E78 Sangeetha Jaathi Mullai

Advertisement

ThangaMalar

Well-Known Member
உன் பிடியிலே என் உயிரும் இருக்க
ஓர் உரசலில் என் வேர்கள் சிலிர்க்க
நீ என்னில் முட்கள் கொய்தாய்
காலை உந்தன் முத்தத்தில் விடியும்
நாளும் உன்னில் தப்பாது முடியும்
நீ என்னை மென்மை செய்தாய்

பூ இல்லாமல் ஐலா வாசம் ஹோயா
நீ இங்கு சிரித்து விட்டாய் அதனாலா
மறுபடி சிரித்திட நிலவுகள் குதித்திட பூமிஎங்கிலும் ஒளி
இனி மின்சார பஞ்சம் தீர்ப்போம் சிறு துளி

சொற்கள் என வானத்தை பிழிந்து
அந்த கடலின் ஆழத்தை கடைந்து
நான் என் கண்கள் கொண்டேன்
விழி நீலத்தை எடுக்க
ஆந்தை என உன் மார்பில் உடுத்துவேன்
வெறி உன்னில் கொண்டேன்
இதழின் வரியிலே நூல்கள் பறிக்கவா
காதல் தறியிலே நாணம் உரிக்கவா
பருத்தி திரியிலே பொதிகள் தெறிக்கவா
ஓடாதே என் ஜீவனே
 

murugesanlaxmi

Well-Known Member
மௌனமே ஆயுதமாய்.....
அன்புக்குரியவர்களை மட்டுமல்ல
அறியாதவர்களையும் கூட
உதாசீனப்படுத்துவதற்கு
மெளனத்தைவிடவும்
சிறந்த ஆயுதம்
இந்த யுகத்தினில்
யாதொன்றுமில்லை...
வார்த்தைகள் ஏற்படுத்தும்
காயத்திற்கு
மன்னிப்பு
மருந்தாகிறது...
மௌனம் செய்யும் காயம்
மரணகாயம்
மாற்று மருந்தேதுமில்லை...
 

murugesanlaxmi

Well-Known Member
நான் ரசித்த,வரவேற்கும் கருத்து

பள்ளி குழந்தைகள் லீவு எடுப்பது மிக நல்லது...*
*"ஒரு குழந்தை டெய்லி School க்கு போயி 100% Attendance வாங்கி, வருச கடைசியில ஒரு கோப்பை வாங்குறது பெருமையில்லை!!!*
*கல்யாணம், காதுகுத்து, இழவு, திருவிழா ன்னு எல்லா இடத்துலேயும் கூட்டிட்டு போங்க!!*
*அப்ப தான் நாகரிகம், பண்பாடு தெரியும்!!*
*உறவுகளின் வலிமை, ஒற்றுமை, விட்டுக்குடுத்தல், அழுகை, சிரிப்பு ன்னு நிறைய தெரிய வரும்!!!*
*இந்த சமூகம் ஒரு நாளில் கற்றுக் கொடுப்பதை, அந்த விடுமுறை எடுக்காத நாளில் அந்த வகுப்பறை கற்றுக் கொடுத்து விடாது*
 

murugesanlaxmi

Well-Known Member
என்ன ஒரு தொலைநோக்கு பார்வை

#முயல்
ஓடுகிறது, தாவுகிறது
குதிக்கிறது, சுறுசுறுப்பாக இருக்கிறது..
ஆனால்
15 வருடங்கள் தான் வாழ்கிறது.
#ஆமை
ஓடுவதில்லை, குதிப்பதில்லை, ஏன் எதுவுமே செய்வதில்லை.
ஆனால்
150 வருடங்கள் வாழ்கின்றன.
இதனால் அறியப்படும் நீதி :-

#வெட்டியா இருந்தால் உன் லைப் #கெட்டியாக இருக்கும்.
அதனால யாரும் வேலைக்கு போய் ஆயுள கொறச்சிக்காதீங்க...
 

fathima.ar

Well-Known Member
காந்தமாய் ஈர்த்த
நீல கண்களில்..
என்னை தொலைத்தேன்..
முற்றிலுமாய் தொலைந்த
நெஞ்சம்
காதல் தனை அறியுமா..

அவளருகில்
கடல்விழியில்
மட்டும் மூழ்கிட
விளைந்த
நெஞ்சம்...

தனித்துவிட்டதால்
கொண்ட காதலும் புரிந்தது..
நான் என்ற எண்ணங்கள்
மறைய..
அவள் மீது கொண்டது
நேசம் என உணர்ந்தேன்...

என்னை தொலைத்த அவளிடத்தில்...
கடந்த வாழ்வும் காதலும்
சொன்ன நேர்மையும்...
பிரிவுக்கே வழியானதே..

அவள் பொருட்டு
நான் செய்த பிழையும்...
அவளை வருத்த
காரணமானதே..
 

murugesanlaxmi

Well-Known Member
காந்தமாய் ஈர்த்த
நீல கண்களில்..
என்னை தொலைத்தேன்..
முற்றிலுமாய் தொலைந்த
நெஞ்சம்
காதல் தனை அறியுமா..

அவளருகில்
கடல்விழியில்
மட்டும் மூழ்கிட
விளைந்த
நெஞ்சம்...

தனித்துவிட்டதால்
கொண்ட காதலும் புரிந்தது..
நான் என்ற எண்ணங்கள்
மறைய..
அவள் மீது கொண்டது
நேசம் என உணர்ந்தேன்...

என்னை தொலைத்த அவளிடத்தில்...
கடந்த வாழ்வும் காதலும்
சொன்ன நேர்மையும்...
பிரிவுக்கே வழியானதே..

அவள் பொருட்டு
நான் செய்த பிழையும்...
அவளை வருத்த
காரணமானதே..
அருமை சகோதரி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top