fathima.ar
Well-Known Member
கலாச்சாரத்தை
தொலைத்தவர்களோ
மறந்தவர்களோ அல்ல
என்று நமது ஒற்றுமையை
உலகிற்கே பறைசாற்றி..
ஜல்லிகட்டிற்காக போராடிய
தமிழனே!!!
இளைஞனே..
வழிகாட்டுதல் இல்லா சமுதாயமே
நம் இன்னல்களுக்கு காரணம்..
தமிழனின் அடையாளத்திற்காக
போராடிய
ஒவ்வொரு தமிழனின் நெஞ்சமும்
விவசாயிகளின் போராட்டத்தை கண்டு
தவிக்கத்தான் செய்கிறது...
உணவளித்தவன் அரை நிர்வாணத்துடன்
போராடும் பொழுது..
வருணன் கண்களில்
பொழிய செய்கிறான்...
நமக்கு உணவளிப்பவனின் துயர் துடைக்க ஒன்று படுவோம்...
போராடும் ஒவ்வொரு விவசாயியும்
நம்மில் ஒருவர் தான்..
நமக்கு உணவு விளைவிப்பவர்தான்..
பயணிப்போம் நம் கிராமத்திற்கு
அறிந்துகொள்வோம் துயரில் வாடும்
விவசாயியின் குடும்பத்தை
நண்பர்கள் ஒன்று கூடுவோம்
வங்கி கடனை அடைக்க உதவுவோம்...
பெரும் மாற்றங்களுக்கு
முதல் எழுத்தாய் இருப்போம்...
தொலைத்தவர்களோ
மறந்தவர்களோ அல்ல
என்று நமது ஒற்றுமையை
உலகிற்கே பறைசாற்றி..
ஜல்லிகட்டிற்காக போராடிய
தமிழனே!!!
இளைஞனே..
வழிகாட்டுதல் இல்லா சமுதாயமே
நம் இன்னல்களுக்கு காரணம்..
தமிழனின் அடையாளத்திற்காக
போராடிய
ஒவ்வொரு தமிழனின் நெஞ்சமும்
விவசாயிகளின் போராட்டத்தை கண்டு
தவிக்கத்தான் செய்கிறது...
உணவளித்தவன் அரை நிர்வாணத்துடன்
போராடும் பொழுது..
வருணன் கண்களில்
பொழிய செய்கிறான்...
நமக்கு உணவளிப்பவனின் துயர் துடைக்க ஒன்று படுவோம்...
போராடும் ஒவ்வொரு விவசாயியும்
நம்மில் ஒருவர் தான்..
நமக்கு உணவு விளைவிப்பவர்தான்..
பயணிப்போம் நம் கிராமத்திற்கு
அறிந்துகொள்வோம் துயரில் வாடும்
விவசாயியின் குடும்பத்தை
நண்பர்கள் ஒன்று கூடுவோம்
வங்கி கடனை அடைக்க உதவுவோம்...
பெரும் மாற்றங்களுக்கு
முதல் எழுத்தாய் இருப்போம்...
Last edited: