நிலவு– 3

எத்தனைமுயன்றும் கண்ணீர் வழிவதை நிறுத்த முடியவில்லை. ஹேண்ட்பேக்கில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து நீரைஅருந்தியவள் ஸ்கூட்டியை விட்டு இறங்கி தன் முகத்தையும் அலம்பிக்கொண்டாள்.

“ஸ்ட்ராங் வெண்மதி. இதுக்கெல்லாம் அசந்துட்டா அடுத்து வரதையெல்லாம் என்னன்னு சமாளிப்ப? சியரப் கேர்ள்…”

தன்னை தானே தைரியம் செய்துகொண்டு வண்டியைஸ்டார்ட்செய்ய அவளை மறித்ததை போல ஒரு கார் வந்து நின்றது.

“எவன்டா அவன்?…” என பார்க்க,இறங்கியவனை கண்டு உயிர் உறைந்து நின்றாள் வெண்மதி.

யாரின் நினைவுகளில் உருகி கரைந்து தன்னை மெழுகாய்கரைத்துக்கொண்டிருக்கிறாளோஅவனே இன்று இந்த நிமிடம் இந்த நொடி அவளின் கண் முன். அவன் முரளிதரன்.

அவள் உயிரில் விதையென விழுந்த அவன் மீதான காதல் விருச்சமென வளர அதை அப்படியே விட்டுவிடவும் முடியாமல் வெட்டிவிடவும் முடியாமல் இன்றுவரை தவித்து எதுவானாலும் அவன் நினைவு ஒன்றே வாழ்வின் ஆதாரம் என வாழ்ந்திருப்பவள்.

இமைக்கவும் மறந்து அவனின் உருவத்தை அருபமாய் உள்ளத்தில் ஏற்றிகொண்டிருந்தாள். ஆனாலும்அவளின்கள்வன் அதையும் கண்டுகொண்டானே.

எப்பொழுதும் அணிவதை போல பார்மலில் நின்றிருந்தவனின் தோற்றம் இப்பொழுதும் மதி மயக்கத்தான் செய்தது. ரசித்தது. அதையும் முறைத்துக்கொண்டேரசித்தாள்.

ஒரு நிமிடம் தான் அவளின் அதிர்வு.தன்னை புன்னகையுடன் அவன் பார்த்திருக்க தன்னை மீட்டுக்கொண்டவள்,

“இவன் ஒருத்தன், சரியான சிரிச்ச வாயன். எப்ப பார்த்தாலும் சிரிச்சுக்கிட்டு.ஆனாபல்லும் தெரியாது, ஒன்னும் தெரியாது…” அவனைஅலுப்புடன் சாடினாலும்,

“போதும் வெண்மதி சைட்டடிச்சுது. இன்னும் ரெண்டு வருஷம் தாங்கும் இவன் சிரிச்ச முகமே. கிளம்பு கிளம்பு…”

அவளுக்குள் கட்டளைகள் பிறப்பித்தவண்ணம் வண்டியை கிளப்பி அவனை தாண்டி செல்ல காரின் மேல் சாய்ந்து நின்றவன் இப்பொழுது அவளின் ஸ்கூட்டியை மறைத்து அதன் மேல் கையை வைத்து குறுக்கே நின்றான்.

இப்பொழுது உண்மையிலேயே நடுக்கம் தான் அவளுக்கு. இப்படி வந்து திடீரென குதிப்பான் என கனவிலுமா கண்டாள்? ஆனாலும் இதோ வந்துவிட்டானே?

“கிளம்பு வெண்மதி, இவன்ட்ட பேசாத…”மனனம் செய்தவள் அவன் முகம் பார்க்காமல் ஸ்கூட்டியை உறும விட வண்டியைஆஃப்செய்துசாவியைஉருவிக்கொண்டான்.

