தீயினுள் தெ(ன்)றல் நீ!
அத்தியாயம் – 24
தன் ஆர்ம்ஸினை இறுக்கிப் பிடித்திருந்த.. கடும்நீல நிற வண்ண டீஷேர்ட்டும், அதற்கு தோதாக டெனிமும் அணிந்திருந்தவன்..
எங்கேயோ செல்வதற்கு தயாராகி ரொம்ப ரொம்ப ஃப்ரஷ்ஷாக.. தன் ட்ரஸ்ஸிங் டேபிள் கண்ணாடி முன் நின்றிருந்தான்.
தனக்கு பிடித்த.. ஜோர்ஜியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட…
அதி உயர் லேவன்டர் வாசனை கொண்ட பர்ஃபியூமை தன் உடைக்கு மேலாக அடித்தவனின் முகத்திலே..
முன்பிருந்த இறுக்கம் தளர்ந்து.. கொஞ்சமே கொஞ்சம்.. அரும்புநகை பூத்திருந்தது.
அவன் இத்தனை வருடங்களாக உபயோகித்த பர்ஃபியூம் ஜோர்ஜியாவில் இருந்து தான் வருகிறது என்று அறிந்து வைத்திருந்தவனுக்கு..
தன் லேவன்டர் மலரும்.. ஜோர்ஜியாவில் தான் இத்தனை நாள் இருந்திருக்கிறாள்  என்று முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியாது போனது அவன் துரதிர்ஷ்டம்!
அதை எண்ணி புன்னகைத்துக் கொண்டே ட்ரஸ்ஸிங் டேபிள் மீதிருந்த.. அவனுடைய ஹேர் ப்ரஷ்ஷினை அவன் எடுக்க முனைந்த போது.. அவன் கை.. அந்தரத்தில் அப்படியே நின்றது.
அவன் எப்போது உபயோகப்படுத்தினாலும்..ரொம்பவும் க்ளீனாக இருக்கும்  ஹேர் ப்ரஷ்ஷோ.. இன்று வழமைக்கு மாறாக..
அதன் பற்களுக்கிடையில் சுருள் சுருளான முடிகள் சிக்கித் தவித்திருக்க.. அலங்கோலமாக அவன் கண்களுக்கு காட்சி தரலாயிற்று.
அதிலிருந்த எக்கச்சக்கமான முடியில்.. அவனது கண்கள் இரண்டும் ஒரு கணம்  இடுங்கி.. பின் பழைய நிலையை அடையலாயிற்று.
அவன் வீட்டில்.. அதுவும் அவன் அறையில் இருக்கும் ஹேர் ப்ரஷ்ஷினை… அவனது மனைவியைத் தவிர வேறு யார் தான் பயன்படுத்தியிருக்கக் கூடும்?
தைர்யா தான் உபயோகப்படுத்தியிருக்கிறாள் என்று தெரிந்தாலும்.. அதற்கு அவன் சினங் கொள்ளாமல்.. அவள் உபயோகப்படுத்தியிருக்கும் முறையிலேயே சினம் கொண்டான் அந்த நவீன ரவிவர்மன்.
தன் முன்னே.. நின்று.. தன்னேயே துணிச்சலுடன் முறைத்துப் பார்க்கும் கண்ணாடி விம்பத்தை.. இன்னும் கொஞ்சம் விழிகள் சுருக்கி.. முறைத்துக் கொண்டே.. கீழே ஹாலுக்கு கேட்கும் வண்ணம் உரக்க குரல் கொடுத்தான் வீர்.
ஒரு கையை இடுப்பில் தாங்கி.. மறுகையில் தன் ஹேர் ப்ரஷ்ஷினை ஏந்தியவாறே,
“தைர்யாஆ.. தைர்யாஆ..” என்று சீற்றத்துடன் கத்தினான் அவன்.
தாய்ப்பறவையின் குரல் கேட்டு, தலை நீட்டி எட்டிப்பார்க்கும் குஞ்சுப் பறவையை போல அவளும்..
தன் தலைவனின் குரல் கேட்டதும்.. இதயம் தடதடக்க, இமைகள் படபடக்க.. மாடிப்படிக்கு ஓடோடி வந்தாள்.
