Nee Enbathu Yaathenil 16

Advertisement

arunavijayan

Well-Known Member
Hi mam

ஒரே ஊராயிருந்தும்
தந்தைமாருக்கு கட்டுப்பட்டு
ஒருவரை ஒருவர் அறியாமலே
திருமணத்தில் ஒன்றானோம்
மறுப்புடன் தொடங்கிய திருமணம்
முதிற்சியின்மையால் தொலைத்தோம்
தொலைத்தது வாழ்க்கையை மட்டுமா
நாளொரு மேனியாய் பொழுதொரு வண்ணமாய்
வளர்ந்த எங்கள் வம்சத்தின் வளர்ச்சியையும்
நாம் ஒருவரை ஒருவர் உணரும் முன்னே
வார்த்தைகளின் தடுமாற்றத்தால்
நிலையிழந்து பிரிவுக்கு வித்திட்டோம்
காலம் கடந்தது ஞானமும் வளர்ந்தது
என் பிள்ளை என்னை ஊருக்கு கட்டியிழுக்க
என் நினைவு முழுவதும் ஊராகவே இருந்தது
என் வேர் ஊரிலுக்க எனக்கென்ன இங்கு வேலைஎன்ற
ஞானமும் பிறந்தது
சுந்தரவதனமில்லாவிட்டாலும் இனிமேல் நீ என் சுந்தரிதான் என்று
என்மனமும் உன்னை உணரத்துடித்தது
தவறு முழுதுமே நானாகவே இருந்தேன்
ஆனாலும் நீயும் என்னை உணரணுமென்று ஏக்கம் கொண்டேன்
நானும் மண்வாசனை உள்ள ஆண்தான் இருந்தும்
மண்மணம் கொண்ட பெண்ணை எப்படி உணரமறந்தேன்
தனியொருத்தியாய் தன் சேயை அழகுற வளர்த்து
தன்வேர் இதுதான் என்று தன்மகனுக்கும் புகட்டி
தன்னை நிமிர்த்தி தன்வளத்தைப் பெருக்கி
தனக்கும் மற்றவர்களுக்கும்
தொழிலாய் இருந்த நீ ஒரு முதலாளி அறிவாயா
உன் மண்பற்றால் உன் தொழிலால் உன்நிமிர்வால்
அனைத்தையும் நேர்மையுடனும் தைரியத்துடனும்
கையாளும் பண்பால் உன்னை
இன்னும் கொஞ்சம் கூடுதலாக கவனித்திருக்வேண்டுமோ
என எண்ண வைத்த பெண்ணே
கொஞ்சம் தடுமாற்றத்துடன் வந்த என்னை
என்தாலி உன்கழுத்தில் இருந்ததைப்பார்த்து
உன்பக்கம் முழுவதும் தடுமாறாமல் சாய வைத்தாய்
விருப்பமாய் சாய்ந்தே போனேன்
ஏளனங்களையும் அவமானத்தையும் வலியையும்
தனக்கு தானே பட்டைகளாகத்தீட்டி
வைரமாய் ஒளிரும் பெண்ணே
நீ வைரமங்கைதான் ஒத்துக்கொள்கின்றேன்
ஆனால் எனக்கு நீ
அந்த வைரத்தின் ஒளியுடன் பிரகாசிக்கும்
சுந்தரவதனமுடைய சுந்தரங்கள் நிறையப்பெற்ற
சுந்தரப்பெண் என் அழகு சுந்தரிதான்
நீயென்பது யாதெனில்
உனக்காக நானும் எனக்காக நீயும்
போலியில்லாமல் இப்பூமியினில்
ஊருடன் கூடி வாழ்ந்து
நாம் நாமாக இருப்பது.


