Manadhin mozhigal

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
மனிதன் செழிக்க இயற்கையைக் கொன்ற தொழில்நுட்பத்தை இனியும் புரட்சி என்றழைத்தல் சரியல்ல..

பசுமைப் புரட்சியும் வெண்மைப் புரட்சியும் வளர்ந்த நாடுகள் நம் மீது தொடுத்த மறைமுக போரேயன்றி வேறல்ல..

பசுமைப் புரட்சியின் பெயரால் நம் நாட்டு விதை இனங்களை அழித்து, அதிக விளைச்சல் எனும் பேராசையை விவசாயிகளிடம் விதைத்து, விதை, பூச்சிக்கொல்லி, உரம் என அனைத்தையும் நாம் வெளிநாட்டு நிறுவனங்களிடம் கையேந்த வைத்தது தான் அதன் சாதனை..

ஜல்லிக்கட்டுக்கான தடையின் பின்னணி நாம் அனைவரும் அறிந்ததே.. அதன் மூல காரணம் வெண்மை புரட்சி என்பதையும் உணர வேண்டும்...

புரட்சி எனும் பெயரால் இயற்கையை மாற்ற நாம் நினைத்தால நம்மை அழித்து இயற்கை தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும்..
நமக்கான எல்லைக்கோட்டை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்..

அதை மறப்பதே நாம் செய்யும் முதல் தவறு..

நம் குழந்தைகளுக்கு அவர்களின் எல்லைகளைப் புரிய வைப்பதும், பின்னாளில் அவர்களே தமக்கான எல்லைகளை நிர்ணயிக்கவும் கற்றுக் கொடுக்க வேண்டும்.

அதுவே நாளைய சந்ததியை நல்ல முறையில் உருவாக்க உதவும்
Wow, Superb and excellent,
குழலி டியர்
 
Sundaramuma

Well-Known Member
இப்போ லேட்டஸ்ட் செய்தி ...... producing certain vegetable from a tablet .....
Fifth element அண்ட் back டு தி future படத்துல வர மாதிரி ..... இப்போ வெற்றிகரமா
லேப்-ல கொண்டுவந்துட்டாங்க .....இதுக்கு என்ன செய்யறது.....
 
Kuzhali

Well-Known Member
முன்னால் பாரு....என் பதிவை கோட் பண்ணி, அண்ணாக்கு நன்றியா...
Sorry ponsmma. Tongue.. Illa finger slip agiduchu... ;)
நீங்க என்னை கலாய்ச்சே பழகிடுச்சா.. :pஅதான் பாராட்டின பதிவை சரியா கவனிக்கல

As usual, உங்க பிள்ளை தானே.. மன்னிச்சுருங்க..

And.. Thank you ponsmma :)
 
Kuzhali

Well-Known Member
இப்படி கெமிக்கல் அது இதுனு இல்லாம ஒரு 200 -300 வருஷம் முன்னால இருந்த மாதிரி
நம்மால இப்போ இருக்க முடியுமா ..... கற்பனை பண்ணி பார்த்துட்டு இருக்கேன் ...ஜோ
200-300 வருஷமெல்லாம் இல்ல.. வெறும் 80-100 வருஷம் தான்.. கண்டிப்பா நம்மால கற்கால மனிதர்களா மாற முடியாது... முயற்சி செய்தால் உடலுக்கு கேடு விளைவிக்கும் கெமிக்கல்ஸ் சிலவற்றை தவிர்க்கலாம்.. For eg. வெள்ளை சர்க்கரை
 
