கற்பூர முல்லை Episode 36

Advertisement

Jeevitha Ram prabhu

Active Member
மலர் 36

சந்தேகத்தோடு கீழே இறங்கியவள் , அதனை அகிலனிடம் கேட்டே விட்டாள்...
அதற்கு, அவன் உள்ளே வந்தால் தானே தெரியும்...!என்று கூறியவாறு அவளை உள்ளே கூட்டி சென்றான்.

உள்ளே சென்றபின் வரவேற்பில் திவ்யா மற்றும் ரவியின் பெற்றோர்கள் இருவரும் இவர்களை வரவேற்றனர்.
வாங்க அண்ணா.... வாங்க அண்ணி...
என்றவாறு திவ்யா வரவேற்றாள்..
இவர்களின் பேச்சை கேட்டு ரவியும் வந்தான்... வந்தவன் வாங்க மச்சான்.... வாங்க சிஸ்டர் என்றவாறு வரவேற்றான்.
அவளுக்கு அப்பொழுது தான் தெரிந்தது. இது திவ்யாவின் வீடு என்று ஆனாலும் இப்போது எதற்கு இங்கே கூட்டி வந்திருக்கிறான் என்று தெரியவில்லை.

இருந்தாலும் அவர்கள் இருவரையும் உபசரித்து அமரச் சொன்னபோது இருவரும் அருகருகே அமர்ந்தனர்.
நீங்கள் வந்ததில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி என்றனர் ரவியின் பெற்றோர்கள். அவர்களின் உபசரிப்புகள் எல்லாம் முடிந்த பிறகு தன் பாக்கெட்டில் இருந்து ஒரு சிறிய பெட்டியை எடுத்து நீட்டினான் அகிலன் . அப்பொழுதுதான் தமிழுக்குத் தெரிந்தது இது தான் அன்றைக்கு வாங்கி வந்திருந்த மோதிரங்கள் என்று.

இது அவர்கள் வீட்டிற்கு விருந்திற்கு வந்திருந்த அன்று தர வேண்டியது அன்று நிலைமை சரியில்லாததால் இன்று கொடுக்கிறோம் என்று கூறினான். பரவாயில்லை அதனால் என்ன ?இதெல்லாம் செய்ய வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லையே என்று பெருந்தன்மையாக கூறினர் ரவியின் பெற்றோர்கள்.

இருந்தாலும் அன்றைக்கு நடந்ததற்கு வருத்தம் தெரிவித்தனர் அவர்கள். அதற்கு, தமிழ் பரவாயில்லை அவர்களும் வந்த மன்னிப்பு கேட்டு விட்டார்கள் என்று கூறினாள். அதுவரை இவர்கள் இருந்ததை பைரவி தூரமே நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். இவர்கள் கிளம்பலாம் என்றதும் இவர்கள் முன்னே வந்தாள்.

அவள் வந்ததும் அகிலன் எதுவும் பேசவில்லை. தமிழ் மட்டும் நன்றாக இருக்கிறீர்களா? என்று கேட்டாள். அவளும் அதற்கு தகுந்தவாறு பதில் கூறினாள் .சரி.... நாங்கள் கிளம்புகிறோம் என்று பைரவியிடம் கூறினால் தமிழ் அவளும் சரி என்றாள் . ஆனால் அகிலன் தன்னிடம் பேசாதது அவனுக்கு இன்னும் அவள் மேல் கோபம் இருப்பதை காட்டியது.

அங்கிருந்து கிளம்பி வண்டியை பீச்சுக்கு விட்டான் அகிலன். இருவரும் அங்கிருந்த மணல்பரப்பில் அமர்ந்தனர். மாலை முடிந்து இருள் சூழ்ந்து சில மணி துளிகள் ஆகி இருந்தது. ஆங்காங்கே சிலர் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர் அவர்களில் பெரும்பாலானவர்கள் காதல் ஜோடிகள் ஆகவே இருந்தனர். அந்த நேரம் அகிலனின் தோளில் தலை சாய்த்து கொண்டாள் தமிழ்.
உடனே அவன் என்ன என்பது போல் பார்த்தான். இல்லை என்னிடம் சொல்லாமலே இவ்வளவு தூரம் பிளான் செய்திருக்கிறீர்களே.... அதை கண்டு தான் வியந்தேன் என்று கூறினாள்.

ஆமாம் அன்றைக்கு நம் வீட்டிலேயே வைத்துக் கொடுக்க வேண்டியது. இவள் பண்ணிய கலவரத்தால் அன்று எதுவுமே தோன்றவில்லை. இவ்வளவு நாள் உனக்காகத்தான் கொடுக்காமல் வைத்திருந்தேன் இப்பொழுதுதான் நீ சரியாகி வந்து விட்டாய் அல்லவா.......? சரி உனக்கே தெரியாமல் ஒரு சர்ப்ரைஸ் ஆக இருக்கட்டும் என்று தான் இதற்கு பிளான் செய்தேன் என்று கூறினான்.

ஆமாம்.... ஏன் பைரவியிடம் பேசவே இல்லை.... என்றாள்.
ம்ம்ம்ம்ம்..... அன்றைக்கு அவள் நடத்திய கூத்தில் உனக்கு ஏதாவது ஆகி இருந்தால் என் வாழ்க்கையே நரகம் ஆகி இருக்கும்...
அப்படி இருக்க எவ்வாறு அவளிடம் பேச தோன்றும்...? என்று கோபமாக சொன்னான்....
உன்னுடைய இடத்தில் அவள் மட்டுமல்ல வேறு யாரையும் வைத்து பார்க்க முடியாது தமிழ் என்றான்.
அந்த நிமிடம் தமிழின் கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது...
உண்மையிலேயே நான் கொடுத்து வைத்தவள் தான் என்றாள்....
அது உனக்கு இப்பொழுது தான் தெரிகிறதா......? என்றான்...
பிறகு, இனிமேல் அவளை பற்றி என்னிடம் பேசாதே..... என்றான்.

சரி அதெல்லாம் போகட்டும் நாளைக்கு ஆபீஸ் வர முடியுமா....? என்று கேட்டாள். ஓ..... கண்டிப்பாக நாளைக்கு என்ன...? நீ கூப்பிட்டால் தினமும் கூட ஆபீஸ் வர வேண்டியது தான் என்று கூறினான். பட் என்ன விஷயம் என்று கூறினால் நன்றாக இருக்கும் என்றான். நாளை சுந்தர் ஊரிலிருந்து வருகிறார் என்னவோ தெரியவில்லை உங்களையும் நாளைக்கு ஆபீஸ் வர சொன்னார் அதனால் தான் கூப்பிட்டேன் என்று கூறினாள். ஓ.... அப்படியா விஷயம் என்றான் அவன்.

அப்படித்தான் விஷயம் என்று கூறியவள் சரி கிளம்பலாமா.....? என்று கேட்டாள். கிளம்ப வேண்டியது தான் என்று கூறினான் . பிறகு வெளியே சாப்பிட்டு விட்டு செல்லலாமா? என்று கேட்டான் அதற்கு, அவள் சரி என்று சொல்லவே இருவரும் வெளியில் சாப்பிட்டு விட்டு அவரவர் வீட்டுக்கு திரும்பினர்.

ஆனாலும் நாளை எதற்கு சுந்தர் வர சொல்லி இருப்பார்? என்ற கேள்வி அகிலனின் மனசுக்குள்ளே இருந்தது.
மலரும்......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top