Mm- online frenzz

Advertisement

Sundaramuma

Well-Known Member
நேர்மைனா ஹமாம் soap என்று அறியப்பட்ட கூட்டத்தில் நேர்மையாம்....... வாய்மையாம்........

வீடு தான் முதல் கல்வி கூடம்......... அங்கே கூட நேர்மை உண்மை இல்லை........
தனி மனிதனிடமே இல்லாத ஒன்று
ஊரில் இருக்குமா?.......
இல்லை நாட்டில் தான் இருக்குமா............

பாலில் கூட கலப்படம் செய்யும் உலகம்......

Straight forward-ஆக இருந்து படும் அவஸ்தைகள் சொல்லமுடியாது........ பிறப்பு வளர்ப்பு என்று எல்லாவற்றிலுமே அதுவே சொல்லி வளர்க்க பட்டு திடீர்னு அப்படியெல்லாம் இருந்தால் கஷ்டம் என்று சொல்வது என்ன நியாயம்........

அதெல்லாம் கூடவே பிறந்தது....... அவ்வளவு சீக்கிரம் விட முடியாது.......

போற்றுவார் போற்றட்டும்......
புழுதி வாரிவீசுவார் வீசட்டும்.......

உண்மை தான் ...ஜோ
நாம் நம்மோட கொள்கைகளில் உறுதியா இருக்கணும் .....
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
இது பாட்டுக்கு பதில் இல்லை ... 30 வருடத்தில் மாறியது என்ன தெரியுமா? குடிப்பது தவறு என்று சொன்னவர்கள் இன்று அதை கௌரவம் ஆக்கி விட்டார்கள் ... பாலியல் வன்கொடுமைக்கு வயது காரணம் காட்டி விடுதலை கிடைக்கிறது... கொலைக்கும் கொள்ளைக்கும் அஞ்சாதவர் தான் பிழைக்க முடிகிறது... எதிர்ப்பவர் மீது சட்டம் பாயும் இல்லை மண்ணாவார்... இல்லயா யாரையும் எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கவேண்டும்.. உழவனுக்கு சோரில்லை... உழுபவனுக்கு நிலமில்லை ... நிலமிருந்தாலும் உழ மனமில்லை.. காணும் இடம் யாவிலும் ரியல் எஸ்டேட்.. ஊருக்குள் காட்டு விலங்குகள்.. உண்மை, நேர்மை என்றால் என்ன விலை என்று கேட்கும் காலம்... எல்லாம் இருந்தும் எதும் செய்யாத உலகம் .. இலவசத்தில் வாழும் அவலம்... இது எல்லாம் தெரிந்தும் சும்மா கருத்து மட்டும் பேசும் நான்..........
அதையும் சத்தமா பேச முடியாது...
பட் நம்ம நல்லவங்களா இருக்கலாம்...
நல்ல விதைகளை விதைக்கலாம்..
நம்மால எவ்வளவு செய்ய முடியுதோ அதை செய்யலாம் ....
அது ரொம்ப ரொம்ப சின்னதா இருந்தா கூட .....
 

ThangaMalar

Well-Known Member
உணர்வுகளின் குவியல் நான்..
உண்மையை அழுத்தமாக சொல்ல தயங்கியதில்லை..
நேர்மையை என்றும் மீறியதில்லை
இவையெல்லாம் என் கடந்த காலமாகிடும் முன்--

பேசும் சாராம்சம் எப்படியும் தவறாக தான்
புரிந்துகொள்ள கூடிய நிலையில்..
பேசுவதை தவிர்த்து..
என்னையே வேறாக
உணர்ந்த காலத்தில்..

இணையத்தின் மூலம் கிடைத்த
இணையில்லா நட்பு...
உறவுகளிடம் கூட பேச தயங்கியவை..
விவாதிக்க முடியாதவை..
பேசுகிறேன்...
இதயத்தில் இருந்து..
இணையத்தின் நட்புகளுடன்..
நேர்மை
உண்மை
தூய்மை
இனிமை
பாத்திமா கவிதை..
 

banumathi jayaraman

Well-Known Member
புஞ்சை உண்டு நஞ்சை உண்டு
பொங்கிவரும் கங்கை உண்டு...............................

1998ல் புலமை பித்தன் எழுதியது....... 30 வருடத்தில் என்ன மாறியிருக்கிறது????
1998 உடன் 30=யை
கூட்டினால், 2018 வராது
1998 உடன் 20=யை
கூட்டினால்=தான்,
2018 வரும், Joher டியர்
உங்க வாத்தியார் or
டீச்சர் கணக்கு,
சரியாய் சொல்லிக்
கொடுக்கலையே,
Joher டியர்?
 
Last edited:

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
உணர்வுகளின் குவியல் நான்..
உண்மையை அழுத்தமாக சொல்ல தயங்கியதில்லை..
நேர்மையை என்றும் மீறியதில்லை
இவையெல்லாம் என் கடந்த காலமாகிடும் முன்--

பேசும் சாராம்சம் எப்படியும் தவறாக தான்
புரிந்துகொள்ள கூடிய நிலையில்..
பேசுவதை தவிர்த்து..
என்னையே வேறாக
உணர்ந்த காலத்தில்..

இணையத்தின் மூலம் கிடைத்த
இணையில்லா நட்பு...
உறவுகளிடம் கூட பேச தயங்கியவை..
விவாதிக்க முடியாதவை..
பேசுகிறேன்...
இதயத்தில் இருந்து..
இணையத்தின் நட்புகளுடன்..
அழகு பாத்திமா.
நல்ல நட்பு ....எதையும் சாதிக்கலாம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top