அவன் மூன்றாவது அறை கூவலை விடுக்க ஆயத்தமான அந்த கணம், அறைக்குள் பிரசன்னமானாள் ஷேத்ரா. அவன் மனைவி!
“தைர்..”என்ற அவன் பாதி அழைப்பு மட்டும் வெளியே வர, அவன் புறமுதுகுக்கு பின்னாடி.. அதாவது கண்ணாடியில் விழுந்த அவள் கதவு திறக்கும் விம்பம் கண்டு.. மீதி அழைப்பு உள்ளேயே அமிழ்ந்து போனது.
உடலிலே.. ஓர் படபடப்பு ஓட.. ஓடி வந்தவளுக்கு.. அறைக்குள் நுழைந்ததும் சமநிலை தடுமாறித் தான் போயிற்று.
ஓரெட்டு எடுத்து வைத்தவளுக்கு.. அடுத்த எட்டு.. எடுத்து வைக்க முடியாமல்… கால்கள் ஆட்டம் கொள்ள.. விழத்தான் போனாள் அவள்.
அவள் விழப்போவதை.. அவள் தடுமாற்றத்தின் மூலம் ஊகித்துக் கொண்டவன், சட்டென கண்ணாடியை விட்டும் திரும்பி.. ஓரெட்டு முன்னே எடுத்து வைக்கப் போக..
அவன் வந்து உதவ தேவையேயின்றி.. தானாகவே சமாளித்து நின்றாள் தைர்யா. அவன் தைர்யா!!
தன் பருத்த தனங்கள் ஏறி, இறங்க மூச்சு வாங்கிக் கொண்டே,வாய் நிறைய கொள்ளை புன்னகையை சிந்தியவாறே “என்ன வீர் கூப்பிட்டியா?”என்ற வண்ணம்.. அவனை நோக்கி மீண்டும் ஓரடி எடுத்து வைக்கப் போக.. அங்கு தான் அவளுக்கு ஆரம்பமானது ஏழரை.
தரையில் பதியும் கால்களின் அழுத்தம்.. இம்முறை சரியாக பதியாதது போல.. எட்டு எடுத்து வைத்த அவளுக்கே தோன்ற.. கைகளினை.. அந்தரத்தில் ஆட்டிய வண்ணம்.. முகம் குப்புற விழுந்து.. மூக்கை பன்ச்சராக்கிக் கொள்ள தயாரானாள் தைர்யா.
அப்படி ஏதும் ஆக விடுவானா அவள் கணவன்?
அவள் விழப்போவதைக் கண்டு.. கண்கள் அகல விரிய.. அவன் கைகளோ.. அவள் விழுந்து விடாமல் பற்றுவதற்காக.. அவளது வெண்மையான இடையை நோக்கி நீண்டன.
அவன் கைகளும், அவளது சிற்றிடையும் தீண்டிக் கொண்ட கணம்..பூமி பார்த்திருந்த அவள் தனங்களின் அண்மையில்.. சற்றே சித்தம் குலைந்து தான் போனான் ரகுவீர்.
அவள் ஓரக்கண்ணால் பார்த்தாளே.. தன் சுய சிந்தையை இழக்கும்  ரகுவீருக்கு.. அவள் அண்மையும், பெண்மையும், அவளுக்கேயென்று உரித்தான பெண்மையின் வாசனையும் உள்ளே தீப்பொறியைத் தான் மூட்டியது.
விழுந்து விடாமல் பற்றிய அவன் கரங்கள்.. அவள் இடையை… தன்னையும் மீறி வருடிக் கொடுக்க.. அவன் ஸ்பரிசத்தில்.. பெண்ணவளின் அடிவயிற்றுக்குள்… ஆயிரம் பட்டாம்பூச்சி படபடப்பின் சுகமான அவஸ்தை.
அதை வெகுநேரம் அனுபவிக்க முடியாமல்.. தான் விழுந்து விடாமல்.. அவன் தூக்கி பிடித்திருப்பது புரிய.. தன் முகத்தில் ஓர் கடினத்தன்மையை வரவழைத்துக் கொண்டு.. அவன் பிடியிலிருந்து வெளியே வந்தாள் ஷேத்ரா.
