கண்ணபிரான் செய்த சித்தி விநாயகர் பூஜை

Advertisement

SahiMahi

Well-Known Member
சியமந்தக கோபாக்யாணம்

த்வாபரயுகத்தில் கண்ணன் துவாரகையில் திருவிளையாடல் புரிந்த நாட்கள்.அங்கு சத்ராஜிதன் மற்றும் பிரசேணன் என்ற அரசக்குமாரர்கள் வாழ்ந்து வந்தனர்.
சத்ராஜிதன் கடற்கரையில் நின்று பல காலமாக சூரியனை நோக்கி கடுந்தவம் புரிந்தான்.அவனின் தவத்தை மெச்சி சூரியன் அவன் முன் தோன்றி, "வேண்டிய வரம் கேள் " என்றார்.
அதற்கு சத்ராஜிதன் தாங்கள் மகிழ்ச்சியுடன் இருந்தால் ஸ்யமந்தக மணியை எனக்கு தந்தருளவேண்டும் என்று கேட்டான்.
சூரியனும் அந்த மணியை அளித்து, "இந்த ரத்தினம் தினமும் எட்டு பாரம் பொன் அளிக்கும்.இதை மிகவும் சுத்தமாக அணிய வேண்டும், தவறினால் அதை அணிந்தவரை ஒரே கணத்தில் கொன்று விடும் " என்று கூறி மறைந்தார்.சத்ராஜிதனும் அந்த மணியை அணிந்துக்கொண்டு துவாரகைக்கு சென்றான்.அந்த ஒளி வீசும் மணியை கண்ட கிருஷ்ணபரமாத்ம அது தனக்கு வேண்டும் என்ற ஆவலை தெரிவித்தார்.அவரின் ஆவலை அறிந்த சத்ராஜிதன் அதை கழற்றி தன் தம்பி பிரசேணன் கழுத்தில் அணிவித்து அனுப்பிவிட்டான்.
பின்பு பிரசேணன் ஒருநாள் கண்ணனுடன் காட்டிற்கு வேட்டையாட சென்றான்.அங்கு ஒரு சிங்கம் பிரசேணனனைக் கொன்று அந்த மணியை எடுத்துச் சென்றது.ஜாம்பவான் என்ற கரடியரசன் அந்த சிங்கத்தை கொன்று,மணியை தன் குகைக்கு எடுத்துச்சென்று தன் மகனின் தொட்டிலில் உயரே கட்டினார்.அதை அறியாத கண்ணன் துவாரகைக்கு திரும்பினார்.வெகு நாட்கள் ஆகியும் பிரசேணன் திரும்பாததால்,மக்கள் கண்ணன் தான் அந்த மணி மேல் உள்ள மோகத்தால் கொன்று விட்டார் என பழி கூறினர்.இதனால் மனம் வருந்திய கண்ணன் மக்களை அழைத்துக் கொண்டு மீண்டும் காட்டிற்கு சென்றார்.அங்கு பிரசேணன் சிங்கத்தால் கொல்லப்பட்டதை கண்டார்.அந்த சிங்கத்தின் காலடியை தொடர்ந்து சென்றார்.அது ஒரு குகைக்கு அவரை அழைத்து சென்றது.குகையில் சிறிது தூரம் சென்றபின் அங்கு ஜாம்பவானின் மகனின் தொட்டிலின் மேல் அந்த மணியை கண்டார்.அருகே ஒரு இளம்பெண்ணையும் கண்டார்.அவள் ஜாம்பவதி.அரவம் கேட்டு அங்கு வந்த ஜாம்பவான் கண்ணனுடன் கடும் போர் புரிந்தான்.இறுதியில் வந்தவர் மகாவிஷ்ணுவின் அவதாரம் என்றுணர்ந்து அவரை வணங்கி,ஸ்யமந்தக மணியையும் தன் ஜாம்பவியையும் ஒப்படைத்தார்.
துவாரகை திரும்பிய கண்ணன் நடந்த அனைத்தையும் மக்களிடம் கூறினார்.மக்களும் அவரின் மேல் சுமத்திய வீண் பழியை எண்ணி வருந்தினர்.சத்ராஜிதனும் மனம் மகிழ்ந்து தன் மகள் சத்யபாமாவை கண்ணனுக்கு மணம் முடித்தார்.இவ்வாறு கண்ணன் அடைந்த வீண்பழி நீங்கியது.

