Manadhin mozhigal

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Enna ponsmma.. Puriala
முன்னால் பாரு....என் பதிவை கோட் பண்ணி, அண்ணாக்கு நன்றியா...
Leave lam Vida koodadhu chellam. Apram malli mam vera heroine potruvanga:p
Athu epdi poduvanga ashwin vidamatanga... Namba sangam support pannum nu hope iruku:p
Sorry ponsmma. Tongue.. Illa finger slip agiduchu... ;)
நீங்க என்னை கலாய்ச்சே பழகிடுச்சா.. :pஅதான் பாராட்டின பதிவை சரியா கவனிக்கல

As usual, உங்க பிள்ளை தானே.. மன்னிச்சுருங்க..

And.. Thank you ponsmma :)
ஹா... ஹா... ஹா..................
 
Last edited:
S

semao

Guest
மாற்றத்தை விரும்பும்
மகளிர்...


சமுதாயத்தில் நடக்கும்
சீர்கேடுகளை
கண்டு பொங்கும்
பெண்மை
பெண்களுக்கே நடக்கும்
அவலங்களை
கண்டு
துடிக்கும் பெண்மை...

முன்னேறிதான் செல்கிறோம்
தொழில்நுட்பத்தில்..
உண்மையாக முன்னேறிவிட்டோமா???
இயற்கையை சீரழித்து
வளரும் தொழில்நுட்பம்
நீண்டு நிலைக்குமா..

ஆயிரம் யோசனைகள்
ஆயிரம் கருத்துக்கள்
ஓராயிரம் மாற்றங்களை
விரும்பும் பெண்களின்
நிலை ...

தன் வீட்டிலே சிறு மாற்றம்
கொண்டு வர இயலாது..
துவண்டுவிட வேண்டாம்
பெண்மையே...

நாளைய சமுதாயம் நம் கையில்...
புதுமை பெண்கள் மட்டுமல்ல
புதுமை ஆண்களையும்
உருவாக்குவோம்...
சக உயிர்களை மனிதனாய்
மதிக்கும் மனிதத்தோடு
உருவாக்க உறுதியெடுப்போம்...
Nice dear
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Sorry ponsmma. Tongue.. Illa finger slip agiduchu... ;)
நீங்க என்னை கலாய்ச்சே பழகிடுச்சா.. :pஅதான் பாராட்டின பதிவை சரியா கவனிக்கல

As usual, உங்க பிள்ளை தானே.. மன்னிச்சுருங்க..

And.. Thank you ponsmma :)
பாராட்டினது தப்போ....புள்ள பேசினதில் நாமளும் ரெம்ப உணர்ச்சிவசப்பட்டுட்டோம் போலயே.....ஆகா...
கண்டிப்பாக இந்த வாலு (அறிவு) புள்ள....எம்புள்ளன்னு சொல்ல கசக்குமா....
 

murugesanlaxmi

Well-Known Member
எங்கே படித்தேன் என்று தெரியாது, யார் எழுதியது என்று தெரியாது, எனக்கு பிடித்த கவிதை, என் நினைவில் உள்ளவரை எழுதுகிறேன்


பெண்ணே, குடும்ப ஓட்டுக்குள் சுருக்கி கொள்ளதே ,என்றேன் நான்,

ஓட்டையும் கவசமாக்கி நகர்த்தி செல்வேன் என்றாள், அவள்.

புரட்சி பெண்ணாக விரும்பம் இல்லையா, என்றேன் நான்,

என் கணவனுக்கு பிடித்த பெண்ணாக இருக்கவே விருப்பம், என்றாள் அவள்,

உன்னை திருத்தவே முடியாது, என்றேன் நான்,

விடையை, திருத்த முடியாது, மதிப்பெண் தான் வழங்க முடியும், என்றாள் அந்த “மதி” பெண்.
 
Last edited:

Kuzhali

Well-Known Member
பாராட்டினது தப்போ....புள்ள பேசினதில் நாமளும் ரெம்ப உணர்ச்சிவசப்பட்டுட்டோம் போலயே.....ஆகா...
கண்டிப்பாக இந்த வாலு (அறிவு) புள்ள....எம்புள்ளன்னு சொல்ல கசக்குமா....
:):)
 