நன்றி
Aravin22

பிற்குறிப்பு:-இதனை கண்ணனுக்கு சமர்ப்பிக்கின்றேன்,ஏனென்றால் என்னை மாதிரி கண்ணனை யாருமே திட்டியிருக்கமாட்டார்கள்,சுந்தரியை அழகாக புரிந்துகொண்டமைக்கு என்னுடைய சின்னப்பரிசு
images (8).jpg
 

arunavijayan

Well-Known Member
இறந்தகாலம்

அன்று
நெருக்கப்பட்டொம்
நெருங்கினோம்
விஷமான வார்த்தைகளால்
விருப்பட்டொம்
விலகினோம்
விருந்தும் மருந்தும் சில நாளாம்
பழமொழியின் பயனை அடைந்தவள்
விருந்தாளியாய் ஆக்கப்பட்டேன்
விடைதெரியா கேள்விகளுடன்
விவரம் அறியா வயது
சீர்த்தூக்கி நோக்கவில்லை
சிந்தனையும் விரியவில்லை
விலங்கிட்டு கொண்டேன்
வெறியாய்
இங்கு
விருந்துண்டது நீ
மருந்துண்டது நான்
என் வாழ்க்கை வலிகளுக்கு
மருந்தாய் உன் மகன்
விருந்தின் பயன்


நிகழ்காலம்

திடிரென்று
பாவனையாய் நீ ......
பாவமாய் நான்......
என் சிக்கல்கள்
மேடையிட்டன அதில்
சிங்கார நடனம் நீ .....
என் தோள் சேர
நீ.....
ஆழத்தில் மன ஆழத்தில்
அழகானேன்
உழைப்பின் வேர்வையில் ....
கசங்கிய சேலையில்.....
உக்கிர பார்வையில்....
அழகானேன் நான்
உன் பார்வையில்......
பார்வையாளனாய் மன்மதன்
படையெடுத்துவிடடான்
கணைவீச
நல்ல வேளை
நம் இளமை இன்னும் ஊஞ்சலில்


எதிர்காலம்

உன்னுள் மனையாளாய்
மனை புகுவேன்
பூட்டிக்கொள்வேன்
திறவு கோள் எங்கே ?
உன்னில் நானும்
என்னில் நீயும்
நம்மில் நாமும்
தேடுவோம்
திறவு கோள்ளை
கிடைக்கும் நாள்
நீ என்பது யாதெனிலுக்கு
விடை கிடைக்கும்


credit : MM
images (9).jpg
 

arunavijayan

Well-Known Member
yeah,yeah......happy reading than....Malli
happyக்கு காரணம்....

சுந்தரியின் சுயத்தை சிதைக்காமல்,
இறுதி வரை நிமிர்வுடன் காண்பித்தது....

கண்ணன்,சுந்தரியின் மனமாற்றங்ளை
அதிரடியாக சொல்லாமல்
bit by bit,in phased mannerல் சொல்லியது...

இருவருக்குமிடையே தோன்றிய ஈர்ப்பு
மிக மென்மையாகவும் ,இதமாகவும் இருக்கும்படி அமைத்தது....

நீயாகிய நான் என்று அவன் மாறியதும்,
அவனில்லாமல் அவளால் இருக்க முடியாத நிலையும்
இருவரின் ஒட்டு மொத்த சரணாகதியை சொல்வதும்....


இது எல்லாவற்றையும் விட
கதைக்கு நீங்கள் கொடுத்த முடிவு....
A realistic and a dignified finish....


இதற்கு மேல் ,சொல்வதற்கு
ஒன்றுமில்லை .....நன்றி ஒன்றைத் தவிர.....
images (2).jpg
 

banumathi jayaraman

Well-Known Member
என்னங்கப்பா... கமண்டே போடாம இவ்ளோ லைக்ஸ் வந்திருக்கு... இது மல்லி ஸ்டோரிக்கு மட்டுமே சாத்தியம்.....

தேங்க்ஸ்டி மல்லி செல்லம்..... மல்லியோடு சேர்ந்த நாரும் மணக்கும் போலிருக்கு.....

அழகான கதைக்கு வாழ்த்துக்கள் டா..... இப்படிதான் முடிவு வரும் என்று எதிர்பார்த்தாலும் அதை உணர்வுகளின் கலவையோடு ஒவ்வொரு மனதிலும் எதிர்பார்ப்பை தூண்டி கொண்டு சென்ற கதை நடை மிக அழகு..... சுந்தரியும் கண்ணனும் அடுத்த வீட்டுக் குடும்பம் போல எங்கள் கண் முன்னாடி வாழ வைத்ததற்கு சபாஷ்.....

