Advertisement

 

Thank you mathi , sri , selvi , rathy , uma uday , suba , shereen , KG , poorvaja , SD , shanthi , niran , deebi , karthi , ezhilkailash , stulip , anitha , pons akka , jass , geetha balan , suganya , kodiuma , meena , selvi , sathya , bujji , thamz , sathya ,shanthi murugan , banu ,sumathi , sri , ini , umamanoj , swapna , lavanya , jkrithika , subbugeetha , vennila , vaisri , sai , subhasankar , kanchana , padmi ,tamil roja , mythili , katlak , suba 

Thanks for the friends who posted their comments in forum ( Precap )

SD, rathy , sathya , mathi , malathimari , sswapna , pons akka , aniviswa , malar3, geethabalan , deebi , lavanya , kodiuma , jass1 , nirmala venkatakrishnan ,sathyaicmc , sathya 

 Thank You for the continuous support comments and feedbacks. Eagerly waiting to know from you all.

“Every girl has one guy she keeps going back to. And no one knows why. Not even her”

The first touch, the first love is seldom forgotten.

When Vikram plays along with her timidness and shyness, when the plays become physical, Annakili who has always regarded Vikram quite highly, starts falling for him.

She had known him all along since she was a 10 year old. He was never a stranger, she was a child, a young girl when her brother got married to his sister.

Then, as when she was erring and losing, he was the first to come to her rescue.

Most importantly, at her marriage altar, he married her saving her from any disgrace.

Though, their marriage was unexpected, happened so rapidly, she never dreamt them to have a jolly happy life. But she never expected to see his rude side and ruthless words as well.

But she liked him, now the physical attachment along with this emotional support drew him closer to her heart. The first realization of love, first feelings of belonging.

 “The first time you fall in love, it changes you forever, no matter how hard you try; that feeling just never goes away”

அத்தியாயம் எட்டு :

எத்தனை நேரம் விக்ரமை பார்த்துக்கொண்டே படுத்திருந்தாள் என்று தெரியாது……  அவளையும் மீறி கண்ணயர்ந்து விட்டாள்.

காலையில் தூக்கம் கலைந்து விழி திறந்த போது….. விக்ரம் ஹாலில் இருந்த   கடவுளின் படத்தின் முன் கண்மூடி நின்று கொண்டிருந்தான். அப்போது தான் குளித்து வெளியே வந்திருப்பான் போல…… வெறும் துண்டை மட்டும் உடுத்தி நின்றிருந்தான்… முதுகுப் பகுதியில் நீர்த்துவாலைகள் கூட சரியாக துவட்டபடாமல் ஆங்காங்கே துளிர்த்து நின்றது.

“சரியா துவட்ட கூட இல்லை”, என்று நினைத்தவள்……

பிறகு, முதலில் ஒரு பூஜை அறையை அமைக்க வேண்டும் என்று தான் அன்னகிளியின் மனதில் எண்ணம் ஓடியது. விக்ரம் கற்பக விநாயகர் படத்தின் முன் நேற்றும் கண்மூடி நின்றிருந்ததை பார்த்தவள் இன்றும் நிற்பதை பார்த்தவள்…….

அவன் வணங்க ஒரு பூஜை அறையை அமைக்க வேண்டும் என்று நினைத்தாள்…….  அங்கு வெறும் படம் மட்டுமே இருந்தது…. மற்றபடி விளக்கோ ஏன் விபூதியோ கூட இல்லை. 

என்னென்ன வாங்க வேண்டும்…. கடவுள் படங்கள்…. காமாட்சி விளக்கு, குத்து விளக்கு என்று அவள் யோசித்துக் கொண்டிருந்தாள்.  

இப்படி யோசித்து கொண்டே அவனை விழிஎடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற நினைப்பே இல்லாமல் விக்ரமையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

கடவுளை வணங்கி கண் திறந்தவன்…. திரும்பிய போது அன்னகிளி அவனையே பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து……

“எழுந்திருச்சிட்டியா?”, என்று ஒரு விரிந்த சிரிப்பை கொடுக்க…….

