E89 Sangeetha Jaathi Mullai 1

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அரிதாரம் பூசும் அன்னை விதையாக
பலதாரம் கொண்ட தந்தை வேராக
இட்ட விதை மலரும் முன் விட்டு செல்ல
மறுதாயோ (கமலா) தளிர் வளர மண்ணாக நீராக ..
நீர் கடத்தும் தண்டுகளாக தமையன்கள் மாற..
பெரு தண்டின் துணைவியோ (ஷாலினி) ஊட்டமாக
மலரவளை காக்க காம்பாக தாஸும் இருக்க

அரும்பிய மொட்டை
மலரும் முன்னே தாக்கிய தடியையே (அஸ்வின்)
தன் நம்பிக்கையால்..
பாதுகாக்கும் பந்தலாக்கினாள்
தகிக்கும் சூரியனாய்
மன்னவனோ தானிருக்க
மொட்டை கண்ட பின்
தான் மலர செய்த
சூரியகாந்தியை (ஐஸ்) விட்டு
வாச மொட்டின் பின்வந்து
தன் தீண்டலில் கருகுமோ
மொட்டென்று எண்ணி
கதிர் சுருக்கி
தன் இதம் பெருக்கி
மாலையின் மஞ்சள் வெயிலிதமாக
மாறியதன் பின்னணியே
மலர் மீது கொண்ட காதலோ
சுட்டெரிக்கும் சூரியனே
சுகம் தரும் தண்ணிலவாக மாறினாலும்
மலரவளோ மலர மறுப்பதென்ன
நிலவாக மாறிய சூரியனோ
தன் குளிரணைப்பால்
மலர வைப்பானோ
முல்லை வாசம் வீச வைப்பானோ
காத்திருக்கிறோம் விண்மீன்களாய்
வாசத்தை முகிரும் கண்மீன்களாய்.... .

--------------(மல்லிகாவின் கண்மணிகள்)
வாவ், சூப்பர், தங்கமலர் டியர்
நான் இன்னும் படிச்சே முடிக்கலை,
அதுக்குள்ளே எப்படிப்பா, தங்கமலர் செல்லம்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top