E78 Sangeetha Jaathi Mullai

Advertisement

S

semao

Guest
ஆனா அவன் உணர்வதற்குள் விபரீதங்கள் நேர்ந்ததே...
என்னடா பண்றது...
நீயே தானே சொன்னே..
அநியாயத்துக்கு இவ்வளவு நேர்மையா நீ இருந்திருக்க வேண்டியது இல்ல...
அவ மேல இருக்குற காதலுக்காக தான் சொன்னே...
ஆனா உன் காதலி புரிஞ்சிக்க வேணுமேபா...

இப்பவும் அவ வருத்தப்படுறாளேன்னு நீ வருத்தப்படுற பாரு.....
அங்க நிக்குது தல, உன் காதல்....

அவனுக்கு முதலில் கண்களில் ஈர்ப்பு.. கண்டதும் காதலே..
அதனால் தான் அண்ணா சொல்லு என்றான்.
அவனே உணரவில்லை, அவன் கொண்ட காதலை
...

அவளுக்கும் காதலே.. இல்லாவிட்டால் ஏன் அவனை உற்று உற்று பார்க்கிறாள்?
அவன் செய்த குற்றத்தை மறைத்தாள்?
கவிதையை
பிரித்து பிரிச்சு பேசறீங்க
ஆனால் அது வும் கவிதை மாதிரி தோணுது
கவிதையை அழகாக விளக்குறீங்க
சூப்பர் மலரே சூப்பர்
 

Lakshmi sivakumar

Well-Known Member
மல்லி madam கதைகள் எதிலுமே மன உணர்வுகளுக்கு தான் importance கொடுப்பார். உடல் சம்பந்தப்பட்ட உணர்வுகள் நன்றாக புரிந்து கொண்ட பின்பே வரும். ஆனால் SJM உடல் சம்பந்தப்பட்ட உணர்வாலேயே ஆரம்பித்தார்கள்.ஆனால் ஈஷ்வரின் அந்த விதமான நுண் உணர்வுகளை மிக அழகாக கையாண்டு வருகிறார்கள்.நம்மையும் addict செய்து விட்டார்கள்.madam உங்களை யாரோ என நினைக்க முடியவில்லை. என் மனதிற்கு நெருக்கமாக உணர்கிறேன்.
 

MythiliManivannan

Well-Known Member
மௌனமே ஆயுதமாய்.....
அன்புக்குரியவர்களை மட்டுமல்ல
அறியாதவர்களையும் கூட
உதாசீனப்படுத்துவதற்கு
மெளனத்தைவிடவும்
சிறந்த ஆயுதம்
இந்த யுகத்தினில்
யாதொன்றுமில்லை...
வார்த்தைகள் ஏற்படுத்தும்
காயத்திற்கு
மன்னிப்பு
மருந்தாகிறது...
மௌனம் செய்யும் காயம்
மரணகாயம்
மாற்று மருந்தேதுமில்லை...
அருமை சகோ.
வள்ளுவர் இதையும் சொல்லியிருக்கலாம். ஏனோ, தீ மற்றும் நாவோடு விட்டுவிட்டார்:)
இல்லை சொல்லியிருக்கிறாரா? சொல்லியிருந்தால் மன்னிக்கவும்:)
 

MythiliManivannan

Well-Known Member
காந்தமாய் ஈர்த்த
நீல கண்களில்..
என்னை தொலைத்தேன்..
முற்றிலுமாய் தொலைந்த
நெஞ்சம்
காதல் தனை அறியுமா..

அவளருகில்
கடல்விழியில்
மட்டும் மூழ்கிட
விளைந்த
நெஞ்சம்...

தனித்துவிட்டதால்
கொண்ட காதலும் புரிந்தது..
நான் என்ற எண்ணங்கள்
மறைய..
அவள் மீது கொண்டது
நேசம் என உணர்ந்தேன்...

என்னை தொலைத்த அவளிடத்தில்...
கடந்த வாழ்வும் காதலும்
சொன்ன நேர்மையும்...
பிரிவுக்கே வழியானதே..

அவள் பொருட்டு
நான் செய்த பிழையும்...
அவளை வருத்த
காரணமானதே..
உனக்கு எத்துணை சூப்பர் மற்றும் அருமை போடுவது பாத்தி. புதிய வார்த்தைகள் ஏதேனும் சொல்லிக்கொடுங்களேன், உனக்கும் மீராவிற்கும் உபயோகப்படுத்த:)
 

MythiliManivannan

Well-Known Member
அவனுக்கு முதலில் கண்களில் ஈர்ப்பு.. கண்டதும் காதலே..
அதனால் தான் அண்ணா சொல்லு என்றான்.
அவனே உணரவில்லை, அவன் கொண்ட காதலை...