அவள் முகத்தில் தெரிந்த இறுக்கம்.. தன் அணைப்பு அவளுக்கு பிடிக்கவில்லை போலும் என்ற துர் எண்ணத்தை மூட்டி விட… இம்முறை இரட்டிப்பு கோபம் தாண்டவமாடியது அவன் முகத்தில்.
தன் கையில் இருந்த முடிகள் அடர்ந்த ஹேர் ப்ரஷை அவள் முகத்துக்கு முன் நீட்டி,
“என்ன இது?” என்று கேட்டான் ரகுவீர்.
அவன் எதைக் குறிப்பிடுகிறான் என்பது புரிந்தும், புரியாதவள் போல, பின்னாடி கை கோர்த்தவளாய் அவனை போலி இறுமாப்புடன் நோக்கி,
“இது என்னன்னு தெரியாது? .. இது தெரியாமல்.. நீ எப்படி பெயின்டரா இருக்க? உனக்கு ஸ்ரீலங்கன் கவர்மென்ட் அவார்ட் கொடுத்தது எல்லாம் வேஸ்ட்.. வேஸ்ட்..”என்றவள்,
அவனது ஃப்ரஷ்ஷான முரட்டுக் கன்னங்களை இரு பக்கமும் பிடித்தாட்டிய வண்ணம்,
“ இருந்தாலும்.. என் செல்லப் புருஷன் கேட்கிறதால் சொல்றேன்.. இது ஹேர் ப்ரஷ்”என்றுரைத்து விட்டு..அவன் உள்ளத்தை சூறையாடும் ஓர் கொள்ளைச் சிரிப்பொன்றை அவனை பார்த்து சிரித்து வைத்தாள் பாருங்கள்!!
அந்த மோனாலிஸா  சிரிப்பில் வீழ்ந்தான் டாவின்சி!!
அவள் மேலிருக்கும் கோபம் முழுவதும் உடனேயே வடிந்து விட.. போலிக் கோபம் முகத்தில் தாண்டவமாட, கையுயர்த்தி அவளை அடிக்கப் போவது போல பாவ்லா காட்டியவன்,
“அடீஈஈங்..!! எனக்கு தெரியாதா இது ஹேர் ப்ரஷ்னு.. இந்த ப்ரஷ்ல.. உன் முடி எப்படி வந்ததுன்னு கேட்டேன்”என்றுரைக்க.. அதற்கும் அவளது பதில் சிரிப்பு.  
அந்த பளிங்கு சிலையின் திவ்யமான சிரிப்பில்.. பழைய வன்மம் மறந்து நின்றவன், மனைவி முடியை.. ஹேர் ப்ரஷ்ஷிலிருந்து களைய ஆண்கர்வம் கொள்ளவில்லை. அருவெறுப்பும் நோக்கவில்லை.
அதிலிருந்தவற்றைக் களைந்து… ட்ரஸ்ஸிங் டேபிள் அருகிலிருந்த “டஸ்ட் பின்”னில் இட்டவன், ஏதும் பேசாமல்.. தலை வாரவாரம்பித்தான்.
இரு கைகளும் உச்சந்தலையில் இருக்க.. தலை சரித்து நின்று அவன் தலை சீவும் தோரணையானது..அவனது இரு புஜங்களையும் இன்னும் இன்னும் முறுக்கிக் காட்ட சொக்கிப் போனாள் அவள்.
கூடவே அவளுக்கு.. அன்று அவனுக்கு மயக்க மருந்து கொடுத்து விட்டு.. பிரிந்து சென்ற நாள் ஞாபகத்துக்கு வரலாயிற்று.
“உன் முறைப்பொண்ணு மதுவைக் கட்டிக்கிட்டு சந்தோஷமா இரு” – அந்தப் பெண் மது, இவன் நண்பன் அபியை காதலிப்பது அறியாது செப்பியது எவ்வளவு பெரிய மடத்தனம்??
