மண்ணில் தோன்றிய வைரம் 19

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
சித்ராவின் குரலுக்கிணங்க சுவாரசியமாய் உரையாடிக் கொண்டிருந்த சாரு மற்றும் கவி தங்களது வெட்டிகதையிற்கு இன்டவல் பிரேக் வழங்கிவிட்டு டைனிங் மேஜையிற்கு சென்றனர். அங்கு அவர்களிற்காக குடும்பத்தார் அனைவரும் காத்திருப்பதை பார்த்ததும் தன் கூட்டினை இழந்து அலைந்து திரிந்த பறவைக்கு வசிப்பிடமாய் மரப்பொந்து கிடைக்கும் போது அதனுள் எழும் மகிழ்ச்சி கலந்த பாதுகாப்புணர்வை அச்சந்தர்ப்பத்தில் உணர்ந்தாள் சாரு. அவ்வுணர்வு கண்ணீராய் வெளிப்பட முயல அதை மறைக்கும் பொருட்டு கை கழுவவுவதை சாக்காய் கொண்டு வாஸ் பேசின் அருகில் சென்று தன்னை சமப்படுத்திக் கொண்டாள். பின் கைகளைக் கழுவிக்கொண்டு கவியின் அருகில் காலியாய் இருந்த இருக்கையில் (அதாவது அஸ்வினிற்கு நேரெதிராக) அமர சித்ரா அனைவருக்கும் பரிமாறத்தொடங்கினார். அப்போது தான் மாதேஷ் இல்லாததை அறிந்த சாரு “ஆன்டி மாதேஷ் எங்க??” என்று வினவிய அடுத்த நொடி “இதோ வந்துட்டேன்” என்று பின்னாலிருந்து குரல் கேட்டது. அங்கிருந்த காலியான இருக்கையில் அமர்ந்த மாதேஷ்
“ நான் இல்லாமல் பந்தியை ஆரம்பிச்சிட்டீங்களா?? இது சரியில்லை. ஏன்மா என்னை ஒரு வார்த்தை கூப்பிட்டு இருந்தால் எல்லாருக்கும் முன்னமே வந்து ஆஜர் ஆகி இருப்பேனே... உங்களுக்கு என்மேல பாசமே இல்லை” என்று போலியாய் வருத்தப்பட கவியோ “அங்களுக்கு எங்க எல்லோர் மீதும் பாசம் இருக்கு. அதான் உன்னை கூப்பிடவில்லை” என்று கூற அவளது கேலியின் அர்த்தம் அறிந்த சாரு தவிர்ந்த அனைவரும் சிரிக்க சாரு விஷயம் புரியாமல் கவியை பார்த்தாள். அதற்கு கவி
“அது ஒன்றும் இல்லை சாரு உங்களுக்கு எலியை பற்றி தெரியுமா??”
“ஆமா.. அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்??”
“அந்த எலி என்ன செய்யும்னா எங்கெல்லாம் சாப்பாடு இருக்கோ அங்கெல்லாம் ஆஜராகி சாப்பாட்டை அபேஸ் பண்ணிருமாம்...”
“அப்படி ஒரு எலியா?”
“அதுவும் வாசனையை வைத்தே அந்த இடத்தை கண்டுபிடிக்கும் அளவுக்கு அது ப்ரில்லியண்டானா பார்த்துக்கோங்களே??”
“அப்படி ஒரு எலியா???”
“ஆமா அதனால தான் அந்த எலியை அம்மா சாப்பிட கூப்பிடலை.. ஆனாலும் பார்த்தீங்களா டைமிற்கு வந்திருச்சி சாப்பாட்டை முழுங்க....” என்று கவி கூறியதும் மாதேஷ்
“ப்ரவுட் ஜோக்” என்றுவிட
சாரு
“இப்போ புரியிது அந்த எலி யாருனு... அந்த எலியை பிடித்து கூட்டில் அடைங்க பா... இல்லாவிடின் நம்ம சாப்பிட்டற்கெல்லாம் உத்தரவாதம் இல்லை..”என்று மாதேஷை க மேலும் வார
கடுப்பான மாதேஷ்
“ஏன் சாரு அக்கா நீங்க அப்பவே இப்படி தானா இல்லாட்டி இந்த கவியோட சேர்க்கை உங்களை இப்படி பண்ணிவிட்டதா??”
“டேய் மாதேஷ் எல்லாரும் உன்னை மாதிரி மொக்கை வாங்குவாங்கனு நீ எப்படி நினைக்கலாம்.... இப்படி வாயை குடுத்து பல்பு வாங்குவதற்கு அவங்க உன்னை மாதிரி தத்தி இல்லை.... “ என்று மேலும் கலாட்டா பண்ண
“ அம்மா நாளைக்கு கொசு மருந்து அடிங்க... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலை..” என்று மாதேஷ் கூற சாருவோ
“ஆன்டி வீட்டுல எலி மருந்து இருக்கா.??....” என்று கேட்க அவளது கேள்வியின் அர்த்தம் புரிந்த மாதேஷ்
“அம்மா பரதேவதைகளா உங்க கிட்ட வாய் குடுத்தது தப்பு தான். ஆளை விடுங்க தெய்வங்களா..” என்று ஜகா வாங்க சாருவும் கவி ஹைபை அடித்துக்கொண்டனர். இவர்களது கலாட்டாக்களை அமைதியாக பார்த்துக்கொண்டிருந்த அஸ்வின் பாட்டியின் காதை கடிக்க அவரோ
“அம்மாடி சாரு வீட்டுக்கு தகவல் சொல்லிட்டியாமா?? எனக்கு போன் போட்டு குடும்மா நானும் ஒரு வார்த்தை உன் வீட்டாளுங்களுக்கு தகவல் சொல்லிவிடுகிறேன். இல்லாவிடின் நீ காலையில் வீடு போய் சேரும் வரை பயத்தோடு இருப்பாங்க “என்று கூற சாரு ஒரு அசட்டு சிரிப்புடன்
“அப்படி என்னை நினைக்கவோ வருத்தப்படவோ அந்த வீட்டில் யாரும் இல்லை. ஏதோ கொடுக்கின்ற சம்பளத்திற்காக என் வயிறு காயாமல் பார்த்துக்கொள்ள வீட்டு வேலைக்காரர்கள் இருக்காங்க. அவ்வளவு தான்.”என்று தனக்கு உறவுகள் என்று யாருமில்லாததை சாரு மறைமுகமாக எடுத்துரைத்தது எல்லோரையும் விட அஸ்வினை பாதித்தது. தனக்கென்று அன்பை வாரி இறைக்க ஒரு குடும்பம் இருந்தும் தன் அன்னையின் அன்பு இல்லையே என்று இன்றுவரை ஏங்கும் அஸ்வினிற்கு உறவென்று யாருமே இல்லை என்று கூறும் சாருவின் வலியின் கொடுமையை அவனால் உணரமுடிந்தது. ஏனோ தானும் அந்த வலியை பகிர்ந்து கொண்டு அவளிற்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. உணர்ச்சிகளின் பிடியில் சிக்கயிருந்த அஸ்வினிற்கு தான் அவ்வாறு ஏன் நினைத்தோம் என்று உணர சந்தர்ப்பம் அமையவில்லை. அந்த அமைதியை விரும்பாத சாரு
“அதனால இன்னைக்கு நீங்க என்னுடைய கொடுமைகளை சகித்து தான் ஆகனும். வேறு ஆப்ஷன்கள் கைவசம் இல்லை.” என்று நிலமையை சகஜமாக்க முயல அது சரியாக வேலை செய்தது.