banumathi jayaraman

Well-Known Member
இன்றைய உங்களின் இந்த தெளிவு தான் எங்க ஆறுதல் டா....எங்களை போல இல்ல நீங்க....நாங்கள் பகட்டையும், கவர்ச்சியையும் கண்டு ஏமாந்தவர்கள்டா...இனி உங்கள் கைகளில் நாடும், வளமும் காக்கப்படும்..நம்பிக்கை இருக்கு
well said சகோதரி
எஸ்...பொன்ஸ்
எனக்கு சந்தோஷமா இருக்கு.....
சகோ சல்லிக்கட்டு ப்ரச்னைக்கு அப்புறம்....இளைய தலைமுறை மேல் பிரமிப்பு, மரியாதை, நம்பிக்கை அதிகமாயிடுச்சு சகோ....அவங்களுக்கு அறிவுரை கூட சொல்ல தேவையில்லை என்ற தோணல் சகோ.....
வெகு உண்மை சகோதரி. நம்மை போல் இல்லை , இனி கை ஓங்குவார்கள். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கை இருக்கிறது சகோதரி
எதிலும் ஒரு தெளிவான சிந்தனை இருக்குது.....
முக்கியமா அவங்களுக்கு என்ன வேண்டும்னு தெரியுது ......
அதை நோக்கி தடைகளை பொருட்படுத்தாம முன்னேற்றம் ......
yes சகோதரி
எனக்கும், ரொம்பவே
சந்தோஷமா இருக்கு,
பொன்ஸ் செல்லம் டியர்
சுந்தரம்உமா டியர் and
சகோதரரே
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
புரட்சி புதுமை பெண்ணை விட....புரட்சி....வேண்டாம்..புதுமை தாய் வேண்டும்.
கண்டிப்பாக உன் போன்ற தாய்மைகள் தலையெழுத்தை மாற்றும்...உறுதிடா...
Correct Ponnamma :)
ஹா ஹா உண்மை சகோதரி. ஆனால் அதைவிட உங்கள் பதிவு செம சூப்பர் சகோதரி. நீங்கள், பாத்திமா,குழலி அனைவரும் அருமை சகோதரி. உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள் சகோதரி. இன்னும் வளருங்கள். பெருமையுடன் பார்த்து கொண்டு இருக்கிறோம் நாங்கள்
உண்மைதான், பொன்ஸ் செல்லம்
and சகோதரரே
நம்முடைய பாத்திமா டியர், குழலி டியர், சசிதீரா டியர், இன்ன பிற சகோதரிகளை நாம் பார்த்து, பூரித்துப் பெருமைப்படும் நாள்,
வெகு தொலைவில் இல்லை, சகோதரரே
அனைத்து சகோதர செல்லங்களுக்கும், எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
பொன்ஸ் செல்லம் டியர்
 
Last edited:

Joher

Well-Known Member
இப்படி கெமிக்கல் அது இதுனு இல்லாம ஒரு 200 -300 வருஷம் முன்னால இருந்த மாதிரி
நம்மால இப்போ இருக்க முடியுமா ..... கற்பனை பண்ணி பார்த்துட்டு இருக்கேன் ...ஜோ

பல் தேய்க்க, பாத்திரம் கழுவ........ உமி கரி........ (நெல்லின் உமி எரித்தது.....)
குளிக்க........ மஞ்சள் பயறு பொடி.......

ஷாம்பூவிற்கு பதில் சீயக்காய்........ சமையல் சோடா........ வாழை சாம்பல் (வாழை இலை அதன் தண்டோடு காய்ந்தது......... பின்னர் எரித்தது....)

காய்கறிகள் எல்லாம் ஊரில் விழைவது........... அரிசி தேங்காய் வீட்டில் பயிர் செய்வது.........

கிழங்கு....... பயறு வகைகள்........ நெல்லில் குத்தும் அவல்.........

எல்லாமே வேகவைத்த பொருட்கள் தான்......... நோ fried items........

கடையில் இருந்து நொறுக்கு தீனி மாதம் ஒரு முறை வாங்கினாலே அரிது.........

அப்போது கடையில் வாங்கி சாப்பிட்டால் status குறைச்சல்........... இப்போ?????? weekend-யே கடையில் தான்.........

அதிக பட்சமான வாகனம் சைக்கிள் & bullet bike............ இப்போதைய benz காருக்கு இணை........

கடைக்கு துணி பை.........
எண்ணெய் வாங்க கண்ணாடி பாட்டில்..........
பொடிவைகள், அரிசி மாவு உரலில் இடித்தது..........
மசாலா அம்மியில் அரைத்தது..........
கருப்பட்டி காப்பி...........
வீட்டில் வளர்க்கும் மாட்டின் பால், கோழி முட்டை, இறைச்சி..........
வண்டி வண்டியாக வாழை பழம்...........

கிழங்கு கடலை உளுந்து எள்ளு உள்ளி நிலக்கடலை அவல் பக்கத்தில் இருக்கும் எல்லோர் வீட்டுக்கும் கொடுப்பார்கள்.........

ஒரு நாள் ஒரு வீட்டில் என்ன கிடைக்குமோ அது தான் எந்த வீட்டிற்கு போனாலும் கிடைக்கும்.........

மாலையில் எல்லா குழந்தைகளும் தெருவில் தான்....... 6 மணிக்கு மேல் வீட்டுக்குள் பிடித்து தான் அடைக்க வேண்டும்......... ஏனென்றால் விளக்கு வைத்த பிறகு எல்லா வீட்டிலும் குழந்தைகள் முதல் கல்லூரி படிப்பவர்கள் வரை படிப்பார்கள்.........

டிவி என்கிற ஒன்று எப்போ வந்ததோ அப்போவே எல்லாமே நாசமா போச்சு.........

எல்லாமே டெக்னாலஜி என்கிற பேரில் விலை கொடுத்து சனியன்களை வீட்டுக்குள் வைத்திருக்கிறோம்.........
கொசுவுக்கு ஒரு வலை போட்டு படுத்தால் போதும்.......... அதற்க்கு எதனை வகையான repellents......... Wheezing-க்கு முதல் காரணமே இதுதான்..........