அவர்களைப் பற்றி.. அவர்கள் காதல் பற்றி அவன் வாயிலாக இன்றேனும் முழுமையாக அறிந்து கொள்ள  நாடியவள்.. தலை சீவும் தன் கணவனின் ஸ்மார்ட்டான விம்பத்தைப் பார்த்துக் கொண்டே மார்புக்கு குறுக்காக கை கட்டி நின்று,
“ஆமா.. நம்ம மதுவும், அபியும் ரொம்ப நாள் லவ்வர்ஸா என்ன?அதையே நீ என்கிட்ட சொல்லவே இல்லை? ”என்று மெல்ல கேட்டதும் தான் தாமதம்.. தலை வாரிக் கொண்டிருந்த.. அவன் கைகளிரண்டும் உச்சந்தலையில் அப்படியே நின்றது.
அவள்.. அது பற்றி அப்போது பேசியிருக்கவே வேண்டாம்!! அவன், மதுவின் காதலைப் பற்றி அவளிடம் சொல்லவில்லை தான்.
இருப்பினும் மது மேல் தனக்கு எந்தவித அபிப்பிராயமும் இல்லை. மது என் தங்கை என்று அவளுக்கு அவன் நிலைப்பாடு பற்றி தெள்ளத் தெளிவாக கூறியிருந்தானே?.
அப்படியிருந்தும் “மதுவைக் கட்டிக்கிட்டு சந்தோஷமா இரு”என்று கூறிவிட்டு சென்றவளுக்கு, அதன் பின் அவன் வாழ்க்கையில் நடந்த கோர சம்பவங்களையுமோ, மது காதல் கை கூடியதையுமோ அவளிடம் இயம்ப மனம் வரவேயில்லை.
கண்ணாடி வழியாகவே நோக்கியவனின்.. கண்களின் கூர் பார்வைக்கு, புருவங்களும் துணை புரிய.. விழிகள் இடுக்கி அவளைப் பார்த்த அந்த பார்வையில் சர்வமும் ஆட்டங்காணத் தொடங்கியது அவளுக்கு.
விழிகள் மருள.. அவனையே பார்த்திருந்தவளை நோக்கி.. திரும்பியவன், பற்களைக் கடித்துக் கொண்டே, ஆத்திரத்தில், “க்கட்டாயம் சொல்லணுமா என்ன?”என்று கேட்ட தினுசில்…
இருளுக்கு மருளும் சிறு குழந்தைகள் போல.. அவனை மருண்ட விழிகளுடன் பார்த்துக் கொண்டே, “டிஸ் கவ்ரிபா மொக்லியா.. டிஸ் கவ்ரிபா மொக்லியா”என்று முணுமுணுக்கவாரம்பித்தாள் அவள்.
அவளது முணுமுணுப்பைக் கண்டு.. ஒரு கணம் கண்களை அகல விரித்து நின்றவன், அவள் என்ன முணுமுணுக்கிறாள் என்பது புரியாமல்.. மெல்ல அவளை நோக்கி திரும்பினான்.
அவனது சடுதியான வேகத் திரும்பலில்.. இன்னும் கொஞ்சம் உதறல் எடுக்க.. இமைகளை சடசடவென இமைத்துக் கொண்டே அவனைப் பார்த்தாள் அவள்.
அவள் அச்சத்தில்.. ஒரு கணம் தலை திருப்பி நின்று..ஆழப்பெருமூச்சொன்றை எடுத்து விட்ட படி.. தன்னைத் தானே சுதாரித்துக் கொண்டவன், மெல்ல அவளை நோக்கி வாய் திறந்தான்.
அவள் கூறிய அந்த புரியாத வாசகம், வேறு மாதிரி அவன் காதுகளில் விழுந்து விட, “ம்.. ஆமா.. நானும் உன்னை நோட் பண்ணிட்டு தான் வர்றேன்.. அது என்ன? டிஸ் கவ்லிபா மொக்ரியா?”என்று கேட்க..
அவன் தன்னைத் திட்டாமல், இயல்பாக பேசியதில்.. ஆசுவாசமாக நெட்டுயிர்த்தாள் தைர்யா.
