P8 எந்தன் காதல் நீதானே

Advertisement

Ramya Rajan

Well-Known Member
வெண்ணிலாவை பார்த்ததும் புன்னகையுடன் எழுந்து உட்கார்ந்தவன், “முதல்ல ஒரு வண்டியில வீட்டு ஆட்கள் வர்றாங்களாம்.”

“மத்தவங்களை கூடிட்டு சித்தப்பாவும் சித்தியும் பின்னாடி வேன்ல வருவாங்களாம். இப்பத்தான் யஸ்வந்த் போன் பண்ணான்.” என்றான்.

“ஓ... நான் அப்ப அவங்க வர்றதுக்குள்ள ரெடி ஆகிடுறேன்.” என்றவள், முகம் கழுவிவிட்டு வந்து, குளித்து வெறுமனே முடிந்து வைத்திருந்த கூந்தலை, ட்ரையர் போட்டு காய வைத்தவள், சிக்கெடுத்து கூந்தலை தூக்கி ரப்பர் பேன்ட் போட்டு விட்டு விட...

“தலை வாரலை...” ஜெய் கேட்க,

“அம்மா வந்து வாரி விடுவாங்க.” என்றதும், ஜெய் பயந்து விட்டான்.

“தலை கூட வார தெரியாதா... நம்ம வீட்டுக்கு வந்ததும் எப்படி, நான் உனக்கு தலை வாரி விடணுமா?” என அவன் சீரியசாக கேட்க?,

“ஐயோ அத்தான். இன்னைக்கு கொஞ்சம் வித்தியாசமா வாரணும் அதுதான் அம்மா வர்றேன்னு சொன்னாங்க. தலை கூட வார தெரியாம இருப்பாங்களா?” என வெண்ணிலா சிணுங்க...

“இல்லை இப்போ எதோ டேட்ஸ் லிட்டில் பிரின்சஸ் சொல்றாங்களே.. அப்படியின்னு நினைச்சு பயந்திட்டேன்.” ஜெய் சிரித்துக் கொண்டு சொல்ல, வெண்ணிலா முறைத்தாள்.

இப்படியே முறைச்சு முறைச்சு அந்த முட்டக் கண்ணு இன்னும் பெரிசாக போகுது பாரு... அப்புறம் பார்க்க காளி போல இருப்ப...

என்னவோ சொல்லிக்கொள் என்பது போலப் பார்த்தவள், பெட்டியை எடுத்து வைத்து அதில் அலமாரியில் இருந்த உடைகளை எடுத்து அடுக்க ஆரம்பித்தாள்.

ஏற்கனவே திருமணம் முடித்து சென்றபோது புகுந்த வீட்டில் இரண்டு பெட்டிகளை வைத்து விட்டு வந்திருந்தாள். இப்போது இன்னும் இரண்டு பெட்டிகளில் அவள் அடுக்க...

“எதுக்கு டி இவ்வளவு. வீட்டையே காலி பண்ணிட்டு தான் வருவியா?” ஜெய் கேட்க,

“அம்மா தான் எடுத்து வைக்க சொன்னாங்க.” என்றாள்.

ஒரு பெட்டியில் வெறும் பட்டு புடவைகளாக அடுக்கியவள், இன்னொன்றில் டிஸைனர் புடவைகளை அடுக்கினாள். அவளுக்கு சரியாக அடுக்க தெரியவில்லை... அதைக் கவனித்த ஜெய், “தள்ளு நான் அடுக்கிறேன்.” என்றவன், புடவைகளை இடம் பார்த்து அடுக்கி பெட்டியை மூட... வெண்ணிலா இன்னும் இரண்டு பைகளில் சுடிதார்களை அடுக்கினாள்.

இன்னும் முடியலையா என்பது போல ஜெய் பார்க்க, வெண்ணிலா அதை கவனிக்கும் நிலையில் இல்லை. இன்னும் வேறு என்னென்ன எடுத்து வைக்க வேண்டுமோ, அதெல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

எல்லாம் எடுத்து வைத்து முடித்தவள், மிதமான ஒப்பனை செய்து, விருந்துக்கு அணிய வேண்டிய புடவையை கையில் எடுத்தவள், “அத்தான்...” என ஜெய்யை பார்க்க... புரிந்து கொண்டு ஜெய் வெளியே சென்றான்.

ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த கற்பகம், அவனைப் பார்க்காதது போல மேடை ரகியம் பேசினார். “என்னவோ கல்யாணம் நின்னதும் சாகப் போனா... இப்ப பகல்ன்னு கூட பார்க்காம கதவை அடைச்சிட்டு இருக்கா...” என சொல்ல... அவரின் இளைய மகளோ... “ஆமாம் கல்யணம் நின்ன வருத்தம் கொஞ்சமாவது இருக்கா பாரேன். அக்கா, நல்லவேளை இவ உனக்கு மருமகளா வரலை.” என அன்பரசியிடம் சொல்ல... அவரும் அதை ஆமோதித்தார்.

அவர்கள் பேசியதை ஜெய் மட்டும் அல்ல... கணவன் வெளியே சென்றதும், கதவை தாழ் போட வந்த வெண்ணிலாவும் கேட்டு இருந்தாள். அவளுக்கு மிகவும் அவமானமாக இருந்தது. முகம் சிவந்து கண்கள் கலங்கி விட... புடவை மாற்றாமலே கட்டிலில் சென்று படுத்து விட்டாள்.

ஜெய் அவர்கள் பேசியது கேட்காதது போல வெளியே சென்று விட... வெளியில் இருந்து வந்த மகேஸ்வரி, கையில் வைத்திருந்த இளநீரை அவனிடம் கொடுத்தார்.

***************************************************************************************************

விருந்து நேரத்திற்கு மாற்றிக்கொள்ள பட்டுப் புடவையை அகல்யா கொண்டு வந்திருக்க, ராதிகாவும் வேறு உடை கொண்டு வந்திருந்தாள். இருவரும் எங்கு சென்று மாற்றுவது என பார்த்தவர்கள், திறந்திருந்த இன்னொரு அறையின் பக்கம் செல்ல,

“ஏய் பொண்ணுகளா எங்கப் போறீங்க? அது என் பேரனோடு ரூம்... உங்க அண்ணிக்காரி ரூமுக்கு போங்க..” என கற்பகம் அவர்களை விரட்ட, அவர்கள் இருவரின் முகமும் வாட திரும்பி செல்லுவதைப், அப்போது வீட்டிற்கு வந்திருந்த யுவராஜ்ம் பார்த்தான்.

“அண்ணன் தங்கை எல்லாம் நல்லா விவரம். நல்லா வசதியான வீடு கிடைச்சா விட மாட்டாங்க,” என கற்பகம் தனது மகள்களிடம் சொல்லிக் கொண்டு இருந்தார்.

“ஆமாம் இந்த அம்மா பேரனை நாங்க அப்படியே தூக்கிட்டு போயிட போறோம்.” என நொந்து கொண்டே அகல்யா செல்ல,

“ஹாய்... எப்ப வந்தீங்க?” என யுவராஜ் கேட்க,

“அப்பவே வந்திட்டோம் அத்தான்.” என சொல்லிவிட்டு அகல்யா அங்கிருந்து செல்லவே பார்க்க... ஆனால் யுவராஜ் வேண்டுமென்றே அவர்களை நிற்க வைத்து பேசினான்.

அவனுக்கு கற்பகம் செய்வது பிடிக்கவில்லை. அவர் என்ன இவர்களை அதட்டுவது என நினைத்தவன், வேண்டுமென்றே அவர்களிடம் பேச... அந்த நேரம் ஜெய் வெளியே இருந்து உள்ளே வந்தவன், அவர்கள் இருவரையும் கவனித்து அங்கே வந்தவன், அகல்யாவைப் பார்த்து போ... என்றவன், யுவராஜிடம் “மண்டபத்தில வேலை எல்லாம் முடிஞ்சிடுச்சா?” என கேட்டான்.

**************************************************************************************************

“இவங்க கால்லயே விழுந்து கேட்டாலும், இவங்க வீட்டுக்கு என் தங்கைகளை நான் அனுப்புவேனா... பணம் இருந்தா போதுமா, வாழ வர பெண்ணுக்கு நிம்மதி வேண்டாமா?”

