Uyirin ularal - episode 12

Advertisement

vishwapoomi

Writers Team
Tamil Novel Writer
உயிரின் உளறல் - அத்தியாயம் 12

மீண்டும் ஒரு வட்டமேஜை மாநாடு கூடியது.

" என்னம்மா பேசினா தெரியுமா ? நல்ல வேலை அவள் வக்கீலுக்கு படிக்கவில்லை. படித்திருந்தால் நம்மை இதுக்குள் கூண்டில் ஏற்றி ஜெயிலுக்கு அனுப்பியிருப்பாள். அக்கா இனியும் அவள் கல்யாணத்தை தள்ளி போடுவது சரியில்லை, இன்னும் கொஞ்ச நாள் அந்த வீட்டில் அவள் இருந்தால் என்னை வெளியே அனுப்பிவிடுவார்.

இனி நீங்கள் அவளுக்கு வரும் வரனிடம் அவள் பைத்தியம் என்று கூறி திருமணத்தை தடுப்பதை நிறுத்துங்கள். அவளை பழிதீர்க்க இது சரியான வழி இல்லை. அவளுக்கு கல்யாணமும் முடியனும் அதே நேரத்தில் ஏன் முடிந்தது என்று அவள் தவிக்கணும், இதற்கு ஏதாவது செய்யுங்கள். அதுமட்டும் இல்லாமல் பிரியாவுக்கும் வயது ஏறிக்கொண்டே போகுது." என்றாள் பானு.

" பானு எனக்கு ஒரு சந்தேகம். அந்த அபியை நாம் ஏன் பழிதீர்க்கணும், அதில் நமக்கு என்ன லாபம், " என்றாள் வித்யா.

" வித்யா சும்மா கேனத்தனமான கேள்வி கேட்காதே. இதுக்கெல்லாம் காரணம் கிடையாது. பாம்புக்கும் கீரிக்கும் எப்போதும் பிடிக்காது, அதுகளுக்கு என்ன சொத்துப்பிரச்சனையா இல்லை ஜாதி பிரச்சனையா ? அது இயற்கை. அதுபோலத்தான் இதுவும். நான் கல்யாணம் ஆகி வந்த புதிதில் பார்த்திருக்கிறேன், அப்படி ஒரு கவனிப்பு அவளுக்கு. காலை தரையில் பட விடமாட்டார்கள் அனைவரும். அவள் பதினைந்து வயது வரைக்கும் தள்ளி நில் என்று ஒரு சுடுசொல்லாவது கேட்டிருப்பாளா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

அதிலும் நம் மாமனார் இருக்கிறாரே, தங்க மகளே என்று மட்டும் தான் சொல்லுவார். இவனை அதான் இந்த ரிஷி பயலை கேட்கவா வேண்டும் ? அம்மு அம்மு என்று மூச்சுக்கு முன்னுறு முறை சொல்லுவான். அதையெல்லாம் பார்க்கும் போது அந்த வீட்டின் சொந்த பெண்ணாக இருந்தாலே பொறுக்காது. இது ஏதோ அனாதை கழுதை. இதுக்கு இவ்வளவு பெரிய வாழ்வா ? என் பிறந்த வீட்டில் நான் வைத்ததுதான் சட்டம், ஆனால் இவளாள் என் கணவர் என்னை கை நீட்டி அடித்தார். அப்போதே இவளை கொன்றிருக்க வேண்டும், நினைத்தது எல்லாம் நடக்கவா செய்கிறது ?" என்று பல்லை கடித்தாள் அம்பிகா.

அவள் பேசிக்கொண்டிருக்கும் போதே அவள் மனதில் ஒரு திட்டம் உருவாகிவிட்டது.

அவள் சொல்ல " சூப்பர் " என்றனர் மற்ற இருவரும்.
********

ஆந்திராவில் தன் அறையில் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தான்.
" என்னாச்சு இந்த பொண்ணுக்கு ? எத்தனை முறை முயன்றுவிட்டேன் ? போனை எடுக்க மாட்டேன்கிறாளே ? சரியாக 6.30க்கு எல்லாம் போன் செய்துவிடுவாளே ? என்று கேள்விக்கு மேல் கேள்விகேட்டுக்கொண்டு இருந்தான்.

அப்போது போன் அடித்தது. எண்ணை பார்த்தவன் " அம்மா " என்றான் போனை எடுத்து.