“அப்பறம், சொல்லுங்க வெண்ணிலா, ஹவ் ஆர் யூ?…” எடுத்துக்கொண்ட சாவியை மேலும் கீழும் தூக்கி போட்டபடி இப்பொழுது காரில் சாவகாசமாய் சாய்ந்து நின்றான்.

அதே வசியகுரல்.அவனை காதலனாய், உயிராய், மொத்த வாழ்க்கையாய், தனக்கே தனக்கென உள்ள குட்டி உலகமாய் அவனை ஸ்வீகரிக்கசெய்த அதே மாயக்குரல்.

நனவுலகில் இருந்து கனவுலகிற்குஅவளை நழுவச்செய்யும் பேச்சு,வாரி சுருட்டிக்கொள்ளும் பார்வை என மொத்தமாய் அவளை நிலைகுலையச்செய்தான்.

“டேஞ்சர் ஃபெல்லோ…” அவளின் உதடுகள் முணுமுணுத்தது அவனை முறைத்து பார்த்து.

“கேட்டதுக்கு பதிலே சொல்லாம இப்படியே என்னை வச்ச கண் வாங்காம பார்த்தா என்ன அர்த்தம்?…” அவள்முகத்தின் முன் கையைஆட்டி கேட்க,

“ப்ச், கால் மீ வெண்மதி…”சலிப்பாய் வேறுபுறம் பார்த்து சொல்ல,

“ஏனோ எனக்கு அப்படி கூப்பிடவே வரலை. சட்டுன்னு இந்த நேம் தான் ஞாபகம் வருது.உங்க நேம் கூட இதே மீனிங் தானே? என்ன ப்ராப்ளம்? அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க…”

அன்றைக்கு சொன்ன அதே விளக்கம்.கொஞ்சமும்தன் சுட்டிக்காட்டலை ஒத்துக்கொள்ளாத ,அதன் பின் அதைமாற்றிக்கொள்ளாத அவனின் தன்மை.

சரித்திரம் திரும்புகிறதோ? என்பதை போல இடையில் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் கனவாய் கரைந்து அவனை பார்த்த நாளில் சென்று கடிகாரமும் காலமும் நின்றுவிடாதா? அனைத்தும் மாறிவிடாதா?என்ற ஏக்கம் நெஞ்சை துளைத்தது.

வெறித்த பார்வையோடு அவனை பார்த்து நின்றாள் வெண்மதி.

ஆனாலும் ஒரு நொடி வந்துபோன ஏக்கமும் அதனால் உண்டான சலனமும் முரளியின் கண்களுக்குள் தப்பாமல் ஓடி சென்று ஒட்டிக்கொண்டது. புன்னகையோடு அதை தனக்குள் மறைத்துக்கொண்டான்.

“இப்ப எதுக்காக வந்திருக்கீங்க?…” முகத்திலடித்ததை போல பேச,

“எதுக்கு இத்தனை கோவம்? நான் ஒன்னும் உங்களை அவாய்ட் செய்யலை. யோசிச்சு பாருங்க. நீங்கதான் என்னை வேண்டாம்னு சொன்னீங்க. என்னமோ உங்களை நம்பவச்சு ஏமாத்திட்டத போல பேசறீங்க…”

அவனின் குற்றம் சாட்டலில் தனக்கு தானே பூசிக்கொண்ட சாயம் வெளுத்துவிடுமோ என உள்ளுக்குள் பயந்தாள்.

“அப்படிஏமாத்தியிருந்தா கூட கோவத்துல உன்னை வெறுத்திருப்பேன். உன்நியாபகமே இருந்திருக்காது.ஆனா நானே உன்னை விலக்கிவச்சு உன் நினைப்பிலிருந்து விலகமுடியாம தத்தளிச்சுட்டிருக்கேன். இப்ப வந்து நியாயம் கேட்கிறான் பார்…”கடுப்பாக நினைத்துக்கொண்டாள்.