”நீயும் எனக்கு பேத்தி தான். நீ என்ன பண்ணாலும் இந்த பாட்டி உனக்கு சப்போட்டா இருப்பேன். நீ என்ன சேட்டை வேணாலும் பண்ணிக்கோ. ஆனா இந்த தாத்தா கூட மட்டும் சேராத..” என்று தன் பாட்டில் உணவருந்திக்கொண்டிருந்த சொக்கநாதனை வம்பிளுத்தார் ஆரவள்ளி. “ ஏன்மா வள்ளி நீ என்ன என் பேத்தியை என்கூட சேர வேணாம்னு சொல்லுறது... இன்னைக்கு சாரு கூட தான் நான் கேரம் ஆட போறேன். அம்மாடி உனக்கு கேரம் ஆட தெரியும்மில்ல??” என்று கேட்டுவிட்டு கண்களால் சாருவிடம் தெரியும் என்று சொல்லு மா என்ற ரீதியில் கெஞ்ச அதை கண்ட கவி
“என்ன தாத்தா என்னமோ கெத்தா வாயால கேட்டுட்டு கண்ணால இப்படி கெஞ்சுறீங்க” என்ற தாத்தாவினை ஓட்ட அங்கு அனைவரும் சகஜ நிலைக்கு திரும்பினர் அஸ்வின் ஒருவனைத்தவிர. அனைவரும் சாப்பிட்டு எழுந்ததும் சாப்பிட அமர்ந்த சித்ராவிற்கு உணவு பகிர்ந்தாள் சாரு. அவர் தடுக்க தடுக்கஸஉணவு பகிரந்தவள்
“ இன்னைக்கு தான் ரொம்ப வருடம் கழித்து எங்க அம்மாவோட கைப்பக்குவத்தை உடைய ஒரு சமையலை சாப்பிட்டேன். அம்மா இருந்தப்போ எப்பவும் அம்மா எனக்கு ஊட்டி விடுவாங்க.. அந்த சாப்பாட்டிற்கு உள்ள சுவையே தனி.”என்று தன் ஏக்கத்தை கூறத்தொடங்கிய சாருவின் வாயருகே தான் கையில் உண்பதற்காக எடுத்த உணவை கொண்டு சென்றார்.அதனை எதிர்பாராத சாருவின் கண்களில் இருந்து நீர் கொட்டத்தொடங்கியது. மறு கையால் அவளது கண்ணீரை துடைத்த சித்ரா “சாருமா நீயும் எனக்கு பொண்ணுதான்..உனக்கு எப்போவெல்லாம் அம்மா கையால சாப்பிடனும்னு தோனுதோ அப்போ இங்க வா.. நான் உனக்கு வகையா சமைத்து என் கையால ஊட்டிவிடுறேன் .சரியா?? இனிமே எனக்கு யாருமே இல்லைனு நீ வருந்த கூடாது. உனக்குனு இந்த குடும்பம் மொத்தமும் இருக்கு புரிதா?? இப்போ கண்ணை துடைத்துக்கோ. இந்தா இந்த அம்மா கையால சாப்பிடு” என்று சாருவிற்கு ஊட்டத்தொடங்கினார் சித்ரா. இதனை சோபாவில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்த அஸ்வினிற்கு ஏதோ ஒரு இனம்புரியாத உணர்வு அவனை வாட்டி எடுத்தது. அந்த உணர்வினை பிரித்தறிய முடியாத அஸ்வினின் மனம் அலைப்புற அதனை அமைதிப்படுத்த தனிமையே வழி என்று உணர்ந்து தன்னறை நோக்கி நகர்ந்தவனை சாருவின் குரல் தடுத்தது. “அஸ்வின் நீங்க நிஷாவோட மேரேஜிற்கு போறீங்க தானே?” என்று கேட்க “இல்லை நான் போகவில்லை. சித்தப்பாவிற்கு இப்படி இருக்கும்போது அங்க போய் தங்க வசதிப்படாது” என்று கூற “நானும் தங்குற மாதிரி போகவில்லை. மானிங் போய் வெட்டிங்கை அட்டன் பண்ணிட்டு ஈவினிங் வந்திருவேன். அப்படி போகிறதால எப்படியும் டிரைவரோட காரில் தான் போவேன். உங்களுக்கு ஓகேனா நீங்களும் ஜேர்னியில் வந்து ஜாயின் பண்ணிக்கோங்க”என்று கூற அவளது கூற்றை ஆதரிப்பதாக சித்ராவும்” ஆமா கண்ணா அந்த பையன் வீடு வரைக்கும் வந்து சொல்லிட்டு போயிருக்கு. நீ போகலைனா நல்லா இருக்காது.நீ சாருவோட காரிலே போய்ட்டு வந்துரு. ஏதும் அவசரம்னா நான் வருணை கூப்பிட்டுக்கிறேன்” என்று அவன் மறுப்பு கூறா வண்ணம் அனைத்து காரணங்களுக்கும் பதில் தந்துவிட அவனது பயணம் உறுதியானது. இவ்வாறு அன்றைய இரவு சாருவிற்கு அஸ்வினின் குடும்பத்தாருடன் மகிழ்வுடன் கழிய அஸ்வினிற்கோ பல குழப்பங்களுடனும் மனச்சஞ்சலங்களுடனும் கழிந்தது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top