" ரிஷி, ரிஷி எப்படிப்பா இருக்க ?" என்று கேட்டார். அவரின் குரலில் சந்தோசம் நிறைந்திருந்தது.

" நல்லா இருக்கிறேன் அம்மா ? என்னம்மா ரொம்ப சந்தோசமா இருக்கிறமாதிரி இருக்கு ?" என்றான் ரிஷி.

" ஆமாப்பா நான் இன்று ரொம்ப சந்தோசமா இருக்கேன். விஷயத்தை கேட்டா நீயும் சந்தோசப்படுவாய். நம்ம அம்முவுக்கு நல்லகாலம் பொறந்திரிச்சிப்பா. அவளுக்கு ஒரு நல்ல வரன் வந்திருக்கு. பையன் பார்க்க லெச்சணமா, நல்ல வேலையில் இருக்கான். நல்ல பையனாம். நேற்று தரகர் விவரம் சொன்னார். பெரிய அண்ணன்தான் விசாரிச்சான். குடும்பமும் நல்ல குடும்பம்.

திடீரெண்டு இன்னைக்கு பெண் பார்க்க வந்திட்டாங்க. அபியை அவசரமாக வரவழைச்சோம். பையன் வீட்டில் அபியை ரொம்ப பிடித்துப்போய் உடனே பூ வைக்கவேண்டும் என்றார்கள். அபியிடமும் கேட்டேன், அவளும் சம்மதம் சொல்லிவிட்டாள். உடனே பூ வைத்துவிட்டார்கள். இன்னும் 10 நாளில் கல்யாணம் வைக்கவேண்டும் என்கிறார்கள், ஏனென்றால் பையனுக்கு அதன் பிறகு இரட்டை வயது பிறந்துவிடுமாம். அதனால்தான் உன்னிடம் தகவல் சொல்ல முடியவில்லை. அண்ணன் உனக்கு தகவல் சொல்ல முயற்சி செய்துகொண்டே இருந்தான், உன்னை போனில் பிடிக்கமுடியவில்லை. இப்போதுதான் அனைவரும் கிளம்பினார்கள். உடனே உனக்கு போன் செய்தேன். வேலையை கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டு உடனே கிளம்பி வாப்பா " என்றார் கற்பகம்மாள்.

" சந்தோசம்மா, முடிஞ்சவரையில் சீக்கிரம் வரப்பார்க்கிறேன் " என்றவன் மாப்பிளையை பற்றி சில விவரத்தை கேட்டுவிட்டு போனை வைத்தான்.

போனை வைத்தவன் அங்கே இருந்த ஆளுயர கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தை பார்த்தான். அவனுக்கு ஒரு சிறு புன்னகை வந்தது. அதில் கசப்பு வழிந்தோடியது. இனம் காண முடியாத ஒரு உணர்வு அவன் உள்ளத்தை பிசைந்தது. எந்த நேரத்தில் ' தனிமரமாக நிற்கிறேன் ' என்றாயோ ரிஷி, இப்போது அதுவே உண்மையாக ஆகிவிட்டது என்றது மனது.

ஆனால் அவன் மனசாட்சி அவனை இடித்தது. ஓடி ஓடி மாப்பிளை தேடினாய், இப்போது கிடைத்துவிட்டது, அப்புறம் என்ன ? சந்தோசப்படாமல் லூசு தனமாக யோசித்துக்கொண்டு நிற்கிறாயே, கிளம்பு, போய் ஆக வேண்டியதை கவனி. 10நாளில் கல்யாணம் என்றால் எவ்வளவு வேலை இருக்கும் ? என்று.

அதை ஏற்றுக்கொண்டவன் கிளம்புவதற்கு எந்த முயற்சியும் செய்யாமல் தன் வேளையிலேயே மறுநாள் இரவு வரை கவனமாக இருந்தான். கற்பகம்மாள் கேட்டதற்கு வாயில் வந்த ஏதேதோ காரணம் சொன்னான்.

அவன் அப்படி எதற்கு இருக்கிறான் என்று அவனிடம் காரணம் கேட்டால் அதற்கு அவனிடம் பதில் இல்லை. அவன் பதிலை யோசிக்க கூட தயாரில்லை. முயன்று மனதையும், மூளையையும் ஒருவிதமான அமைதியில் வைத்திருந்தான். அதையும் மீறி அவனுக்கு அபியின் மேல் கோபமாக வந்தது.

