UVVP 02

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
தோழிகளே,

இந்த கதையின் அத்தியாயங்கள் அனைத்தும் உயிரெழுத்துக்களில் மட்டுமே தொடங்கும் என்பது மட்டுமல்ல அகரத்தில் துவங்கி அகரத்திலே முடியும் .. பாரதியின் பாடல்கள் இறுதியில் கொடுத்தது, நம் சக தோழி அமுதாவின் பாணி... நல்லவைகளை ஒருமுறையாவது பின்பற்றுவோமே என்ற எண்ணத்தில் .. இதில் முயன்றுள்ளேன்.. @amuthavallinagarajan அவர்க்கு நன்றி...

வழமைபோல் உங்கள் ஆதரவினை எதிர்நோக்கி....
அடுத்த பதிவு...
 
Last edited:

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
UVVP 02

ஆழமாய்.... ஷிவாவின் கண்ணுக்குள் பார்த்த மாயா விற்கு அவன் காதல் மிக நிறைவை கொடுத்தது..... இன்பத்திலும் துன்பத்திலும் பங்கெடுக்க விழைந்தவன் அல்லவா? அவனுக்கு விடையளித்து, இவள் அலுவலகம் புறப்பட, செல்லும்போதே மனம் அசை போட்டது...

கோடிக்கணக்கான சொத்துக்களை அன்னபூரணி பாட்டி, இவளுக்காக உயில் எழுதி விட்டு இறையடி செல்ல...., அதை .... மங்கையர்க்கரசி ( ஷிவாவின் தாயார்), எதோ ஒருநாள் மனஸ்தாபத்தில், "உன் தாத்தாவும் பாட்டியும் இத்தனை சொத்து எழுதி வைக்கலைன்னா,தெரு நாய் கூட உன்னை மதிக்காதுடி, பெரிசா பத்திரிக்கை ஆரம்பிக்க படிக்கறாளாம்...., நீ எழுதி .... ஜெயிச்சிடுவயா ?", என தேவையில்லாத வார்த்தைகளை விட, இவள் சமாதானத்தை கையில் எடுக்காமல்.... சவாலை கையில் எடுத்தாள். சற்றே அகங்காரமாய் கேட்ட மாமியாரை, மாயா . அழுத்தத்துடன் பார்த்தாள்.. ஏனோ பதிலுரைக்க தோன்றவில்லை. மாறாக செயல் முடிக்க தோன்றியது....

இரண்டு வாரம் கழித்து, கையில் சாக்லேட்களுடனும், பூங்கொத்துகளுடனும் வந்த மாயா.. .. கேள்வியாய் பார்த்த மாமியாரை....உறுத்து விழித்தவள்... "அத்தை , ஸ்வீட் எடுத்துகங்க.... புதுசா ஒரு கம்பெனி ஆரம்பிச்சிருக்கேன்..அன்னபூரணி லக்ஷ்மிபதி பப்ளிகேஷன், தாத்தா பாட்டி பேர்-ல தான் ஆரம்பிச்சிருக்கேன்.... ... கூடவே ஒரு பத்திரிக்கையும் சேர்த்து ரிஜிஸ்டர் பண்ணி இருக்கேன்.. பேரு சூரியக்கதிர், இன்னும் ரெண்டு மாசத்துல... அதோட வேலைகளை ஆரம்பிக்கிறோம்... இது-ல நானும் கனேஷும் மட்டும் தான் .. அத்தை , நீங்க சொன்னதுக்குகாக எல்லாம்.. என்னோட உரிமைகளை நான் விட்டு கொடுத்து போய்ட மாட்டேன், பாட்டி எனக்குன்னு கொடுத்தது என்னோடதுதான்... ஆனா ஒண்ணு மனசுல வச்சுக்கோங்க.. நான்-ன்னு சொன்னா... அது என் புருஷன், புள்ளைங்களை சேர்த்துதான்...", சற்று நிறுத்தியவள் ...

"அப்பறம் வேற என்ன சொன்னீங்க? பணம் இருக்கிறதுனாலதான் மதிக்கறாங்கன்னு தான? அப்போ ஏன் யாரும் உங்ககிட்ட நின்னு கூட பேசறதுல இல்லை....?, உங்க கிட்ட பணம் இல்லையா என்ன? ", இந்த கேள்வி அவரை வெகுவாய் தாக்க, மேலும் தொடர்ந்தாள்..."இந்த காசு பணம் சொத்துக்காக மட்டுமில்ல, வெறும் மாயா-ங்கிற பேருக்காகவும்... நாலு பேரு மதிப்பாங்கன்னு உங்களுக்கு காமிக்கறேன்.. actually ,சூரியக்கதிர், அதான் இந்த பத்திரிக்கைய ... இன்னும் மூணு வருஷம் வெளில வேலை பாத்து , கொஞ்சம் எஸ்க்பீரியன்ஸ் ஆனதுக்கு அப்பறம் தான் ஆரம்பிக்க நினைச்சேன்..... இப்போவே ஆரம்பிக்க தூண்டினத்துக்கு உங்களுக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும் ", இனிப்புகளை நீட்டியவளை... கொஞ்சம் பயமாய் பார்த்தார் அவர்... அன்றைய மாயா..வின் மௌனத்தின் விளைவு ... விஸ்வரூபமாய் மிரட்டியது....

