Advertisement

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
எதாவது எழுதனும்னு தோணினாலும் எதையோ ஒன்னை எழுத மனசு இல்லை..️images (3).jpeg

இன்னிக்கு பேங்க் பிரவேசம்…ஒரு கிராமத்தில் இருக்கும் SBI கிளை.நான் ரசிச்ச விிசயம் என்னனாா…அந்த மேலாளர் அவ்வளவு friendly in nature
மக்கள் ஈசியா அணுகக்கூடிய வகையில் நடந்த ஒரு மனுஷன். இதுவரையில் அப்படி ஒரு பேங்க் மேனேஜர் பார்த்ததில்லை

நிறைய பேர் இப்படி பழகறத்துக்கு எளிமையாகவும் இனிமையாகவும் இருக்கலாம் ஆனா நான் இங்க சொல்ல வரது என்னன்னா அவர் அவர் வர customers ஐ பெயர சொல்லிதான் கூப்பிடுறாரு.

நான் பார்த்த இடத்தில் இடத்தில் எல்லாம் வாங்க அங்க போய் கொடுங்க அப்படின்ற மாதிரி சொல்லுவாங்க இவர் .ஜெயலஷ்மி பெயர் எழுது‌… இது காவேரி கிட்ட குடு.she is cashier . என்னடா இவருக்கு எப்படி

எல்லாம் customers பேரும் தெரியுது என்று பார்த்தா… நானும் மாமி கிட்ட கேட்டேன்.. நல்ல பேசுறாரே சொந்தக்காரரான.. ?? இல்ல இல்ல அவர் அப்படித்தான் பேசுவார் தெரிஞ்சாவங்க கிட்ட பேசுற மாதிரியே.. அதுக்கப்புறம் தான் கவனிச்ச பார்த்தா நம்ம form or passbook கொடுக்கிறப்பவே பேர பார்த்துட்டு பேர் சொல்லி கூப்பிடுறார்.
வேலை எல்லாருமே செய்யலாம் ஆனா முகத்தில் கொஞ்சம் சிரிப்பு வச்சுட்டு வேலை செய்றது சிலருக்கு தான் வரும் இந்த சிலரில் இவரும் ஒருவர்..

இது சிலருக்கு சிம்பிளான ஒரு விஷயமாக கூட தெரியலாம் ஆனால் எனக்கு இந்த நம்பர் சொல்லி கூப்பிடுவது பிடிக்காது காலேஜ் லீவு ஸ்கூல்லயும்…

எனக்கு LKG எடுத்த மிஸ் இன்னி வரைக்கும் பவித்ரா னு ஞாபகம் வைச்சிருக்காங்க. ஆனா நான் காலேஜ் படிக்கும் போது ரெண்டு வருஷம் எடுத்த mam…still she took three subjects to me. உன் பேரு சங்கீதாதானே கேட்கிறாங்க..
அது என் பிரிண்டுங்க

எழுத்தாளரும் பேராசிரியருமான பெருமாள் முருகன் ஒரு இன்டர்வியூல சொல்லி இருப்பார் எப்பவுமே மாணவர்களை பெயர் சொல்லி அழைக்கிறது தான் அவருக்கு பிடிக்குமாம். ❤️

சொல்லப்போனால் அது ஒரு நல்ல விஷயம்.
பெயர் அப்டீன்றது ஒரு மனுஷனோட அடையாளம். அடையாளத்தை ஏற்படுத்திக் அதுக்கு முன்னாடியே ஒரு அடையாளமாக இருக்கிறது அந்த அடையாளத்துககு அஸ்திவாரமாக இருக்கிறது நம்மளோட பெயர்தான்.images (4).jpeg

கொஞ்ச நாள் முன்னாடி ஒரு புது friend கிட்ட பேசுறப்ப கூட ஒரு மணி நேரம்பெயர் பத்தின ஆராய்ச்சில தான் போச்சு..பாவம்யா அந்த புள்ள

நான் பேசுற எல்லார்கிட்டயும் பெயரையோ அவங்க பேரு பின்னாடி உள்ள அர்த்தத்தை கேட்காமல் விட்டதில்லை அதுவும் புது பெயர் வித்யாசமா இருக்கு கண்டிப்பா கேட்டிடவேன் .