இவனா நம்மை நாலு வருடங்கள் பிரிந்து இருந்தான்….. ஹாஸ்பிடலில் என்னை பார்த்து சிரிக்க கூட செய்யாமல் இருந்தான்…  நேரம் கிடைக்கும்போதெல்லாம் என்னை திட்டுவதற்கே பிறவி எடுத்தவன் மாதிரி திட்டுகிறான்.  

அதையும் விட இப்படி காலையில் எழுந்து கடவுளை வணங்கி கொண்டிருக்கிறான்… தெளிவாக இருக்கிறான்…. அப்போது என்ன குடித்தான்……. ஏதாவது ஜூசாக இருக்குமோ……. நான் தான் தப்பாக நினைத்து விட்டேனோ…… இல்லை குடிக்கவேயில்லையா நான் கனவெதாவது கண்டேனா….. என்னும் சிந்தனைகளோடு அப்போதும் விடாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அன்னகிளி படுத்துக் கொண்டே விடாமல் அவனையே ஏதோ சிந்தனையோடு பார்த்துக் கொண்டிருக்கவும் “என்ன அப்படி பார்க்கற……”, என்று அருகில் வந்தான் விக்ரம்.  

“ஒன்றுமில்லை”, என்று அன்னகிளி அவசரமாக எழுந்து உட்காரவும்….

“காலையில நல்ல தரிசனம்”, என்றான்.

கடவுளை வணங்கியதை சொல்லுகிறான் என்று அவள் நினைக்க முடியாமல்….. விக்ரம் கண்களில் ஒரு குறும்போடும் ரசனையோடும் தன்னை ஆராய்வது தெரிய… அவசரமாக தன்னை சரி பார்த்தாள்……

“ஐயோ”, என்று இருந்தது…….  தூங்கி அப்படியே எழுந்து உட்கார்ந்திருந்தாள்… கலைந்திருந்த புடவை….. அதனால் அவனின் கண்களை கவர்ந்த அவளின் தோற்றம்… அதில் தெரிந்த மறைக்கப்பட்ட பாகங்கள்….  அவசரமாக சீர் செய்தவள்……. அவனை கலவரமாக பார்க்க…..

“எதுக்குடி எப்போ பார்த்தாலும் இந்த பார்வை…… நான் பார்க்காத போதெல்லாம் என்னை நல்லா தானே சைட் அடிக்கற……  நான் பார்த்தாலோ, பேசினாலோ, எதுக்கு இப்படி டென்ஷன் ஆகற….”,

“நீயா எதுவும் பேசறதும் இல்லை…..”, என்று சொல்லி அவள் கீழே படுக்கையில் அமர்ந்திருந்ததால் அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தான்…….

நைட்டி போட்டுக் கொண்டு உறங்காத தன்னுடைய முட்டாள்தனத்தை நொந்து கொண்டாள்.

அவனின் வெற்று மார்பை பார்க்க தயங்கி….  அவள் தலை குனியவும் ஆர்வமாக பார்த்தவன்…. “ஹேய்! நீ வெட்கப்படறியா”, என்று சிரித்தான்.

அன்னகிளி தலையை தூக்காமல் இருக்கவும்….. “முதல்ல நம்ம ஒரு டீல் போடலாம்….. என்னை பாரு……”, என்றான் எப்போதும் போல அதட்டலாக.  

தயங்கி தயங்கி தலையை தூக்கவும், “நான் சொல்றதை கேட்பியா?”, என்றான் கட்டளை போல…..

“ம்”, என்றாள்.

“என்னன்னு கேட்டா…….. நீ என்ன மனசுல நினைச்சன்னு அப்படியே சொல்லணும் சரியா……….., ஏன்னா நீ என்ன நினைக்கறன்னு என்னால அனுமானிக்க முடியறதில்லை”, என்றான்.

அன்னகிளி அமைதியாக இருக்கவும்….. “என்ன சொல்லமாட்டியா?”, என்று சற்று மிரட்டவும்……. 

தலை தானாக, “சரி”, என்பது போல ஆடியது. 

“இப்போ என்ன நினைச்சன்னு சொல்லு முதல்ல…. என்னை விடாம பார்த்த  தானே! என்ன நினைச்ச?”, என்றான்.

அன்னகிளி சொல்ல தயங்கி பார்வையை தழைக்கவும்… அவள் முகத்தை தூக்கி தன்னை பார்க்க வைத்து……   “உண்மையா சொல்லணும்!”, என்றான் அவளின் கண்களை நேருக்கு நேர் பார்த்து…

அன்னகிளி இன்னும் தயங்கவும், “சொல்லு திட்ட மாட்டேன்”, என்று வாக்குறுதி கொடுத்தான்.

“நீங்க முதுகை சரியா துவட்டலைன்னு நினைச்சனுங்க”,

“துவட்டி விடறியா”, என்றான் ஒரு மயக்கும் புன்னகையுடன்.

முகத்தில் லேசாக செம்மை பரவ…. அன்னகிளி பார்வையை தாழ்த்தினாள்.

“ரொம்ப நேரம் பார்த்த…. இது மட்டுமா இருக்காது! வேற என்ன?”,

“சீக்கிரம் ஒரு பூஜை ரூம் செட் பண்ணனும்…. அதுக்கு விளக்கேல்லாம் வாங்கணும்னு நினைச்சனுங்க.

“ம்! நான் ரொம்ப நாளா நினைச்சிட்டு இருக்குற விஷயம் தான்! அப்புறம்……?”,

அவன் கொஞ்சமும் குடித்ததற்கான அடையாளங்கள் இல்லாமல் இருக்க……. “அப்புறம் நைட் நீங்க ஜூஸ் குடுச்சதை பத்தி நினைச்சேன்!”, என்றாள்.

விக்ரமிற்கு சிரிப்பு பொங்கியது…. வாய்விட்டு சிரித்தான்….. “என்ன பார்த்தா ராத்திரி உட்கார்ந்து ஜூஸ் குடிக்கறவன் மாதிரியா தெரியுது. அவ்வளவு பச்ச புள்ளையாவா நான் உன் கண்ணுக்கு தெரியறேன்……”,

“டேய் விக்ரம், இது உனக்கு பெரிய அவமானம்டா”, என்று அவனுக்கு அவனே சொல்லி சிரிக்க…..

இப்போது அன்னகிளி அவனை பயத்தோடு பார்த்தாள்….

அவளின் கண்களில் பயத்தை பார்க்கவும்…. “தூங்காம என்னை சைட் அடிச்சிட்டு இருந்தியா…”, என்றவன்….. “அது ஜூஸ் இல்லை ஆல்கஹால்….. கொஞ்சமா விஸ்கி….. பெர்மிட்டட் லெவல் தான்…. எப்பவாவது தான் ரொம்ப அதிகமா குடிப்பேன். மத்தபடி தினம் கொஞ்சம் தான்…….”,

“தினமும் குடிப்பீங்களா……?”, என்று கவலையோடு கேட்டாள்.

“ம், பழகிட்டேன்! இல்லைன்னா தூக்கம் வராது…..”, என்றான் சற்று சீரியசாக விளையாட்டுத்தனத்தை எல்லாம் விட்டு……

“என்னது பழகிட்டீங்களா?”, என்று அதிர்ச்சியோடு கேட்டாள்.