இன்று வரை இதில் ஒரு 50% follow பண்ணுகிறோம்.........

வீண் ஆடம்பரத்திற்கும் advertisement-க்கும் free-க்களுக்கும் மயங்காமல் இருந்தாலே நம் வாழ்க்கை நம் கையில் தான்..........
 
Manimegalai

Well-Known Member
200-300 வருஷமெல்லாம் இல்ல.. வெறும் 80-100 வருஷம் தான்.. கண்டிப்பா நம்மால கற்கால மனிதர்களா மாற முடியாது... முயற்சி செய்தால் உடலுக்கு கேடு விளைவிக்கும் கெமிக்கல்ஸ் சிலவற்றை தவிர்க்கலாம்.. For eg. வெள்ளை சர்க்கரை
Yes da குழலி..
வாரம் ஒரு நாள் சிவப்பு அரிசி சாப்பிடலாம்...
கருப்பட்டி வெல்லம் எடுத்துட்டு டீ குடிக்கலாம்..
நம்ம வீட்டுல மொட்டை மாடியில் நமக்கு தேவையான காய்கறி போடலாம்..
சின்ன சின்ன விசயம் நம்மளால் முடிந்தது..மண்பானை தண்ணீர்..
இப்படி முயற்ச்சிக்கலாம்..
 
Sundaramuma

Well-Known Member
பல் தேய்க்க, பாத்திரம் கழுவ........ உமி கரி........ (நெல்லின் உமி எரித்தது.....)
குளிக்க........ மஞ்சள் பயறு பொடி.......

ஷாம்பூவிற்கு பதில் சீயக்காய்........ சமையல் சோடா........ வாழை சாம்பல் (வாழை இலை அதன் தண்டோடு காய்ந்தது......... பின்னர் எரித்தது....)

காய்கறிகள் எல்லாம் ஊரில் விழைவது........... அரிசி தேங்காய் வீட்டில் பயிர் செய்வது.........

கிழங்கு....... பயறு வகைகள்........ நெல்லில் குத்தும் அவல்.........

எல்லாமே வேகவைத்த பொருட்கள் தான்......... நோ fried items........

கடையில் இருந்து நொறுக்கு தீனி மாதம் ஒரு முறை வாங்கினாலே அரிது.........

அப்போது கடையில் வாங்கி சாப்பிட்டால் status குறைச்சல்........... இப்போ?????? weekend-யே கடையில் தான்.........

அதிக பட்சமான வாகனம் சைக்கிள் & bullet bike............ இப்போதைய benz காருக்கு இணை........

கடைக்கு துணி பை.........
எண்ணெய் வாங்க கண்ணாடி பாட்டில்..........
பொடிவைகள், அரிசி மாவு உரலில் இடித்தது..........
மசாலா அம்மியில் அரைத்தது..........
கருப்பட்டி காப்பி...........
வீட்டில் வளர்க்கும் மாட்டின் பால், கோழி முட்டை, இறைச்சி..........
வண்டி வண்டியாக வாழை பழம்...........

கிழங்கு கடலை உளுந்து எள்ளு உள்ளி நிலக்கடலை அவல் பக்கத்தில் இருக்கும் எல்லோர் வீட்டுக்கும் கொடுப்பார்கள்.........

ஒரு நாள் ஒரு வீட்டில் என்ன கிடைக்குமோ அது தான் எந்த வீட்டிற்கு போனாலும் கிடைக்கும்.........

மாலையில் எல்லா குழந்தைகளும் தெருவில் தான்....... 6 மணிக்கு மேல் வீட்டுக்குள் பிடித்து தான் அடைக்க வேண்டும்......... ஏனென்றால் விளக்கு வைத்த பிறகு எல்லா வீட்டிலும் குழந்தைகள் முதல் கல்லூரி படிப்பவர்கள் வரை படிப்பார்கள்.........

டிவி என்கிற ஒன்று எப்போ வந்ததோ அப்போவே எல்லாமே நாசமா போச்சு.........

எல்லாமே டெக்னாலஜி என்கிற பேரில் விலை கொடுத்து சனியன்களை வீட்டுக்குள் வைத்திருக்கிறோம்.........
கொசுவுக்கு ஒரு வலை போட்டு படுத்தால் போதும்.......... அதற்க்கு எதனை வகையான repellents......... Wheezing-க்கு முதல் காரணமே இதுதான்..........

இன்று வரை இதில் ஒரு 50% follow பண்ணுகிறோம்.........

வீண் ஆடம்பரத்திற்கும் advertisement-க்கும் free-க்களுக்கும் மயங்காமல் இருந்தாலே நம் வாழ்க்கை நம் கையில் தான்..........
:eek::oops::rolleyes::p:D
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top