கற்பூர முல்லை Episode 34

Advertisement

Jeevitha Ram prabhu

Active Member
மலர் 34

தமிழ் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்து இருந்தாள். அதுவரை அவளின் ஆபிஸ் பொறுப்புகளை காயத்ரியும் கைலாக்ஷூம் கவனித்து கொண்டனர். இதற்கிடையில் சுந்தரும் வந்து பார்த்து விட்டு சென்றிருந்தான்.

அவளுக்கு ஒரளவு உடல்நிலை தேறியதால் வீட்டிலிருந்தே அலுவலக வேலையை பார்க்குமாறு டாக்டர் அறிவுறுத்திருந்தார். அதனால் காயத்ரியும் கிளம்ப இருந்தாள்.

காயத்ரி அவளிடம் சொல்லிவிட்டு கீழே வரவும் அகிலன் உள்ளே வரவும் சரியாக இருந்தது. அகிலனிடம் காயத்ரி அவளை பார்த்து கொள்ளுங்கள் என்றாள்....

நீங்கள் பார்த்து போங்கள்...அவளை நான் பார்த்து கொள்கிறேன் என்று நம்பிக்கை அளிக்கும் விதமாக கூறினான்....

அவள் சென்றவுடன் மேலே தமிழின் அறைக்கு சென்றான்... அவள் எங்கோ பார்த்தபடி இருந்தாள். இவன் காலடி சத்தம் கேட்டதும் திரும்பினாள். ஆனாலும் அவனை கண்டு கொள்ளாமல் கீழே பார்த்தபடி இருந்தாள். அருகிலிருந்த நாற்காலியை நகர்த்தி அமர்ந்தான்.

அப்பொழுது கீழே பைரவி வந்திருந்தாள். சமையலம்மாவிடம் கேட்ட போது இருவரும் மேலே இருப்பதாக கூறினாள். அதைக் கேட்டதும் அவளும் மேலே வந்தாள்.

அதே நேரம் அகிலனும் பேச ஆரம்பித்தான். என்னிடம் பேச மாட்டாயா தமிழ்....? என்றான். அதற்கு அவள் நான் பேசி என்ன ஆகிவிட போகிறது...? உங்களுக்கு வேண்டியவர்கள் தான் அன்றைக்கு நிறைய பேசி விட்டார்களே...! என்றாள். அதை நீ நம்புகிறாயா....? என்றான். இதற்கு அவள் பதில் ஒன்றும் பேசவில்லை.

அவள் அப்படி பேசினால் என்றால் அவளுக்காக என்னை விட்டு கொடுத்து விடுவாயா......? என்றான் அவன். என்னால் எப்படி உங்களை விட்டுக் கொடுக்க முடியும் என்று கூறியவளை இடைமறித்து அதான் உன் உயிரை விட்டுவிட துணிந்தாயா ....? என்றான்.

உண்மையைச் சொல் என் மேல் என்ன கோபம் என்று கேட்டான் அவன். உங்கள் மேல் கோபம் எல்லாம் இல்லை சின்ன வருத்தம் தான். அங்கே உங்கள் வீட்டில் நடந்ததை ஏன் என்னிடம் முன்னாடியே சொல்லவில்லை என்றாள். நான் சொல்லலாம் என்று தான் வந்தேன். அதற்குள் நீ அன்றைக்கு கிப்ட் கொடுப்பதை பற்றி பேசினாய் அதை பேசி விட்ட பிறகு உன்னிடம் சொல்ல முடியவில்லை.அதற்குள் இப்படி ஆயிற்று என்று கூறினான்.

சரி அது எல்லாம் விடுங்க .....இப்போது இதனை எப்படி சமாளிப்பது....?என்று கேட்டாள்.
அதை பற்றிய கவலை இனி உங்களுக்கு வேண்டாம் என்று கூறியவாறு அங்கே பைரவி வந்தாள். அவளும் இவ்வளவு நேரம் அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டுதான் இருந்தாள்.

இருவரும் என்னை மன்னித்து விடுங்கள் அன்று உங்களின் காதலின் ஆழம் புரியாது நான் அவ்வாறு பேசி விட்டேன் உங்கள் உயிருக்கு ஆபத்து வரும்போது அகிலன் துடி துடித்ததை நான் கண்ணால பார்த்தேன் அதில் உண்மையான காதல் இருந்தது. அது தான் எனக்கு அகிலன் உங்கள் மேல் கொண்டுள்ள காதலை உணர்த்தியது. என் பிடிவாதம் ஒரு உயிரைபோக்கும் அளவிற்கு போகும் என்று நான் நினைக்கவில்லை என்று கூறி வருந்தினாள்.

அன்றைக்கு எல்லோருக்கும் மத்தியில் நீங்கள் இருவரும் மேலே இருந்ததை பற்றி நான் கூறியது தப்புதான். நான் அகிலனை விரும்பினேன். அவர் உன்னுடன் தனியாக இருந்ததை பார்த்ததும் எனக்கு மிகுந்த கோபம் வந்துவிட்டது அதனால் தான் அன்றைக்கு அவ்வாறு பேசி விட்டேன்.

இருவரும் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கை கூப்பியவாறு கேட்டாள் அப்படி கேட்டவள் அதற்கு மேலும் தாமதியாது அங்கிருந்து கிளம்பி விட்டாள்.

இப்பொழுதுதான் இருவருக்கும் நிம்மதி பெருமூச்சு வந்தது.

அப்பாடா......இனி தடையில்லை ஜாலியாக காதலிக்கலாம் என்றான் அகிலன்.

அதற்கு அடுத்தடுத்த நாட்களில் தமிழின் உடல்நிலை வேகமாக முன்னேறியது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top