“i can understand you…… but still……. நீ என்னை தெரிஞ்சிக்கணும்… என் கூட இருக்குற… நான் வீட்ல தான் குடிக்கறேன்…….. என்னால வெளில போய் குடிக்க முடியாது….. அது என் பதவிக்கு மரியாதையோ அழகோ கிடையாது!”, 

“இருந்தாலுமுங்க தினமுமா?”,

“எஸ்….. இவ்வளவு நாளா தனியா தானே இருந்தேன்…… இது தான் என்னோட தனிமைக்கு கம்பனி…….. இப்போ தானே நீ வந்திருக்க… பார்போம் எதாவது மாற்றம் வருதான்னு……”,  

“சரி! நான் உன்கிட்ட டீல் போட்ட மாதிரி….. நீ என்கிட்டே ஏதாவது டீல் போடறியா….”,

“என்ன போடறது தெரியலையே”, என்று மனதிற்குள் நினைத்தாள், வெளியில் சொல்லவில்லை.

“என்ன நினைச்ச சொல்லு”, என்று விக்ரம் கேட்கவும்…… “ஐயோ! இந்த டீல் நம்ம போட்டிருக்க கூடாது…….”,

“ம், சொல்லு!”,

“என்ன டீல் போடறதுன்னு தெரியலைன்னு நினைச்சனுங்க…..”,

“அவ்வளவு தான் நினைச்சியா……”,

“இந்த டீல் நம்ம போட்டிருக்க கூடாதுன்னு நினைச்சனுங்க….”,

“ம்கூம்! போட்டது போட்டது தான்! இனிமே மாத்த முடியாது!”, என்று கறாராக பேசினான். உடனே, “உனக்கு என்கிட்டே எந்த டீலும் இல்லையா!”, என்று மறுபடியும் கேட்க….

இல்லையென்று தலையாட்டினாள்…….

“ஏண்டி! உன்னை எத்தனை தடவை எருமை மாடுன்னு கூப்பிடறேன்! அந்த மாதிரி மாதிரி கூப்பிடக் கூடாது என் பேர் சொல்லி கூப்பிடணும்னு சொல்ல மாட்ட…..”,

“ம், சொல்லலாம் தானே! ஏன் எனக்கு தோன்றவில்லை”, என்று அவள் யோசிக்கும் போதே……

“நான் மனசுல நினைக்கறதை சொல்ற மாதிரி….. நீங்க நினைக்கறதை சொல்லணும்னு சொல்ல மாட்ட….?”,

“வெளில பேசறதையே கேட்க முடியலை, இதுல மனசுக்குள்ள நினைக்கறதை கேட்கறதா…?”, என்று அவள் நினைக்கும் போதே…..

“இந்த முறை என்ன நினைச்ச”, என்று கேட்காமலேயே…. “வெளில தான் பேசுவேன் உள்ள ஒன்னும் நினைக்க மாட்டேன்”, என்றான்.

அவள் விழிவிரிக்கவும்…..

“ப்ச்! இப்போதைக்கு இது போதும்…… எழுந்திரு!”, என்று அவன் அணைத்து பிடித்து தூக்கி விடவும்…… விக்ரமின் வெற்றுடம்பில் முழுவதுமாக சாயாமல் இருக்க பிரம்ம பிரயர்த்தனம் செய்து எப்படியோ சாயாமல் நின்றுவிட்டாள்.

முழுவதுமாக சாயவில்லை என்றாலும் சாய்ந்தால்….. திரும்பவும் புதிய உணர்வுகள்….. இதுவரை இல்லாதது…..   

அவளின் முயற்சி புரிந்து அவள் நின்றவுடன், “இப்படி என் மேல சாயாம இருக்குறதுக்கா இவ்வளவு கஷ்டப்பட்ட…..”, என்று பட்டென்று இழுத்து மேலே சாய்த்து விலக முடியாமல் இறுக்கி பிடித்தான்.

எப்பொழுதும் போல, “ஐயோ”, என்று இருந்தது அவளுக்கு… குளித்து முடித்து வந்திருந்த விக்ரமின் ஈர உடல்…. அப்போது தான் எழுந்து நின்றிருந்த அன்னகிளியை சற்றும் தயக்கமே இல்லாமல் வாசம் பிடித்தது.