*********

டீவியில் ஏதோ ஓடிக்கொண்டிருக்க, அது என்ன மொழி என்றுகூட கவனிக்காமல் அதுதான் உலகத்தில் ரொம்ப முக்கியம் என்பதை போல அதையே பார்த்துக்கொண்டிருந்தான். தொடர்ந்து நான்கு முறை முழு ரிங்கும் அடித்து ஓய்ந்தது போன்.

ஐந்தாவது முறை வேண்டா வெறுப்பாக அதை எடுத்தான் ரிஷி.

" சொல் அம்மு " என்றான்.

" சின்னத்தான், எனக்கு இன்னும் 10 நாளில் கல்யாணம் " என்றாள் அவள்.

" தெரியும், சொல்லு " என்றான்
சாதாரணமாக

எதிர்புறம் அமைதி
" அம்மு சொல்லு, நான் மீட்டிங்கில இருக்கேன் " என்றான்.

" வந்து சின்னத்தான், எனக்கு கல்யாணம் என்பதால் என் பிரெண்ட்ஸ் எல்லோரும் ஒரு டூருக்கு போகலாம் என்றார்கள். பிறகு இப்படி போகமுடியுமோ ? என்னவோ ? நானும் சரியென்று அத்தையிடம் பெர்மிசன் கேட்டேன். அத்தைக்கு இஷ்டம் இல்லை, ஆனாலும் போன்னு சொல்லிட்டாங்க, என் ஆபீஸை வசந்த் பார்த்துப்பான், ஆனால் நீ என்னிடம் தந்த வேலையை யாரிடம் கொடுக்க என்று தெரியல அதான் உனக்கு போன் போட்டேன். நீ எப்போ வருவ ?" என்று கேட்டாள்.

" ஒன்றும் பிரச்சனை இல்லை. நான் சீக்கிரம் கிளம்பிவிடுவேன், நீ கிளம்பு என் paவுக்கு நான் போன் செய்து தகவல் கொடுத்துவிடுகிறேன். எத்தனை நாள் டூர் ? எங்கே போறீங்க ? யாரெல்லாம் போறீங்க " என்று கேட்டான்.

" ஊட்டி போகிறோம். இரண்டு நாள் டூர். நாங்க ஐந்து பேரும் போகிறோம்." என்றாள்.

ஐந்து பேர் என்றால் யாரு என்று தெரியும் என்பதால் " ஓகே, டேக் கேர் " என்று போனை வைத்தான் ரிஷி.

**********
" ஏய் அபி உன்னுடன் வந்ததே வேஸ்ட் டீ. உன்னுடன் டைம் ஸ்பென்ட் பண்ணவே அத்தனை வேலையும் விட்டுட்டு வந்தோம். இனி அடுத்தவாரம் உன் மேரேஜ்க்கு வேற வரவேண்டும். ஆனால் நீ வந்த நேரத்தில் இருந்தே எதையோ பறிகொடுத்த மாதிரியே இருக்க. நீ எப்போதான் மாறுவ ? என்றாள் மானு பாதி கோபமும், சலிப்புமாக.

" மானு சும்மா இரு. கல்யாண பொண்ணு, அவளுக்கு ஆயிரம் யோசனை இருக்கும். வருங்கால கணவருடன் கனவில் மிதக்கவேண்டியவளை நம்முடன் அழைத்துகொண்டுவந்து இந்த மரத்தையும் செடியையும் பார் என்றால் பின்னே அவள் எப்படி இருப்பாள், இல்லையா அபி " என்றாள் ஜானு.

ராகேஷ் சிரிக்க அமிதாப் அவளையே ஊடுருவி பார்த்தவண்ணம் இருந்தான். காலையிலேயே ஐவரும் அவரவர் இடத்தில் இருந்து ஊட்டி வந்து சேர்ந்துவிட்டனர். ஒருவருடத்திற்கு மேலாக பிரிவை பற்றி பேசிதீர்த்தவர்கள் ஊட்டியை ரசிக்க கிளம்பினர்.

போன இடத்தில் எல்லாம் அபி தனிமையை நாடினாள். அதற்குத்தான் மானு திட்டியது.

ஆந்திராவில் இருந்து அதிகாலையில் கிளம்பிய ரிஷி சென்னைக்கு டிக்கெட் போடுவதற்கு பதில் ஊட்டிக்கு போட்டான்.