அவனும்.. அவளை திட்டி விட.. காயப்படுத்தி விடத் தான் நாடுகிறான்.. இருப்பினும் இந்த அழகான ராட்சசி இப்படி தன் முத்து மூரல்களை காட்டி புன்னகைத்து வைத்தால்.. அவனாலும் தான் எப்படி தன் இரும்பு முகத்தை காட்ட முடியும்?
அசாத்திய சிரிப்பினால் அவ்விரும்பை உருக்குகிறாள் அவள்;தான் உருகுவது தெரியாமலேயே உருகி உறைகிறான் அவன்.
அவன் திட்டாததால்.. முகத்தில் ஓர் இன்ஸ்டன்டாய் மொட்டுநகை அரும்ப.. அவனை நோக்கி ஒயிலாக நடந்து வந்தவள்.. அவன் கழுத்தில்.. தன் கைகளை மாலை போல இட்டு..
தன் பெண்மைக் கோலங்களை அவன் திண்ணிய மாரில் அழுந்தச் சாய்த்து,
அவன் நாடி அருகே.. தன் இதழ்களை கொண்டு சென்று.. அவனது முரட்டு சருமத்தில்.. தன் உஷ்ணமான மூச்சுக்காற்று.. வீச,
கண்களில் கிறக்கம் ஏந்தி, அந்த ஆண் வண்டின் முகம் பார்த்த அந்த லேவன்டர் மலர், “அப்படின்னா.. என்னன்னு தெரிஞ்சிக்கணுமா?”என்று கேட்க…
அவனுக்கோ.. கேட்ட கேள்வி மறந்து போய்..அசையும் அவள் அதரங்களையே கள்ளுண்டவன் போல பார்த்துக் கொண்டேயிருந்தான்.
அவள் இதழ்களை சிறை செய்ய.. இதழ்கள் துடிதுடிக்க.. மெல்ல அவன் இதழ்கள் திறந்து கொண்டன.
அந்த இடைவெளியை பயன்படுத்திக் கொண்டவள்,ஹஸ்கி குரலில், “அப்படின்னா.. என் புருஷன் ஒரு லூசுன்னு அர்த்தம்”என்று சட்டென மொழிந்து விட்டு… அவன் இவ்வளவு நேரம் வாரிய மயிர்க் கேசத்தை கைகளால் களைத்து விட்டு.. அவன் திட்டுவதற்குள் அங்கிருந்து ஓடியே போனாள் அவள்.
அவள் அண்மையில்.. ஒரு போதைக் கிறக்கத்துடன் நின்றிருந்தவன்..
அவள் சென்று வெகுநேரமாகியதன் பின்பு தான், அவள் தன்னை கலாய்த்து விட்டு சென்றதை அறிந்தான் .
 அக்கணம் அவன் இதழ்களில் பூத்த அழகிய காதல் புன்னகை.. அவன் வீட்டை விட்டு வெளியேறும் வரை இருந்தது.
கிளம்பும் முன்னர்.. தன் மனைவியிடம், “இன்னைக்கு ஃபென்டாஸ்டிக் டச்சில்.. ஒரு கெட்டுகெதர் பார்ட்டி இருக்கு.. கொழும்பு வரைக்கும் போய் வந்துட்றேன்..வருவதற்கு இரவாகும்.. பத்திரமா இரு”என்றவன்,
அவள் இடையூடு கையிட்டு.. தன்னோடு சேர்த்து அணைத்தவன்.. குனிந்து அவள் உச்சந்தலையில் இதழ்பதித்து விட்டு, கண்ணடித்து வெளியேற.. அந்த ஒற்றை முத்தத்தில், கண்ணடிப்பில் சொக்கி நின்றாள் அம்மாது.
அவன் மனைவிக்கு.. அரைகுறையாகவே விடை கொடுத்தாலும், மறவாமல் அவன் வீட்டு காவலாளியிடம் சொல்ல வேண்டியதை.. பொறுமையாக சொல்லி விட்டே தான் சென்றான்.
