S
semao
Guest
தோழியைத் தேடி
செல்லும் காலம் யோசிக்கையில்
உன் கைப் பிடித்து நடந்த
காலத்தின் மிச்சம் தோணுதம்மா
கண் பார்த்தல்ல
சொல் கேட்டல்ல
இல்லை
இனம் நிறம் பார்த்துமல்ல
மண் புரண்டதால்
தெரு புரண்டதால்
வந்த நட்பே
காக்காய்கடியில் வரும் இனிப்பின் சுவை
பை நிறைக்கும் இனிப்பினிலே கிட்டவில்லை
மண்ணில் புரண்ட சட்டை பாவாடையில்
முடித்து வைத்த பழம் எங்கே
உள்ளத்து அன்பு உன் உள்ளங்கையில்
உருளுதம்மா நெல்லியாக
உலகினில் தேவதைகள் உண்டாமே
உன்னாலே முதல் அறிந்தேன்
பின்னாலே மகளும் தந்தாள்
அந்நாள் அனுபவத்தை
கண்முன்னே கொண்டு வந்தாள்
உன்னோடு சேர்ந்து
ஊரெல்லாம் சுற்றி
தெருவெல்லாம் புரண்டு
போகாத இடமில்லை
பேசாத பேச்சில்லை
புரளாத மண்ணில்லை
கிழியாத சட்டையில்லை
வாங்காத அடியில்லை
மகிழ்ச்சிக்கும் குறைவில்லை
பாலினமே பார்க்கவில்லை
பார்க்கவும் தேவையில்லை
அதுமட்டுமில்லையம்மா
இல்லை இல்லை என
எல்லையில்லாமல்
இல்லைகளும் இருந்தாலும்
தொல்லையும் இல்லை நம்மால்
இல்லாத சொல் இன்று
நீயில்லை என்பதே
நீ எங்கே தெரியவில்லை
போன இடம் அறியவில்லை
கூடும் வழி புரியவில்லை
எனை கூடாமல் போன என் நட்பே
என்றுனை சேருவேனோ
காத்திருக்கேன் வந்துவிடு
விரைவு உலகம்மா
விரைந்து நீ வாராயோ
உன்னை தேடும் வழி ஒன்றை
உரைக்கவே வாராயோ
என்னை போல நீயும்
எண்ணியே இருப்பாயா
எந்தன் முக வரி தேடியே வருவாயா
காத்திருப்பேன் நான் இங்கே
காலமெல்லாம் தேடிடுவேன்
உன் முக வரியை
Last edited by a moderator: