sivasuganesh
New Member
சுதந்திரம் :
சூரியன் தன மஞ்சள் போர்வையை நீக்காத நேரம்,கடல் போல் விரிந்து கிடந்த அந்த கங்கை கரையின் அழகை ,சிலு சிலு என்ற காற்று வருட ரசித்து பார்த்துக்கொண்டிருந்தார் சுந்தரம்.கங்கையின் ஒவ்வொரு ghaatilum மக்கள் அவர்கள் சம்பிரதாய முறையில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதிலும் , துறவியர்களும் வைதீகர்களும் தங்கள் ஆசார பூஜைகளை செய்வதிலும் மிக பரபரப்புடன் இருந்தனர். இவர்களையும் அந்த கங்கையையும் ரசித்த படி வேடிக்கை பார்த்துக்கொண்டு சென்றார் சுந்தரம். இவர்களை போல சம்பிரதாய சடங்குக்கோ அல்லது புண்ணியம் தேடவோ அவர் அங்கு வரவில்லையே .ஒரு யாத்ரீகனாய் தான் அங்கு வந்தார்.அதனால் எந்த ஒரு நிருபந்தம் இல்லாமல் தன்னிச்சையாக நிதானமாக வேடிக்கை பார்த்துக்கொண்டு நடந்தார் .
சூரிய வெளிச்சம் ஏற ஏற பாவத்தை கழுவும் கங்கையின் பாவப்பட்ட நிலைமை பளிச்சிட்டது .
மனதில் எந்த சலனமும் . கவலையும் இல்லாமல் நடந்துகொண்டிருந்த சுந்தரத்தின் நடையில் திடீரென்று ஒரு தளர்வு, அங்கே இருப்பதா வேண்டாமா என்ற குழப்பம் ,போய் விடலாமா என்று மனது நினைக்கும் போது ,பிடித்து நிறுத்தியது உள் மனது .
அந்த இரண்டு வயது சிறுவனின் குறும்பு பார்வையும் துறு துறுப்பும்.மழலை மொழியும் கால்களை கட்டி போட்டது. அவன் பெற்றோர்கள் திதி கொடுத்துவிட்டு பாட்டியோடு கரையேறி இவர் இருக்கும் திசையில் பயணித்தனர். அவர்களை பார்த்தவுடன் ஒரு கணம் நெஞ்சே வெடித்து விடும் போல இருந்தது . சுதாரித்து கொண்டார்.அவர்கள் அனைவரும் அருகில் வர, விஷால் இது உன் பையன்னா என்று வாய் அவரை மீறி வார்த்தைகளை விட்டது.
அப்பா என்று அலறினான் விஷால் .நெஞ்சம் வெடிக்க குமுறினாள் விஷாலின் அம்மா பிரியா . ஐயோ உயிரோட இருக்குற உங்களுக்கு திதி கொடுத்துவிட்டு வரோம். என்ன கொடுமை இது என்று அரற்றினாள்.
சுந்தரம் அந்த இரண்டு வயது வாண்டைஇழுத்து அணைத்து உச்சி முகர்ந்து ஒரு இச்ச்சு வைத்தார். தன கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை எடுத்து அவன் கழுத்தில் போட்டார்.