ஆனாலும் விடாமல் , "பகல்ல காலேஜ் போற, இன்னும் இது வேற ஆரம்பிக்கற?, என் பேரப் பசங்களை என்ன பண்ண போற?", "எங்கிட்ட விட்டுடு நானே பாத்துக்கறேன் ",என...., எங்கு அடித்தால், அவளுக்கு வலிக்கும் என்று அவருக்கா தெரியாது?

என்ன??? குழந்தைகளை விட்டு இருப்பதா?, அன்னை தந்தை அரவணைப்பில்லாமல் அவளைப்போல் அவள் பிள்ளைகளும் வளர்வதா? அதிர்ச்சியில் உறைந்தவள்..... எதிர்பாராத இந்த தாக்குதலில்....மூச்சு விட மறந்தவளாய் நிற்க..."என் பசங்க ,அவங்க அம்மா கிட்ட தான் வளருவாங்க, நீங்க தலையிடாம இருந்தா.. உங்களுக்கு பசங்கன்னு நாங்க கூட இருப்போம்.. எப்படி வசதி?", என்ற கடுமையான குரலுக்கு சொந்தக்காரன் சாட்சாத் ஷிவவாசனேதான்....

விஷயம் என்ன? யார் மீது தவறு? என்றெல்லாம் கேட்கவில்லை, அவளின் நிலையை முகம் பார்த்து படித்தவன், தலை வருடி ஆதரவாய் தோள் சாய்த்தான்....

பின்னொரு நாளில்....பத்திரிக்கை ஆரம்பிக்க எண்ணம் உள்ளதாக அவனிடம் எப்போதோ பகிர்ந்திருந்தாள் .. இப்போது இவள் செய்த செயல் எதுவும் அவனுக்கு தெரியாது... மாயாவிற்கு , ஷிவாவிடம் சொல்லக் கூடாதென்பதில்லை , ஆனால் நேரம் அமையவில்லை....

ஷிவாவும் ...அவளிடம் இத்தனை வேகத்தை எதிர்பார்க்கவில்லை..., ஆனாலும் ஒரு வார்த்தை அவளை பற்றி, அது தன் தாயாகவே இருந்தாலும், குறைவாய் பேச விடுவானா என்ன?

இதழியல் இறுதி ஆண்டில் இருக்கும் மாணவி அவள்...., அவளுக்கே நினைத்தால், சிரிப்பாய் இருக்கும்... அவள் ....ஒரு பதிப்பகத்தின் நிறுவன தலைவி... காலையில் கல்லூரி, மதியம் பதிப்பகம், மாலை பிள்ளைகள் என்று அட்டவணை படுத்தினாள், பிள்ளைகளை பார்த்துக் கொள்ள, இவளின் அத்தை சரஸ்வதி இருந்த்தார்.. இரவு... பட்டப் படிப்பிற்கும், திருக்குறளின் மூன்றாம் பாலுக்குமாய் செலவழிந்தது ..

பத்திரிக்கையை ஆரம்பித்தது என்னவோ சவாலாய்தான் ... அதை நடைமுறை படுத்த, மேம்படுத்த , விற்பனையை விரிவு படுத்த என....மூச்சு முட்டித்தான் போனது அவளுக்கு...அப்போதிருந்து தனித்தே பத்திரிகையின் முடிவுகளை எடுத்தாள் ... ஷிவாவிடம் கலக்காமல் அவளே முடிவு செய்ய அவன் பழக்கி இருந்தான்... தேவையென்றால், ஆலோசனைகள் மட்டுமே பகிர்வான்...

மொத்தத்தில்... இவள் அஷ்டாவதானியானாள் ... இவளிடம் வேலை பார்ப்பவர்கள் அநேகம் பேர், இவளை விட பெரியவர்கள், அனுபவசாலிகள்.., அவ்வாறே தேர்ந்தெடுத்தாள் ... அதிக வருமானம் + பதவி உயர்வு , நேர்மையாய், சுதந்திரமாய் செயல் பட வாய்ப்பு என்று கூறியே தகுதியானவர்களை நியமித்தாள். தெரியாத விஷயங்களை, தெரிந்து கொள்ள, யாரிடமும் தயங்கினாள் இல்லை.... கற்றுகொள்வதில் இவள் "ஏகக்ராதி ", வகையை சேர்ந்தவள் என்பதை அனைவருக்கும் நிரூபித்தாள், ஒவ்வொரு முறையும்....

