Mm- Agree 2 help AGRI

Advertisement

mithravaruna

Well-Known Member
கலாச்சாரத்தை
தொலைத்தவர்களோ
மறந்தவர்களோ அல்ல
என்று நமது ஒற்றுமையை
உலகிற்கே பறைசாற்றி..

ஜல்லிகட்டிற்காக போராடிய
தமிழனே!!!
இளைஞனே..

வழிகாட்டுதல் இல்லா சமுதாயமே
நம் இன்னல்களுக்கு காரணம்..

தமிழனின் அடையாளத்திற்காக
போராடிய
ஒவ்வொரு தமிழனின் நெஞ்சமும்
விவசாயிகளின் போராட்டத்தை கண்டு
தவிக்கத்தான் செய்கிறது...

உணவளித்தவன் அரை நிர்வாணத்துடன்
போராடும் பொழுது..
வருணன் கண்களில்
பொழிய செய்கிறான்...

நமக்கு உணவளிப்பவனின் துயர் துடைக்க ஒன்று படுவோம்...
போராடும் ஒவ்வொரு விவசாயியும்
நம்மில் ஒருவர் தான்..
நமக்கு உணவு விளைவிப்பவர்தான்..

பயணிப்போம் நம் கிராமத்திற்கு
அறிந்துகொள்வோம் துயரில் வாடும்
விவசாயியின் குடும்பத்தை
நண்பர்கள் ஒன்று கூடுவோம்
வங்கி கடனை அடைக்க உதவுவோம்...

பெரும் மாற்றங்களுக்கு
முதல் எழுத்தாய் இருப்போம்...
அருமையான சிந்தனை பாத்திமா.

நம் அருகில் நம் உறவில் பலருண்டு!
நம் தெருவில் நம் மரபில் சிலருண்டு!
தேடிப் போனால்
தெய்வமே வழி காட்டும்!
நாடிப் போனால்
நேர்மையே வழி காட்டும்!

நன்றி
 

Joher

Well-Known Member
Ten years before
Idea to develop agriculture...

Collecting funds from mnc- employees...
Spread msgs to friends...
Small amounts from them for monthly basis atleast for sometime...


Eg- 100/200 per head..

These AMT we can use it to repay the debts

Apdi yosichen..


Munnadi yosichathu.
Antha AMT vachu NGO form panni....
Agri graduates helpoda farmers Ku help panrathu..
That includes maintain the water resources
For them as well..

Itha ellam proceed panna more contacts venum..
Net problem...... இப்போ கூட எப்போ cut ஆகும்னு தெரியாது.......

எங்க ஊரில் ஒரு whatsapp group தொடங்கி NRIs மற்றும் ஊரில் வெளிஊரில் இருக்கும் எல்லோரும் அவர்களால் முடிந்ததை கொடுக்கிறார்கள்........ குளத்தில் ஆகாய தாமரை அகற்றுதல், கரையோரங்களில் மரம் வளர்ப்பது போன்றவை இப்போது நடைபெறுகிறது........
ஆனால் ஊரில் ஒரு நெல் வயல் கூட இல்லாமல் அழிந்துவிட்டது........ வீடு முழுவதும் நெல்லாக பார்த்த காலம் போய் இப்போது ஒரு அரிசிக்கே கணக்கு பார்க்கும் நிலைமை......

விவசாயிகளுக்கு முதல் தேவை தண்ணீர் தான்..... அதனை பராமரித்தாலே போதும்......

பொறுப்பான ஆட்கள் வேண்டும்..... பொறுப்பெடுத்து செய்ய யாராவது இருக்கிறார்களா???

பயிரிடும் போது தண்ணீர் இருக்காது....... அதையும் மீறி பயிரிட்டால் அறுவடை போது வெள்ளம் வந்து விடும்......

இதற்கு தீர்வு கண்டாலே போதும்........

அந்தந்த areaவில்

NGOs, NSS, கிராம வளர்ச்சி மையங்கள்....... இவர்கள் தெரிந்தால் பண்ணலாம்........
 