" ஜானு அவளை ப்ரீயா விடு, அபி டேக் யுவர் ஓன் டைம் " என்றான் அமிதாப். சிரித்து கண்ணாலே அவனுக்கு நன்றி சொன்னவள் நான்குபேரையும் விட்டு தனியே ஒரு மலை உச்சிக்கு போய் நின்றாள். கீழே விழுந்தால் பொறுக்கி எடுக்க ஒரு எழும்பு கூட மிஞ்சாத இடம்..

ஊட்டியின் குளிர் அவளின் உடலையும், மனதின் குழப்பம் அவள் உள்ளத்தையும் ஆட்டியது. இரண்டு கைகளையும் உரசி கொண்டே இலக்கற்று எங்கேயோ பார்த்துக்கொண்டிருந்தாள்.

" அமிதாப் அவள் நிற்கும் இடம் சரியில்லை, வா நாமும் அவளுடன் போகலாம், அவள் எப்போதும் எதையாவது யோசிப்பவள்தான், ஆனால் இன்று அவளிடம் எதுவோ சரியில்லை. ஏதாவது செய்துகொள்ள போகிறாள். அப்புறம் அவள் அத்தைக்கு பதில் சொல்லமுடியாது. ரிஷி இல்லாமல் இவளை இங்கே அனுப்ப அவர்களுக்கு மனமே இல்லை. ரொம்ப போர்ஸ் செய்த பிறகுதான் விட்டாங்க, காலையில் இருந்து ரிஷியும் 10 போனுக்கு மேலாக செய்துவிட்டார். "என்றாள் ஜானு.

" ரிஷி எங்கே இருக்கிறார் " என்று கேட்டான் அமிதாப் சம்பந்தமே இல்லாமல்.

" அவர் ஏதோ பிசினஸ் விஷயமாக ஆந்திரா போயிருக்கிறார், இப்போது அதுவா முக்கியம், வா அவளிடம் போகலாம் " என்று அபியை நோக்கி செல்லபோனாள் ஜானு.

" ஜானு ரிஷி ஆந்திராவில் இருக்கிறார் என்றால் அப்போ இது யாரு ?" என்றான் தங்களை நோக்கி வந்துகொண்டிருந்த ரிஷியை பார்த்து.

சட்டென்று திரும்பிய ஜானு " தேங்க்ஸ் அ லாட், வந்துவிட்டார் இனி இவராச்சு, இவர் அத்தை மகளாச்சி, அமிதாப் கல்யாணத்திற்கு ஒருவாரம் முன்பாக ஏற்பாடு செய்த லாஸ்ட் ப்ரோக்ரம் இதுவாகத்தான் இருக்க வேண்டும்.முடியல என்னால் " என்ற ஜானு ரிஷியை பார்த்து புன்னகை செய்தாள்.

"ஹாய் கைஸ் " என்ற ரிஷியிடம் இருந்து பேக்கை வாங்கிய ராகேஷ் " ஹாய் ப்ரோ, ஹன்ட்ரேட் இயர்ஸ் உங்களுக்கு. வி நீட் யுவர் ஹெல்ப், அப்புறம் நாம் பேசலாம் பஸ்ட் யுவர் அம்மு " என்று அவளை கைகாட்டியவன் ஒரு கையசைப்புடன் அங்கிருந்து நகர்ந்தான் அனைவரையும் அழைத்துக்கொண்டு.

" அம்மு " என்று கேட்ட குரலில் திரும்பியவள் சற்று தடுமாறிவிட்டாள்.

" ஏய் பார்த்து" என்று அவன் கையை நீட்டினான். அதை பிடித்துக்கொண்டு சமாளித்து நின்றாள் அபி.

" பிரெண்ட்ஸ்சுடன் டூர் போகிறேன் என்று சொல்லிவிட்டு இங்கு தனியே என்ன பண்ற ?" என்று கேட்டான் அவளை அங்கிருந்து நகர்த்தியபடி.

" சும்மா ஏதோ யோசனை. ஆமாம் நீங்க ஊருக்கு போகாமல் இங்கே என்ன பண்றீங்க ?" என்று கேட்டாள் அவள்.