இதில் கணேஷின் பங்கு, சொல்ல வார்த்தையே இல்லை.... தம்பியை நினைக்கும் போதே, முகத்தில் ஒரு இளக்கம் வந்தது, மாயா விற்கு. இவள்...நிழல் போலானான்,அவன். இவளுக்காகவே இதழியல் படித்தவன், அவன் விருப்பம் இந்திய ஆட்சிப் பணியில் சேர்வதாய் இருந்தது... சிறு வயதில் இருந்து, அதை கனவாகவே கொண்டிருந்தவன், அக்காவிற்காக அதை மாற்றிக் கொண்டான்.. ஆனாலும் அவன் ஆர்வம் அவனை ஈர்த்ததால், குடும்ப நண்பரான DCP யுடன் சேர்ந்து , அவர் பார்வைக்கு வரும் சிக்கலான வழக்குகளை துப்பறிவதில் ஈடுபடுத்தி கொண்டான்...குற்றச் செயல்களை முடிந்தவரை காவல்துறையின் கவனத்திற்கு உடனடியாய் கொண்டு சென்றான்...

அலுவலகத்தின் வாயிலை அடைந்தவள், நிகழ் காலத்தில் நுழைந்திருந்தாள். காத்திருக்கும் வேலைகளை மனதினுள் அசை போட்டபடி அவள் கேபினுக்கு சென்று, அமரும் போது அமைச்சரை சந்திக்கும் வேளை நெருங்கி இருந்தது...

சற்று நேரத்தில் தொலைபேசி மெல்லிய ஒலி எழுப்ப, "சொல்லுங்க வைதேகி", "மினிஸ்டர் கார், நம்ம ஆபீஸ் வாசலுக்கு வந்துடுச்சுன்னு info வந்தது மேம், ஆனா fast track -க்குன்னு போட்ட கார் தான் வந்தது, உள்ள வந்திருக்கிற ஆளும் ரொம்ப பார்மல் ஆ இருக்கார்...", என்றவளை இடையிட்டு "உள்ள அனுப்புங்க", என..
அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் உள்ளே நுழைந்த உருவம், "ம் ..நீதான் மாயாவாம்மா?”, இவளை ஏற இறங்க பார்த்து, "ஏன் தேவை இல்லாத விஷயத்தை எல்லாம் நோண்டிட்டு இருக்க?", பட பட வென பேசும் அந்த மனிதனை பார்த்திருந்தாள்.

"வணக்கம் ... ஆமா.. நான்தான் மாயா",

"முதல்ல உக்காருங்க... எதுவானாலும் உக்கார்ந்து பேசலாம் ", என்றாள் நிதானமாக....

அவர் முறைத்துக் கொண்டே அமர, இன்டெர்காம் அமுக்கி.., "ரெண்டு காபி”, என்று விட்டு , “இப்போ சொல்லுங்க சார்.. என்ன விஷயமா என்னை பாக்க, மினிஸ்டர் நீங்களே வந்து இருக்கீங்க?"

"வர வச்சதே நீங்க தானே? மினிஸ்டர் மீட்டிங்-க்கு வாங்கன்னு கூப்பிட்டா வரணும் ,அதை விட்டு காரணம் என்ன, கத்திரிக்காய் என்ன-ன்னு கேள்வி கேட்டு , குடைச்சல் தர்றீங்க.... நாலஞ்சு முறை இதே மாதிரி உங்க செகரெக்டரி தட்டி கழிச்சதாலதான்,நானே நேரிலே பேசிக்கலாம்-னு வந்தேன் , ஏன் அது உங்களுக்கு தெரியாதா?"

"தெரியல-ன்னு தான கேக்கிறேன்"

"ஓகே நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல....நேரடியா மேட்டருக்கு வர்றேன்...உங்கபத்திரிக்கைல வெளி வர்ற... "குழந்தை கடத்தல் - ஒரு நெட்ஒர்க்", அதை நிறுத்தனும்.. இல்லன்னா பின்னால ரொம்ப வருத்த பட வேண்டி வரும்...",என்று எகிற...

"ஏன் ? , அதுல நான் ஆளுங்கட்சியையோ, அரசியல்வாதிகளையோ தாக்கி எதுவும் போட்டதா தெரியலை.... குழந்தைகள் கடத்தல் நெட் ஒர்க் எப்படி செயல்படுதுன்னு ஒரு அலசல்.., அவ்வளவுதானே இருக்கு....? அதுக்கு , நல்ல ரிவியூ-வும் . வருது.",கேள்வியை கூர்மையாக்கினாள்.