கண்ணன் தவறு செய்தாலும் திருந்தி அவளுடனே வாழ்வதற்கான முயற்சிகள் எடுப்பது அழகு.... அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் மீண்டும் விட்டுச் சென்று விடுவானோ என்று அவள் தவிப்பது பேரழகு.... கணவனாக வந்தவன் காவலனாய் மாறி மெல்ல மெல்ல காதலை உணர்த்தி மீண்டும் கணவனாய் மாறியது அழகோ அழகு......

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு ஆதரவாய் கதையில் கொடி பிடித்ததும் அழகு...... அதற்கு நமது கதை மாந்தர்கள் துணை போனதும் பேரழகு...... மொத்தத்தில் மல்லியின் கதை மனதில் நீங்காமல் மணக்கிறது......


நீ என்பது யாதெனில் உனக்குள் இருக்கும் உண்மையே..... அதை சந்தர்ப்ப சூழல்கள் மாற்றி அமைத்தாலும் மீண்டும் நீயாகவே மீண்டு வந்தால் அதுவே உன் வாழ்வின் வெற்றியாகும்.....


சூப்பர் டா மல்லி... லவ் யூ டியர்.....
சூப்பர்ப் கமெண்ட்ஸ், லதா பைஜூ டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
அருமையான கதை மல்லி.
மண் மணம் மறக்காத தலைவி..
தலைவனையும் ஈர்ததாளே...
தன்னையும் காத்து....
மண்ணையும் காத்து..
மரபை மீட்டவள்..
விலகிய கணவனை...
விலக்கி, நிமிர்ந்து ...
தேடி வர வைத்த..
பெண்மை..நேர்மை..
அழகான முடிவு....
மேலே படுக்கும் அபி...
இவ்வளவு சூப்பரா கவிதை எழுதி அசத்தியதற்கு
மிகவும் நன்றி பொன்ஸ் டியர்
உங்களைப் பாராட்ட, எனக்கு வார்த்தைகளே
கிடைக்கலை, பொன்ஸ் செல்லம்
நீடுழி வாழ்க
நீங்களும், உங்கள் குடும்பமும், அனைத்து
நலன்களுடன், வளமுடன், எல்லா
செல்வங்களுடனும், அனைத்து நலன்களுடனும், எப்பொழுதும் சந்தோஷத்துடனும், நிம்மதியுடனும்,
நீடுழி வாழ்க, பொன்ஸ் டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
நிறைவு பகுதி
நிறைவான பகுதி..

ஜல்லிகட்டிற்காக போராடும் காளைகளல்ல..
ஐ.டியில் போராடும்
நவீன காளைகள்..

விரைந்து உணர்ந்தால்
மண்ணுக்கு சேதாரம் குறையும்..
அல்லவே நம் அன்றாட உணவிற்கே கையேந்தும் நிலையாகும்..

அயல்நாட்டினரின் முதலீட்டில் மீண்டும் ஓர் புரட்சி தோன்றுமுன்..
பசுமை தமிழகம்
தோன்ற ஒன்றுபடுவோம்..
அருமை, பாத்திமா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
A VERY SMALL DEDICATION FROM OUR (VIEWERS SIDE) TO MALLI MAM
THANK YOU FOR A NOVEL WHICH IS CLOSE TO OUR FEELINGS AND CULTURE