மனது ஒருவரை ஒருவர் உணர்ந்ததோ இல்லையோ… உடல் முழுதாக அடுத்தவரை  உணர்ந்தது…. உணரவும் வைத்தது……..  அன்னகிளியால் அசைய முடியவில்லை….. ஆனாலும் உடல் உணர்ந்ததை…. மனம் உணர துவங்கும் முன் விக்ரம் மேலே பேசினான்.     

“இன்னும் என் முதுகுல ஈரம் இருக்கா என்ன? எட்டி பாரு”, என்று சீரியசாக வினவியவன்…. “அதை துடைச்சு விடு……”, என்று வெகு அருகில் இருந்த அன்னகிளியின் முகம் பார்த்து கேட்டான்.

அவன் வேண்டுமென்றே செய்கிறான் என்று அன்னகிளி நினைத்து…… அப்படியே விக்ரமின் முகம் பார்த்து நின்று கொண்டிருந்தவளை, “பாரு”, என்று அதட்டவும் அவசரமாக… விக்ரம் மேலேயே சாய்ந்து எட்டி பார்த்தாள்….

அவளின் செய்கையில் விக்ரமிற்கு முகம் கொள்ளா சிரிப்பு……. அவள் திரும்பவும் விலகி அவன் முகம் பார்க்கும் போது முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டான். 

இரு புருவங்களையும் உயர்த்தி, “என்ன”, என்பது போல கேட்க…….

“இல்லீங்க காய்ஞ்சுடுச்சுங்க……”,

“அப்படியா நல்லா பாரு, எனக்கு ஈரமா இருக்கே….”,

திரும்பவும் எட்டி பார்த்தவள்… எதுவும் இருப்பது போல தெரியவில்லை, இருந்தாலும் “ஒன்னு ரெண்டு தான் இருக்குற மாதிரி இருக்குங்க, அதிகமில்லீங்க……”,

“துடைச்சு விடு…….”, என்று கறாராக பேசியவனிடம்….

“டவல் எடுத்துட்டு வர்றேன்”, என்று அன்னகிளி விலக முற்பட…..

“என் இடுப்புல இருக்குறதை எடுத்துக்கோ”, என்று குறும்போடு சொல்ல…..   

அவசரமாக வாயை பொத்தினாள்… இந்த முறை ஒரு முன்னேற்றமாக அவள் வாயை பொத்தாமல் விக்ரமின் வாயை தன் கைகளால் மூடினாள்.

மூடிய கைகளுக்குள் விக்ரம் மென்மையாக ஒரு முத்தத்தை பதிக்கவும்…… அவனின் முதல் முத்தம்….. உடல் முழுவதும் சிலிர்க்க வைத்தாலும் அவசரமாக கையை விலக்கினாள்…….

அவனோ சீரியசாக அவளை பார்த்து “நீ என்ன செய்வியோ தெரியாது…. என்கைல இருந்து நகராம துடைக்கற”, என்றான்.

“ஐயோ! மாத்தி மாத்தி பேசி என்னை கொல்றானே!”, என்று அவளின் இயல்பையும் மீறி நினைத்த அன்னகிளி…… “எப்படிங்க முடியும்”, என்று வாயை திறந்தே கேட்டாள்.

“ஏன் முடியாது? உன் கைல துடைச்சு விடலாம்….. இல்லை புடவையில துடைச்சு விடலாம்… ஆனா இருக்குற இடத்தை விட்டு நகர கூடாது”, என்றான் கையணைப்பில் வைத்து.

நிச்சயமாக அவன் மேல் இன்னும் அதிகமாக அழுந்தி, அவனை அணைத்தவாறு கையை கொண்டு போனால் மட்டுமே அதை துடைத்தேன் என்று பேர் பண்ண முடியும்….. ஆம் பேர் தான் செய்ய முடியும், அங்கே தான் ஈரமே இல்லையே….

“கையா? புடவையா?”, என்று மனதிற்குள் பட்டி மன்றம் நடத்தியவள், பின்பு கை வேண்டாம் புடவை கொண்டே துடைக்கலாம் என்று நினைத்து….. அவனை அணைத்தவாறு கையை கொண்டு போய் புடவை கொண்டு துடைத்தாள்.

