மண்ணில் தோன்றிய வைரம் 18

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
அன்று ஆபிஸ் முடிந்து அஸ்வினின் சித்தப்பாவினை நலம் விசாரிக்க அஸ்வினின் வீட்டிற்கு சென்றாள் சாரு. அங்கு அவள் சென்ற போது அஸ்வினின் மொத்த குடும்பமும் அவளை அன்புடன்வரவேற்றது. கிருஷ்ணனும் அவளுடன் உரையாடும் பொருட்டு ஹாலிற்கு வந்தார். அவரை கண்டு சாரு
"அங்கிள் நீங்க ஏன் ஸ்ரெயின் பண்ணிக்கிறீங்க... நானே வந்து உங்களை ரூமில் பார்த்திருப்பேனே...” என்று அக்கறையுடன் கூற அவளது அக்கறையில் நெகிழ்ந்த கிருஷ்ணன் “பரவாயில்லை மா. இப்போ நான் நல்லா தான் இருக்கேன். டாக்டரும் ரூமுக்குள்ளேயே இருக்காம வெளிய நடமாட சொல்லி இருக்காரு” என்று ஆறுதல் படுத்தினார். சிறிது நேரம் அவரது உடல் நிலை குறித்து விசாரித்து விட்டு சித்ரா,கவி,பாட்டி,தாத்தா மற்றும் மாதேஷ் என்று அனைவருடனும் எந்த பந்தாவும் இல்லாமல் சகஜமாக உரையாடிய சாருவை அனைவருக்கும் பிடித்து போனதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை. அவள் தன் குடும்பத்தாருடன் நயமாக பொருந்திக்கொண்டது அஸ்வினிற்கு ஒரு இனம்புரியாத மகிழ்ச்சியை உண்டு பண்ணியது. ஆனால் அதற்கான காரணத்தை கண்டறிய தவறியது அவனது விதி செய்த சதி. அரைமணி நேர விசாரிப்புகளுக்கு பின் கிளம்ப தயாரான சாருவை சித்ரா
“சாருமா டின்னர் சாப்பிட்டு போகலாமே... முதன் முதலா எங்க வீட்டுக்கு வந்திருக்க.. நீ ஏதும் சாப்பிடாம போனா இந்த ஆண்டிக்கு கஷ்டமா இருக்கும்.. ஒரு பத்து நிமிடத்தில் டின்னர் ரெடியாகிரும். அதை சாப்பிட்டு கிளம்பலாமே...” என்று கூற
“சாரி ஆண்டி வீட்டுல எனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க. நான் ஆறுதலா இன்னொரு நாள் வருகிறேன் . அன்று உங்கள் நளபாக தர்பாரில் பங்கெடுக்கின்றேன்” என்று நாடக பாணியில் சித்ராவின் அழைப்பினை மறுத்துவிட்டு அனைவரிடமும் விடை பெற்ற சாருவிற்கு வெளியில் கொட்டோ கொட்டென்று சிதறி விழுந்த மழையுடன் கூடிய காற்றும் இடைவெளியோடு மின்னிய மின்னலுடன் கூடிய இடியும் அவளுக்கு அனுமதி தர மறுத்தது. இந்த அடை மழையில் சாருவினால் பயணிக்க முடியாது என்றுணர்ந்த ஆரவல்லி பாட்டி
“அம்மாடி சாரு இந்த மழை இப்போதைக்கு நிற்பது போல் இல்லை. நீ இன்னைக்கு எங்கூட தங்கிக்கோ.. உங்க வீட்டுக்கு போன் போட்டு சொல்லிரு. சித்ரா நீ பசங்களுக்கு சாப்படு எடுத்து வை. கவிமா நீங்க சாருவை உங்க ரூமிற்கு கூட்டிட்டு போங்க” என்று ஆளுக்கொரு வேலையை பணித்தார்.சாருவியை கவி அழைத்து சென்ற பின் அஸ்வின் பாட்டியிடம்
“ஏன் பாட்டி நீங்க பாட்டுக்கு அவங்களோட சம்மதம் கேட்காம சொல்லிட்டீங்க.. அவங்க வீட்டுல என்ன சொல்லுவாங்கனு தெரியலையே.. “
“கண்ணா நீயே சொல்லு இந்த மழையில ஒரு வயசுப்பொண்ணை தனியா அனுப்ப முடியுமா?? அதான் நான் அந்த பொண்ண இங்க தங்க சொன்னேன். அந்த பொண்ணு வரட்டும். நானே அவங்க வீட்டு போன் பண்ணி அவங்க வீட்டு ஆட்களிடம் நிலமையை எடுத்து சொல்றேன்.”என்று விட்டு சித்ராவிற்கு உதவும் முகமாக சமயலறை நோக்கி சென்றார் ஆரவல்லி.