Joher

Well-Known Member
Super fathi..
நான் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவள்...
இன்னும் அதை நம்பியே வாழ்பவர்கள்..
ஆனால் எங்க ஊர் நிலைமை சொல்றேன்...பாதி ஆண்கள் ஊரில் இல்லை....
பெண்கள் விவசாயம் பார்ப்பாங்க..
ஆண்கள் துபாய்....இல்லை ...வண்டி ஓட்ட வெளி மாநிலம்..
என்று போய்டுவாங்க...
ஏனென்றால் விவசாயம் மட்டும் செய்து ஏழ்மையிலே வாழ முடியாமல்....அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தவங்க...
நடிகர் மகன் ஈசியா நடிகர் ஆவான்..
அது மாதிரி தான் மற்ற துறையும்..
ஆனால் விவசாயி மகன் விவசாயி ஆக வேண்டாம் என்பது பலபேரின் எண்ணம்..
தனி மனிதர்கள் எவ்ளோ செய்ய முடியும் தெரியல... விவசாயம் தான் முக்கியம்னு அதை அரசாங்க வேலையா மாற்றும் ஒரு அரசாங்கம் வர வேண்டும் என்பதே எனது கனவு....
உன்னை மாதிரி அதை பற்றி அனுபவம் இல்லாதவர்கள் கூட அதைப்பற்றிய நல்ல சிந்தனை...உள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியா இருக்கு..நிறைய இளைஞர்கள் கிட்ட விழிப்புணர்வும் வருது...நிறைய பேர் இதை பற்றி விவாதம் செய்றாங்க....
முக்கியமா விவசாயிடா என்று மிக பெறுமையாக சொல்லும் காலம் விரைவில்...
நன்றி fathi...
நானும் வரேன்...நீ செய்யனும் நினைப்பதில் என்னையும் சேர்த்துக்க.

அம்மா மணிமேகலை......

விவசாய குடும்பத்தில் பிறந்திருந்தால் அதோட வலியும் வேதனையும் தெரியும்.......
இப்போ நானும் சென்னை தான்......

நீங்கள் இயற்கைனு சொல்றீங்களே....... அதை முழுக்க முழுக்க அனுபவித்தவர்களில் நானும் ஒருத்தி.......

அரிசி, உளுந்து, தேங்காய், வாழை, கிழங்கு, பனங்கிழங்கு, உள்ளி, கத்தரிக்காய், தக்காளி, வெண்டைக்காய், சுரைக்காய், புடலை, முருங்கை, மா, பலா, அவல், கருப்பட்டி.......
வீடு பால், கோழி, ஆடு....... இப்படி எல்லாவற்றையும் அனுபவித்தேன்......
50 அடி நீள மாடு தொழுவம் bike parking க்கும் விறகு தேவையற்ற பொருட்களை போடும் இடமாகவும் மாறிவிட்டது........

Brothers ரெண்டு பேரும் ஊரில் கிடையாது....... அப்பா அம்மா தென்னைகளை மட்டும் பராமரித்து வருகிறார்கள்........ 1997ல் வெட்டிய கிணறு....... தண்ணீரில்லாமல் 2017 மேயில் இன்னும் ஆளப்படுத்தினோம்........ அப்போதும் அடிக்க தண்ணீர் கிடையாது.... ஏதோ மழை பெய்ததால் தப்பினோம்.......

ஆனால் இப்போது தேங்காய் மட்டும் தான்........ அதனால் தேங்காய் எண்ணெய் மட்டும் கிடைக்கிறது........

கூலிக்கு ஆள் கிடையாது....... இதை எல்லாம் பார்த்தால் நெல் பயிரடவே தோணாது.......
பிள்ளைகளுக்கும் இது வேணுமா என்று யோசிக்க தோணும்......
இருந்த மாட்டை எல்லாம் வைக்கோல் இல்லாததால் விற்கும் நிலைமை......

நிஜமாக சொல்வதென்றால் நெல் பயிருடுவது அதிக லாபம் கிடையாது...... ஆனால் நம் வீட்டிற்கும் சரி..... யாருக்கும் கொடுப்பதென்றாலும் அரிசி தேங்காய் தாராளமாக இருக்கும்....... பண தேவைக்கும் உடனே நெல்லை விற்று கொள்ளலாம்..... அந்த புழுங்கல் பச்சரிசிக்கு எதுவும் ஈடு கிடையாது.......
வைக்கோல் தவிடு சாப்பிட மாடு கோழி.... எல்லாம் food chain மாதிரி தான்...... என்று நெல் பயிர் போனதோ அன்றே ஆடு மாடு கோழி எல்லாம் போய்விட்டது........ காலகொடுமை...... ஊரின் நால் புறமும் நெல் வயல் இப்போது concrete வீடுகளாக காட்சி தருகிறது........

இதை பார்த்தால் எல் லா பெற்றோருக்கும் தோணும்...... நீங்களாவது படித்து ஒரு வேளைக்கு போக பாருங்கள் என்று........