“ஏன், கையை யூஸ் பண்ண மாட்டியா?”, என்று விக்ரம் அதட்டவும்……

“கையை விட புடவைல தான் ஈரம் நல்லா போகும்”, என்று பரீட்ச்சையில் கேள்வி கேட்கப்பட்டவள் போல பதில் சொல்ல….

“அதை கைல செஞ்சு போகாததுக்கு அப்புறம் தான் புடவையில செய்யணும் என்ன?”, என்று பொறுமையாய் விளக்கியவன்……. “இப்போ இல்லை நாளைக்கு..”, என்று அதட்டி வேறு வார்த்தையை முடித்தான்.   

பின்பு வால் கிளாக்கை பார்க்க…… அது எட்டு மணியை காட்டியது…

“எட்டு மணியாகிடுச்சா”, என்று ஆச்சர்யம் போல சொன்னவன்……. “எப்பவும் எனக்கு காலையில டைமே போகாது…… காலையில எழுந்து போலிஸ் கிரௌண்ட்க்கு வாக்கிங் போயிட்டு வந்து, டீ சாப்பிட்டிட்டு குளிச்சு……. இப்படி என்ன செஞ்சாலும் ஏழு மணி தான் ஆகும்…..”,

“அப்புறம் பத்து மணிக்கு கோர்ட் போற வரைக்கும், எப்படா பத்து மணியாகும் கோர்ட் போவோம்னு இருக்கும்….. எதையாவது தேவையில்லாம யோசிக்க தோணும்! ஆனா உன்கூட இருந்தா டைம் போறதே தெரியலை…. தேங்க்ஸ்…”, என்றான்.

எவ்வளவு தான் விக்ரம் ஒட்டிக் கொண்டு நின்றாலும், இந்த வார்த்தைகளில் ஏனோ தான் தள்ளி நிறுத்தப்படுவது போல தோன்ற…… “எனக்கு தேங்க்ஸ் வேண்டாம்!”, என்றாள் விறைப்பாய்.

“ஏன்?”,

அன்னகிளி அமைதியாக நிற்கவும்…. “மனசுல என்ன நினைக்கிறியோ சொல்லணும், நம்ம டீல்…..”, என்று சொல்ல…..

“ஏதோ நீங்க என்னை தள்ளி நிறுத்தற மாதிரி தோணுது”, என்று உண்மையை சொல்ல……

“ஷப்பா…….”, என்றவன்…… “இவ்வளவு கிட்ட இப்படி இறுக்கி, நீ நகர முடியாதபடி பிடிச்சிருக்கேன், நான் எப்போ உன்னை தள்ளி நிறுத்தினேன்”, என்று விக்ரம் சொல்ல……

முதல் முறையாக அன்னகிளி அவனை நிமிர்ந்து ஒரு பார்வை பார்க்க… பதிலுக்கு விக்ரம் அவளை சளைக்காத பார்வை பார்த்தான்.  

இப்படியாக நேரம் பார்த்தால் எட்டரை என்றது………. டிரைவர் வந்து பெல்லை அழுத்த…. “ஓகே, டைம் ஆகுது…. நான் ரெடி ஆகறதுகுள்ள நீ குளிச்சிட்டு வந்துடு, போ!”, என்று அவளை விலக்கி நிறுத்தினான்.    

அவன் மீண்டும் ஏதாவது கேட்பதற்குள் இடத்தைவிட்டு நகர்ந்து விட வேண்டும் என்று சற்று வேகமாக இடத்தை விட்டு ரூம் நோக்கி வாக்கரை தவிர்த்து சுவரை பிடித்து சென்றாள்.