“டீசன்டாமியூச்சுவலா பிரிஞ்சாச்சு. ஜஸ்ட் ஒரு ப்ரெண்டா பேசலாமே…” திடுக்கிட்டு அவனை பார்க்க,

“உடனே திரும்ப முறைக்காதீங்க.மியூச்சுவல்னா நீங்க ஏன் எக்ஸ்ட்ரீம் திங்கிங் போறீங்க?நீங்க சொன்னதை கேட்டு நானும் உங்களை விட்டு பிரச்சனை பண்ணாம விலகினேன்லஅதை சொன்னேன். ஹப்பா ஒரு செண்டன்ஸ் முடிக்க முடியலை. அதுக்குள்ளே ஏகப்பட்ட ரியாக்ஷன்ஸ்…”

அலுத்துக்கொண்டவனைஎரிச்சலுடன் பார்த்தாள் வெண்மதி. அவளின்எரிச்சலை கண்டுகொள்ளாமல் அவன் பேசினான்.

“இவன் பிரச்சனை பண்ணலையாமே?இவனை விலக்கி வைக்க நான்ல தலையால தண்ணி குடிக்க வேண்டியதானது…” அந்நாளின் ஞாபகம் அவளைவெதும்பத்தான் செய்தது.

“இதை சொல்லத்தான் கூப்பிட்டீங்களா?…” அங்கிருந்து கிளம்பிவிடும் வேகம் அவளுள்.

“வேற என்னன்னு எதிர்பார்த்தீங்க?…” குறும்பாய் புன்னகைத்து கேட்க,

“ஒன்னும் நினைக்கலை.என்னோட கீயை குடுங்க. நான் வீட்டுக்கு போகனும். இப்பவே லேட் ஆகிடுச்சு.இருட்டிடும்…”பிடிவாதமாய் கேட்க,

“அந்தளவுக்கு உங்களை சேப் இல்லாத இடத்துல நான் நிறுத்தி வைக்கலை. பேசிட்டுஅப்படியே ரோட்ல விட்டுட்டு போகவும் மாட்டேன்…”

அமர்த்தலாய் பேசியவனை பளார் பளார் என அறைந்தால் என்னவெனும் வேகம் வெறியாய் பிறந்தது வெண்மதிக்கு.

“குத்திக்காட்டிசாகடிக்கிறானே?…” நொந்துகொண்டாள். ஆனால் அடுத்து சொன்னது அவளை உண்மையில்சாகடிக்கத்தான் செய்தது.

“இன்விடேஷன் குடுக்கலாம்னு தான் உங்களை நிறுத்தினேன்…”என்ற முரளியைசரேலென ஏறிட்டாள்.

கோபம்,ஆத்திரம்,ஏமாற்றம்,கலக்கம், துக்கம், இயலாமை என ஒட்டுமொத்த உணர்வுகளும் ஒரே நேரத்தில்அவளிடம் பாய்ந்து தாக்க மொத்தமாய் சரிந்து சாய்ந்தாள்.

“இன்விடேஷன்…”

வெண்மதியின்உதடுகள் மெல்லிய குரலில் சப்தம் எழுப்ப அவளின் உணர்வுகளை சிந்தாமல் சிதறாமல் அவதானித்து தனக்குள் சேர்த்தான் முரளி.

அவனின்மனதுக்குள் பேரலை ஒன்று எழும்பி அவளின் உணர்வுபோராட்டத்தை முடித்துவைக்க நினைக்க அந்த ஆர்ப்பரிப்பு எதுவும் முகத்தில் வந்துவிடாமல் கவனமாக தன்னுடைய உணர்வுகளை மறைத்துவைத்தான்.

“நோ முரளி. கொஞ்சமும் கருணை காட்டாத.மேடம் இந்த ஒரு வருஷமா தவிக்கவிட்டதுக்கு கொஞ்சமாச்சும் அனுபவிக்கட்டும்.மூச்…”நிதானமாகநின்றான்.