தன் மொபைலில் இருந்த குருலிங்கத்தின் புகைப்படத்தை, காவலாளியிடம் காட்டி,
“இந்தாளு.. நான் இல்லாத நேரம் வீட்டுக்குள் வர முயற்சி பண்ணாருன்னா.. உள்ளே விடாதே.. எதுவா இருந்தாலும்.. மேடத்துக்கு தெரியாமல்.. வெளியேவே பேசி அனுப்பிடு.. ஒருவேளை.. உன்னையும் மீறி அந்தாளு.. வீட்டுக்குள் புகுந்து தைர்யாவுடன் பேச முயற்சி பண்ணாருன்னு.. எனக்கு தெரிஞ்சது.. அப்புறம் நீ பார்க்குற வேலை இருக்கும்.. ஆனால் அந்த வேலையை பார்க்க நீ தான் இங்கே இருக்க மாட்ட”என்று கறார் குரலிலேயே காவலாளியை எச்சரித்து விட்டு சென்றான் ஷேத்ராவின் கணவன்.
அவன் அவ்விடத்தை விட்டும் சென்றதன் பின்பு.. வீடே பாழடைந்தது போல ஓர் தோற்றமயக்கம் அவளுக்குள் தொற்றிக் கொண்டது.
எந்நேரமும் கடுகடுவென சிடுசிடுக்கும் அவன் முகத்தினுள்ளும்.. அவளுக்கான காதல் ஒளிந்திருப்பதை அவளும் நன்கு அறிவாள்.
அவன் வைத்த உச்சந்தலை முத்தத்தில், உச்சாதிபாதம் மொத்தமாய் கரைந்துருகிப் போய்.. அவன் ஞாபகத்திலேயே உழன்று தவித்தாள் அவள்.
டிஸ் கவ்ரிபா மொக்லியா. ஆனால் எப்படியோ பயணித்துக் கொண்டிருந்த அவள் வாழ்வு.. அவள் இலங்கை வரவால்.. இப்படி இனிமையாக தடம் புரண்டது அவளுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி தான்.
கழுத்தோடு அவன் கட்டிய தாலி.. அவள் மார்புக் குழிக்குள் சரமாடிக் கொண்டிருந்ததைக் கண்டவளுக்கு.. தன் கொண்டானின் (கணவன்) ஞாபகம்.
அவன் கட்டிய தாலியும். அவனும் ஒன்று. இரண்டுமே இளைப்பாறும் இடம் அவள் மார்புக்குழி தான்!!
இரவிலும், மையல் போதை தலைக்கேறும் தருவாயிலும்.. தன்னுடன் கூடி சல்லாபம் செய்யும் அவன்.. தாபம் ஏந்திய முகம்.. அவள் கண்களுக்குள் விழுந்து.. அவளை இம்சித்துக் கொண்டேயிருந்தது.
அவன் நினைவுகளும், அவனது சொர்ண சுகமான தீண்டல்களும், அதில் இருக்கும் அவன் காதலும் ஞாபகம் வர.. வர..
அவன் அணைப்புக்குள் தன் மொத்த உடலும் நொருங்கித் தவித்து.. அவனை நெருங்கிச் சிறை பிடிக்க ஏங்கியது அவள் மனம்.
ஹாலில் இருந்த.. அவனும், அவளுமாய் திருமணத்தன்று எடுத்துக் கொண்ட.. அந்த ஃபிரேமிடப்பட்ட புகைப்படத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு…
அவள் அத்தருணம் “உம்”மென்று முகத்தை வைத்திருக்காது.. கொஞ்சம் சிரித்திருக்கலாமோ என்று காலம் கடந்து வருந்தினாள் அவள்.
நேற்றிரவு கூட தன்னை நெருங்கி வந்தவன்.. கூடலுக்கு அச்சாரமாய்.. தன் வாயோடு.. அவன் வாய் பதித்து.. எச்சில் குளிர்மையில் காட்டிய ஓர் புது உலகம் இன்று இந்நொடி வேண்டுமென அல்லாடினாள் காவியத் தலைவி.
தன் இதழ்களை ஈரப்படுத்திக் கொண்டு.. அந்த மதுசூதனன் தந்த காதல் சுகத்தை கற்பனையில் கண்டு மகிழ்ந்தாள் சூடிக் கொடுத்த நாச்சியார்.