அவள் குளித்து வரும்போது உணவுடன் தயாராக இருந்தான் விக்ரம்… மீண்டும் ப்ளேட் ப்ராப்ளம் எழ….. “ஈவினிங் அவசியமா வேணுங்கறதை வாங்கலாம்…. என்னன்னு லான்ட்லைன்ல கால் பண்ணி சொல்லு! வரும்போது வாங்கிட்டு வர்றேன்…..”,

“அப்புறம் கால் கொஞ்சம் சுமார் ஆனதும், போய் வாங்கலாம்”, என்றான்.

“ம்”, என்று தலையாட்டவும், வேகமாக காலை உணவு உண்டு கிளம்பிவிட்டான்.

ஏதோ நிறைய நாட்கள் விக்ரமுடன் இருந்தது போல ஒரு மாயத் தோற்றம் அன்னகிளிக்கு…..  சத்தியமாக அவள் முட்டாள் பெண்ணல்ல…… முன்பு போல அறியாப் பருவத்தில் இருந்த பெண்ணுமல்ல……. பார்த்தவுடன் மனிதர்களை எடை போட்டு விடுவாள் என்று சொல்ல முடியாவிட்டாலும்….. சிறிது நேரம் பழகினாலும் கணிக்க கூடியவள் தான்.

ஆனால் விக்ரம் அன்னகிளியின் புரிதலுக்கு அப்பார்ப்பட்டவனாக இருந்தான். எப்படியிருந்தாலும் விக்ரமை அன்னகிளிக்கு பிடித்தது. பிடித்தம் என்ற ஒரு உணர்வு இல்லாவிட்டால் நிச்சயம் ஏதாகினும் தேடி வந்திருக்க மாட்டாள். அன்று விக்ரமை ஹாஸ்பிடலில் பார்த்த போது நிச்சயம் கணவன் என்ற உரிமையுடன் கூடிய ஈர்ப்பு இருந்தது. அண்ணன் காரணமாக பார்க்க வந்தாலும் அந்த பிடித்தம் இல்லையென்றால் நிச்சயம் வந்திருக்க மாட்டாள்.

அன்னகிளிக்கு பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை தான்……. அது யார் சொன்னாலும் சரி……  மனம் மாறாது.

முன்பும் விக்ரமை பிடிக்கும், அது அண்ணியின் தம்பி என்ற முறையில்….. அதன் பிறகும் பிடிக்கும், தனக்கு உதவி செய்தவன் என்ற முறையில்….. சூழ்நிலையின் பொருட்டு திருமணமான பின்பு பிடிக்கும் கணவன் என்ற முறையில்….

அதன் பிறகு அன்னகிளியின் கற்பனை நாயகன் அவன்…. அதாவது விக்ரமின் நடத்தைகள் அவளோடு என்பது பல விதமாக அவள் கற்பனை செய்தது தான்.

ஆனால் அந்த கற்பனைகளோடு அவன் சிறிதும் ஒட்டவில்லை….. இப்படி அவன் தன்னை வாய்க்கு வந்தபடி திட்டுவான் என்றும் எதிர்பார்க்க்கவில்லை…. இப்படி தன்னை கொஞ்சுவான் என்றும்….. ஐயோ கொஞ்சுகிறான் என்ற வரையரையில் இது வருமா என்று தெரியவில்லை…… இதையும் எதிர்பார்க்கவில்லை.        

விக்ரம்….. அவனின் ஒவ்வொரு செய்கையும் பிடித்தது….. அவன் திட்டினாலும் பிடித்தது…. அவன் முறைத்தாலும் பிடித்தது…. அவன் அணைத்தால் மிகவும் பிடித்தது…… என்னமாய் பேசுகிறான்……. இந்த பேச்சுக்கள் முற்றிலும் அவளுக்கு புதிது…… 

“ஷ்! ஹப்பா…!”, அது அவளுக்கு கொஞ்சமும் வல்கராக தோன்றவில்லை….. ரொமான்டிக்காக தான் தோன்றியது.

 ஒரு புன்னகையோடே அவன் பேசிய பேச்சுக்களை அசை போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தாள்…..     

 

 

 

 

Advertisement