“எஸ் இன்விடேஷன் தான்.  நீங்க இன்விடேஷன் குடுப்பீங்கன்னு நினைச்சேன். ஆனா நான் தான் முதல்ல குடுக்கனும்னு இருக்கு…” பூடகமாக பேசியவனில் தன்னை மீட்டவள்,

“சோ வாட்? யார் முதல்ல குடுத்தா இப்போ என்ன?நோ ப்ராப்ளம்…”மிக தெளிவாய் வெண்மதிபேச,

“இவ இருக்காளே?…” பல்லை கடித்தான் இதழ்களுக்குள்.

“வழியில பார்த்ததுக்கெல்லாம் குடுக்கனும்னு இல்லை. இருந்தாலும் வந்துட்டீங்க. குடுங்க. கண்டிப்பா உங்க கல்யாணத்துக்கு வந்திடுவேன்னு ஹோப் குடுக்க முடியாது. எனக்கு அப்போ என்ன சுட்சுவேஷன் அப்டின்னு பார்க்கனும். யோசிக்கனும்…”அவளின் பதிலில் இதழ் விரிய சிரித்தவன்,

“ஆஹாங், அப்டியா சொல்றீங்க? ஓகே பார்க்கலாம்….” நக்கலாய் சொல்ல வெண்மதிக்கு தான் கோபம் எல்லை மீற தருணம் பார்த்தது.

“ஓகே அதை விடுங்க, என்னாச்சு உங்க லவ் மேட்டர்? எப்பவோ வீட்ல பேசி சம்மதம் வாங்கறதா சொன்னீங்க? இன்னும்உங்க லவ்வர் பாய் அவர் கடமையை முடிக்கலையா?…”என்ன முயன்றும் சிறு கேலி அவனின் முகத்தில் வந்துவிட்டது.

தன்னுடைய விஷயம் பற்றி பேசியதைகேட்டு முதலில் படபடத்தவள் அடுத்த கேள்வியில் தொனித்த கேலியில் சுறுசுறுவெனகோபம் பொங்க,

“என் விஷயம் உங்களுக்கு தேவை இல்லாதது. இன்விடேஷன் குடுத்துட்டு கிளம்புங்க. என் சாவியையும் குடுத்துட்டு…” பட்டுக்கத்தரித்தார் போல அவள் பேச,

“அதெப்படி விடமுடியும்? இதை சொல்லித்தானே என்னை வேண்டாம்னு சொன்னீங்க, நான் கேட்காம இருக்கமுடியுமா?…” விட்டேனா பார் என்று நிற்க,வெண்மதிக்கு கண்களை கட்டிக்கொண்டு வந்தது.

“உங்க மேரேஜ் எங்க வச்சு? பொண்ணுஇங்கசென்னை தானா? இல்லைவெளியூரா?…” அவள் பேச்சை மாற்றுவது புரிய இன்னும் அவளை சீண்டிபார்க்க தோன்றியது முரளிக்கு.

“ஹ்ம்ம் சென்னை தான். ரொம்ப நல்ல பொண்ணு. நம்ம விஷயம் கூட சொல்லிருக்கேன் அவங்கட்ட. எங்களுக்கு பிறக்கபோற குழந்தைக்கு கூட உங்க பேரைத்தான் வைக்கனும்னு அவங்க ஆசைப்படறாங்க. எனக்குமேஆசை தான்…”

கோபத்தில் கொதிப்பாள், சண்டையிடுவாள்என எதிர்பார்த்திருந்தவனுக்கு அவளின் விழிகளில் பரவிய வலியில்இவனின் இதயம் நின்று துடித்தது. அதுகனவோ என்பதை போல இயல்பானவள்,

“தாராளமா வச்சுக்கோங்க, ஊருக்குள்ள வெண்மதின்னு எனக்கு மட்டும் தான் பேர் இருக்கா? போவீங்களா?…”

அவனுக்கு சளைக்காமல் பதிலளித்தாலும் அவன் கூறியது உள்ளுக்குள்அடக்கப்பட்ட உணர்வுகளை பந்தாடிக்கொண்டிருந்தது.