சாருவை தன் அறைக்கு அழைத்து சென்ற கவி அவளிற்கு மாற்றுடை எடுத்து கொடுத்துவிட்டு
“உள்ளே பாத்ரூமில் ஷாம்பூ, சோப் எல்லாம் இருக்கு மேடம். வேறு ஏதும் தேவைனா கூப்பிடுங்க மேடம்” என்ற கவி கூறிய அடுத்த நொடி
“ஏன்மா கவி என்னை பார்த்தால் உனக்கு ஆண்டி பீல் ஏதும் வருதா??” என்று வினவிய சாருவின் கேள்வியில் குழப்பமடைந்த கவியோ
“ஐயோ அப்படி எல்லாம் இல்லை. இவ்வளவு அழகா இளமையா இருக்க உங்களை பார்த்து ஆண்டினு சொன்னா அவங்களுக்கு கண்ணுல இல்லாவிடின் மூளையில ஏதாவது கோளாறா தான் இருக்கும். உங்களை யாரு அப்படி சொன்னாங்க?”என்று வினவிய கவியிடம்
“இதுவரைக்கும் யாரும் சொல்லவில்லை. ஆனால் இனிமேல் சொல்லிருவாங்களோனு பயமா இருக்கு என்ற சாரு கூற
“அது யாருங்க அது?”
“வேற யாரு நீ தான் மா” என்ற சாருவின் பதிலில் பதறிய கவி
“ஐயோ நான் எப்போ அப்படி சொன்னேன்??”
“ஆண்டினு சொல்லவில்லை. ஆனா அதுக்கு ஈக்குவலா அந்த வார்த்தையை சொல்லி சொல்லி இப்படி என் பர்சனாலிட்டியை டாமேஜ் பண்ணுறியே மா” சாரு கூறிய போதுதான் கவி தான் அவளை மேடம் என்று கூப்பிட்டதை குறிப்பிடுகின்றாள் என்று புரிந்து கொண்டாள்.
“சாரி அது அண்ணா உங்களை அப்படி கூப்பிட்டதால நானும் அப்படியே கூப்பிட்டேன்."
“ ஓ.அப்போ உங்க அண்ணன் அவரோட வைப்பை பேபி, ஸ்வீட்டினு கூப்பிட்டால் நீயும் அப்படி தான் என்... அவங்களையும் கூப்பிடுவியா?? என்ற தன் வாயில் தவறான சமயத்தில் உதித்த சரியான கேள்வியை அழகாக சமாளித்தாள்.
“ஐயோ இப்படி ஏதும் பண்ண எங்க அம்மா என்னை கட்டி வைத்து வேப்பிலை அடித்து சாமி ஆடிருவாங்க..” “அப்போ எதுக்கு மா என்னை மட்டும் ஏன் வார்த்தைக்கு வார்த்தை மேடம்னு கூப்பிட்டு பஞ்சர் ஆக்குற?? இனிமேல் என்னை சாருனு தான் கூப்பிடப்போற... மேடம்னு உன்னோட வாயில் வந்த அடுத்த செக்கன்ட் நான் அழ ஆரம்பித்து விடுவேன் “ என்று சிறுபிள்ளைபோல் மிரட்டிய சாருவை பார்த்து சிரிக்கத்தொடங்கினாள் கவி. “ஓகே .. கூல் இனிமே சாருனே கூப்பிடுறேன். ஓகேவா சாரு? “
“இது நல்ல பிள்ளைக்கு அழகு “என்று அவர்களது உரையாடல் சித்ரா வந்து அழைக்கும் வரை தொடர்ந்தது.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top