E2 Nee Enbathu Yaathenil

Advertisement

ThangaMalar

Well-Known Member
அருமை, அருமை, வெகு அருமையான, மிகச்சரியான விளக்கம், பாத்திமா டியர்
அருமை தான் பானு...

இன்னும் ஒன்றும் பாத்திமா சேர்த்திருக்கலாம், பானு...

"கடைக்கு போய் தங்கம் மட்டுமல்ல வைரமும் வாங்கி வா " என்றால்...
தங்கமும் வேண்டும், வைரமும் வேண்டும் என்று தானே பொருள்...
தங்கம் வேண்டாம் என்றா அர்த்தம்????

குடும்ப முன்னேற்றம் மட்டுமல்ல சமுதாய முன்னேற்றமும் வேண்டும் என்று தானே கவிதையின் பொருள்...
 
Last edited:

rathippria

Well-Known Member
அருமை தான் பானு...

இன்னும் ஒன்றும் பாத்திமா சேர்த்திருக்கலாம், பானு...

"கடைக்கு போய் தங்கம் மட்டுமல்ல வைரமும் வாங்கி வா " என்றால்...
தங்கமும் வேண்டும், வைரமும் வேண்டும் என்று தானே பொருள்...
தங்கம் வேண்டாம் என்றா அர்த்தம்????

குடும்ப முன்னேற்றம் மட்டுமல்ல சமுதாய முன்னேற்றமும் வேண்டும் என்று தானே கவிதையின் பொருள்...
Hey super baby....good example;)
 

Ansadoss

Well-Known Member
அருமை தான் பானு...

இன்னும் ஒன்றும் பாத்திமா சேர்த்திருக்கலாம், பானு...

"கடைக்கு போய் தங்கம் மட்டுமல்ல வைரமும் வாங்கி வா " என்றால்...
தங்கமும் வேண்டும், வைரமும் வேண்டும் என்று தானே பொருள்...
தங்கம் வேண்டாம் என்றா அர்த்தம்????

குடும்ப முன்னேற்றம் மட்டுமல்ல சமுதாய முன்னேற்றமும் வேண்டும் என்று தானே கவிதையின் பொருள்...
சமுதாயம் என்றால் என்ன என்று ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் பாடபுத்தகத்தில் குடிமையியல் பாடத்தில் விளக்கமா எழுதி இருக்காங்க G F. சமுதாயம் எங்கு உருவாகுகிறது என்பதையும் விளக்கமா சொல்லி இருக்காங்க.

நாங்கள் எல்லாம் கடைக்கு போய் கத்தரிக்காயும் புடலங்காயும் வாங்கும் அன்னாடங்காய்ச்சிப்பா;)


தங்கமும் வைரமும்மா:eek::eek::eek:
 