என்கிட்ட அப்படி அனுபவம் உள்ளவர்கள் கமெண்ட்டில் சொல்லவும்

இதனால தான் என்னோட கதைல கூட நான் ரொம்ப ரசிக்கிற கொஞ்சம் புதுமையா இருக்குற பெயர்களை பயன் படுத்துறேன்..

என்னோட பெயர் வந்து ரொம்பவே ஒரு பொதுவான பெயர் பத்துல ஒருத்தருக்காவது இருக்குது.. அதனாலேயே வித்தியாசமான பெயர்கள் மேல ஒரு ஆசை காதல் அப்படி சொல்லலாம்.
images (1).jpeg
பெருமாள் முருகன் சொல்லியிருப்பாரு மாணவர்களுக்கு கிளாஸ் எடுத்து ரொம்ப வருஷம் கழிச்சு கூட
if a student introduces himself he could remember.. ஆனா இப்ப வந்து இந்த colleges ல
ரோல் நம்பர் சொல்லித்தான் கூப்பிடுறாங்க. அது நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக இருக்கலாம்….

ஆனால் நம்பர் எப்பவும் ஒரு நபராக முடியாது இல்லையா…
பேர் சொல்லும் போது பேருடன் சேர்ந்து அந்த ஆளு நம்ம மனசுல ஞாபகம் வந்து விடுவாங்க

அது நம்பரில் சாத்தியப்படுவது இல்லை

ஆனா ஒவ்வொரு பேருக்கு பின்னாடி ஒரு கதை இருக்கு… அது கூடிய சீக்கிரமே சொல்றேன்..

என்ன சுத்தி உள்ளவங்க கிட்ட கொஞ்சம் ஆழமா பேசினப்பதான் எல்லார் பேருக்கு பின்னாடியும் ஏதோ ஒரு காரணம் அந்தப் பெயர் வந்த கதை இருக்கிறது சாதாரணமாக இருக்கலாம் அல்லது சுவாரசியமாய் இருக்கலாம் ஆனால்…
சொல்வதற்கு ஒரு கதை இருக்கிறது

மனுஷங்க வாழ்வதே அவங்க பேர நிலைத்து நிற்க வைக்க தான்.

அப்படிப்பட்ட பெயர் சொல்லி எல்லாரையும் கூப்பிட்டு பழகுவோம் அதுக்காக பெரியவங்கள எல்லாம் மரியாதை இல்லாம எல்லாம் கூப்பிடாதிங்க


பிரியங்களுடன்
பவித்ரா நாராயணன்❣️
images (5).jpeg
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
remember that a person's name is to that person the sweetest and most important word in any language....

அவ்வளவு உண்மையான வார்த்தைகள் பவிக்கா :love::love::love::love::love::love:
யெஸ்..... எனக்கும் என்னோட பேர் ரொம்ப பிடிக்கும்........... அழகான பெயர்களை கேட்டா அப்பவே மெமரில ஆட்டோமெட்டிக்கா சேவ் பண்ணிடுவேன். நான் ரசிக்கும் விஷயங்களில் இந்த பெயர்களுக்கு தனி இடம் இருக்கு.:love::love:

அப்புறம் நீங்க சொன்ன ரோல் நம்பர் விஷயம் எனக்கும் கொஞ்சம் கடுப்படிக்கும்.. என்னோட college staff சிலர் இன்னும் கூட எனக்கும் என் பிரண்ட்க்கும் வித்தியாசம் தெரியாம... பெயர் மாத்தி தான் பேசுவாங்க... சொல்லி பார்த்தும் மாத்தல... அப்படியே விட்டாச்சு...
 

harinidilip

Well-Known Member
Very nice words dear. I liked to call everyone by name atleast in my age group that will give full satisfaction of both aswell as opposite party. Name is there only for calling purpose. As u said it helps to remember that person for longer time. This is my personal opinion. Some people think it is not respecting properly. Respect should come from heart not from mouth. I am getting happiness by calling others or somebody calling me by name.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top