murugesanlaxmi

Well-Known Member
திருமணமான பெண் தன் தாய்க்கு எழுதிய கடிதம் அனைவரும் கட்டாயம் படியுங்கள் ப்ரெண்ட்ஸ்.{அடுத்தவர் கடிதம் படிப்பது தப்பில்லையா, அண்ணா. இல்லை இது படிப்பதுக்கு நல்லது}
அன்புள்ள அம்மா
,
எல்லா பெண்களைப் போலவே கல்யாண கனவில் களித்து மனதைக் கொள்ளையடித்தவரை உங்கள் சம்மதத்துடன் குதூகலமாக ஆடம்பரமாக திருமணம் புரிந்து கொண்டேன் .
பின்னர் தான் தெரிந்தது வாழ்க்கை சினிமாவில் போடும் சுபத்திற்கு பின்பு தான் தொடங்குகிறதென்று.
வாழ்க்கையில் விரும்புவது விரும்பப் படுவதென்பதையும் தாண்டி நிறைய இருக்கிற்து என்று தெரிய வருகிறது
எத்தனை பொறுப்புகள்
?
எத்தனை சுமைகள்?
எத்தனை எதிர் பார்ப்புகள்?
எத்தனை தியாகங்கள்?
எத்தனை ஏமாற்றங்கள்?
நினைத்த நேரத்தில், நிம்மதியாக முழு தூக்கம் கலைந்த நேரத்தில் எழுந்திருக்க முடியவில்லை..
குடும்பத்தில் மற்றவர் விழிக்கும் முன் நான் விழித்து என் வேலைகளை ஆரம்பிக்க வேண்டி இருக்கு..
உன்னோடு இருந்த நாட்களில் எனக்கென்ற விருப்பமான உடைகளில் சிட்டாக பறந்து கொண்டிருந்தேன்..
இங்கே அவர்கள் விரும்பிய உடையில் வலம் வருவதையே விரும்புகின்றனர்..
இதோ என் தோழியை/தோழனைப் பார்த்து விட்டு வருகிறேன் என்று உன்னிடம் சொல்லிவிட்டு சென்றது போல் சொல்லிச் செல்ல இயலவில்லை.
என் தேவைகளை விட அடுத்தவர் தேவைகளை முன் வைத்தே நான் நடந்து கொள்ள வேண்டி இருக்கு..
நினைத்த நேரத்தில் தூங்க கூட முடிவதில்லை.
எனக்கு விருப்பமான டிவி நிகழ்ச்சியைக் கூட பார்க்க முடிவதில்லை..
சில நேரங்களில் எதற்கு இந்த திருமணம் என்று அலுப்பாக இருக்கிறது..
இந்த திருமணம் என் சுதந்திரதை அல்லவா பறித்து விட்டது..
என் சுயத்தை அல்லவா சூறையாடி விட்டது
உன்னிடம் இருந்த போதே மிக மகிழ்வாக இருந்தேனே!
உன்னிடம் திரும்ப வந்து விடலாமா என்று கூட தோன்றுகிறது.
உன் மடியில் படுத்து கொள்ளனும் போல இருக்கிறது அம்மா
வேண்டாம் வேண்டாம் என்று நான் சொல்ல சொல்ல ஒரே ஒரு இட்லி போட்டுக்கோ..
உனக்கு பிடிக்குமேன்னு பால் கோவா செஞ்சேன்னு நீ பின்னாலயே வந்து வந்து ஊட்டி விடுவதை கொஞ்சிக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது.
எந்த கவலையும் இல்லாமல் உன் அரவணைப்பில் உன் கொஞ்சலில் உன் பாதுகாப்பிலேயே இருந்திருக்க கூடாதா என்று தோன்றுகிறது..
ஆனால் அடுத்த கனமே நீயும் என் வயதில் என்னை மாதிரி தானே உணர்ந்திருப்பாய்.
நீ உன் திருமணத்தில் செய்த தியாகங்கள் தானே எனக்கு இந்த அழகிய நினைவுகளைக் கொடுத்திருக்கிறது..
நீ அன்று நான் இன்று நினைப்பது போல் நினைத்திருந்தால் நான் இன்று இருப்பேனா
?
நீ செய்த தியாகங்களையும் உழைப்பையும் பாசத்தையும் எதிர்பாரா அன்பையும் நான் திருப்பித் தர வேண்டாமா.. என்று நினைத்து கொள்கிறேன்..
அதுவும் உன்னிடம் இருந்து கற்றது தான்..
அப்படி நினைக்கும் போது வாழ்க்கையே எளிதாக தெரிகிறது.. தெளிவாக புரிகிறது
காலம் செல்ல செல்ல நீ உன் குடும்பத்தை நேசித்தது போல் நானும் என் குடும்பத்தை நேசிக்க ஆரம்பித்து விடுவேன்..
நீ செய்த தியாகங்களை நானும் செய்ய தயாராகி விடுவேன்..
உனக்கு நாங்கள் கொடுத்த மன உறுதியை திடத்தை என் குடும்பமும் எனக்கு தரும்.
ஆமாம் மா நீ எனக்கு கொடுத்ததை நானும் என் குடும்பத்திற்கு கொடுக்க தயாராகி விட்டேன்..
நன்றிம்மா

என்றும் அன்புடன்…!!
உன் தேவதை
*பெண் அன்பில் ஒரு தாய்*
*பெண் அழகில் ஒரு தேவதை*
*பெண் அறிவில் ஒரு மந்திரி*
*பெண் வெறுப்பில் ஒரு நெருப்பு*
*பெண் வெற்றிக்கு ஒரு மாலை*
*பெண் நட்பில் ஒரு நேர்மை*
*பெண் கண்டிப்பில் ஒரு ஆசிரியர்*
*மொத்தத்தில் பெண் தியாகத்தின் மறு உருவம்*
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top