அந்த ஆண்டாளுக்கு.. பகவான் கிருஷ்ணனின் அதரங்கள் கற்பூர மணத்தை ஒத்திருக்குமோ? கமல மலரை ஒத்திருக்குமோ என்ற சந்தேகம் தான் இருந்தது.
ஆனால் இந்த ஆண்டாளுக்கு.. அவன் அதரங்களின் மணம் உறுதியாக தெரிந்திருந்தது.
கண்கள் கிறங்க.. புகைப்படத்தையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு.. அதற்கு மேலும் முடியாமல் போக, நேரே சமையல் பெண்மணியிடம் சென்று… அவன் நம்பரை வாங்கி.. வீட்டு  லேன் லைனின் மூலம்.. அவன் மொபைலுக்கு அழைப்பெடுத்தாள் ஷேத்ரா.
மறுமுனையில் அழைப்பும் போக.. அவள் ஜீவனின் துடிப்பும் அதிகமாகிக் கொண்டே போனது.
ஒரு சில ரிங்குகளின் பின், அவன் அழைப்பை ஏற்றது புரிய, ரிசீவரை கெட்டியாக இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு, இதயத்தின் படபடப்பு.. செவிகளை தீண்ட,
“ஹலோ.. நான் ஷேத்ரா பேசுறேன்..”என்றாள் இயல்பாக.
“ஷேத்ரா”.அவள் குரல் அவன் செவி வழி நுழைந்து.. மூளையை அடைந்து.. இதயத்தை தாக்கத் தான் மறுத்தது.
அவன் எக்காலத்திலும் விரும்பாத ஷேத்ரா. அவனை காதலித்து ஏமாற்றி விட்டு சென்ற ஷேத்ரா. அந்த நாமத்தைக் கேட்டதும்.. பழைய நினைவுகள் வந்து உடலெல்லாம் சிலிர்த்துக் கொள்ள,
ஒற்றைப் புருவம் தூக்கிய மன்மதன்.. தன் ரதியைப் பார்த்து, அலட்சியமாக சொன்னான், “எந்த ஷேத்ரா? .. எனக்கு அப்படி யாரையும் தெரியாது..”என்று.
அவள் கணவன் வீருக்கு ஷேத்ராவை பிடிக்காது. தெரியும்!! இந்த தைர்யாவைத் தான் பிடிக்கும். அதுவும் தெரியும்!!
இருந்தாலும்.. அவள் பிறரிடம் வழமையாக பேசுவது போல இவனிடமும், “ஷேத்ரா”என்ற பெயரை கூறியிருக்கக் கூடாது தான்.
குரலில் தன் தவறுக்கான தடுமாற்றம் அப்பட்டமாக விளங்க, “நா.. நான் உன் மனைவி தைர்யா பேசுறேன்..”என்ற நொடி மறுமுனையில் இருந்து சட்டென வந்தது பதில்.
“ம்.. சொல்லு என்ன விஷயம்?” – அவன் மனைவி தைர்யா என்று தன்னைத் தானே சிலாகித்துக் கொண்டதாலா இந்த அவசரம்?
அவள் குரலிலோ.. என்றென்றும் மாறாத அதே மென்மை. “இல்லை.. இன்னைக்கு உனக்கு டின்னருக்கு ஸ்பெஷலா சமைச்சு வைக்கலாம்னு பார்த்தேன்.. அதான்.. நீ எப்போ வருவேன்னு.. கேட்க கோல் பண்ணேன்..”என்றாள் தயங்கித் திணறி இவள்.
அதிகாரத் தொனியில் வந்து விழுந்தது அவன் குரல்.
“இப்போ நான் கொஞ்சம் பிஸி.. அது நான் வர்ற டைம் பார்த்துக்கலாம்..”என்றவன், சட்டென ஃபோனை வைக்கப் போக.. இடையிட்டது அவள் தொனி.
தன் மொத்தக் காதல் தவிப்பையும் குரலில் தேக்கி.. “ப்ளீஸ்.. ப்ளீஸ் வாயேன் வீர்…” என்றதும், மறுமுனையிலிருந்த அவன் கண்களிலோ ஓர் பளிச்சிடல்.