" ரிவியூ..வ தூக்கி குப்பை தொட்டில போடு.. உன் நல்லதுக்கு தான் சொல்றேன். உன் பத்திரிக்கைக்கு தேவையான விளம்பரம் தர்றோம். சும்மாயில்ல... கோடி-ல வருமானம் . மேலயும் தர தயாரா இருக்கோம்..” டென்ஷனில் பேச்சு ஒருமைக்கு மாறி இருந்தது... “சொல்லு உன் ரேட் என்ன?", என்ற அடுத்த நொடி..... மாயா இருக்கையை விட்டு எழுந்திருந்தாள்.. "வாட்?", என்றாள் அடக்கப்பட்ட கோபத்துடன்....இதுவே பழைய மாயா வாய் இருந்தால், கேள்வி கேட்டவனின் கன்னம் பழுத்திருக்கும்....

"ஐயையோ , தப்பா புரிஞ்சிகிட்டயே அம்மணி, நான் கேட்டது பத்திரிகை வாய மூடனும்-ன்னா, அதுக்கு என்ன ரேட்-ன்னு கேட்டேன்....?",

"என்ன தருவீங்க?", கோபத்தை கட்டுக்குள் வைத்து அவள் கேள்வி இருக்க....., அதை அறியாத அவரோ...

"25 C , இந்த article மட்டுமில்ல.. வேற எந்த ஆர்டிக்களும் -ம் இதைப் பத்தி வரக் கூடாது.. எங்களையோ, எங்க ஆட்சியையோ பாதிக்கிறா மாதிரி எந்த ஒரு செய்தியும் வரக்கூடாது..,. அப்படியே அந்த ரைட்டர் யாருன்னு தெரியணும்.... ", என்று தொடர்ந்து டெர்ம்ஸ் & கண்டிஷன்ஸ் சொல்லிக் கொண்டிருந்தார்..

மாயா கொதிநிலையிலிருந்தாள் .. இந்த தொடரை பிரசுரிக்க துவங்கும் முன், அதன் ஆசிரியர் கேட்ட கேள்வி மனதில் வந்தது.... "எத்தனை அழுத்தங்கள் , எந்த இடத்துலேர்ந்து வந்தாலும் தாங்குவீங்கன்னா.... இதை பிரின்டிங்-க்கு அனுப்புங்க... ஏன்னா .. இது மொத்தமும் நிஜம்... இந்த ஆர்டிகள் இன்னமும் முடியலை... சில விஷயங்களை , தேடிட்டு இருக்கோம்...ஆதாரம் அல்லது ஏதாவது ஒரு சின்ன தொடர்பு கிடைச்சாலும் ஒரு சில கருப்பு ஆடுகளோட அடையாளம் தெரிய வாய்ப்பிருக்கு.", தற்போது ஒரு கருப்பு ஆடு வெளில வந்திருக்கு, என்று மனதுள் நினைத்தவள்...

" மக்கள் சந்தேகப்படுவாங்களே?, திடீர்-ன்னு உங்களுக்கு ஆதரவா செய்தி கொடுத்தா?,இப்போ பாதி-ல முடிச்சாலும் சரியா வராது...,", என்றிவள் பேசிக்கொண்டிருக்கயில்....

அறைக்கதவு மெதுவாய் இருமுறை தட்டப்பட,” வாங்க ", என்று இவள் அனுமதி கொடுக்க, காஃபி ட்ரெ-யுடன், வைதேகி உள்ளே வந்தாள்... மாயா, அமைச்சரை நோக்கி "ப்ளீஸ் காஃபி எடுத்துக்கோங்க...", என்றவள்... வைதேகியை பார்த்து அர்த்தமாய் புருவம் உயர்த்த, அவளும் அமைச்சர் அறியா வண்ணம் கட்டை விரலை உயர்த்தி,உதட்டசைவில் " done ", என்று விட்டு சென்றாள் . ஒரு மைக்ரோ மினி புன்னகை மாயாவின் இதழில் அமர்ந்தது...

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

அக்கினி குஞ்சொன்று கண்டேன் -- அதை
அங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்!
வெந்து தணிந்தது காடு
தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
வெட்டி அடிக்குது மின்னல்
கடல் வீரத் திரைகொண்டு விண்ணை இடிக்குது
கொட்டி இடிக்குது மேகம்
கூ கூவென்று விண்ணை குடையுது காற்று.
சட்ட் சட சட்ட் சட டட்டா
என்று தாளங்கள் கொட்டி கணைக்குது வானம்;
தாளம்கொட்டி கணைக்குது வானம்,
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
தக தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்

மகாகவி சுப்ரமணிய பாரதியார்.
 

Anuradha Ravisankarram

Well-Known Member
Very nice episode...
மகாகவியின் வரிகளை தேர்ந்தெடுத்து பதிவிடுவது சிறப்பு..
வாழ்க வளமுடன்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top