என்றோ இப்படி ஒரு நாள் வந்தே தீரும் என்று எதிர்பார்த்தது தானே. அது இன்றாகிவிட்டது.ஓடி ஒழிய முடியாது தானே.உண்மையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இது தனக்கு தானே விதித்துக்கொண்டது என நினைத்து இறுகி நின்றாள்.

“ஹ்ம்ம் ஸ்மார்ட்…”

“அது ஊருக்கே தெரிஞ்ச விஷயம் தான்.நீங்க சர்டிபிகேட் குடுக்க வேண்டாம்.என் கீயை குடுங்க நான் கிளம்பனும்…”கை நீட்டி அவள் கேட்க பின்னே நகர்ந்தவன் காரில் இருந்து ஒரு கவரை எடுத்தான்.

“கவர் ரொம்ப பெருசா இருக்கே? ஒருவேளை புக்லெட் மாதிரி போட்ருப்பானோ?…”

நினைத்துக்கொண்டாலும் கேட்டுக்கொள்ளவில்லை. கேட்டால் அதிலிருந்து மீண்டும் பேச்சை வளர்ப்பான் என்று தன் வாயை அடக்கிக்கொண்டாள்.

வந்தவன்அவள் முன் அதை நீட்ட வாங்காமல் அவனை பார்த்தவள்,

“முதல்ல கீயை குடுங்க. அப்பறம் வாங்கிக்கறேன்…”

“முதல்ல இதை வாங்கி பிரிச்சு பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க. நான் கீயை தரேன்…”

கையில் இருந்த சாவியை பேண்ட் பாக்கெட்டில் போட்டுக்கொண்டான். இப்பொழுது வெண்மதிக்கு திக்கென்று இருந்தது.

இதுவரை பேசிக்கொண்டிருந்தவனின் குரலில் முற்றிலும் மாற்றம். என்னவென உணரமுடியாமல் தடுமாறி இருந்தாள். நெஞ்சம் அடித்துக்கொண்டது.

எதுவானாலும் பரவாயில்லை என தன்னை தேற்றி அவன் நீட்டிக்கொண்டிருந்த கவரை வாங்க,

“அதை ஓபன் செய்ங்க…”மீண்டும் காரில் சாய்ந்து நின்று மார்பின் குறுக்கே கைகளை கட்டி நின்றான்.பார்வை மொத்தமும் அவள் முகத்திலேயே.

விருப்பமின்றிபிரித்து பார்த்தவள் குழம்பிப்போனாள். ஒன்றும் புரியாமல் அவனை பார்க்க,

“இதுல ஒன்னை செலெக்ட் பண்ணுங்க…”

“உங்க மேரேஜ்க்கு நான் ஏன் கார்ட் செலெக்ட் பண்ணனும்? இது உங்களுக்கே ஓவரா தெரியலை?…”கடுப்பாய் மொழிய,

“நீங்க தான் செலெக்ட் செய்யனும்.செய்ங்க…” இப்பொழுது அழுத்தமாய் சொன்னது அவன் குரல்.

“முடியாது, என்னால உங்க இஷ்டத்துக்கு ஆட முடியாது. என்னைக்கு நான் உங்களை வேண்டாம்னு சொன்னேனோ அப்பவே உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு ஆகிடுச்சு. திரும்பவும் நீங்க வந்து நின்னதும் ஒரு மரியாதைக்கு தான் பேசினேன்…”

“செலெக்ட் செய்ங்கன்னு சொன்னேன் வெண்மதி…” பொறுமையைஇழந்துகொண்டிருந்தது முரளியின் குரல்.