“நீ எதுவும் மனசுல நினைக்காத அகல்யா?” என ஜெய் சொல்ல...

“அப்படியெல்லாம் விடக் கூடாது அண்ணா. இந்த வீட்டுக்கே அகல்யா அக்கா மருமகளா வந்து இந்த பாட்டியை உண்டு இல்லைன்னு பண்ணனும்.” என ராதிகா சொல்ல...

“நீ வாயை மூடு. தினமும் இந்த அம்மா தேளு மாதிரி கொட்டிட்டு இருக்கும். அதை கேட்டுட்டு இருக்கணும்னு இங்க யாருக்கும் தழையேளுத்து இல்லை புரியுதா... அகல்யா, நீ இவ சொல்றான்னு மனசுல எதுவும் நினைக்காத.” என்றன் ஜெய். அவனுக்கு ஒரே பயம் தங்கை எதுவும் யுவராஜை நினைத்து மனதில் ஆசையை வளர்த்துக் கொள்வாளோ என்று...

“நான் ஒன்னும் நினைக்கலைணா...” அகல்யா சொல்ல....

“நீ நினைக்கலைனா போ... நான் வேணா வந்துக்கிறேன்.” என ராதிகா துடுக்காக சொல்ல...

“என்ன வந்துப்ப?” அடிச்சேனா பல்லு பேந்துடும். அப்படியெல்லாம் ஆசை இருந்தா, அதை இன்னையோட அழிச்சிடு. போற இடத்தில பணம் இருக்கோ இல்லையோ நிம்மதி இருக்கணும். இன்னொரு தடவை நீ இப்படி பேசின.. அவ்வளவு தான்.” என ஜெய் கோபப்பட... ராதிகா சிரிக்க...

“அண்ணா அவ வேணுமுன்னே பண்றா உனக்கு புரியலையா?” என அகல்யா சொல்ல...

“போய் உங்க அண்ணி இருக்கிற ரூம்ல டிரஸ் மாத்துங்க.” என இருவரையும் ஜெய் அனுப்பி வைத்தான். அதன் பிறகு தங்கைகள் இருவரையும் ராஜ் இருக்கும் பக்கம் கூட அவன் பார்க்க விடவில்லை.
 
Last edited:

Manimegalai

Well-Known Member
Hi
அந்த வீட்டில் இருந்து
பெண் வேண்டும்
ஆனால் தங்கைகள் பேசக்கூடாது
விருப்பம் வந்திடுமோன்னு பயப்படுறான்
நல்ல அண்ணன்.
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

கிழவிக்கு கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லை....... என்ன பேச்சு பேசுறாங்க பேத்தியை....... பொண்ணுங்க ஜால்றா வேற :mad::mad::mad: அட ச்சி நல்ல வேளை கரண் ஓடிபோய்ட்டான்..... இல்லைனா வெண்ணிலா பாவம் தான்......

ஜெய் பயம் நியாயம் தான்........ தேள் மாதிரி கொட்டிக்கிட்டே இருந்தால் வாழவர பிள்ளைங்க பாவம் தானே........
ஜெய் நீ உன் தங்கைகளை அதட்டி வச்சுட்ட........ யுவராஜ் என்ன நினைக்கிறானோ மனசுல....... அவனும் பாட்டிக்காக உன் தங்கையை கல்யாணம் பண்ணனும் உன்னை மாதிரியே வந்து நின்றால் என்ன பண்ணமுடியும்???

என்ன ஜெய் இப்படி கேட்டுட்ட....... டிரஸ் 7 சூட்கேஸ் இருக்காதா என்ன???
அதுவும் dad's little prince-க்கு தலை வேற வாரிவிடணும்னு கேட்ட பாரு :p:p:p
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice precap

இந்த கற்பகத்துக்கு கொழுப்ப பாரு.. என்னமோ இவங்க பேரனுக்கு எல்லாரும் ஏங்கி கிடக்கிற மாதிரி.. ரொம்பத்தான் அலட்டிக்குது..:mad::mad:

அப்ப யுவராஜுக்கு அகிலாதான் ஜோடியா?? :unsure::unsure:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top