழியில் பாவம் சுமப்பவன்
வழியில் வசந்தம் வருமோ....?
நன்றி