இரண்டாவது பழி.

சததன்வா மற்றும் அக்ரஹாரம் என்ற யாதவர்கள் ஸ்யமந்தக மணியை அபகரிக்கும் நோக்குடன் சத்ராஜிதன் உடன் பகை கொண்டனர்.ஒரு சமயம் கண்ணன் பாண்டவர்களை காண சென்ற பொழுது, துஷ்டனான சததன்வா சத்ராஜிதனை கொன்று மணியை அபகரித்து விட்டான்.சத்யபாமாவின் மூலம் இதை கேள்வியுற்ற கண்ணன் மிகவும் கோபம் கொண்ட பலராமனுடன் அவனை அழிக்கப் புறப்பட்டார்.இதனை அறிந்த சததன்வா மணியை
அக்ரூரனிடம் ஒப்படைத்து தப்பினான்.வெகு தூரம் சென்றபின் சததன்வாவின் கீழே விழுந்து இறந்தது.அவனை பின் தொடர்ந்த கண்ணபிரான் தன் வாளால் அவனைக் கொன்றார்.ஆனால் அந்த ரத்தினம் அவனிடம் இல்லை.அதனால் பலராமன் கண்ணனனை,"நீ துஷ்டன்,பேராசைக்காரன்,பணத்திற்காக உன் பந்துவைக் கொன்று விட்டாய்" என்று நிந்தனை செய்து அவரை வெறுத்த நாட்டிற்கு சென்றுவிட்டார்.கண்ணனனும் துவாரகைக்கு திரும்பினார்.மக்களும் பலராமனை போலவே அவரை ஏசினார்கள்.இதனால் மனமுடைந்த கண்ணன் தனக்கு வீண் பழி ஏற்பட்டதே என்று எங்கும் செல்லாமல்,அரண்மனையிலேயே தங்கி விட்டார்.
ஒரு நாள் கண்ணனனை காண நாரதர் வந்தார்.கண்ணனின் வருத்தம் தோய்ந்த முகத்தைக் கண்டு,தங்களின் வருத்ததிற்கு காரணம் என்ன என்று கேட்க கண்ணனனும் ஆதி முதல் அந்தம் வரை அனைத்தையும் கூறினர்.
நாரதரும் அனைத்தையும் கேட்டறிந்த பின்,தாங்கள் வீண் பழிக்கு ஆளானதன் காரணம் தெரிந்து விட்டது என்றார்.தாங்கள் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி அன்று சந்திரனைப் பார்த்துவிட்டுப்,அதனால்தான் வீண் பழி ஏற்பட்டது என்றார்.
கண்ணன் " நாரதரே சந்திரனை ஏன் சதுர்த்தி அன்று பார்க்கக்கூடாது,மக்கள் துவிதியை அன்று ஏன் பார்க்கின்றனர் "என வினவினார்.

இதற்கு நாரதர்,சந்திரன் கணேசனை இகழ்ந்ததையும் பின் சாப விமோசனம் அடைந்ததையும் கூறினார்.(சங்கட ஹர சதுர்த்தி விரதம் கதை).
மேலும் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி அன்று மண்ணால் ஆன விநாயகரை பல மலர்களால் பூஜித்து,இரவில் ஜாகரமும் செய்து முறையாக பூஜிப்பவர்களுக்கு,அவர் தொடங்கும் காரியங்களில் வெற்றியும், சகல காரியங்களில் சித்தியும் அளிப்பார் என்று கூறினார்.
கண்ணபிரானும் அவ்வாறே சித்தி விநாயக பூஜை செய்து, தனக்கு நேர்ந்த வீண் பழிச்சொல் நீங்கப்பெற்று அனைவராலும் போற்றப்பெற்றார்.

இந்த விநாயகர் சதுர்த்தி விரதம் கதையைக் கேட்பவர்களுக்கு சகல காரியம் சித்தியாகும் என்பது திண்ணம்.
இக் கதை ஸ்காந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.


(ஒரு கதையை சுருக்கிக் எழுதவே ரொம்ப கஷ்டமான இருக்கே???writers எல்லாம் எப்படிதான் எழதறாங்களோ!!
A big applause to all writers...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top