Adhirith

Well-Known Member
Hi Friends

என்னுடைய எழுத்தால் யாரையும் மனவருத்தம் செய்ய விருப்பமில்லை,அப்படி என் எழுத்து மனம் வருந்தும்படி இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள் நண்பர்களே,தோழிகள் சிலபேர் மிக மனவருத்தத்துடன் எனது விமர்சனத்திற்க்கு பதில் பதிவு செய்திருந்தார்கள் ,எனக்கு மிகவும் சங்கடமாகப்போய்விட்டது தோழிகளின் பதில் விமர்சனத்தைப்பார்த்து,ஆனால் mam இன் எல்லாக்கதைகளும் வாசித்திருப்பீர்கள்தானே அநேக நாயகிகள் அப்படித்தான் சித்தரித்திருப்பார் ,அது அந்தந்த கதையின் நாயகிகளுக்கு இந்த திமிர் & கர்வம் எல்லாம் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் தங்கள் நேர்மையினாலும் & ஒழுக்கத்தினாலும் வந்ததாயிருக்கும்,அதைதான் அப்படி எழுதினேன் ,ஏன் சுந்தரி கூட கணவன்செய்த தவறினால் எவ்வளவு பேரின் ஏளனத்திற்கு ஆளாகியிருப்பார்,ஆனால் அதையெல்லாம் புறந்தள்ளி தன்னந்தனியாக குழந்தையை வளர்த்து தங்களுடைய தொழிலையும் விருத்திசெய்யவில்லையா ,எதற்கும் யாரையும் எதிர்பார்க்காமல் நிமிர்ந்து நின்று செயாலாற்றுவது ,அவருக்கு ஒருவித நல்ல அழகு கர்வம் திமிர் இது எல்லாவற்றையும் கொடுக்கின்றதல்லவா , அது தன்னால் நேர்மையாக எதையும் சாதிக்கமுடியுமென்ற நம்பிக்கையால் வந்தது , இதைத்தான் நான் அப்படி எழுதினேன்,ஏன் வர்ஷினியைக்கூட எடுத்துக்கோங்க ,mam சிலபகுதிகளில் எழுதியிருப்பார்கள்,திமிராய் பார்க்கின்றார் பதில் சொல்கின்றார் என்று,ஏனென்றால் அவருடைய ஈஸ்வர் எப்படி இன்னொரு பெண்ணிடம் காதல் சொல்லி ஏமாற்றலாம் என்ற கோபத்தினால்தான் வந்தது ,அப்படி சரியான காரணத்திற்கு கோபப்படும் நியாயவாதிகள்தான் நம்ம mam இன் நாயகிகள் ,நான் அதைதான் அச்சொற்களால் பயன்படுத்தினேன்,மற்றும்படி நம் நாயகிகளை இழிவுபடுத்தும் அர்த்தத்தில் அச்சொற்களை பயன்படுத்தவில்லை,என்னுடைய எல்லா விமர்சனங்களையும் வாசித்துப்பார்த்தால் தெரியும் நான் கதைகளில் வரும் கதாபாத்திரங்களைக்கூட ஒருமையில் விளித்து எழுதியது இல்லை,ஏனென்றால் கதாபாத்திரமாக இருந்தால் கூட மதிப்புடன் எழுத வேண்டுமென்று நினைப்பவள் நான்,ஆனால் நம்பெண்களை அதுவும் கதையென்றால்கூட தவறான கண்ணோட்டத்திலோ சொற்றொடரிலோ எழுதமாட்டேன்,எங்கிருந்தாலும் எல்லோரும் சக மனிதர்களே,எந்நாடாயிருந்தாலும் எல்லோரும் பண்புடன்தான் இருக்கவேண்டும்,அதில்மாற்றுக்கருத்தேயில்லை,இது என்னுடைய தன்னிலை விளக்கம்,யாரையும் மனம்வருத்தச்செய்வதற்கோ அல்ல நண்பர்களே,உங்கள் மனதுக்கு தவறென்று தோன்றினால் விளக்கம் கேட்பதில் தவறு இல்லை.அதற்கு பதில் சொல்ல கடமைபட்டவள்.

நன்றி
Aravin22

Hi friend....
மல்லியின கதைகளுக்கு உங்களின் கமெண்டுகள்,
நறுக்கு தெறித்தாற்போல் அவ்வளவு அருமையாக இருக்கும்....
அவர்களின் கதாபாத்திரங்களை மல்லியின்
பார்வையில் புரிந்து வைத்துள்ள மிக சிறந்த
விமர்சகி.....

உங்கள் விமர்சனங்களை சரியான் முறையில்
புரிந்துக் கொள்ளதாவர்களைப் பற்றி
கவலை வேண்டாம்...
அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற
அவசியமும் இல்லை....
தன்னிலை விளக்கமும் தேவையில்லை....

உங்களின் கமெண்டுகளை எப்பொழுதும் ஆவலாக
ெதிர்பார்ப்பேன்....இனிமேலும்...
Be Cheerful....
 

Ansadoss

Well-Known Member
எஸ்.. அப்பா வசதியானவர் இருக்க போய் தான் சுந்தரி நன்றாக இருக்கிறாள் ..... இல்லாவிட்டால் நினைக்கவே கொடுமையா இருக்கு.....
அவள் வீடு ஓட்டு வீடு என்று தான் குறிப்பிட்டிருக்காங்க உமா. மேலும் நிறைய சொத்துக்கள் இருப்பதாக எங்கேயும் படித்ததாக ஞாபகம் இல்லை. அவள் வீடு அவனுக்கு பிடிக்கவில்லை என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அவள் நடுதர வர்கத்தை சேர்ந்தவளாக தான் தோன்றுகிறது.

25 செண்ட் இடத்தில் (1/4 ஏக்கர்) உள்ள மல்லி மொட்டுகளை பறிக்க வேண்டுமென்றால் கூட குறைந்தபட்சம் 3-4 நபர்களேனும் வேண்டும். சூரிய உதயத்திற்குள் மொட்டைகளை எடுக்க வேண்டும். வெயில் ஏறினால் மொட்டுகள் பறிப்பது கடினம்.
 

