நேச நதி -24(final)

Advertisement

Akila

Well-Known Member
அனைவருக்கும் வணக்கம் பிரெண்ட்ஸ்.

ஆரம்பத்திலிருந்தே எந்த கமெண்ட் க்கும் பதில் சொல்லாம அமைதியா இருந்தேன். ஒன்று நேரம் இல்லை இன்னொன்று அது அப்படியே விவாதமா மாறிப் போனா அதுலேயே டைம் போகும். இறுதியா விளக்கம் சொல்லலாம் என இருந்தேன்.

ஹீரோ ஹீரோயின் அப்படின்னா இப்படித்தான் இருக்கணும் அப்படினு நிறைய நமக்குள்ள பதிஞ்சு போயிருக்கு. இந்த கதையில விஜய் பாவனா இருவரையும் ஹீரோ ஹீரோயினா பார்க்க வேணாம். இந்த கதையோட முதன்மை கதாபாத்திரங்கள் இவர்கள்.

இருவரது தடுமாற்றங்கள், முடிவுகள், செயல்கள், அதன் விளைவுகள் இதுதான் கதை. அவங்க என்ன செய்றாங்களோ அதுக்கான விளைவுகளை எதிர் கொள்றாங்க. எல்லா சமயமும் யாரும் சரியா முடிவெடுக்கிறது இல்லை, அந்த நேர சூழல், உணர்வுகள் வச்சுத்தான் பெரும்பாலானவர்கள் முடிவு எடுக்கிறாங்க. சில சமயம் சரியா இருக்கலாம், சில சமயம் தவறா போகலாம்.

மனிதர்கள் பெரும்பாலும் உணர்ச்சிக்கு அடிமையானவர்கள். அவங்களுக்கு அந்த நேரம் செய்றது சரியாத்தான் தோணும்.

பாவனா விட கொடிய சூழல்ல இருந்து தன்னம்பிக்கையா போராடுற பெண் கதாபாத்திரங்களையும், எதையும் அறிவு பூர்வமா அதிரடியா செய்ற ஆண் கதாபாத்திரங்களையும் ஏற்கனவே சில கதைகள்ல எழுதிட்டேன். காதலித்து வீட்டினர் சம்மதத்துக்காக காத்திருக்கிற கதா பாத்திரங்கள் வச்சும் எழுதியிருக்கேன். முன்னாடி எழுதின கதையிலேர்ந்து கொஞ்சமும் வித்தியாசம் இல்லாம எழுதினா கண்டிப்பா உங்களுக்கு எல்லாம் போர் அடிச்சிடும்.

இந்த கதையிலும் முதன்மை கதா பாத்திரங்கள் உணர்வு ரீதியாக பலமில்லாதவர்கள். இப்படியும் மனிதர்கள் இருக்காங்க தானே. ஆனால் நிச்சயமாக கெட்டவர்கள் இல்லை.
வேறு பல விஷயங்களுக்கு கதை மூலமாவே விளக்கம் சொல்லிட்டேன்.

பிரசன்னா பிருந்தா இருவருக்கும் தனியா கதை இருக்கு. பிரேக் எடுத்திட்டு வர்றேன் பிரெண்ட்ஸ்.

இதோ கதையின் இறுதி அத்தியாயங்கள்…






Please read and share your thoughts.

அப்புறம் ஒரு விஷயத்தை இங்க சொல்லணும்னு நினைக்கிறேன். உங்க கருத்துக்கள் எப்போதும் என்னை உற்சாகப் படுத்தி ஊக்கப் படுத்துபவை, அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. தாராளமாக உங்களுக்கு தென்படும் குறைகளை எடுத்துக் கூறலாம். இதற்கு முன்பு கூட குறைகள் சொன்ன நண்பர்களுக்கு தெரியும், அதை அலசி ஆராய்ந்து திருத்திக் கொண்டிருக்கிறேன். இனியும் என் தவறுகளை திருத்தம் செய்து கொள்ள முழு மனதோடு தயாராகவே இருக்கின்றேன்.

ஆனால் சில சமயங்களில் ஹார்ஷ் டோனில் சொல்லப் படும் போதும் உபயோகப் படுத்தும் சில வார்த்தைகளும் காயப்படுத்துவதை போல இருக்கின்றன. யார் என குறிப்பிட்டு சொல்ல விரும்பவில்லை. தாராளமாக உங்கள் கருத்துக்களை முன் வையுங்கள், கண்ணோட்டங்களை தெரிவியுங்கள், குறைகளை சுட்டிக் காட்டுங்கள்.

சில நேரங்களில் உங்களது ஒரு வார்த்தை கூட பல மணி நேரங்கள் என்னை செயல்படாமல் வைத்து விடுகிறது. உங்கள் கருத்துக்களை கண்ணோட்டங்களை கொஞ்சம் மென்மையாக கொஞ்சம் மேன்மையாக சொல்லுங்கள் என மிக மிக அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

வாசக நண்பர்கள் இல்லையென்றால் இரு வருடங்களாக என் எழுத்து பயணம் தொடர்ந்து கொண்டிருக்காது. இனியும் தொடராது. என்னை தொடர்ந்து எழுத வைக்கும் அனைவருக்கும் என் அன்புகளும் நன்றிகளும்.
Hi
Very nice update.
Nice flow..
Yes. If we talk very harshly, will not give much impact, but if it is in writings, will prick a lot.
Waiting for Brindha-Prasi part... Expecting as continuation of this, that is the growth of Baavna and Azhi.... with junior Vijay...
 

apsareezbeena loganathan

Well-Known Member
நேச நதி.....
பிறப்பின் அடிப்படையில்
உயர்ந்தவன் என்னும் மதி
நட்பின் பேரில்
சாம் செய்த சதி
பிரிந்த ஜோடிகள்
வாழ்வின் கதி
விஜய்யின் சரி பாதி
பாவனாவின் பதி
நேசம் மட்டுமே என்றும்
பிரியாத விதி.....

ஆழியின் சிரிப்பும் குறும்பும்ல
அனைவரும் flat....
அரங்கநாதன் கங்கா பிரசன்னா.....

Friends gang super.....
மாசனகுடி ....

தொடங்கிய இடத்திலே முடிவும் ....
நதி போல ஓடிக் கொண்டே இரு....
வாழ்த்துக்கள் மா ❤️❤️❤️

எதார்த்தமான நிதர்சனம் உரைக்கும் கதை.... நேச நதி ....
நன்றாக இருந்தது.....

பிரசன்னா பிருந்தா க்கு waiting
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top