கோபமாகிவிட்டான் என்பது தெளிவாய் புரிந்தது அவளுக்கு. ஆனாலும்தன்உணர்வுகளோடு ஏற்கனவே போராடிக்கொண்டிருப்பவளை மேலும் வறுத்தவென வந்து வம்பிளுப்பவனை அப்படியே விட்டு செல்வதா?

“நீங்க ரொம்ப அட்வான்டேஜ் எடுக்கறீங்க மிஸ்டர். இதுதான்இவ்வளவுஉங்களுக்கு மரியாதை…”

அவளின்எரிச்சலை கோபத்தை அலட்சியம் செய்தவனின் தோற்றமும் பார்வையும் கொஞ்சமும் மாறாமல் அப்படியே இருக்க,

“ப்ச் சொன்னா கேட்க மாட்டீங்க…” ஸ்கூட்டியை சைட் ஸ்டாண்ட் போட்டுவிட்டு அவன் கொடுத்ததை காரிலேயே தூக்கி எறிந்தவள்,

“இந்த வண்டியையும் நீங்களே வச்சுக்கோங்க. எனக்கு ஆட்டோ பிடிச்சு போய்க்கதெரியும்…” என்றவள் தன்னுடைய ஹேண்ட்பேக்கை எடுத்துக்கொள்ள,

“நான்தருணை மீட் பண்ணினேன் வெண்மதி. டோன்ட் ப்ளே வித் மீ…” என்றான்முரளிஉணர்வுகளை துடைத்த குரலில்.

வெண்மதியின் மொத்த கோபமும் படபடப்பும் மொத்தமாய் வடிந்துவிட்டிருந்தது. இனி எதற்கும் தெம்பில்லாததை போன்ற ஒரு தோற்றம். கைகள் தொய்ய விழுந்துவிடுவோமோ என்றொரு அச்சத்தையும் தாண்டிய எதுவோ ஒன்று.

“என்னை பற்றி என்ன நினைத்திருப்பான் இவன்?…”மென்று தின்ற அந்த அவமானத்தை தாங்க முடியாமல் கண்கள் இருட்டிக்கொண்டு வருவது போல தோன்ற தள்ளாடினாள்.

“வெண்மதி…” பதறிய முரளி வேகமாய்அவள் பக்கம் வர கையை நீட்டி தடுத்தவள் மூச்சை ஆழ இழுத்துக்கொண்டாள். இனி எதையும் சந்தித்தே ஆகவேண்டும். தயாராகவும் ஆகிவிட்டாள்.

“சோ வாட்?…”

“நீங்க என்னை ஏமாத்தியிருக்கீங்க. என்கிட்டே பொய் சொல்லி இருக்கீங்க…”

“எனக்கு பிடிக்கலை. உங்களை வேண்டாம்னு சொல்றதுக்கு எனக்கு இதுதான் தெரிஞ்சது…”சொல்லும் பொழுது நெஞ்சம் விம்மிதணிந்தது வெண்மதிக்கு.

அவனுக்கும் தெரியும், அவளுக்கும் தெரியும் வெண்மதிசொல்வது அப்பட்டமான பொய் என்பது.ஆனாலும் அவளை பேசவிட்டு பார்த்தான் முரளி.

“இது ஒரு குற்றமா? இதுக்கு துரத்தி வந்து கேட்பீங்களா? நடந்து முடிஞ்சு ஒரு வருஷம் ஆகிப்போச்சு. இப்போ என்ன உங்களுக்கு?…”

“ஓகே லீவ் இட். இப்போ இது ப்ராப்ளம் இல்லை…” என்றவன்,

“கார்ட் என்னைக்கு, எப்போ செலெக்ட் பன்றீங்க? எப்போ ப்ரீன்னு சொல்லுங்க. சேர்ந்தே செலெக்ட் பண்ணலாம்…”

“யோவ், ஒரு தடவை சொன்னா உனக்குபுரியாது. நீ கல்யாணம் பண்ணிட்டு குடும்பம் குட்டின்னு வாழ நான் உனக்கு கார்ட் எடுத்து தரனுமா? என்னைஎன்னன்னு நினைச்ச?…” ஏகவசனத்தில் வெடித்தவளை கண்டு இப்பொழுது சிரிப்பு பீறிட்டது முரளிக்கு.