அவளுக்கும் காதலே.. இல்லாவிட்டால் ஏன் அவனை உற்று உற்று பார்க்கிறாள்?
அவன் செய்த குற்றத்தை மறைத்தாள்?
எனக்கு இதில் உடன்பாடு இல்லை மலர். அவள் முதலில், இவனைக் காதலிக்கவே இல்லை. அவளின் பிறப்பு அவளுக்கு ஓர் இழிநிலையை உண்டாக்கியிருக்கும்போது இவன் செயல் வெளியே தெரிந்தால் அது தன்னை இன்னும் பாதிப்புக்கு உள்ளாக்குமோ என்ற பயமே, அவள் மறைத்ததற்கான காரணம்.
ஈர்ப்பு வேண்டுமானால் இருந்திருக்கலாம் ( உற்று உற்றுப் பார்த்தது, அவன் நிலைகுலைந்து இருந்தபொழுது அவனை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றது ).​
 

ThangaMalar

Well-Known Member
மல்லி madam .நம்மையும் addict செய்து விட்டார்கள்.madam உங்களை யாரோ என நினைக்க முடியவில்லை. என் மனதிற்கு நெருக்கமாக உணர்கிறேன்.
மல்லிகா நம் அனைவருக்கும் நெருக்கமானவரே, லக்ஷ்மி..
 

ThangaMalar

Well-Known Member
எனக்கு இதில் உடன்பாடு இல்லை மலர். அவள் முதலில், இவனைக் காதலிக்கவே இல்லை. அவளின் பிறப்பு அவளுக்கு ஓர் இழிநிலையை உண்டாக்கியிருக்கும்போது இவன் செயல் வெளியே தெரிந்தால் அது தன்னை இன்னும் பாதிப்புக்கு உள்ளாக்குமோ என்ற பயமே, அவள் மறைத்ததற்கான காரணம்.
ஈர்ப்பு வேண்டுமானால் இருந்திருக்கலாம் ( உற்று உற்றுப் பார்த்தது, அவன் நிலைகுலைந்து இருந்தபொழுது அவனை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றது ).​
டிக்கில வை சொன்னதுக்கு அவ தான் கோபமா இருந்தாளே,
அப்புறம் ஏன் அடிபட்டதும் அவனை உட்கார சொல்றா..
இளநீர் கொடுக்குறா..
தானே காரோட்டுறா..
தாஸ ஓட்ட சொல்ல வேண்டியது தானே..

அவன் கார் மேல காதலா?
 

MythiliManivannan

Well-Known Member
டிக்கில வை சொன்னதுக்கு அவ தான் கோபமா இருந்தாளே,
அப்புறம் ஏன் அடிபட்டதும் அவனை உட்கார சொல்றா..
இளநீர் கொடுக்குறா..
தானே காரோட்டுறா..
தாஸ ஓட்ட சொல்ல வேண்டியது தானே..

அவன் கார் மேல காதலா?
டிக்கியில் வைன்னு சொன்ன போது அவனது தோரணை பிடிக்காமல் கோபப்படுகிறாள்.
உட்கார சொல்வது, இளநீர் கொடுப்பது இரண்டுமே அவனின் ஓய்ந்த தோற்றத்தாலும் அவனுக்கு அடிபட்டுவிட்டது என்ற மனிதாபிமானத்தினாலும் தான்.
கார் ஓட்டியது, ஓர் ஈர்ப்பாக இருக்கலாம் என்றுதான் முதலிலேயே கூறினேனே.
அவளும் அப்போது சிறு பெண்தானே, கார் ஓட்டும் ஆர்வமாகக்கூட இருந்திருக்கலாம்.
 

Joher

Well-Known Member
எனது விழி வழி மேலே ஹோ
கனவு பல விழி மேலே ஹோ
வருவாயா நீ வருவாயா என நானே எதிர் பார்த்தேன்
அது சொல்ல துடிக்குது மனசு சுகம் அள்ள தவிக்கிற வயசு

பள்ளிக்கூட பாடம் ஏதும் எனக்கில்லை ஞாபகம்
கண்ணில் நூறு பாடம் கேட்டும் மறக்காத ஞாபகம்
தடுமாற்றம் எதற்கு படித்தாலே உனக்கு
காதல் சிறகை காற்றில் விரித்து
நினைத்தாலே இனிக்கும் கனவின்று பலிக்கும்
உறங்காமல் உனைத்தானே நினைத்தே தனியா தவித்தேனே

பிள்ளை போல தோளில் போட்டு தாலாட்டு பாடுவேன்
முல்லை பூவில் மேடை போட்டு உன்னோடு ஆடுவேன்
இமைக்காமல் ரசித்தேன் ருசி பாத்து பசித்தேன்
ஏது உறக்கம் வேண்டாம் கிறக்கம்
வட்டி போட்டு மொத்தமா கட்ட வேண்டும் முத்தமா
உனைத்தானே உனைத்தானே தனியா தவித்தே துடிக்காதே ஹோய்

படம்: சொல்ல துடிக்குது மனசு
 

murugesanlaxmi

Well-Known Member
அருமை சகோ.
வள்ளுவர் இதையும் சொல்லியிருக்கலாம். ஏனோ, தீ மற்றும் நாவோடு விட்டுவிட்டார்:)
இல்லை சொல்லியிருக்கிறாரா? சொல்லியிருந்தால் மன்னிக்கவும்:)
இல்லை சகோதரி, வள்ளுவர் மவுனதை மறந்துவிட்டார் போல் தெரிகிறது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top