" அதுவா இன்னும் ஒருவாரத்தில் என் அத்தை பெண்ணுக்கு கல்யாணம், நான் அவளுக்கு பிராமிஸ் பண்ணியிருந்தேன், எனக்கு திருமணம் முடியும் முன்பு நான் அவளுடைய சிறுவயது அத்தானாக நடந்துப்பேன் என்று. ஆனால் இப்போது எனக்கு இல்லை, என் அத்தை பெண்ணுக்குத்தான் கல்யாணம். அதனால்தான் கொடுத்த வாக்கை காக்க வந்தேன். ஆனால் இங்குவந்து பார்த்தால் தன் நண்பர்களையே ஒதுக்கிவிட்டு தனிமையில் இனிமை காணுகிறாள் அவள். அப்புறம் என்னிடம் மட்டும் பேசவா போகிறாள் ?" என்றான் ரிஷி பெருமூச்சியுடன்.

அபியின் கண்ணில் இருந்து கண்ணீர் வந்தது. அதை பார்த்து பதறியவன்

" ஏய் அம்மு அழுவினி, என்ன இது பொது இடத்தில் வைத்து அழாதேடி, அப்புறம் யாராவது பார்த்துவிட போகிறார்கள் " என்று தன் கர்ச்சீப்பை எடுத்து அவள் கண்ணீரை துடைத்தவன்

" மன்னிச்சிரு அம்மு, பழக்கதோஷத்தில் டீ போட்டுப்பேசிவிட்டேன், இனி கவனமாக இருக்கிறேன். அம்மு உனக்கே தெரியும் எனக்கு கோபம் வந்தால் மட்டும்தான் நான் உன்னை அபின்னு கூப்பிடுவேன், இனி அம்முன்னு உன்னை நான் அழைப்பதை உன் வருங்கால கணவர் விரும்புவாரோ என்னமோ தெரியாது, அதனால் நானும் எல்லோரையும் போல அபின்னே கூப்பிடுவேன், நீ நான் கோபத்தில் அழைப்பதாக நினைக்காதே என்ன." என்றான்.

அபிக்கு அழுகை நின்றது, ஆனால் கோபத்தில் அவள் முகம் எங்கும் சிவந்தது.
" ஆமா அவன் பெரிய இவன், அவனுக்கு பிடிக்கும் என்று நான் தலைகீழாக எல்லாம் நடக்கமுடியாது. என்னை நீ அம்மு என்றால் அவனுக்கென்ன ? செல்லம் என்றால் அவனுக்கென்ன ? பிடிக்கவில்லை என்றால் அவனை காதை மூடிக்கச்சொல். அவன் சொல்றபடியெல்லாம் என்னால் ஆட முடியாது. நீ எனக்கு அத்தான் தானே, அவனுக்கு அப்படி கூப்பிடுவது பிடிக்காது என்பான், அப்படின்னா நான் உன்னை அண்ணன் என்று அழைக்கவா ? பேசுகிறான் பேச்சு " என்று வெடித்தால் அபி.

" அண்ணன் என்று அழைப்பியா ? அடித்து பல்லை கழற்றிவிடுவேன், அப்புறம் யாரை பேசுகிறான் பேச்சு " என்றாய் என்று கேட்டான் ரிஷி பதிலுக்கு.

" வேறு யாரை உன்னை தான்டா " என்றாள் அதே கோபத்தில்.

" என்ன டா வா, உனக்கு ஆயிரம் முறை சொல்லிவிட்டேன், என்னை டா போட்டு கூப்பிடாதே, எனக்கு கோபம் வரும். உன்னைவிட நான் ஆறு வயது மூத்தவன் " என்றான் இவனும் விடாமல்.

" உனக்கு மட்டுமா என்னைவிட ஆறுவயது அதிகம், அதோ போகுதுப்பார் கழுதை, அதுவும் என்னைவிட மூப்புதான், அதற்காக அதை வாங்க போங்க என்று அழைக்கமுடியுமா ? என்றாள் அபி.

" ஏய் கொன்னுருவேண்டி, அந்த கழுதையும் நானும் ஒன்றா?" என்றான் ரிஷி.

" ச்ச ச்ச அப்படியில்லை, அதுகளுக்கு கொஞ்சமாவது பாசம் இருக்கும், உனக்கு சுத்தமாக அது கிடையாது " என்றாள் இவள் நக்கலாக.

" யாருக்கு பாசம் இல்லை, இல்லாமல்தான் தலைக்கு மேல கல்யாண வேலை இருந்தும், உன்னை பார்க்க வந்தேன்னா ?" என்றான் ரிஷி.