எங்கோ அல்ல...... கன்னியாகுமாரி மாவட்டத்தில் தான்.......
 

Joher

Well-Known Member
நெடுஞ்சாலைக்கும் railway trackக்கும் airportக்கும் அணு உலைக்கும் அதானிக்கும்
நிலத்தை கையகப்படுத்த முடிந்த அரசுகளால் இரு ஆற்றை இணைக்க முடியாதா??????
நிலத்தை கையகப்படுத்த முடியாதா......

நாம் சுயநிறைவு அடைந்தால் அது அரசுகளுக்கு தொந்தரவு....... உனக்கு ஏன் அதை கொடுக்க வேண்டும் என்கிற மனப்பான்மை.......

மனித மனங்களும் வட்டத்துக்குள் குறுகி விட்டது.........
பணம் என்னும் மாயை பிடித்து ஆட தொடங்கி விட்டது......
செல்வம்....... அது நில்லாமல் சென்று கொண்டே இருக்கும்....... யாருக்கும் இது புரிவதில்லை.......
படித்தவனுக்கு யார் ஆண்டால் என்ன?????
இல்லாதவனுக்கு யார் ஒரு நாள் இரு நாள் வறுமையை போக்குவார்களோ அவர்கள் ஆளட்டுமே என்கிற எண்ணம்.......
இதில் யாரை குற்றம் சொல்வது?????
 

fathima.ar

Well-Known Member
நெடுஞ்சாலைக்கும் railway trackக்கும் airportக்கும் அணு உலைக்கும் அதானிக்கும்
நிலத்தை கையகப்படுத்த முடிந்த அரசுகளால் இரு ஆற்றை இணைக்க முடியாதா??????
நிலத்தை கையகப்படுத்த முடியாதா......

நாம் சுயநிறைவு அடைந்தால் அது அரசுகளுக்கு தொந்தரவு....... உனக்கு ஏன் அதை கொடுக்க வேண்டும் என்கிற மனப்பான்மை.......

மனித மனங்களும் வட்டத்துக்குள் குறுகி விட்டது.........
பணம் என்னும் மாயை பிடித்து ஆட தொடங்கி விட்டது......
செல்வம்....... அது நில்லாமல் சென்று கொண்டே இருக்கும்....... யாருக்கும் இது புரிவதில்லை.......
படித்தவனுக்கு யார் ஆண்டால் என்ன?????
இல்லாதவனுக்கு யார் ஒரு நாள் இரு நாள் வறுமையை போக்குவார்களோ அவர்கள் ஆளட்டுமே என்கிற எண்ணம்.......
இதில் யாரை குற்றம் சொல்வது?????

அண்டை மாநிலத்தில் உள்ள தலைவர்கள் கூட தன் வளங்கள் காக்க முயற்சி செய்றாங்க..
அனா நம்ம பிச்சை எடுக்குறோம்..
இருக்குற வளங்கள காப்பதற்காக முயற்சி இல்ல..
இவன்க சொத்த காப்பாற்ற தமிழ் நாட்டையே விலை பேசிருவான்க போல.
 

Joher

Well-Known Member
அண்டை மாநிலத்தில் உள்ள தலைவர்கள் கூட தன் வளங்கள் காக்க முயற்சி செய்றாங்க..
அனா நம்ம பிச்சை எடுக்குறோம்..
இருக்குற வளங்கள காப்பதற்காக முயற்சி இல்ல..
இவன்க சொத்த காப்பாற்ற தமிழ் நாட்டையே விலை பேசிருவான்க போல.

சுயநலத்தின் உச்சகட்டம்.......
அதிகாரிகளும் விலை போன அவலம்........
மீட்க போவது யாரோ??????
 

fathima.ar

Well-Known Member
எப்படியெல்லாம் நாம் ஏமாறுகிறோம் என்பதற்கு
இன்னொரு சான்று........

படித்து பாருங்கள்.......

https://www.vikatan.com/juniorvikat...essure-patients.html?artfrm=mag_editor_choice


படிச்சேன்..
Sugar levelum konja naal munnadi change pannangalla???

Ivanga medicine business panna..
India Bangladesh Pakistan thaan market..
 

fathima.ar

Well-Known Member
சுயநலத்தின் உச்சகட்டம்.......
அதிகாரிகளும் விலை போன அவலம்........
மீட்க போவது யாரோ??????


அங்க ஒன்னு இங்க ஒன்னு இருக்குற IAS IPS officers கண்டிப்பா முடியாது..

Educated and konjamaaavathu service minded ah irukkura MLA s venum..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top