“இப்படி எல்லாம் கூட உங்களுக்கு பேச வருமா?…” நிதானமாககேட்டவனை கண்டு கண்மண் தெரியாத ஆத்திரம் கிளம்பியது வெண்மதிக்கு.

“என்னை பார்த்தா லூஸு மாதிரி தெரியுதா?…”

“சத்தியமா இல்லைங்க. கார்ட்மட்டும் செலெக்ட் பண்ணுங்க…”

அவனைகடுப்பாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு ஆட்டோவருகிறதா என பார்க்கஆரம்பித்தாள்.

“ஆட்டோ எடுத்துட்டு நீங்கவீட்டுக்கு போனா கண்டிப்பாஉங்க வீட்டுக்கே வருவேன்…”

“என்ன விளையாடறீங்களா? சும்மா வம்பு பண்ணிட்டு இருக்கீங்க. நான் மட்டும் ஹெல்ப்னு கூப்பிட்டா…” சத்தமாய் பேசிவிட அங்கு சென்றுகொண்டிருந்த ஒருசிலர் கூட திரும்பி பார்த்து சென்றனர்.

“தாராளமாகூப்பிடுங்க.சத்தமா பேசி எல்லோரையும் கூப்பிடுங்க. நான் உங்க கையை பிடிச்சு இழுத்தேன்னு சொல்லுங்க…” அசராது அவன் பேச தலையே வெடித்தது இவளுக்கு.

“இப்போ ஏன் என்னை டிஸ்ட்ரப் பன்றீங்க?…” இறங்கிய குரலில் கேட்க,

“நம்ம கல்யாணத்துக்கு இன்விடேஷன் உங்க கையால செலெக்ட் பண்ணனும்னு விரும்பறேன். இதுல என்ன தவறு இருக்கு?…” மின்னாமல் முழங்காமல் இடியொன்றை அவளின் தலையில் இறக்கினான்.

“வாட்? நம்ம கல்யாணமா? என்ன உளறல்?…”அதிர்ச்சியில்எகிறிகுதிக்க துடித்த இதயத்தை இழுத்து நிறுத்தியவளின் கண்கள் தவிப்பாய் அலைபாய்ந்தது.

“ஆமாம். நம்ம கல்யாணமே தான்…” அழுத்தம் திருத்தமாய் அவன் கூற தலைசுற்றி நின்றாள்.

இது எப்படி சாத்தியமாகும்? குழம்பியவளுக்கு தெரியவில்லை. சாத்தியப்படுத்த தான் அவன் இருக்கிறானே? அவளின் ஒற்றை பார்வைக்காய் தவம் இருப்பவன் அவளுக்காய் எதையும் சாத்தியப்பட வைப்பான் என்பதை அறியாமல் போனாள்.

“என்னைஉங்களுக்கு அவ்வளவு பிடிச்சிருக்கா வெண்ணிலா?…” அவனின்ஆழ்ந்தகுரலில் உருகி இளகித்தான் போனாள்.

பதில் இன்றிதிகைத்துபார்த்தாள்.வேண்டாம் வேண்டாம் என மூளை  அடித்துக்கொண்டாலும் வேண்டும் வேண்டும் என இதயம் துடித்தது.

இவனின் நேசம் வேண்டும், வாழ்நாள் முழுவதும் தன்னை உரிமையுடன் தொடரும் இவனின் பார்வை வேண்டும்,காதலுடன் சீண்டலும் ஊடலுடன் தீண்டலுமாய்மொத்தமாய் அவன் வேண்டும்எனபேராசை கொண்டது காதல் கொண்ட நெஞ்சம்.