" நீ வந்ததற்கு வந்து தொலையாமலேயே இருந்திருக்கலாம். நானே நொந்து போயிருக்கிறேன், என்னிடம் வந்து அம்முன்னு கூப்பிடமாட்டேன், அது கழுதைக்கு பிடிக்காது, குதிரைக்கு பிடிக்காதுன்னு சொல்லிக்கிட்டு, நீ கிளம்பு , போய் கல்யாண வேலையை பாரு, மறக்காம என்னை பார்க்கும் போதேல்லாம் அபின்னு கூப்பிடு, நானும் பதிலுக்கு உன்னை 'அண்ணன் ' என்று அழைக்கிறேன். உன் அப்பாவும், என் அம்மாவும் உடன் பிறந்தவர்களா ? நான் உன்னை அத்தான் என்று அழைக்க ? நான் உன்னை அண்ணன் என்று அழைத்தால் உன் ப்ரியா ரொம்ப சந்தோசப்படுவாள், சரிதானே ரிஷியண்ணா" என்று இழுத்தாள் அபி.

" அம்மு நீ என்னிடம் வாங்காமல் போகமாட்டாய் என்று நினைக்கிறேன், என்னை இன்னும் ஒருமுறை அண்ணன் என்றாயானால் நான் மனுஷனாக இருக்க மாட்டேன் " என்று பல்லை கடித்தான் ரிஷி.

" அப்படின்னா என்னை அம்முன்னு கூப்பிடாமல் அபின்னு சொன்ன நான் மனுஷியாக இருக்கமாட்டேன் பார்த்துக்க, உன்னிடம் பேசி பேசியே எனக்கு தொண்டை வறண்டு போச்சு, எனக்கு ஐஸ்கிரீம் வாங்கிதா" என்று முன்னே நடந்தாள் அபி.

" இந்த குளிரில் உனக்கு ஐஸ்கிரீமா?" என்று கேட்டாலும் அவள் கேட்டதை வாங்கி கொடுத்தவன் அவளை அவளுடைய நண்பர்கள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச்சென்றான்.

" ரிஷி சார் இது அநியாயம், நாங்கள் ஐந்து பேர் இருக்க அவளுக்கு மட்டும் ஐஸ்கிரீம் வாங்கிக்கொடுப்பது " என்றாள் ஜானு.

" அது ஒன்றுமில்லையடி, வழியில் ஒருத்தருக்கு இறங்கி நின்னுச்சு, அதான் பேயோட்டிவிட்டு வந்தேன், அதான் தொண்டை வறண்டு ஐஸ்கிரீம் கேட்டேன், வாங்கிதந்தார் " என்றாள் அபி கிண்டலாக.

ரிஷி முறைக்கவும் அபி திரும்பிக்கொண்டாள். அதன் பிறகு அன்று முழுவதும் ஆறுபேரும் ஊட்டியை சுற்றினர், மறந்தும் ரிஷி அவள் கல்யாணத்தை பற்றியோ, மாப்பிளையை பற்றியோ பேசவில்லை, ஒரு கேலியாக கூட. அவன் மனதில் ஒரு கேள்வி திரும்ப திரும்ப ஓடியது " அவள் ஏன் தான் நொந்து போய் இருப்பதாக சொன்னாள் ?" என்று.
 

banumathi jayaraman

Well-Known Member
நச்சுப் பாம்பு அம்பிகா விஷத்தை கக்க ஆரம்பிச்சுடுச்சு
இந்த அபி ரிஷி இரண்டு லூசுகளும் இப்படியே பேசி நாளை ஓட்டுதுங்க
இதிலே ப்ரெண்ட்ஸ் வேற கூட
இதெல்லாம் எங்கே போய் முடியுமோ?
அமிதாப் அருமையான நண்பனா இருந்தும் நோ யூஸ்
ஏம்மா மானு ஜானு நீங்களாச்சும் ஏதாச்சும் பண்ணுங்கம்மா
 
Last edited:

wasee

Well-Known Member
Pre planned sathi.. than avaloda marriage ....

Rishi athai yeppadi thadukka poraaan?... nu waiting....
 

Srd. Rathi

Well-Known Member
Nice,
Friends நீங்களாவது ஏதாவது செய்து ரெண்டு பேரையும் சேர்த்து வைங்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top