Adhirith

Well-Known Member
பாரதி கண்ட புதுமை பெண் பற்றி விளக்கம் வேண்டும் பானும்மா.

பாரதி தன் புதுமை பெண்ணைப் பற்றி குறிப்பிட்டுள்ளது என்ன? என்று பட்டியலிடுங்களேன். நாங்களும் தெரிந்துக் கொள்கிறோம்.

எனக்கு இன்னும் புரியவில்லை மல்லியின் நாயகியை பற்றி பேசும் போது.

இதுவல்ல பாரதியின் கனவு என்று பாத்திமா எதை குறிப்பிட்டிருக்கிறார்கள்?

பாரதியின் கனவுக்கு இழுக்கு உண்டாக்கும் வகையில் இங்கு யாரேனும் மோசமான கருத்தினை பதிவிட்டீருக்கிறார்களா?

அப்படி இருந்தால் அந்த கருத்துப் பதிவு எது என்று குறிப்பிடுங்கள் திருத்தி கொள்கிறோம்.

அப்படி இல்லை மனதில் தோன்றியதை எல்லோரும் படிக்க வேண்டும் என்பதற்காக போட்டேன் என்பவர்கள் அதை இங்கே பதிவிட வேண்டாமே.

தங்கள் திறமைகளை வெளிகொணர நினைக்கும் தோழமைகள் மல்லியிடம் கேட்டால் புதிய Forum உருவாக்கி தர அவர்கள் தயங்குவதே இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்தது தானே பானும்மா.

பாத்திமா கூட இந்த கதைக்கு சம்பந்தமில்லாத ஆனால் சமுதாயத்திற்கு தேவையானதாக கருதும் தனக்கு தோன்றிய கருத்துக்களை தனி Forumல் பதிவிடலாமே.

இங்கே மல்லியின் கதாபாத்திரங்களை பற்றியும் அக்காதாபாத்திரங்களின் குணாதிசயங்களை பற்றி மட்டும் விமர்சிப்பது மட்டுமே சரியாக இருக்கும் என்பது எனது கருத்து.

மற்றபடி நீங்கள் என்னைப் பற்றி தெரிந்து கொள்வதும். நான் உங்களை பற்றி தெரிந்து கொள்வதும். நாம் நம் குடும்பம், வேலை, குழந்தைகள் மற்றும் நமது சுகதுக்கங்களை பற்றி பகிர்ந்து கொள்வதும் நன்றாக இருக்கிறது. அதை நான் வரவேற்கிறேன். நமக்கிடையே கண்ணுக்கு தெரியாத பந்தத்தை அது உருவாக்குகிறது என்பதில் மகிழ்ச்சியே.


நான் முற்றிலும் ஆமோதிக்கிறேன்,அன்னு....


 
Last edited:

Sundaramuma

Well-Known Member
நல்ல மணவாழ்வு மட்டுமே நல்ல குடும்பத்தை உருவாக்கும்.

நல்ல குடும்பம் நல்ல குழந்தைகளை உருவாக்கும்.

நல்ல குழந்தைகள் நல்ல இளைஞர்களாக உருவெடுப்பார்கள்

நல்ல இளைஞர்கள் தான் புதிய சமுதாயத்தை உருவாக்குகின்றனர்.

எனவே வெற்றிகரமான மணவாழ்க்கை ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும் உருவாக்கும் என்று மீண்டும் ஒருமுறை ஆணித்தரமாக பதிவு செய்கிறேன்.

உங்கள் கவிதைக்கு நீங்க தானே தெளிவுரை கொடுத்தீங்க. முத்தமிழ் அறிஞர் யாரும் தெளிவுரை எழுதவில்லைதானே? தெளிபடுத்த வேண்டியது கடமைம்மா.

கவிதை எழுதியது கடவுளேயாயினும் குறை இருப்பின் நிற்க வைத்து கேள்வி கேட்ட நக்கீரர் வாழ்ந்த பூமி இது.
I am sorry Ansa ....
இதை என்னால் ஏற்று கொள்ள முடியாது......
நிறைய உடைந்து போன or பெற்றோர் சரியில்லாத குடுபங்களில் இருந்தும் நல்ல இளையர்கள் உருவாகிறார்கள்....முக்கியமாக தான் தன் பெற்றோர் செய்த தவறை செய்யாமல் சமூகத்துக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்ற உறுதி சிறு வயதிலேயே ஏற்பட்டு விடுகிறது அவர்களுக்கு...... என்னோட hubby அப்படி இருக்கிறவர் தான்.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top