அவன் பக்கம் தறிகெட்டு பாய்ந்து அவன் நெஞ்சத்தில் தஞ்சம் புக நினைத்த தன் மனதை இழுத்துப்பிடித்து நிறுத்தி அவனை பார்த்தாள்.

“சொல்லுங்க, என்னை இவ்வளவு பிடிச்சதால தானே நீங்க ஹரியை வேண்டாம்னு சொன்னீங்க…” இன்னும் அதிர்ந்தாள் அவன் கேள்வியில்.

“ஹரிஹரன் என்னோட ப்ரென்ட்…” அவளின் பார்வைக்கு விடையாய் பதில் சொல்ல முறைக்க கூட தோன்றவில்லை அவளுக்கு.

“ஆக, இவன் தன்னை கவனித்துக்கொண்டு தான் இருந்திருக்கிறான்…” நினைக்கும் பொழுதே பனிசாரல்மழையென நெஞ்சம் நனைத்தது.

ஆனாலும்பிடிவாதத்தை பிடித்துக்கொண்டு பிடிவாதமாய் நின்றாள். முகம் அத்தனை கலங்கி சிவந்திருந்தது.

அதற்கு மேலும் அவளை வற்புறுத்தாமல் சாவியை நீட்டகலக்கமாய்முரளியை ஏறிட்டாள்.

“கிளம்புங்க…”அதே புன்னகை அவனின் முகத்தில் கொஞ்சமும் வாடவில்லை.

இதுவரை தோன்றியிராத குற்றவுணர்ச்சி அவளை பிய்த்து திங்க சாவியைவாங்கிவண்டியை கிளப்பியவள் அவனை நிமிர்ந்து பார்க்க,

“இப்போ கிளம்புங்கன்னு சொன்னேன். ஆனாஎன்னோட லைப்ல நீங்களும் உங்க லைப்ல நானும் தான். இது கண்டிப்பா நடக்கும்…” அவனின் முடிவில் முகம் கருத்தவள்,

“இது சரிவராது முரளி. விட்டுடுங்க. அதுதான் நம்ம எல்லோருக்குமே நல்லது…” சொல்லியவள்ஸ்கூட்டியைசெலுத்தி தன் பாதையில் கவனமானாள்.

மனம் முழுவதும் அவனின் பேச்சு காதுகளில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருந்தது.

நினைவுகளைதாண்டிய கவனத்தோடு வீட்டை அடைந்தவள் கேட்டை திறந்து வண்டியை உள்ளே வைத்து கேட்டை பூட்டும் பொழுதுதான் கவனித்தாள் அதை.முரளியின் கார் அவளை பின் தொடர்ந்து வந்துநின்றதை.

வெண்மதியின் பார்வையை சந்தித்ததும் கிளம்புவதாக அவன் தலையசைக்க தன்னையறியாமல் வெண்மதியும் தலையை அசைத்து அவனுக்கு விடையளிக்க முரளியின்இதழ்கள்மந்தகாச புன்னகையை சிந்தியது.

முகம் கொள்ளா சிரிப்போடு காரை கிளப்பிசென்றவன் செல்லும் திசையையே பார்த்து நின்றவளுக்கு தான் போட்டுக்கொண்டிருந்த இரும்புவேலி கொஞ்சம் கொஞ்சமாய் தகர்வதை போன்ற ஒரு தோற்றம்கண்முன்னே விரிந்தது.

“பிடிச்சிருக்கா?…” அவன் கேட்டது இப்பொழுதும் கேட்டுகொண்டே இருக்க இறுக்கமாய்விழிகளை மூடியவள்,

“ஆமா, பிடிச்சிருக்கு.இன்னும் பிடிக்கும்.உன்னை மட்டும் தான் முரளி பிடிக்கும்…” விழி நீர் கசிய மனதினுள் அரற்றினாள் வெண்மதி.

 

வளரும்…