நீ என்பது யாதெனில்
அன்றிலிருந்து இன்று வரை
தந்தையின் வழி நடந்தேன்
தாரமாய் ஆனேன்
இந்த வழி உன் வழிஇல்லையோ
தனித்திருந்தேன் உன்னை பார்த்திருந்தேன்
சிறு பொறி தீயகுமாம்
என் வாழ்வில் சிறு ஐயம் பொறியானது
அதுவே தீயானது வாழ்வின் எல்லையானது
விட்டு விலகிட சொன்னாய் வெறும் ஐந்து நாளில்
வாழ்வை தொலைத்தேனோ என இறுகினேன்
என்னுள் மறுகினேன் வெளியே இறுகினேன்
என் பட்டு குட்டி வந்தான் வாழ்வில்
அந்த நாட்களின் நினைவாக
இந்த நாட்களின் நிஜமாக
என் பூமி விட சொன்னாய்
உயிரை விட சொன்னாய்
விட்டேன் நான் வாழ்வை
உன்னுடனான வாழ்வை
உயிர் என் மண்
உணர்வு அதனுலுள்ள உயிர் (கள்)
உயிரையும் உணர்வையும் இன்று
தொலைத்தோர் உண்டு
உயிரற்ற பணியில்
அதன் வழியில்
வாழ்க்கையை செலுத்தி
வாழ்க்கையை தொலைத்தோருக்கு
என் வாழ்வு ஒரு மைல் கல்
தொலைத்தேன் நானும்
உறவையே தவிர
உயிரையோ உணர்வையோ அல்ல
வந்தாய் மீண்டும்
காடு மலை தாண்டி பறந்த நீ
மீண்டு வந்தாய்
என்னை மீட்க வந்தாயோ
வாழ்வில் மண்வளம் மட்டுமல்ல
பொன்வளம் மட்டுமல்ல
மகிழ் வளம் கொடுக்க வந்தாயோ

உன்னை மட்டுமல்ல
உறவுகளையும் கொடுத்தாய்
என்னை மட்டுமல்ல
இடத்தையும் வாழ்வின்
தடத்தையும் சீராக்கினாய்

நீ என்பது யாதெனில்
இன்று
நீ என்பது யாதெனில்
நான் அல்ல
நாம்
நாம் மட்டுமல்ல
நம் பூமி
நீ மீண்டும் வந்து
மீட்க வந்த பூமி
நீ கற்க வந்து
சிறக்க வைத்த மண்
நீ பார்க்க வந்த
இன்று பார்க்க வைத்த உயிர்கள்
இங்கே மண்ணுடன் கலந்த உயிர்கள்
இறுதியாய் நம் இளையதலைமுறைக்கு
சொல்லுவது யாதெனில்
பொன்னை விற்றாலும் மண்ணை விற்காதே
கண்ணை மறந்தாலும் மண்ணை மறக்காதே
விண்ணில் பறந்தாலும் மண்ணை மறக்காதே
மீண்டு வா இங்கே
நம்மை காக்க வா
நம் மண்ணை காக்க வா
பெருமை சேர்க்க வா
இங்கே வாழ்ந்து
பெருமை சேர்க்க வா
சூப்பர், மீரா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அருமையான கதை ப்பா...:)

நான் முதன் முதலா ஆன்லைன்ல படிச்ச உங்களோட கதையும் இதுதான்.....
இதுவரை புத்தக வடிவில் மட்டுமே படித்துள்ளேன்....


உங்க எல்லா கதைகளுமே படிக்க ஆரம்பிச்சதும் வைக்கணும்னு தோணாது! அதுதான் மல்லி ஸ்பெஷல்!;)

ஆனா இந்த கதை.... என்னைப் பொறுத்தவரை இன்னுமே ஸ்பெஷல்!!

ஏன்னா சிவகாமிக்கு பிறகு, இதுவரை ஹீரோ, ஹீரோயின் ரெண்டு பேருமே எந்த கதையிலும் என்னை இந்த அளவுக்கு அட்மைர் பண்ணதில்லை... but சுந்தரி made it happen again... bravo!! love her....
air-kiss-smiley-emoticon.gif


கண்ணனும் மாயக்கண்ணன்னா மனசை மயக்கிட்டான்தான்... வேண்டாம் என்று விட்டுச் சென்ற பின்னும், மண்ணின் பாரம்பரியம் தவறாதிருந்து திருந்தி வந்தான் அல்லவா?! அதனால்...:)

மண் மணத்தோடு மல்லிகையின் மணத்தையும், அதை போற்றி வாழும் மங்கையின் மனத்தையும் அவள் பொருட்டு மண்ணைப் புரிந்து கொண்ட மன்னனின் மனத்தையும் அழகாக வடித்துள்ளீர்கள்....

அழகான அருமையான கதையை கொடுத்தமைக்கு நன்றி.....
rose.gif
அருமையான கருத்துக்கள்,
கீதாஞ்சலி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
என்னங்கப்பா... கமண்டே போடாம இவ்ளோ லைக்ஸ் வந்திருக்கு... இது மல்லி ஸ்டோரிக்கு மட்டுமே சாத்தியம்.....

தேங்க்ஸ்டி மல்லி செல்லம்..... மல்லியோடு சேர்ந்த நாரும் மணக்கும் போலிருக்கு.....

அழகான கதைக்கு வாழ்த்துக்கள் டா..... இப்படிதான் முடிவு வரும் என்று எதிர்பார்த்தாலும் அதை உணர்வுகளின் கலவையோடு ஒவ்வொரு மனதிலும் எதிர்பார்ப்பை தூண்டி கொண்டு சென்ற கதை நடை மிக அழகு..... சுந்தரியும் கண்ணனும் அடுத்த வீட்டுக் குடும்பம் போல எங்கள் கண் முன்னாடி வாழ வைத்ததற்கு சபாஷ்.....

கண்ணன் தவறு செய்தாலும் திருந்தி அவளுடனே வாழ்வதற்கான முயற்சிகள் எடுப்பது அழகு.... அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் மீண்டும் விட்டுச் சென்று விடுவானோ என்று அவள் தவிப்பது பேரழகு.... கணவனாக வந்தவன் காவலனாய் மாறி மெல்ல மெல்ல காதலை உணர்த்தி மீண்டும் கணவனாய் மாறியது அழகோ அழகு......

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு ஆதரவாய் கதையில் கொடி பிடித்ததும் அழகு...... அதற்கு நமது கதை மாந்தர்கள் துணை போனதும் பேரழகு...... மொத்தத்தில் மல்லியின் கதை மனதில் நீங்காமல் மணக்கிறது......


நீ என்பது யாதெனில் உனக்குள் இருக்கும் உண்மையே..... அதை சந்தர்ப்ப சூழல்கள் மாற்றி அமைத்தாலும் மீண்டும் நீயாகவே மீண்டு வந்தால் அதுவே உன் வாழ்வின் வெற்றியாகும்.....


சூப்பர் டா மல்லி... லவ் யூ டியர்.....
அருமையான கருத்துக்கள்,
லதா டியர்
இவ்வளவு சூப்பரா சூப்பர்ப் கமெண்ட்ஸ் எழுதி அசத்தியதற்கு மிகவும் நன்றி, லதா பைஜூ டியர்
உங்களைப் பாராட்ட எனக்கு
வார்த்தைகளே கிடைக்கலை,
லதா பைஜூ செல்லம்
நீடுழி வாழ்க
நீங்களும் உங்கள் குடும்பமும்
அனைத்து நலன்களுடன்
வளமுடன் எல்லா
செல்வங்களுடனும் அனைத்து
நலன்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் நிம்மதியுடனும்
நீடுழி வாழ்க, லதா பைஜூ டியர்
 
Last edited:

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
இவ்வளவு சூப்பரா கவிதை எழுதி அசத்தியதற்கு
மிகவும் நன்றி பொன்ஸ் டியர்
உங்களைப் பாராட்ட, எனக்கு வார்த்தைகளே
கிடைக்கலை, பொன்ஸ் செல்லம்
நீடுழி வாழ்க
நீங்களும், உங்கள் குடும்பமும், அனைத்து
நலன்களுடன், வளமுடன், எல்லா
செல்வங்களுடனும், அனைத்து நலன்களுடனும், எப்பொழுதும் சந்தோஷத்துடனும், நிம்மதியுடனும்,
நீடுழி வாழ்க, பொன்ஸ் டியர்
தமிழ் புத்தாண்டிற்கு கிடைத்த முதல் வாழ்த்துகள் பானு டியர்.
நன்றி பானு டியர்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top